நான் ஒரு இரண்டு வருடகாலமாக ஒரு சீன பெண்மணி வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றேன்.
அந்த வீட்டில் நான்கு அறைகள் இருக்கின்றன.
அதில் ஒரு அறையை மட்டும் நான் வாடகைக்கு எடுத்து இருக்கின்றேன். மற்ற "ரூம்"களுக்கு யாரும் குடி வரவில்லை.
எனக்கு வாடகைக்கு இடம் தந்துள்ளவர் ஒரு சீன 85 வயது வந்த மூதாட்டி. அச் சீன மூதாட்டிக்கு பிள்ளைகள் இல்லை. கணவரும் இறந்து விட்டார். அம் மூதாட்டி மட்டும் தான் .
அம் மூதாட்டி தனது உறவினர் விட்டில் கோலாலம்பூரில் தங்கிக் கொண்டு தனக்குள்ள ஐந்து வீடுகளையும் வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து தனது வாழ்வை மகிழ்வாக கழித்து வருகின்றது அந்த ஐந்து விட்டில் ஒரு விட்டில் தான் நான் வாடகைக்கு இருக்கிறேன்.
Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts
Saturday, May 31, 2014
Thursday, February 20, 2014
என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....! தொய்வில்லாமல் தொடர்கிறது
கனவு என்பது ஏக்கங்களின் கானல்நீர் என்றாள்,
கனவு என்பது சாத்தியங்களின் முன்னோட்டம் என்றேன்..!!
கடந்த காலம் என்பது நிகழ்காலத்தின் எச்சம் என்றாள்,
அவை வருங்காலத்தின் அடியுரம் என்றேன்..!!
செல்வம் பெருக்குதல்தான் வாழ்க்கையில் வெற்றியா என்றாள்,
வறுமையை வெல்வது மட்டுமே வாழ்க்கையாகாது என்றேன்..!!
கலாச்சாரம் என்பது மூடிய இதயங்களின் பிடிவாதம் என்றாள்,
பிடிவாதம் என்பது தோல்வியுற்ற சித்தாந்தங்களின் முட்டுக்கொடுப்பு என்றேன்..!!
என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....!இங்கு சொடுக்குங்கள்
-நிஷா மன்சூர்
Nisha Mansur

Friday, December 6, 2013
வெகுஜன எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்தான்...
வெகுஜன எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்தான் பலரும் பத்திரிகைகளில் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனால், அந்தக் கனவு பெரும்பாலானவர்களுக்கு மெய்ப்படுவதில்லை. சிலருக்கு மட்டுமே அவர்கள் பணிபுரியும் பத்திரிகைகளில் எழுத வாய்ப்பு கிடைக்கிறது. அது கூட சிறுகதைகள் என்ற அளவில்தான். இதுவும் கூட எப்போதாவதுதான் அரங்கேறும்.தொடர்கதை எழுதும் சான்ஸ் கிடைப்பது குறிஞ்சி மலர் பூப்பதைவிட அபூர்வமானது.
இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. கல்கி, தேவன் ஆகியோர் ‘ஆனந்த விகடன்’ இதழில் பணிபுரிந்தபோது ஏராளமான தொடர்கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், இவர்களுடன் அந்த இதழ்களில் பணிபுரிந்த எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது? எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்கவில்லை. நிச்சயம் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க சிலர் சமகாலத்தில் இவர்களுடன் பணிபுரிந்திருப்பார்கள். ஆனால், பிரசுர சாத்தியம் இல்லாமல் போனதாலேயே அவர்களது பெயர் கூட யார் நினைவிலும் இன்று இல்லாமல் போய்விட்டது.

Monday, November 18, 2013
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-3]
பட்டமொன்று பெற்றுவிட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து
கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போல என்னைப்
பாதையோரம் நிறுத்தியது
எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து
கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போல என்னைப்
பாதையோரம் நிறுத்தியது
எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்
Thursday, December 20, 2012
உயிராகிறேன்
உன் கண்ணீரை
என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன்
உன் கனவுகள்
நிறைவேறும் வழி சொல்கிறேன்
உன் துயரங்கள்
கரைந்துபோகும் உறவுதருகிறேன்
உன் இதயத்தில்
இருந்துகொண்டு நீயாகிறேன்
உன் தோல்விகளைச்
சுமக்கின்ற தோளாகிறேன்
உன் வெற்றிகளைக்
கொண்டாடும் பூக்களாகிறேன்
உன் குழந்தை மனச்
செயல்களை ரசித்துக்கொள்கிறேன்
உன் திறமை தேடிப்
பாராட்டி உன் வானமாகிறேன்
உன் உணர்வோடு
உணர்வாகும் நிலையாகிறேன்
உன் உயிரோடு
உயிர் கோக்கும் உயிராகிறேன்
Source : http://anbudanbuhari.blogspot.in/

Monday, August 13, 2012
கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா! ஒரு கருத்தோட்டம் (வீடியோ இணைப்புடன்)
எனது கற்பனை, என்னைப் பொறுத்தவரை, ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு!
நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி
நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலாம்

Tuesday, March 6, 2012
கானாவை கண்டு பிடித்தவர் யார்!
ஒளி கண்டேன் ஒலி கேட்டேன்
அலை கண்டேன் ஓசை கேட்டேன்
காதல் கொண்டேன் ஆசை கொண்டேன்
கனா கண்டேன் கண் விழித்தேன்
அங்கும் வெளிச்சம் இங்கும் வெளிச்சம்
கனா நின்று மறைந்தது நினைவு நிலையாய் நின்றது
கற்பனை ஊரும் களைந்து போகும்
கற்பனைக்கு நங்கூரம் இருப்பின் நிலைத்து நிற்கும்
மனோநிலை மாறி மாறி வரும் காலம் மாறுவதுபோல்
கனாவின் நிலையும் மாறி மாறி வரும் விழித்தால் களைந்து விடும்
கனா மகிழ்வையும் அச்சத்தையும் மாறி மாறி கொடுக்கும்
கனாவை நினைவாக்க முயல்வதற்கு முன் மறைந்து மறந்து போகும்.
மறந்துபோகும் கனவே மனிதனை பித்தம் பிடிக்காமல் பாதுகாக்கும்
நல்ல கனா ! கெட்ட கனா என உனக்குள் ஒரு பிரிவுண்டோ!
நடந்த நிகழ்வால் நீ கனாவாய் வந்தாயா!
நிகழப் போவதுற்கு முன் நினைவைத் தந்தாயோ !
ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
நடக்கமுடியாததை கனாவாய் வந்து மகிழ வைத்தாயோ!
மறக்கும் கனாவாய் சில நிலைத்து நிற்கும் கனாவாய் சில வந்து விளையாடுவதேன்!
பயமுறுத்தும் கானவாகவும் மகிழ்விக்கும் கானவாகவும் வேடிக்கை காட்டும் விநோதத்தினை எங்கு கற்றாய்!

Subscribe to:
Posts (Atom)