Tuesday, March 31, 2015

சொல்லத் தோணுது 27: பலி கேட்கும் பயணங்கள் – தங்கர் பச்சான்

சொல்லத் தோணுது 27: பலி கேட்கும் பயணங்கள்

பலருக்கும் பயண அனுபவம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பயணம் செய்ய முற்படும் போதெல்லாம் மரணபயமும் வந்து தொற்றிக் கொள்கின்றன. வீட்டை விட்டுப் புறப்படும் போது கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் தெரிவதில்லை. தொடர்வண்டி, வானூர்தி விபத்துகள் எப்பொழுதோ ஒன்று ஏற்படுவதைப் போல அல்ல சாலைவழிப் பயணங்கள். விபத்து செய்திகள் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.

வெறும் செய்தியாகவே அதனை ஊடகங்களில் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும், அந்த விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைப் பற்றி சிந்திக்க நேரமோ தேவையோ இருப்பதில்லை. வெறும் புள்ளி விபரங்களுக்குள் அவர்களின் வாழ்வு முடிந்து விடுகிறது.

குடை

மழை பெய்து கொண்டிருக்கிறது
துளை விழுந்த குடையொன்றுடன்
தெருவைக் கடக்கிறேன் நான்
சிவப்பு விளக்குக்குப் பின்னால்
எனது நெற்றி வரிகளின் மீது கவனத்தைச் செலுத்தும்
ஒரு பெண்ணின் பச்சை நிறப் பார்வை
மழை வடிவம் கொண்டு
இந்தத் தெருவில் கரையக்கூடியது

தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
என்னிடமில்லை அந்தக் குடை இப்பொழுது
அந்தப் பெண்ணின் கரங்களில்
அதோ எனது குடை

-ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதை

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


சொல்லத் தோணுது 25: கலையும் கள்வர்களும்! - தங்கர் பச்சான்

சொல்லத் தோணுது 25: கலையும் கள்வர்களும்!

முதல் காதலன், முதல் காதலி போல முதன்முதலாகப் பார்த்த சினிமாவையும் யாரும் மறந்திருக்கவே முடியாது. தமிழர்களின் வாழ்க்கையைத் திருடிக்கொண்டதில் சினிமாவுக்குத்தான் முதலிடம். இந்த சினிமா இப்படியெல்லாம் பேராசைக்காரர்களையும், திருடர்களையும், பைத்தியக்காரர்களையும் உருவாக்கும் எனத் தெரிந்திருந்தால் தாமஸ் ஆல்வா எடிசனோ பின்னர் அந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தவர்களோ சற்று சிந்தித்திருப்பார்கள். ஒவ்வொரு இனத்துக்கான, மண்ணுக்கான அடையாளக் கலைகளைக் கூட அழித்தொழித்ததில் சினிமாவின் பங்கே முதன்மையானது.

Monday, March 30, 2015

உலகம் உன் கையிலடா....! (தொடர் - 3)


உலகம் உன் கையிலடா....!
மானுடத்தை மறந்துவிட்ட உலகமடா!
=== மாக்களால் ஆளப்படும் உலகமடா!
மன்னுயிர் காக்க முனைந்துவிட்டால்
=== மனுநீதி காத்திடும் உலகமடா!!

பொதுநலம் புதைத்துவிட்ட உலகமடா!
=== புண்ணியம் புறக்கணித்த உலகமடா!
மனிதநேயம் மாண்பாய் காத்திருந்தால்
=== வாழ்வாங்கு வாழவைக்கும் உலகமடா!!
உழாமல் உண்ணஎண்ணும் உலகமடா!
=== உழவர்கள் மாண்டுபோகும் உலகமடா!
உழுதுண்டு வாழ்வோராய் மார்விட்டால்
=== தொழுதுண்டு வாழவைக்கும் உலகமடா!!
(தொடர் - 3)

 ஆக்கம் ராஜா வாவுபிள்ளை அவர்கள் 

 உலகம் உன் கையிலடா....!(தொடர் - 2)-ராஜா வாவுபிள்ளை
 உலகம் உன் கையிலடா....! - ராஜா வாவுபிள்ளை (தொடர் - 1)
 

அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி


அன்பு மிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வை மட்டுமே நோக்கமாகக்கொண்டு 150 உறுப்பினர்களை கொண்ட அஸ்- ஸலாம் அறக்கட்டளையினால் எமது அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி 2009 ம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களோடு சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது. 5 பிரிவுகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பும், 2 பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பும் அண்ணா பல்கலை கழகத்தின் இணைப்பினை பெற்று நடைபெற்று வருகிறது.

21-03-2015 அன்று கூடிய அறக்கட்டளையின் பொதுக்குழு கல்லூரியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறக்கட்டளைக்கு புதிதாக 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறது. எனவே, அறக்கட்டளையில் உறுப்பினராக விரும்பும் சமுதாயத்தின் நலம் நாடும் சமுதாய ஆர்வலர்கள் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


A.M. ஷாஜஹான்.
செயலாளர், அஸ்-ஸலாம் அறக்கட்டளை.
திருமங்கலக்குடி - ஆடுதுறை,
தஞ்சை மாவட்டம்
தொடர்புக்கு : +91 98948 94999
Aduthurai Shahjahan

Sunday, March 22, 2015

மீட் மிஸ்டர் ‘மீடியா டெரரிஸ்ட்’ அர்னாப் கோஸ்வாமி!! – முஹம்மது ஃபைஸ்‘டைம்ஸ் நௌவ்’ தொலைக்காட்சி – அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி.  26/11 மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு மேற்படி ஆசாமிகள் நாடு முழுவதும் பிரபலம். அதிலும் அர்னாப் நடத்தும் ‘News Hour’ எனும் செய்தி நேரம் பற்றி நாம் அறிந்திருப்போம். அதில் அவன் போடும் காட்டுக் கூச்சலும் பங்கேற்கும் விருந்தினர்களை நடத்தும் பாங்கும் முகம் சுளிக்க வைப்பவை.

 இத்தனை தெரிந்திருந்ததும் அன்று அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டியதாயிற்று. ‘ஷரியத் நீதி மன்றங்களின் தீர்ப்பு செல்லாது’ என்று சில மாதங்களுக்கு முன் ஒரு உச்ச நீதி மன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது அல்லவா? அதை ஒட்டித்தான் அன்று விவாதம்.

Friday, March 20, 2015

Mohamed Ali அண்ணனின் சந்தேகமும்... திராவிடன் - ஆரியன் - அலசலும்...

Mohamed Ali அண்ணனின் சந்தேகமும்...
திராவிடன் - ஆரியன் - அலசலும்...
--------------------------------------------
'திராவிட நாடு என்று ஒரு தனி நாடு இருந்ததா
தெரிந்துக் கொள்ள விருப்பம்
ஆரிய நாடு என்று ஒரு தனி நாடு இருந்ததா
அதனையும் அறிய வேண்டும்.'
- Mohamed Ali

# சென்ற வாரத்தில் முகம்மதலி அண்ணனின்
மேற்கண்டப் பதிவிற்கு
நான் எழுதிய வரிகளைதான்
இங்கே கீழே உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
- தாஜ்

Wednesday, March 18, 2015

ஜோசியமும் பலனும் /தாஜ்

ஜோசியமும் பலனும்
----------------------------
என் பள்ளிக்கூட நண்பன் கணேசனும்
இலக்கியம் + சினேகம் என்று
உடன்வந்த திருஞானமும்
ஊரில் பிரபலமடைந்துவிட்ட ஜோசியர்கள்.
இதில் திருஞானம்...
முக்கிய நாளிதழான 'தினமலர்' பத்திரிகையில்
ஜோதிடம் பகுதி எழுதும் கில்லாடி!.

சென்ற மாதத்தில் ஒருநாள்
கடைவீதியில்...
என்னைச் சந்தித்த திருஞானம்,
"ஏன் பாய் வாட்டமா இருக்கீங்க?" என்றான்.

Tuesday, March 17, 2015

உடல் நலம் /அவசியம் கேளுங்கள்

அவசியமில்லாமல் மருத்துவரை நாடி தேவையற்ற மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க கேட்க வேண்டியது இதில் உள்ளது
பதிவிறக்கம் செய்து கேளுங்கள் .மற்றவருக்கும் பகிருங்கள்


Tuesday, March 10, 2015

கறுவுளக் கொள்ளையர்கள்

அற்புதமான நம் மண்ணில்
அரசியல் பருந்துகள்
நம் வாழ்வின்
அத்தனை சுகங்களையும்
கடிதில் கவ்விச் செல்கிறார்கள்
நரி வடை கவ்விச் செல்வதைப்போல

திருட்டு என்றால்
எதைத்தான் திருடுவது என்று
ஒரு வெட்கம் வேண்டாமா

சோறு திருட்டு
சுகம் திருட்டு
வேலை திருட்டு
வசதி திருட்டு
உரிமை திருட்டு
உறக்கம் திருட்டு
என்பதெல்லாம் போக

சொல்லத் தோணுது 24_ கருகும் பிஞ்சுகள்! - தங்கர் பச்சான்

கருகும் பிஞ்சுகள்

ஊரைவிட்டுத் துரத்துவதற்காகவும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள்.  அதை சிறப்பாக செய்து  தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்கு, கடந்துபோன பள்ளி நாட்களாலும்,  இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும்.
’பள்ளிக்கூடம்’  திரைப்படத்துக்குப் பின்  ஏராளமான பள்ளிகளுக்கு  நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும்,  ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடினேன்.  நான் கூர்ந்து கவனிக்கக்கூடிய முகங்கள் அவர்களுடையதாகவே இருக்கின்றன.
அந்தப் படத்திற்குப்பின் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எத்தனையோ பள்ளிக்கூடங்கள்  முன்னாள்  மாணவர்களால்  மீண்டும் உயிர்பெற்றன. அத்துடன்  இளமைக் கால நட்புகளும் உயிர்பெற்றன. தாய் தந்தையர், உறவினர் போலவே  தன்னை உருவாக்கிய  பள்ளியையும் நன்றிப் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்கள்.
எனது படைப்பின் பாத்திரங்கள் போலவே,  அண்மையில் நான்  பங்கேற்ற பாலக்கோடு அரசினர்  பள்ளியின்  மாணவர்கள்  சந்திப்பும் இருந்தது.
இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து  அந்த அரசுப் பள்ளியில் கல்விப் பயின்று,  அஸ்ஸாம்  மாநிலத்தில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றும் முன்னாள்  மாணவரையும்  அந்த நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் அவரின் காலடி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் நடந்தபோது  அவருக்குள் ஏற்பட்ட நெகிழ்ச்சியும், மாணவர்களுடனான உரையாடலும், அவரின் ஆசிரியர்களைப் பற்றிய பின்னோக்கிய நினைவுகளும் மீண்டும் ’பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்கே என்னை அழைத்துச் சென்றன.
  தன்னை  மீட்டெடுத்து சமூகத்தில் தன்னை அடையாளப்படுத்தக் காரணமாக இருந்த அந்தப் பள்ளிக்கு, அவர் நன்றி செலுத்திய விதம் என் கண்களைக் கலங்கச் செய்தது. ’பள்ளிக்கூடம்’  படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் கதைநாயகன் பேசுவது போலவே அது இருந்தது.

Sunday, March 8, 2015

புதுமைப்பெண் - ரஃபீக்"இப்ப வேலையில் இருக்கும் நிறுவனத்தைவிட நல்ல நிறுவனமாக இருந்தால் உடனே தாவிவிடு, அதுபோலக் கிடைக்காத சூழ்நிலையில், இருப்பதிலேயே ஒட்டிக்கொண்டிரு அதுதான் கெட்டிக்காரத்தனம்” இப்படித்தான் நமது கெட்டிக்காரத்தனத்தையும் புத்திசாலித்தனத்தையும் நமக்குள் விதைத்திருக்கிறார்கள் இல்லையா?

ஒருவேளை நீங்கள் அதற்கு மாறாக முயற்சி செய்யக்கூட வேண்டாம், அப்படி செய்யலாம் என்று நினைத்தேன் என்று சொல்லிப்பாருங்கள், “பிழைக்கத் தெரியாதவன்” என்ற பட்டம் சூட்ட வரிசையில் நிற்பார்கள்.

Thursday, March 5, 2015

யார் இந்த அஜீஸ் அன்சாரி?

அஜீஸ் அன்சாரி

இவனைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அமெரிக்க ஹாலிவுட் பட உலகையே தலைகீழாக புரட்டி போடும் அளவுக்கு சக்தியும் திறமையும் கொண்ட அதிசய இளைஞன் இவன்.புகழ் பெற்ற ஆலிவுட் நடிகன். ஜனாதிபதி ஒபாமாவின் குடும்ப நண்பன். ஜனாதியின் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் இவனது தீவிர ரசிகர்கள்.தேர்தல் நிதிக்குழுவில் அங்கம் வகித்த முதல் இந்திய தமிழன். இவன் பெயரைச் சொன்னால் அகில அமெரிக்காவும் வாய் பிளக்கும். அமெரிக்க இளைஞர்களெல்லாம் இவனது தீவிர ரசிகர்கள். இவன் தோன்றும் கூட்டங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வர்.
காசு கொடுத்து டிக்கட் எடுத்து வந்தால் மட்டுமே இவன் முக தரிசனம் கிட்டும். அமெரிக்காவின் எந்த தியேட்டரில் இவன் நிகழ்ச்சி நடந்தாலும் ஒருமாதம் முன்பே அனைத்து டிக்கட்டுகளும் விற்று தீர்ந்து விடும். மைக்கேல் ஜாக்சன் வீட்டருகில் அரண்மனை போன்ற வீடு இவனுக்கு சொந்த மானது. தனக்காக சொந்த விமானம் ஒன்றையே சமீபத்தில் விலைக்கு வாங்கி இருக்கிறான் இந்த இளைஞன்.

Wednesday, March 4, 2015

என்னத்தைத்தான் விட்டுக்கொடுத்தாலும்

என்னத்தைத்தான் விட்டுக்கொடுத்தாலும்
பங்காளிக்கு மட்டும் ஏன் யானைப்பசி ?
தின்பதற்கு ஒன்றுமில்லையா ?
யானைப்பசிக்கு ஏன் சோளப்பொறி ?
கரும்புக்காட்டையெல்லம் அழித்துவிட்டும் ,
ஏன் இன்னும் அகோரத்தாண்டவம் ?
மூளை மந்தித்ததோ ?
மரத்துப்போனதோ -இல்லை
மறந்துப்போனதோ !-இல்லை
மதம் பிடித்தலைகிறதோ ?

போதை தலைக்கேறிய ..
குரங்கு கையின் பூமாலையாய் ..
உதிர்த்தெரியப்பட்டது யாரால் ?...
உறவுகள் உடைத்தெறியப்பட்டது யாரால் ?...

மழைநீரில் அலைகழிக்கப்பட்ட
காகிதப் படகை ....கரைசேர்க்க ..மறுத்து ..
தனி சொகுசு கொண்டாடி களித்தது யாராம் ?..
பின் ,தனித்துப்போனதும் யாராம் ?..

எதைக் கொண்டுவந்தோம் கொண்டுபோக ?..
எதைத் தின்று தீர்ப்போம் பித்தம்தீர ?
கையில் அமானிதங்களை வைத்துக்கொண்டு ..
அமானிதங்களுக்கு அலைவது பெரும் பாவமய்யா !...Tuesday, March 3, 2015

எதிர்க்குரல் தளத்தை பற்றி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...

இஸ்லாம் என்ற ஓரிறைக்கொள்கை   தோன்றிய காலம் முதலே அது விமர்சனங்களையும், மாபெரும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த விமர்சனங்களே பலரையும் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிய செய்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் சேர்த்துள்ளது. இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஆக இஸ்லாத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது.

தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு  ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த தளத்தின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்...மேலும் நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டின் அறிவியலுக்கு எதிரான நிலையை துறைவாரியாக அம்பலப்படுத்துவதும் இத்தளத்தின் நோக்கமாகும்.

இவை தவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும் இடம்பெறும். இத்தளத்தின் பெரும்பான்மையான பதிவுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், முழுமையான பலனை வாசகர்கள் அடையும் பொருட்டு, பதிவுகளை மீள்பதிவு அல்லது ஷேர் செய்பவர்கள், பதிவின் சுட்டியுடன் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பதிவுகளின் பட்டியல்:

எதிர்க்குரல் தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளின் தலைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தலைப்புகளின் மேல் சுட்டுவதின் மூலம் பதிவுகளை படிக்கலாம்

Monday, March 2, 2015

ரஹீம்கஸாலி‬ யின் ‪#‎கஸாலித்துவம்‬ புத்தகத்திலிருந்து ஒரு துளி..

க்ளாஸ் மேட் ,காலேஜ் மேட், ரூம் மேட் மாதிரி எதிர் காலத்தில் ஃபேஸ்புக் மேட் என்றும் புதிய வார்த்தை வந்துடும்ன்னு நினைக்கின்றேன்
#‎ஃபேஸ்புக்த்துவம்‬

இது ‪#‎ரஹீம்கஸாலி‬ ‬ யின் ‪#‎கஸாலித்துவம்‬
புத்தகத்திலிருந்து ஒரு துளி
இன்னும் நிறைய கட்டுரையாக, நிகழ்வுகளாக, அரசியல் விமர்சனமாக நவீனத்துடன்,மேம்படுத்தலாக(update) உள்ளது.அதனை அனைவரும் பார்த்து படிக்க, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய புத்தகம் #‎ரஹீம்கஸாலி‬ யின் #‎கஸாலித்துவம்‬

LinkWithin

Related Posts with Thumbnails