தேர்தலில் கூட்டணி காண முயற்சிகள் செய்யும் கட்சிகளுக்குள் கருத்து, கொள்கை உடன்பாடு கிடையாது . தேர்தல் முடிந்த பின் இவர்கள் சொல்வது தேர்தலுக்காக எதிரியை வீழ்த்த செய்துக் கொண்ட உடன்பாடுதான் இந்த கூட்டணி என்பார்கள் . தேர்தல் முடிந்த பின் ஆதாயம் தேடி ஆட்சியில் அமர தேர்தல் கூட்டணி போய் ஆட்சி கூட்டணி ஒன்று அமையும்.
யாருக்கு வாக்களிப்பது?
கட்சிகளை பார்க்காதீர்கள் .தேர்தல் அறிக்கை பார்க்காதீர்கள், அறிக்கை பார்த்து படிக்கத்தான். உண்மையிலேயே தொண்டு ஆற்றும் எண்ணம் கொண்டவர்க்கு வாக்களித்து பயனடையுங்கள். நல்லவராகவும் செயல் ஆற்றுவதில் வல்லவராகவும் இருக்க வேண்டும் இரவு , பகல் எந்நேரமும் பொது சேவைக்கு அவரை அழைத்தால் வருபவரா? கையழுத்து போட பணம் கேட்பவரா? லஞ்சம் வாங்கிக் கொண்டு பணம் சேர்ப்பதற்கே தேர்தலில் போட்டி போடுபவரா ? கவணித்து செயல்படுங்கள்.
போட்டி போடும் எண்ணிக்கை கூடியது ஏன் ? பணம் சேர்ப்பதற்கே ! சேவை செய்யும் மனிதர்கள் போட்டி போட விரும்புவதில்லை.போட்டி இல்லாமல் மக்களால் விரும்பி தேர்ந்தேடுக்கும் காலம் வரவேண்டும்.
வேட்பாளர்களின் மனதினை ஆராய வேண்டும். பணம் சேர்க்கவா! தோற்றாலும் பரவாயில்லை நமது பெயரும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணமா! அல்லது புகழ் நாடியா! ' என் கண் ஒன்று போவதை விட அவன் கண் இரண்டும் போக வேண்டும்' தான் வெல்வதைவிட அவன் தோற்பதே முக்கியம்! இப்படி பல கொள்கைகள் பரந்து மக்களை குழப்பத்தில் திணற வைக்கும் தேர்தல் விளையாட்டு.
மத ,ஜாதி ,சமூக ரீதியான கூட்டு. அனைத்து மக்கள் நலம் கருதி கொள்கை அடிப்படையில் கூட்டு அமைக்க வேண்டுமென்ற கொள்கை காணாமல் போய் விட்டது
யார் ஒற்றுமையாக இருந்தாலும் முஸ்லிம்கள் மட்டும் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள் என்பது உறுதி . .
நாம் தோற்றாலும் பரவாயில்லை அவர்கள் வரக் கூடாது என்ற தாழ்வு மனப்பாண்மையும் குரோத எண்ணங்களும் தொடரும் !
கூட்டணி காண முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை
முஸ்லிம் அமைப்புகளான 1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை, 2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, 3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, 4. இந்தியன் நேஷனல் லீக், 5. சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை, 6. தேசிய லீக் கட்சி, 7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த், 9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில், 10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், 11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை, 12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, 13. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், 14. இஸ்லாமிய இலக்கியக் கழகம் 15. முஸ்லிம் லீக்,16 தா.மு. மு க.17தவ்ஹீத் .இன்னபிற முஸ்லிம் அமைப்புகளானவைகள் அரசியல் களத்தில் என்று ஒன்று சேரும்.
அனைத்தும் ஒற்றுமையாக கூட்டணி காண முயற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.முஸ்லிம் கட்சி வைத்திருக்கும் அமைப்புகள்.
No comments:
Post a Comment