Saturday, May 30, 2015

தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!

நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதிநான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாக கற்பதற்கான வாய்ப்புதான் இந்த சட்டம்.

இச் சட்டம் நமது தேசத்திற்கு புதிதான ஒன்றல்ல. கல்வியாளர் அபுல் கலாம் ஆசாத் மற்றும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் இணைந்து கடந்த 1950-ஆம் ஆண்டு முன்வைத்த சட்டம்தான் இது. சமூகத்தில் அனைத்து தரப்பினரும் கல்வி பெற்று எங்கே உயர்ந்து விடுவார்களோ என்றெண்ணி சில சதிகாரர்களால் இந்த சட்டம் நிறைவேறாமலே போய்விட்டது. இன்றளவும் அந்த “சமூக அநீதி” நடைமுறையில்தான் உள்ளது.

Wednesday, May 27, 2015

ரப்பே ! இவனை சுவர்க்கத்துக்கு சொந்தக்காரனாக ஆக்கிவிடு ! ரப்பே ரஹ்மானே ரஹீமே


உயிர்போனது உனக்கு அந்நிகழ்வால்
உயிர்போகிறது எனக்கு

உள்ளத்தால் நேசம்கொண்ட
உணர்வில் நிறைந்த

உலகமும் போற்றும்
உயிரானவனே

உயிரற்ற உன் உடல்
உயிரற்ற பலரின் உணர்வுகளையும்

உசுப்பிவிட்டதே உயிரே

ஊரார் உற்றார்
உளறிக்கொண்டே இருக்கின்றனர்
உன் உயர்வின் உன்னதத்தை

சீனா ஈனா குடும்பத்தின்
இன்னொரு வைரமன்றோ நீ

நெருங்கினாலும் விலகினாலும்
உன் வெளிப்பாட்டில்

உண்மையையும்
அக்கறையையும் மட்டுமே நிறைத்தவனே

உன்போல் ஆகுமோ இன்னொரு உயிர்

எவரை அழைத்தாலும் தேம்புதலை மட்டுமே
பதிலாய் சொல்கின்றனர்

என்னவனே ஊரார் போற்றும் உன்னதவனே
இரவு நடுநிசியில் அழைத்து நகைச்சுவை செய்வாயே

என் செய்வேன் என்செய்வேன்

இறைவா ...

இவனின் மரணம் கண்டு
இக்கணமும் ஏக்கம்கொள்ளும்

உற்றார்ஊரார் போற்றும் இவனின் உன்னதத்தை
வஜிபத் செய்வாயாக ...

இவனை பரிசுத்தப்படுத்து,
இவனை மன்னித்து விடு,

இவனை சுவர்க்கத்துக்கு
சொந்தக்காரனாக ஆக்கிவிடு

ரப்பே
ரஹ்மானே
ரஹீமே

லாயிலாஹா இல்லா அன்த
சுப்ஹானக இன்னி குன்தும் மினள்ளாலிமீன் ... !

--------------------------------------------------------------------------

Saturday, May 23, 2015

நானும் கூட ராஜா தானே, நாட்டு மக்களிலே...


வாழ்க்கையில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த நாளில் கல்விச்சாலைகள், அந்த லட்சி யங்கள் நிறைவேற உதவின. இடலாக்குடி, அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த, ஒரு மாணவன், IAS - ஆக வேண்டும் என்று ஆசைபட்டான். தமிழ் மீடியத்தில் படிக்கும், ஒரு மாணவன், இவ்வாறு கனவு காண்பது தவறு, என்று போதித்தார் தலைமை ஆசிரியர்.
50 வருடங்களுக்கு முன்னால், தமிழில் IAS எழுதும் வசதி இல்லை. ஆங்கிலத்தில் சிறந்த புலமை வேண்டும், ஆங்கிலத்தில் அந்த மாணவனுக்கு, அவ்வளவு புலமை இல்லை.
எஸ், நோ, என்ற ஆங்கில வார்த்தைகளே, அந்த நாளில், அந்த பள்ளி மாணவர்கள், அறிந்த ஆங்கில வார்த்தைகள். அந்த நாளில், ஒரு அண்டர் கிராடுவேட் டிகிரியும், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனும், 50 ரூபாய் பணமும் இருந்தால், யார் வேண்டுமா னாலும், IAS, IPS, IFS தேர்வு எழுத முடியும். இன்றும், அதிக பொருள் செலவில்லாமல், தேர்வு எழுதி, பாஸ் பண்ணும் பரீட்சை IAS தான்.

Friday, May 22, 2015

தோழமை கொக்குடன் ... குளக்கரையில் திட்டமிட்டு .../ J Banu Haroon


தோழமை கொக்குடன் ...
குளக்கரையில் திட்டமிட்டு ...
ஒற்றைக்காலில் தவமிருந்து ...
தண்ணீர்க்குள் தலைநுழைத்து ....
தனியொரு மீன்பிடித்து .-நீ
தானேதின்ன முயல்கையில் ...

எதிர்மரக் கிளையொன்றில் ...
பார்த்திருந்த பருந்தொன்று ...
விருட்டென்று பறந்துவந்து ...
உன்வாய்மீன் கவ்விச்சென்று ..
தான்தின்று பசியமர்த்தி ...
உன்னைஏக்கப்பட விட்டதோ ....

Thursday, May 21, 2015

எவ்வளவு அழகான மனிதன் நீ ...





எவ்வளவு அழகான மனிதன் நீ
எத்தனை இளமையான தலைவன் நீ
எவ்வளவு கம்பீரமான பிரதமர் நீ
நாட்டின் கவுரவத்தை
உன்னைப்போல் அழகாக்கியவனல்லவா நீ
உலகத்தையே சுற்றி வந்த போதும்
கேலிக்கு ஆளாகாதவனல்லவா நீ
பறப்பதை தொழிலாகச் செய்த விமானத் தொழிலாளி நீ
அரசியல் கடந்தும் நாட்டு மக்களால்
நேசிக்கப்பட்டவன் நீ
வளமான தேசத்தை கட்டமைக்க
விமானத்திலிருந்து
இறங்கி வந்தவன் நீ
நாட்டின் எதிர்காலம நீ என
மக்கள் நம்பிக்கையை பெற்றவன் நீ !

Sunday, May 17, 2015

இதயம் காக்கும் காய்கறிகள் !

காய்கறிகளில் உயிர்ச்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றிலுள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது.

ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக்கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு காத்துப் பராமரிக்கின்றன. பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்த்து வருகிறோம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்குக் கிடைக்கிறது.

ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை விட அதிகமாக நம்மால் பெறமுடிகிறது. இவை ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடல் ஏற்படும் பலவிதப் பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால்மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே,வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே,டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள்வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும்காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்றுகொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில்குறிக்கப்படுகிறது.

Saturday, May 16, 2015

வீரம் பணிந்த வரலாறு

"இஸ்லாம் வாளால் தான் பரப்பப் பட்டது" என்ற குற்றச்சாட்டு... சில மேல் நாட்டு வர லாற்று ஆசிரிரியார்களால், அவ்வப்போது உலக மத வரலாறு பற்றிய ஆய்வரங்குகளில்,
நடக்கும் கருத்தரங்கங்களின், விவாதப் பொ ருளாக, இன்றும் எடுத்துக் கொள்ளப்படும் ஒரு சிறப்பு தலைப்பாகும்.
இஸ்லாம் அரபகத்தில் கால் பதித்த நேரம் அது. இஸ்லாம் என்றால் பொருள் என்ன? என்று கேட்டோருக்கு, அது அமைதி என்று அமைதியாக பதில் உரைத்தோரை, எதிரிகள் குரல்வளை நெரித்து, கொடூரமாக கொன்று குவித்து, அவர்களின் இரத்தத்தை, மாமிசத் தை, ஈரல் குலைகளை, சுவைப்பட, இரத்த சுவையோடு மென்று, சுவைத்து விழுங்கி தங்கள் கோரப்பசி ஆற்றி மகிழ்ந்த காலம் அது.

கவிதை: வேட்கை / தாஜ்

கண்களுக்குப் புலப்படாத
வெற்றிக் கம்பம்
எல்லோரையும் ஈர்க்கிறது
பலரும் கூடங்கூட்டமாய் ஓடினார்கள்
ஒருவரை ஒருவர் முந்த
இடித்து தள்ளியப் படிக்கு
ஆவேசம் கொண்டு ஓடினார்கள்
நானும் ஓட ஆரம்பித்தேன்.

சிராய்ப்பு கொண்டவர்களின்
இரத்தக்கறை
வழிநெடுக இரைந்து கிடக்க
முதிர்ந்து களைத்தவர்களும்
கால் ஒடிந்தவர்களும்
பாதையோரங்களில்
ஒதுங்கிக் கிடந்தார்கள்.

Friday, May 15, 2015

ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்

ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்


தன்னை விட இளையனிடம் தன் பலத்தை காட்ட நினைப்பது தான்
ஆதிக்கம் என்று பொருள்கொள்கிறோம். இதையே தான் கொஞ்சம் மாத்தி.......... ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்த முற்படும் போது அங்கே ஆணாதிக்கம்  உருவாகுது. இதற்கு ஆண்கள் தான் முழுக்க முழுக்க காரணம்னு நம் சமுதாயத்தில் ஒரு தோற்றம் வலுப்பெற்றது. என்னை பொறுத்த வரையில்  ஆண்கள் சரியா தான் இருக்காங்க. பெண்களுக்கு தன்னை ஆண்களிடத்தில் அடிமை என காட்ட முயலும்  முட்டாள்தனம் தான் எதற்கு என்று தெரியவில்லை. அவர்களிடத்தில் ஆணாதிக்கம் உருவாகியதற்கும் அதை அழியாமல் பாதுகாத்து வருவதற்கும் முழு பொறுப்பு பெண்கள் தான் என்பதை பற்றிய பதிவு தான் இது

Wednesday, May 13, 2015

S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு

சலவாத் பாவா நினைவு நாளில் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு
S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு
S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின்,அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு

ஹஜ்ரத் S.R.ஷம்சுல்ஹுதா அவர்கள்  நீடூர் - நெய்வாசலில் பல ஆண்டுகள் நீடூர் - நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் நாஜிராகவும்(முதல்வராக) நீடூர் நெய்வாசல் ஜாமியா மஸ்ஜிதில் தலைமை இமாமாகவும் இருந்து சிறந்த சேவை செய்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் சொந்த ஊர் வடக்கு மாங்குடி
S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின்,அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு,அல்லாவின் உயரிய படைப்பின் பார்வை,உயரினங்களின் உண்ணதம்,
வீடியோ பார்க்க இங்கு க்ளிக் செய்யுங்கள்S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் அறிவியல் ரீதியிலா...

Monday, May 11, 2015

துபாயில் அல் பயான் பத்திரிகை நிறுவனம் தமிழருக்கு பாராட்டி பரிசளித்து கௌரவிப்பு ! [ புகைப்படங்கள் இணைப்பு ]

கடந்த 10/05/2015 ஞாயிற்றுக் கிழமை துபாயில் வெளியாகும் அல் பயான் என்கிற அரபிப் பத்திரிக்கையின் 35 வது வருட விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது இந்த நிறுவனத்தில் கடந்த 32 வருடமாக நன்னடத்தையுடனும் சிறப்புடனும் பணி புரிந்ததற்காக நீடூரைச் சேர்ந்த நஸீர் அலி என்பவருக்கு அந்நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரும் ஷீஃப் எடிட்டருமான தாஹின் ஷாஹின் [Mr.thahin shahin] அவர்களால் பாராட்டி சான்றிதழ்  வழங்கி பரிசளித்து கௌரவித்தது. அத்துடன் இன்று வெளியான அல் பயான் பத்திரிக்கையிலும் இச்செய்தியை புகைப்படத்துடன்  பிரசுரித்து இருந்தது.

அமீரகத்தில் சமீப காலமாக இத்தகைய பாராட்டுதலும்,அன்பளிப்புக்களும் கௌரவிப்பும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது.

நஸீர் அலி நீடூர் சீசன் எனும் இணைய தள நிர்வாகி முகம்மது அலி அவர்களின் மகனார் என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல் நஸீர் அலி துபாய்

Saturday, May 9, 2015

தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்


  1. துல்லியமான நீர்ப்பரப்பு
    கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது
    சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்

    போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
    அசைந்தசைந்து
    காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்

    உன் கையிலொரு மதுக் குவளை
    'அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
    மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
    சமுத்திரம் பற்றி மட்டும் சொல்' என்றாய்
    'இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்'
    வேறென்ன சொல்ல இயலும்

    - எம்.ரிஷான் ஷெரீப்
    http://mrishanshareef.blogspot.in

Wednesday, May 6, 2015

புன்னகை -புதுசுரபி

 ’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………

மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.

தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை.