Friday, February 28, 2014

சுயநலமிகளின் வேகம் பிரிவுகளின் நோக்கம்

சுயநலமிகளின் வேகம்
பிரிவுகளின் நோக்கம்

பொதுநலமிகளின் தாக்கம்
ஒற்றுமையின் ஏக்கம்

முறிக்க முயல்கிறாய்
சேர்க்க முயல்கிறேன்

அடங்கா ஆசை
பிளக்காத பாசம்

சொல்லுவதோ உலகுக்கு செய்வதோ உனக்கு

வெளிப்டையாக சொல்லவில்லை
வெளிப்டையாக சொன்னால் விலகி விடுவாய்

சொல்லாமல் விட்டால் அறியாமல் போவாய்
சொல்லியும் விட்டால் கெட்டொழிவாய்

சொல்லுவதோ உலகுக்கு
செய்வதோ உனக்கு

முகநூல் செல்லுக்குள்ளும் புகுந்தது

அரசியல்
தத்துவம்
கணினி
விஞ்ஞானம்
காதல்
குடும்பம் ,சமையல் மற்றும்
இன்னபிற படிக்க கல்லூரி தேவையா !
கல்லூரியில் தேர்வு ,தண்டனை ,உயர்வு தாழ்வு .பணம் செலவு இருக்கும்
ஒரு தடையும் இல்லை, ஆர்வமும் இனாமாகவும் கிடைக்க முகநூல் போதும்

இருக்கும் சிக்கலை அவிழ்க்க 'அல்லோலப் ' படும் நிலை

கசடில் கரைந்து போகாமல்
உள்ளம் உறைந்து நிற்கிறது

கசடுகளை கொட்டியதால் கரைகள் நிறைந்து விட்டன
உள்ளத்தில் உள்ள உய்ர்வானதை கொட்ட இடத்தைக் காணோம்

ஊமையாய் உலகில் நடக்கும் அவலங்களை அழிப்பதற்க்கே நாட்கள் போதவில்லை
மெளனமாய் காலத்தை வேலையில் ஈடுபடுத்தி நிற்குமிடமும் நாற்றம் வீசுகிறது
அரசும் ஆதரவு தரவில்லை
உடனிருக்கும் மானிடரும் கண்டு கொள்வதில்லை

பட்டுத் தெறிக்கும் பார்வையில்..

பட்டுத் தெறிக்கும் பார்வையில்
மேகத்தின் அழகும்
இதயங்களின் ஆசையும்
நகர்ந்து செல்லும் போது
பசுமை நிறைந்த காட்சிகள் மனதில் தோன்றும் ...!

வானில் சுடர் கொடுக்கின்ற
சூரியன் மேனியில்
தடவும் போது
வியர்வையாய் வடிந்து
விழும் சில எண்ணத் துளிகள் …

ஒரு கணம் எதிர் பார்ப்பு
ஏங்கித தவிக்கும் பொழுதில்
முன்பு நிறைவேறத் தவறி விட்ட
வேதனைகளும்
சுமைகளும் தொடரும்
வாழ்க்கைப் பயணங்களில் …

Thursday, February 27, 2014

அன்பு தாங்க வாழ்க்கை அதை எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ!

இன்றைக்கு காலைல ஆபிஸ் போனேன், நான் என்னோட சைக்கிள் நிறுத்துற இடத்துல ஒரு மகனும் அவருடைய தாயாரும் பேசிட்டு இருந்தாங்க! நான் கொஞ்சம் நகருங்கன்னு சொல்லிட்டு என் சைக்கிளை நிறுத்திக்கொண்டிருக்கும் பொது , நான் விரும்பாமலேயே அவர்களின் உரையாடல் என் செவியை தீண்டியது.

அந்த அம்மா சொன்னாங்க, நான் உன் ப்ரண்ட், என் கிட்ட எதையும் மறைக்காதடா தம்பி

அதுக்கு அந்த மகன், இல்லேம்மா பேஸ்புக்ல தான் அந்த பொண்ணு பழக்கம் மூனு மாசம் தான், மூனு முறை தான் பாத்திருக்கேன்னு!

நீ என்னடா இப்படி சொல்ற, அந்த பொண்ணோட அப்பா வந்து மிரட்டுறாங்க, பொண்ணு முழுகாம இருக்காளாமே!

வந்து இல்லம்மா, நான் டேப்ளட் வாங்கித்தரட்டுமான்னு கேட்டேன், அப்பவெல்லாம் இல்ல சரியாயிடுச்சுன்னு தான் சொன்னா,

இதையெல்லாம் விரும்பாமத்தான் கேட்டியான்னு கேட்குறீங்களா?........இல்லைங்க இயல்பாவே என்னால ரொம்ப மெதுவாதான் நடக்க முடியும். அதனால கிசுகிசு ப்பா அவங்க பேசினாலும் அது என் மனசை பிழிய ஆரம்பிடுச்சுடுச்சு, இதுக்கு பேர் காதலான்னு யோசிட்டு நான் நடக்கும் போதே அந்த மகன் ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க! என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!

அந்த பொரம்போக்கை நிஜமாவே அந்த பொண்ணு நேசிச்சிருந்தா பாவம் அவளும் அவ குழந்தையும்! சும்மா பொறுக்கி பண்ணாடையா இருந்தா என்ன கண்ராவி கலாச்சாரம் டா சாமி!

யோசிட்டு போய் ஆபிஸ்ல உட்கார்ந்ததுல கொஞ்ச நேரம் வேலை பார்க்க முடியல,

Wednesday, February 26, 2014

நீந்தும் மீன்களை வரைபவள்


அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக
வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

'முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகா'
மதகுருவின் உரை சுவரெங்கும் எதிரொலிக்கிறது
பித்தேறிய ஆண்கள் கூட்டம்
நளினமான கரங்களை அடக்கிவைத்திடும்
பாரம்பரிய எண்ணச் சங்கிலிகளோடு
புனித இல்லத்தின் வாயில் தாண்டுகிறது

Tuesday, February 25, 2014

வி.ஐ.பி.களின் காலர் ட்யூன்!

எழுதியவர் யுவகிருஷ்ணா

  மாதத்துக்கு முப்பது ரூபாய் செலவழித்தால் போதும். நமக்கு போன் செய்பவர்களின் காதில் ‘ட்ரிங் ட்ரிங்’குக்கு பதிலாக நாமே தேர்ந்தெடுக்கும் பாடல் இசைவெள்ளமாய் பாய்கிறது. சாமானியர்களுக்கு மட்டும்தான் இந்த ‘காலர் ட்யூன்’ வசதியா. அரசியல் புள்ளிகளும் அசத்தலாமே. ஒய் நாட்? வி.ஐ.பி.களின் தற்போதைய ‘மூடு’க்கேற்ப நம்முடைய தாழ்மையான பரிந்துரைகள்...


                                                        அஞ்சா நெஞ்சன் :
“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை?”

ஆடுதுறை அஸ் - ஸலாம் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரியில் ஐம்பெரும்விழா

உயர் நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

1. முதலாவது பட்டமளிப்பு விழா
2. கல்வி விழிப்புணர்வு மாநாடு
3. சமய நல்லிணக்க விழா
4. கல்லூரி விளையாட்டு விழா
5. கல்லூரி 5-ஆம் ஆண்டு விழா

அனைவரும் வாரீர்!

அழைப்பின் மகிழ்வில்

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் !


சொல்லக்  கொதிக்குதுடா நெஞ்சம் - நாட்டில்
.......சோதனை வந்ததடா நேர்மைக்குப் பஞ்சம்
மெல்லக் கரையும் மனிதம் - உலகில்
.......மெலியுதே முன்னோரும் காத்தப் புனிதம்!

ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
.....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!
..
கள்ள வணிகம் பதுக்கல் - எல்லாம்
......காலத்தின் கட்டாயம் என்றே மதிக்கும்
உள்ள நிலமைகள் எண்ணி - நாளும்
.....உள்ளம் கொதிக்கவே வேகுதடா கண்ணீர்!

மெல்ல இனிசாகும் செந்தமிழும் - இளையோர்
.... மென்று குதறியே காரி உமிழும்
கொல்லும் கொலைவெறிப் பாயும் - பாடலால்
.....கொஞ்சமும் அச்சமின்றித் தாய்மொழித் தேயும்

Monday, February 24, 2014

லேனா ஓர் ஆச்சரியம்

கொஞ்ச நாளைக்கு முன்பு திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் அறுபதாம் கல்யாண விழாவுக்கான அழைப்பு வந்தது எனக்கு. இன்றும் கமகமவென மணத்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கை. ரொம்பக் குறைவாக ஆயிரம் பேரை மட்டும் அழைத்திருப்பதாகவும் (!) நான் அந்த ஆயிரத்தில் ஒருவன் என்றும் அறிந்து ஆனந்தம்கொண்டேன்! லேனாவோடு சில முறை பேசியிருக்கிறேன். ரொம்ப எளிமையாகவும் அன்பாகவும் பழகுவார். ஒருமுறை எங்கள் கல்லூரியில் பேசியிருக்கிறார். காரைக்குடியில் சில கூட்டங்களில் நானும் அவரும் பேசியிருக்கிறோம். தமிழ் நாட்டில் கையில் ஸ்டாப் வாட்ச் வைத்துக்கொண்டு பேசும் ஒரே நபர் அவர்தான்! நான் அவருக்கு நேர் மாறான ஆள்! ஆனாலும் ’ஸ்டாப்’ என்று அடுத்தவர் சொல்லும் முன் அல்லது நினைக்கும் முன் நிறுத்திவிடுவேன்!

Thursday, February 20, 2014

வண்ணப் பெண்புறாவை சின்னப் புறாக்கள் மொய்த்தும்....வண்ணப் பெண்புறாவை
சின்னப் புறாக்கள் மொய்த்தும்
ஈயாடவில்லை
ஏக்கம்கொண்ட விழிகளில்
ஏனெனில்
ஏந்திலையின் நெஞ்சுக்குள்
ஏகந்தத்தின் நினைவுகள்
சூழ்ந்து சூரையாடிக்கொண்டிருந்தன
சுகந்தத்தின் கண்விழித்த
சொப்பனத்தில்
சொல்லடி என்னவென்று
செல்லக்கிளியே-உனை
சொக்கவைத்தது யாரென்று...

ஏறெடுத்துப் பார்க்கும் பார்வையில்
எட்டடுக்கு கேள்விகள்,
தொடுக்கிறாள் இவள்
துள்ளித் துவழ்கிறான் அவன்.

என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....! தொய்வில்லாமல் தொடர்கிறது

கனவு என்பது ஏக்கங்களின் கானல்நீர் என்றாள்,
கனவு என்பது சாத்தியங்களின் முன்னோட்டம் என்றேன்..!!

கடந்த காலம் என்பது நிகழ்காலத்தின் எச்சம் என்றாள்,
அவை வருங்காலத்தின் அடியுரம் என்றேன்..!!

செல்வம் பெருக்குதல்தான் வாழ்க்கையில் வெற்றியா என்றாள்,
வறுமையை வெல்வது மட்டுமே வாழ்க்கையாகாது என்றேன்..!!

கலாச்சாரம் என்பது மூடிய இதயங்களின் பிடிவாதம் என்றாள்,
பிடிவாதம் என்பது தோல்வியுற்ற சித்தாந்தங்களின் முட்டுக்கொடுப்பு என்றேன்..!!

என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....!இங்கு  சொடுக்குங்கள்


-நிஷா மன்சூர்
Nisha Mansur

கண்டுபிடிப்பு:-


படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !

Tuesday, February 18, 2014

அகம் நீயே யுகம் நீயே


அகம் நீயே
யுகம் நீயே

வரம் நீயே
சுகம் நீயே

கடும் புனலாய் காதல் வளர்த்தேன்
சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்மனசும் மனசும் சேருமா
மௌன மாகப் பேசுமா
பனியில் பூசும் வண்ணமாய்
அழியுமா ?

இரவு பகலைத் தின்னுமா
விழிகள் கனவில் மின்னுமா
உறக்கம் போன பின்னுமா
மயக்கமா ?

சுய தொழிலில் சாதிக்கும் ஆஷா சுல்தானா!

''இதெல்லாம் ஒரு தொழில்னு...''
ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி!

''வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!''

- மன உறுதி வார்த்தைகளில் தெறிக்கிறது... திருச்சி பெண், ஆஷா சுல்தானாவுக்கு.

R.A.முகம்மது பாரூக்.( Err Farouk) துபாய் சுற்றுலா(Dubai Travel)

 R.A.முகம்மது பாரூக்.( Err Farouk) துபாய் சுற்றுலா(Dubai Travel)

 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில்  துபாய் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
துபாயில் இந்திய மக்கள் அதிகம் தொழிலும் ஈடுபட்டு மற்றும் வேலையும் செய்து வருகின்றார்கள்.
அதிகமானவர் தங்கள் குடும்பத்தை விட்டு அங்கு பொருள் ஈட்ட சென்று வேலை செய்கின்றார்கள் .
எங்கள் ஊர் நீடூரிலிருந்தும் அங்கு சென்றுள்ளார்கள் .அவர்கள் உறவினர்கள் ,நண்பர்கள் பலர் அவர்களை பார்க்கவும், துபாய் நாடு பார்க்கவும்  சென்று வருவதுமுண்டு.  சென்னையைவிட துபாயில் சில பொருள்கள் மிகவும் மலிவான விலையில்  கிடைப்பதாக சொல்கின்றார்கள்.  துபாயில் நகை கடைகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது 

அந்த வகையில் எனது உறவினர்  R.A.முகம்மது பாரூக்.( Err Farouk)அவர்கள்  துபாய் சுற்றுலா(Dubai Travel) சென்று வந்துள்ளார் அவருக்கு நமது வாழ்த்துகள்


Monday, February 17, 2014

பொது அறிவில் அசத்திய 2–ம் வகுப்பு மாணவி: 6 நிமிடத்தில் உலக நாடுகளை பட்டியலிட்டு சாதனை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகம்மது இஸ்மத்துல்லா. இவரது மகள் ஆஷிமா பர்ஜிஸ் (வயது 7). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே பொது அறிவில் மாணவி ஆஷிமா சாதனை படைத்து பலரையும் கவர்ந்து வருகிறார்.

அம்மையே உன்னைக்கொன்ற பழி சுமந்தவர்களாய்

ஆண்களை மயக்கும்மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டீச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

நேருவையும் அவரது தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளெழச்செய்த திருப்புமுனை

 திருப்புமுனை நாயகன்

வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Saturday, February 15, 2014

குடும்பம் மகிழ்வாய் இருக்க


மனைவி  மீது  மென்மையான புரிதல் மற்றும்  நட்பு இருக்க வேண்டும் .

பண்பட்ட, மென்மையான முறையில் இனிய வார்த்தைகளைக் கொண்டு    மனைவியுடன் பேச வேண்டும் .

மனைவி  சோகமாக கவலையாக  இருக்கும்  போது அவளது கவலையை நீக்க முயற்சிக்க மனைவியுடன் நேசம் காட்ட வேண்டும்.   இரக்கம் கொண்டு அவளை சந்தோஷப்படுத்த  வேண்டும் .  சிறந்த நண்பராக  மனிவியின்  பிரச்சனைகளை தீர்க்க  மனைவிக்கு  ஆதரவாக  இருக்க வேண்டும் .

 குழந்தைகள் கல்வி கற்க அவளுக்கு உதவ வேண்டும் .
மனைவி செய்த தவறுகள் பற்றி முரட்டுத்தனமாக கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசக் கூடாது.   அவளுக்கு  அமைதியாக சிகிச்சை செய்வது போல் செயல்பட வேண்டும். 

அவள்  கோபப் படும்போது  அமைதியாக இருக்க வேண்டும் .
நாம் தவறு செய்திருந்தால்  மன்னிப்பு கேட்க வேண்டும் . மனைவியிடம் மன்னிப்பு கேட்பதை மரியாதை குறைவாக கருதக் கூடாது. அன்பை அதிகப் படுத்துவது ஒரு உயர்ந்த செயல்தான் .அது ஒரு  பாக்கியமாகும் .
 " என் கணவர்  யாரையும் விட என்னை நேசிக்கிறார் . " என்று சொல்லும்படி ,நினைக்கும்படி வாழ்வது உயர்வானதே

Friday, February 14, 2014

ஐ லவ் சென்னை எப்பவும்

சென்னை வந்து இந்த மாதத்தோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இந்த வருடங்களில் சென்னையின் வரலாற்றில் எல்லாம் இடம்பிடிக்கவில்லை தான். ஆனால் வருங்காலத்தில் நான் என் வரலாற்றை எழுதினால் பெரும் சாட்சியாய் இருக்கப் போவது சென்னை தான்..

சென்னை மீது எப்போதும் பெருங்காதல் உண்டு.. பெருங்காதலின் உபவிளைவாய் அவ்வப்போது கோபமும், சலிப்பும் கூட ஏற்படுவது உண்டு தான்... எந்த ஊருக்குக் கிளம்பினாலும் திரும்பி வர விரும்புகிற இடமாய் சென்னை தான் இருக்கிறது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, பெண்களும் சரி சொந்த ஊர்ப் பெருமை பேசுவதோ, ஊர் திரும்புதலை பற்றி யோசிப்பதோ குறைவுதான். ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை யாரும் விரும்புவதில்லை தானே?

பயங்களும், குழப்பங்களும் நிறைந்த என் பால்ய காலத்தை எப்போதுமே நான் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவதில்லை.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே அந்த ஊரின் மூச்சுத் திணறலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே கனவாய் இருந்தது. சென்னைக்கு முதலில் வந்தபோது வேலையே இருக்கவில்லை.. வேலை கிடைத்து விட்டதாய் வீட்டில் பொய் சொல்லி, தி.நகர் தராசு அலுவலக வாசலில் அப்பாவை நிற்கவைத்து, அதெல்லாம் பெரிய டிராமா...:)

Thursday, February 13, 2014

காதல் தோழி !

காதல் தோழி !

தோட்டத்து
ரோஜாச்செடி நான் !
அவள் என் தோழி !

தாயின் வயிற்றில்
அவள் கருவானபோது
அவள் தோட்டத்து மண்ணில்
நான் பயிரானேன் !

சிறுமியாய் அவள்
துள்ளித் திரிந்தபோது
நான்
பூப் பூத்தேன் !
சின்னத் தோழி கூந்தலுக்கு
என் செல்லப் பூக்களால்
மணம் கொடுத்தேன் !

Wednesday, February 12, 2014

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் திண்டுக்கல் தனபாலன்.


திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

நாம் திண்டுக்கல் தனபாலன் பற்றி ஆய்வு செய்து அவர் தரும் ஊக்கத்தைப் பெறுவோம்

Tuesday, February 11, 2014

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்..

பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)
சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)
அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)
வான் மழை கடல் அலையை கண்டிறையை புகழ்ந்திட்டார்(2)
இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

பாரம்பரியம் !

பண்டு தொட்டு இன்று வரை
பாரிலுள்ளோர் கடைபிடிக்கும்
பகட்டில்லாப் பொக்கிசமாம்

தொன்று தொட்டுச் செய்து வந்த
தொழில் தொய்ந்து போனாலும்
நிகழவிருந்த காரியமும்
நிற்கதியாய் ஆனாலும்
பரம்பரையாய் பேணிவரும்
பாரம்பரியம் நிலைத்திடுமே

குளிருக்கும் வெயிலுக்கும் ! எலும்புக்கும்! தோலுக்கும் !

குளிருக்கும் வெயிலுக்கும் !
நடுவுல நான் குடிக்கிற கஞ்சியும் !
கொதிச்சி நொதிச்சிருச்சி !
புளிச்சதன்னிய குடிச்சி !
பச்சதன்னியில பயிறுநட்டேன்!
நட்டபயிறு வளந்தாச்சும்,
மிச்ச வயிர நெறப்புமா ?

Monday, February 10, 2014

நாகூர் ரூமி என்ற நற்சொல்லர்..

கற்றதும்,பெற்றதும் தொடரில் எழுத்தாளர் சுஜாதா மரபுக்கவிதைகள் குறித்து எழுதும்போது என்னையும்,ஆகாசம்பட்டு சேஷாசலம் என்ற கவிஞரையும் குறிப்பிட்டுப் பாராராட்டியிருந்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்க ஆ.விகடனில் அவர் எண் வாங்கி பேசினேன். உமர்கய்யாமின் ருபாயத்துகளை மரபுக்கவிதையில் கொண்டுவர முயற்சியுங்கள்.நாகூர்ரூமி புதுக்கவிதையில் அவற்றை சிறப்பாக எழுதியுள்ளார் என்றார்.. நாகூர்ரூமியின் எழுத்து மிகுந்த ஈர்ப்புவிசை கொண்டது...

ஆம்பூர் வரும்போது வீட்டிற்கு வாருங்கள் என அவர் அழைப்பார், அவரைச் சந்தித்து வரவேண்டும் ஒவ்வொருமுறையும் நான் நினைப்பேன்.

வாராமல் இருப்பதற்கு எது உனைத் தடுக்கிறது!

இஸ்லாம் அழைக்கிறது..

இருள் கூட;
இமை மூட;
இறைக் கொடுத்தப்
போர்வை!

ஒயாமல் ஒடும்
மேகம்;
தாகமாய் தலை
உயர்த்தி நாம் பார்க்கும்
வானம்!
 

வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்

வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்

ஆனதினால் மானிடனே ஆண்டனவனை நீ  தொழுவாய்

மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா

மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா

மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.

மகத்தான நெறியி;ல் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை

பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை

Sunday, February 9, 2014

என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....!


நான் என்பது பொதுப்பெயர் என்றாள்,
பிரபஞ்சத்தின் துணுக்குகள் தன்னை பிரபஞ்சமாக நினைத்துக் கொள்ளும் மயக்கம் என்றேன்...!!

ஓவியம் என்பது வண்ணங்களின் கலவை என்றால்
இசை என்பது ஒலிகளின் முயக்கம் என்றாள்,
இவையிரண்டுமே புலன்களின் மயக்கம் என்றேன்..!!

கலை என்பது இச்சைகளின் புனிதப்போர்வை என்றாள்,
புனிதம் என்பது கற்பிதங்களின் உருவெளித்தோற்றம் என்றேன்..!!

ஓவியம் என்பது உணர்வுகளின் வர்ணம் என்றாள்,
வர்ணம் என்பது இசையதிர்வுகளின் கண்காட்சி என்றேன்..!!

வேணுமுங்க ஒங்கதொணை

கிராமத்தின் நதிக் கரைகளில் ஓடிவிளையாடிய கோடி வர்ண வானவில் அவள். ஏழ்மையின் தாழ்வாரங்களில் பிறந்தாலும், ஒரு மச்ச அழுக்கும் தொற்றிப் பிறக்காத பேரழகுப் பெட்டகம். அவளின் ஓடிய கால்களை நிறுத்தி ஆடிய கரங்களைப் பற்றி இழுத்துவந்து மணமேடையில் ஒரு குங்குமப் பொட்டாய்க் குந்த வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள்.

முப்பதே நாட்கள், முத்தமும் மூச்சுக்காற்றுமாய் இருந்துவிட்டு காசுதேடி கண்ணீரோடு கடல் கடந்தான் அவன். மாதம் ஒன்றுதான் ஆனது என்றாலும், அந்தக் கற்பூரக் காதலுறவு அவளுக்குள் ஒரு புத்துயிருக்கு முன்னுரை எழுதி விட்டது.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற அறிவுரைக்குப் பின் எத்தனையெத்தனை சோகங்கள் கிடக்கின்றன என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். அதில் ஒரு சிறு பகுதிதான் இந்தக் கவிதை, அந்தச் சூல்முகில் எழுதும் மடலாக கிராமத்து மொழியிலேயேமலர்கிறது.

Saturday, February 8, 2014

: சீறாப்புராணம் முற்றோதல்


சீறாப்புராணம் முற்றோதல் - காப்பு
தமிழ் இலக்கிய உலகினில் ஜாதி மத காழ்ப்புணர்வு உள்ளது என்று நான் நிச்சயமாக கூறவில்லை.

ஆனால் அவ்வாறு இல்லை என்றும் என்னால் கூற இயலாது.

நவீன உலகில், நேரமில்லாது மக்கள் உழலும் இந்தக் காலத்தில்  டீக்கடைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும்  கூட்டம் முற்றிலுமாக தமிழ் அகத்தில் அழிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அதில் ஒரு பெரும் பகுதி இன்று இணையத்தில் பல சிறு சிறு குழுமங்களில் பரவி உள்ளதை இல்லை என்றும் என்னால் நிச்சயமாக கூறமுடியாது. 

Friday, February 7, 2014

மேலே செல்லச் செல்ல


கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா.

“வயசு வந்து போச்சு”

”வயசு வந்து போச்சு”
(ஒரு முதிர்கன்னியின் முனகல்)
வயசு வந்து போச்சு
மன்சு நொந்து போச்சு
ஆண்டுகள் பெருகிப் போச்சு
ஆயுளும் அருகிப் போச்சு
உணர்வுகள் கருகிப் போச்சு
கண்களும் அருவியாச்சு

Wednesday, February 5, 2014

இயல்பாய் இசை மீது உன்னிடமிருக்கும் காதலால்

வானவில்லாய் உன் புருவங்கள் கொடை பிடிக்க
நீல நிற மீன் களின் கரு விழிகளாய்
உன் விழிகளின் பார்வை பல இடம் சென்று வர

மென்மையான தென்றலை உள்வாங்கி
சூட்டோடு வெளியாகும் காற்றினால்
உன் நாசி சூடாகியதால் சிகப்ப வண்ணமாய் காட்சியளிகின்றது

எளிதாய் ஒரு தொழில்

இன்று:

வாட்ட சாட்டமுகம்
வகையான கம்பீரம்
இனிய பேச்சு
எப்போதும் புன்சிரிப்பு
தூய வெண்ணுடை
தீட்சண்யமிகு பார்வை
கறுப்புத் தாடி
காய்த்துப் போனநெற்றி
பார்ப்போரை ஈர்க்கும்
பக்திப் பரவசமே!
பலவாறாய் சிரமப்
பட்டநம்ம முத்தலிபு
சில வருஷ மாக
சிரமமின்றி வாழ்கிறார்!
வீட்டைப் புதுப்பித்தார்
வயலிரண்டை வாங்கிப் போட்டார்.
வங்கியில் பணம் சேர்த்தார்
வாகனமும் வாங்கிவிட்டார்
என்ன தொழிலென்று
யாருக்கும் தெரியாது
எப்படி வசதி என்று
யூகிக்கவும் முடியாது
எளிதான தொழிலொன்று
இருக்கிறது என்றஉண்மை
இவருக்கே தெரியாது!
அதுஒரு தனிக்கதைதான்!
ஒருநாள் அவர் நண்பர்
உமருடன் இருக்கையிலே
பெரியார் ஒருவர்
பணிவாய் வந்துநின்றார்!
கையில் ஒருநோட்டு
கறுப்புநிற சூட்கேஸ¤
நேயமுடன் நோக்கினார்
நோட்டை நீட்டினார்.
வாங்கிப் படித்தஉமர்
வீட்டுக்குள் சென்றுவந்தார்
பத்து ரூபாயை
பரிவுடனே கொடுத்திட்டார்!
பெரிதாய் சலாம்சொல்லி
பெரியவரும் சென்றுவிட்டார்.

முகநூலில் நான் .A Look Back - Mohamed Ali Jinnah - facebook

 A Look Back - Mohamed Ali Jinnah - facebook 

Mohamed Ali


முகநூலில் முகமூடி கழட்டும் முகநூல் உரிமையாளன் .நம்மையறியாமல் நம்மை பற்றி படம் எடுத்து நாம் வேண்டும்போது கொடுக்கும் செயல் .பாராட்ட வேண்டியதுதான் .நம் செயல் நாம் அறிய
Here’s my Facebook film. Find yours at https://facebook.com/lookback/ #FacebookIs10
 https://www.facebook.com/photo.php?v=10201563810959471&l=8023571855988120180
உலகம் சுற்றும் வாலிபரின்
.........உருவம் சுற்றும் காணொளியில்
மலரும் நினைவைக் காணபதிலே
.......மகிழ்ந்து யானும் போற்றுகின்றேன்
புலரும் காலை வீச்சினைப்போல்
.....புலந்த முகநூல் பக்கமிதைப்
பலரும் போற்ற வைத்துவிட்டார்
....படத்தை எடுத்துப் பரப்பிவிட்டே!

”கவியன்பன் கலாம்”

Tuesday, February 4, 2014

அம்மா

 (கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது - செய்தி)


இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

அருமை! படியுங்கள்..


அருமை படியுங்கள் .எனக்கு மகள்கள் இல்லை என்ற வருத்தம் உண்டு. சிலர் ஆண் பிள்ளை என்று அர்த்தமற்று வருந்துகிறார்கள்

Read this…

On the first day of their marriage, wife and husband decided and agreed not to open the door for anyone! On that day first, husband’s parents came to see them, they were behind the door. Husband and the wife looked at each other, husband wanted to open the door, but since they had an agreement he did not open the door, so his parents left. After a while the same day , wife’s parents came , wife and the husband looked at each other and even though they had an agreement , wife with tears on her eyes whispered , I can’t do this to my parents , and she opened the door. Husband did not say anything, years passed and they had 4 boys and the fifth child was a girl. The father, planned a very big party for the new born baby girl, and he invited everyone over. Later that night his wife asked him what was the reason for such a big celebration for this baby while we did not do it for the others! The Husband simply replied, because she is the one who will open the door for me!

Daughters are always so special !!
Mohamed Err Farouk shared Rajib Khaja's photo

உனை இறைஞ்சுவதற்கே உயிர் பெற்றேன் !

இறைவா !
இக்கரையில் விட்டாய்
அக்கரையில் சேர்த்து விடு
அக்கறையோடு கேட்கிறேன்
நட்டாற்றில் நிறுத்தி விடாதே
காக்க வைத்து கரையை கடக்கச் செய்யாதே
மின்னல் வேகத்தில் உன் உறையில் சேர்த்து விடு

....அடடா மனம் ஓடுதே....

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே

இருக்கும்போது ....

இருக்கும்போது ....

அவர் ஹிந்து
ஹிந்துவில் எந்த ஜாதி?
அது தெரியாது.
இறந்த பின் அவரை 'பிணம்' என்று
எல்லோரும் சொல்வார்கள்

இவர் கிறிஸ்தவர்
கிறிஸ்தவரில் எந்த பிரிவு
அது தெரியாது ஆனால் அவர்களுக்கு வழிகாட்டி யேசு கிறிஸ்து

கிறிஸ்தவரில் கதோலிக்கா, பிராஷ்டென்டா !
இதில் பல உட்பிரிவுளையும் திருச்சபைகளையும் கொண்டது. அங்கிலிக்கன், லூதரன்...

காதல் மழையில்


காதல் மழையில்
குதித்து குளித்தேன்
குளித்ததில் மகிழ்ந்தேன்

உடை நனைந்தது
உடலும் நனைந்தது
உள்ளமும் குளிர்ந்து

காதல் நின்றது
மழை நின்றது போல்
உடலும் காய்ந்தது
உள்ளமும் காய்ந்தது

மழையில் நனைந்தது மறக்கவில்லை
காதலில் வீழ்ந்த நினைவுகள் மறக்க முடியவில்லை

Monday, February 3, 2014

உங்களை "பேஸ் புக்கில் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதற்கான முக்கிய நோக்கம் என்ன?

உங்களை முகநூல் என்ற "பேஸ் புக்கில் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதற்கான முக்கிய நோக்கம் என்ன?
- குலாம் ரசூல், தர்மபுரி

பதில் :Dr. ஹிமானா சையத்

சுருக்கமாகச் சொன்னால், கற்றுக்கொள்ள! குறிப்பாக நான் அதிகமாக வெளிநாடுகளில் வசிப்பதால் நம் நாட்டுச் செய்திகள் பல விடுபட்டுப் போகின்றன. அவற்றை பன்னோக்குப் பார்வையுடன் முகநூல் நண்பர்கள் பதிவேற்றுகிறார்கள். இளைஞர்களின் எண்ண எழுச்சிகளிலிருந்தும் அவர்களது அணுகுமுறைகளிலிருந்தும் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. விடுபட்டுப்போன பழைய நண்பர்களுடன் உரையாடுவதில் ஒரு வகையான சிலிர்ப்பு. என் பதிவுகளை -படங்களைப் பார்க்காமல் அவசரமாக ஹிமானா என்ற பெண் பெயரைப் பார்த்ததும் 'சாட்டிங்' செய்ய விரும்பி வந்து, புரிந்ததும் நட்பைக் கட் பண்ணிடிட்டு விலகியோடும் விடலைகளுடன் பழகும் போது நாமும் நமது இளமைக் காலத்தை அசைபோட முடிகிறது. பல இளைஞர்கள் நம்மை விடவும் புத்திசாலிகளாக இருப்பதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுகிறது. நிறையவே அழைப்புச் செய்திகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல நாடுகளிலிருந்து வரும் நண்பர்களுக்கு சாட்டிங் மூலம் கவுன்ஸிலிங் செய்ய முடிகிறது. முதுமையை வெல்ல இதுவும் ஓர் அழகிய - அரிய ஆயுதம்.அதே நேரத்தில் அதன் கூர்மையில் நாம் வெட்டுப்படாமல் கவனமாகவும் இருக்க வேண்டும்.

 DR.Himana Syed

Sunday, February 2, 2014

பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.

நினைத்துப் பார்க்கிறேன்

அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைத் கூட எவராலும் உச்சரிக்க முடியாதே வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ

ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்த எத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.

தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.

பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது

Saturday, February 1, 2014

சமுதாயத்தின் ஒற்றுமை உயர்வை தரும்

உள் மனதின் நம்பிக்கை அதிகம்
உடல் உணர்வுகள் உயர்வு
வலிமை உயர்வை தருகிறது
கவனக் குறைவு தடுமாறுகிறது
அறிவு வழி காட்டுகிறது

தன்னை உருவாக்க தன் முயற்சி
தன்னை உயர்த்த பிறரை தாழ்த்தி அல்ல
தன்னை மேம் படுத்த சமுதாயம் தேவை
தன்னை உயர்த்துவதே சமுதாய மேம்பாடுக்கே
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமுதாயமாக முடியாது
தனி மனிதனின் உயர்வு சமுதாயத்தில் அடக்கம்
தனித்து வாழ விரும்புவன்
வழி தவறிய மனிதன்

LinkWithin

Related Posts with Thumbnails