Showing posts with label மழலையர் தினம். Show all posts
Showing posts with label மழலையர் தினம். Show all posts

Thursday, November 14, 2013

பள்ளிக் கூடங்கள் பிஞ்சு பிள்ளைகளின் நெஞ்சில் வெம்மையை வெறுப்பை வளர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.


'சமத்துவத்தை வளர்க்க வேண்டிய பள்ளிக் கூடங்கள் பிஞ்சு பிள்ளைகளின் நெஞ்சில் வெம்மையை வெறுப்பை வளர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.பள்ளிக்கூடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள பொருட்கள் வாங்குவதற்கு போதுமான பணம் ஏழைக் குழந்தைகளின் பெற்றோரிடம் இல்லை. அதனால் அந்தக் குழந்தைகளால் போட்டிகளில் கலந்துகொள்ளவோ வெற்றி பெறவோ பரிசு பெறவோ முடியாமல் போய் விடுகிறது.வசதி உள்ளவர் வீட்டு பிள்ளைகளே வழக்கம்போல் பரிசுகளை " தட்டி "ச்செல்கின்றன. இன்னும் சில பள்ளிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆடைதான் அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவர்களே ஆடையும் கொடுக்கிறார்கள். விலை ஆயிரம் இரண்டாயிரம். ஏழைகள் எங்கே போவார்கள் ? இப்படியெல்லாம் நடக்கும் கொடூரக் கொள்ளைகளை நினைத்து குடல் நடுங்கிக் கிடக்கும் ஏழைகளுக்கு மழலையர் தினமோ...மாணவர் தினமோ எதுவாக இருந்தாலும் அவை சந்தோஷத்தைத் தருவதில்லை.. சங்கடத்தைத்தான் தருகின்றன.'
Abu Haashima Vaver