Tuesday, November 19, 2013
அரபு நாட்டில் வசிக்கும் நம்மவர்களின் மனநிலை...
நமது மனதுக்குள்
இனம் தெரியாத இடியை
மின்னலை
இறக்கி வைக்கிறது !
ரியாதிலும்
கத்தாரிலும்
பகரைனிலும்
மழை மேகங்கள் சூழ்ந்தால்
இவர்களின் உள்ளங்களை
இன்ப மேகங்கள் சூழ்கின்றன !
ஏதோ ...
தங்கள் சொந்த மண்ணில்
இருப்பதை போன்ற
ஒரு மகிழ்வு ..
குடும்பத்தோடு
மனைவி மக்களோடு
மழையை
கொண்டாடுவது போல்
ஒரு நினைவு.!
மேகம் கலைந்து போனால்...
வீட்டை விட்டு கிளம்பும்போது
ஏற்படுமே ..
ஒரு சங்கடம் தொண்டையை அடித்துக் கொண்டு
அதுபோல் ...
வருத்தம் வந்து இவர்களை அணைக்கிறது !
மன வேதனைகளை மறக்க
அவர்கள் செய்யும்
அத்தனை பாசாங்குகளிலும்
நானும்
மகிழ்வோடு பங்கேற்கிறேன்...
அருளாளன் அல்லாஹ்
உங்கள் வருத்தங்களை நீக்கி
மனதுக்கு
மகிழ்ச்சிதர பிரார்த்திக்கிறேன்...
( உங்கள் பதிவுகளைப் பார்த்து
நெஞ்சில் கசிந்த ஈரம் )
ஆக்கம் : அபூ ஹாஷிமாAbu Haashima Vaver
---------------------------------------------------
மாஷாஅல்லாஹ்...
சவூதியின் #ஜுபைலில் தற்போது....
கடும் #மழை பெய்து கொண்டிருக்கிறது..!
ரொம்ப நாள் கழிச்சு மழையை பார்க்கிறேன்..!
நனைந்து மண்வாசனை சுவாசித்து பரவசமடைகிறேன்..!
மழை என்றுமே மனதை மகிழ்விக்கிறது..!
Note: சவூதியின் பள்ளிகளுக்கு எல்லாம் மூன்று நாளாக "மழை விடுமுறை"... தொடர்கிறது. (சாதாரண தூறலுக்கே )
மழை ஒரு அதிசயம்தான் சவூதி பாலைவனத்த்தில்..! — feeling wonderful.
Mohamed Ashik
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment