Monday, November 30, 2015

கோஷ்டி மனப்பான்மை

முஸ்லிம்  சமுதாயம்  பேச்சளவில்  ஒரே  உம்மத்  எனும்  சமுதாயத்தவராகவே  இருக்கிறார்கள். இத்தனை பெரிய சமுதாயம் உண்மையிலேயே ஒன்றுபட்டால் முழு ஒற்றுமையோடு இறைவனின் வார்த்தையை உயர்த்துவதற்கு வேலை செய்தால் கண்ணியமும், சிறப்பும் அவர்களின் காலடியில் விழ எந்த வினாடியும் தயாராக இருக்கும். ஆனால் இன்று பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. இப்படிப்பட்ட கோஷ்டி மனப்பான்மையால், தமது சமுதாயத்தையும், தமது பள்ளிவாசல்களையும் தனியாக்கிக் கொண்டார்கள். ஒருவன் மற்றவனை திட்டுகிறான். பள்ளிவாசலிருந்து அடித்து விரட்டப்படுகிறான்! வம்பும் வழக்கும் நடத்தப்படுகின்றன. இப்படி முஸ்லிம் சமுதாயத்தை துண்டு துண்டாக்கிப் போட்டுவிட்டார்கள்.

Thursday, November 26, 2015

பெண்ணே உன்னால்!..

என்னடி பெண்ணே!
இன்னும் உறக்கம்
இருள் விட்டு விலகி
எழுந்திரு கண்ணே!

உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்
எதுவென்றபோதும்
எதிர்கொள்ளடி பெண்ணே!

விழித்திருக்கும்போதே
திருட்டுப்போகும் உலகம்
விழி உறங்கும்போதும்
விழிப்புணர்வு நெஞ்சுக்குள்
திடமாய் இருத்தல் வேண்டும்

Wednesday, November 25, 2015

நுணலும் தன் வாயால் கெடும்

கிணற்றுத் தவளைகளின்
ஞான முதிர்ச்சி கண்டு...

பிரமித்து போன
கடல் தவளைகள்

இப்போது.......

கையது கொண்டு
வாயது பொத்தி

தீவிரவாதம்

இந்துக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் இந்தியா என்றோ அழிந்துபோயிருக்கும்

கிருத்தவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் யூதம் என்றோ தீய்ந்துபோயிருக்கும்

முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் உலகம் என்றோ முடிந்துபோயிருக்கும்

Tuesday, November 24, 2015

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)

1)    பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின்  மீது அமர்ந்து இருந்தோதான் காட்சி அளிக்கும் என்று பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர்  உயரம் 5அடி 6 அங்குலம் ஆகும். அது அப்போதைய பிரான்ஸ் நாட்டின் பிரஜைகளின் சராசரி 5அடி 5 அங்குலத்தினை விட மேலானது. பிரான்ஸ் நாட்டின் அளவை ஆங்கிலேய நாட்டின் அளவினை விட மேலானது. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 5அடி 2அங்குலம் என்றால் அது ஆங்கிலேய நாட்டின் 5அடி 5அங்குலத்திற்கு சமம்.
2)     20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஜெர்மன் நாட்டின் புவியியல் விஞ்ஜானி ஆல்பர்ட் ஈஸ்டன் கணிதத்தில் தோல்வியுற்றவர் என்று சொல்லக் கேள்விப் பட்டுள்ளோம்.
ஆனால் அவர் பள்ளி நுழைவுத் தேர்வில் தான் தோல்வி அடைந்து உள்ளார். அவர் கணிதத்தில் மிகவும் கெட்டிகாரராக திகழ்ந்தார்.
3)     உலக அதிசயங்களில் ஒன்றான சீனாவின் புராதான சின்னமான 2400 அடி நெடுஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால் விண்வெளியிலிருந்து பகலில் பார்க்கும் போது பூமியின் எந்த உருவமும் தெரியாதாம். இரவு நேரத்தில் மட்டும் நகரங்களின் மின் விளக்குகள் தெரியுமாம்.
4)     மூளையின் வலது, இடது பக்க பகுதிகள் தன் வேலையினை தனி, தனியே செய்வதாக கூறுவார்கள்.
ஆனால் இடது பக்க மூளை செய்யும் வேலையினை வலது பக்கமும், வலது பக்க மூளை செய்யும் வேலையினை இடது பக்கமும் நன்கு பரிமாறிக் கொள்கின்றன.
5) வாழை மரம் என்று சுவையான கனியினைத் தருகின்ற வாழையினை நாம் அழைக்கின்றோம்.
ஆனால் உண்மையில் வாழைச் செடி என்பதே சரியானது.

6) மது பிரியர்கள் மது அருந்துவது உஸ்னத்தினை அதிகப்படுத்தி வீரியத்தினைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் மது அருந்தினால் உடலின் சீதோசனத்தினைக் குறைத்து தாம்பத்திய நேரத்தில் வெடிக்காத புஸ் வானமாகும்.

7) உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தக் கூடாது, அவ்வாறு அருந்தினால் ஜீரணத்திற்குத் தடுக்கும் என்று நம்பிக்கை.
ஆனால் உணவு உண்ணும் பொது சிறிது நீர் அருந்துவது ஜீரணத்திற்கு உதவி செய்யும்.

Monday, November 23, 2015

உலகையே வாசிக்கலாம்

குனிந்து நீ வாசிப்பது
கொஞ்சமோ கொஞ்சம்தான்
நண்பா

நீ தலை நிமிர்ந்து வாசித்தாலோ
அந்த வானத்தின் விரியழகும் மாயமும்
உன் கண்களின் விரல்களில்
கெட்டித் தேனென வழியும்
நண்பா

சில விஷயங்கள் புரிவதேயில்லை ...

சில விஷயங்கள் புரிவதேயில்லை ...
சில விஷயங்கள் புரியாமல் இருப்பதேயில்லை ...

மனிதருக்குள் நடக்கும் போட்டி ...
இருவருக்குள் வந்து போகும் பிரிவினை ...
யார் யாரை மிஞ்சுவதென்ற பரிதவிப்பு ...
முன்னேறுபவனை வீழ்த்த துடிக்கிற துடிப்பு ...
விட்டேனா பார் என்கிற வைராக்கியம் ...
விரக்தி கொள்ளும் மனநிலை ...
விவேகமில்லா வியாக்யானம் ...
இன்னும் எதைச்சொல்ல ?...

Saturday, November 21, 2015

இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!

இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!
 அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.


அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.
இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?

அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.

‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’


பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

‘என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.

வாழ்க்கை போராடும் போர்க்களம் என்றால்...

வாழ்க்கை போராடும் போர்க்களம் என்றால்...
வலிமை மிக்கவர்களால் மட்டும் தான் தாக்கு
பிடிக்க இயலுமா.. !!

'STRUGGLE FOR EXISTENCE' - டார்வின்
'SURVIVAL OF THE FITTEST' - ஸ்பென்சர்

தாகம் தீர
நீர் தேவை

பசி தீர
உணவு தேவை

உடல் மறைக்க
உடை தேவை

மோகம் தீர
துணை தேவை

Tuesday, November 17, 2015

ஒரு சில நாட்கள் முன்பு துபையில் மெட்ரோ ரயிலில் பயணம்...

 Mohamed Anas
ஒரு சில நாட்கள் முன்பு துபையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தேன், என் பக்கத்து இருக்கையில் ஒரு ஆப்ரிக்கர் அமர்ந்திருந்தார். கிட்ட தட்ட 5 வருடங்கள் நானும் ஆப்ரிக்காவின் உகாண்டாவில் வேலை பார்த்த அந்த பசுமையான நினைவுகளும் ஆப்ரிக்கர் மீதான ஒரு பாசமும் இன்னும் மனதில் நீங்காமல் இருப்பதால் அந்த ஆப்ரிக்கரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

பேச்சு கொடுத்த உடன் அவரும் சரளமாக பேச ஆரம்பித்தார். அவருடைய சொந்த நாடு எது என்று கேட்டேன், "காம்பியா" என்றார். என்னுடைய நாட்டைப் பற்றி விசாரித்தார், நானும் சொன்னேன். ஆப்ரிக்காவில் நானும் சில ஆண்டுகள் பணியாற்றினேன் என்று சொன்னேன் ரொம்ப ஆச்சரியப் பட்டார். அவருடைய நாட்டைப் பற்றி விசாரித்தேன் ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கே அமைந்திருப்பதாக சொன்னார்.

வளைகுடா அனுப்பிவிட்டு கணவனை பிரிந்திருக்கும் என் தோழியர் சார்பாக...

வளைகுடா அனுப்பிவிட்டு கணவனை பிரிந்திருக்கும் என் தோழியர் சார்பாக...
(எனக்கு அந்த அனுபவம் இல்லை...- Suhaina Mazhar)

அழகு வாழ்வினிலே
பழகும் நாட்களெல்லாம்
பசுமைகள் தந்தாரடி - தோழி
பாசாங்கு இல்லையடி

இணைந்த ஞாபகங்கள்
பிணைந்து கிடப்பதனால்
இனிமைகள் மறந்தேனடி - தோழி
தனிமையும் கொல்லுதடி

இது வேருலகம்...

கள்ளம் கபடமில்லாத ஜீவன்கள்...
நம் முகம் காணாவிட்டால்....
தேடி வாடுபவை....
அன்பைத்தருபவை....
ஆதரவிற்கு ஏங்குபவை....
என்னோடு பாசம மிகக் கொண்டவை.....


சொன்னால் நம்ப மாட்டார்கள்.....
என்னோடு பேசுபவை.....
விவசாயத்தொழிலில்
மாடுகளும் காளைகளும்
இன்னும் எத்தனை நாட்களுக்கோ?

ஒரு மாட்டை பேணி வளர்க்க
நாள் ஒன்றுக்கு இரு நூறு வேண்டும்.
பாலை இறக்குமதி செய்யும் காலம்
பக்கத்தில் தெரிகிறது.....


Monday, November 16, 2015

ஜபருல்லாஹ்வும் தேத்தண்ணியும்


                                                     (புகைப்படம் உதவி: ஆபிதீன் )

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்வைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இவர் ஒரு புரியாத புதிர். புரிந்துக் கொள்வது கடினம் In otherwords I can say, He is a hard nut to crack

புரிந்தவர்களுக்கு இவர் ஒரு திறந்த புத்தகம். புரியாதவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனமா?… ஊஹும்.. .. இல்லை. இவர் ஒரு பெர்முடா முக்கோணம். சர்ச்சைகள் இவருக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி. பிரச்சினைகள் இவருக்கு பிரியாணி மாதிரி.

தேத்தண்ணியும் (தேயிலைத் தண்ணீர்) ஜபருல்லாஹ்வையும் போலவே,,,, “ஹாஸ்யமும், – இவரும்” ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். சாதாரண இரட்டையர்கள் அல்ல. எந்த அறுவை சிகிச்சை நிபுணராலும் பிரிக்க முடியாத Conjoined Twins.

இதுவரை நான் என்னைப் போட்டு குழப்பிக் கொண்டதில்லை. நான் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் இவரிடம் ஐந்தே நிமிடம் பேசிப் பார்க்கலாம். தோல்வியை ஒப்புக் கொள்வார்கள்.

அனுபவம்தான் வாழ்க்கை என்பார்கள். இவருடைய வாழ்க்கையே ஒரு அனுபவம். வாழ்க்கையை கவிதையில் தொலைத்துவிட்டு கவிதையை வாழ்க்கையில் தேடிக்கொண்டிருப்பவர் இவர்.

    சிந்திக்க வேண்டும் என
    எல்லோருமே சொல்லுகிறார்கள்.
    எதைப்பற்றி சிந்திப்பது என்பதே
    என் ஒரே சிந்தனையாக உள்ளது

என்று இந்த ‘பக்கவாட்டு சிந்தனையாளர்’ நம்மிடமே கேள்விகேட்டு நம்மையே பாடாய்ப் படுத்துகிறார்.

Sunday, November 15, 2015

அவன் பேசினால் !


உன்னி லுருவாகி யுள்ளதான
.....வுந்தனகங்காரம் மெல்லவே
என்னில் கரைந்திடவே தந்தேனே
.....என்னை வணங்கிடும் தத்துவமே.
நின்னில் வழக்காக நித்தமுமே
.....நிந்தன் நினைவினை பத்தாகத்
தன்னில் வளர்த்தே வருகிறாய்த்
.....தம்மைக் கெடுத்தே வருந்துகிறாய்.

என்னை சுற்றியிருந்த வேலிகள் உடைக்கப்பட்டு உலகம் அழகாய் தெரிய தொடங்கியது

 சுற்றிலும் மனித உடல்களின்
சிதறல்கள்! மனம் பதைக்க
தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் நானும் ஒருவன்!
மனம் உருகி இறைவா
இவர்களுக்கு ஏற்பட்ட அநீதம்
யாருக்கும் நேர்ந்து விடாமல்
காப்பாற்று கண்களை மூடி
பிரார்த்தித்து நிமிர்ந்தால்
கூட்டத்தின் பல ஜோடி கண்கள்
என்னை உற்று நோக்குவதை
அறிந்தேன்!

Saturday, November 14, 2015

வாழத் தெரிந்தால் வாழலாம், வழியாயில்லை-வையகத்தில்!

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd
நவீன உலகில் வாழ்க்கை கடினமானதும், சவாலானதும் ஆகும். ஆனால் திறமையிருந்தால் சமாளிக்கலாம் என்ற கருத்துடன் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.
அதிர்ஷ்டத்தினை நம்பியிருக்கிறவனுக்கும், அதிர்ஷ்ட தேவதை அவன் கதவைத் தட்டினாலும் அதனை சமாளிக்க சிலருக்குத் தெரியாது.
ஒருவனுக்கு ஒரு நகைக்கடை பரிசுக் கூப்பனால் ஒரு பி.எம்.டபுள்யு கார் பரிசாக கிடைக்கிறது என்ற வைத்துக் கொள்வோம். படகு போன்ற பளபளப்பான காரை சாலையில் செலுத்தும் போது அந்தக் காரையும் அதனை ஓட்டுகின்றவரையும் ஆண், பெண் என்ற பலரின் கவனம் கவரும். அவருக்கு பல புது நண்பர்கள் கூடுவார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சியிடன் பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வார். அதனால் பெட்ரோலுக்கும், மற்ற செலவினங்களுக்கு காசு கரையும். சிறிது நாட்கள் நகன்ற பின்பு காரும் பழுது படும். அதற்கான பராமரிப்பு செலவும் பண்மடங்காகும். அதனால் ஏற்படுகின்ற மன உலச்சல் பெரிய பாரமாக அமையம். ஆகவே அதிர்ஸ்டம் மூலம் வருகின்ற பொருளாதாரம் உண்மையான சந்தோசத்தினைத் தருவதிற்குப் பதிலாக சோகத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்.

                                                       Abdul Latheef Naha
சிலருக்கு நோய்கள் வந்தால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவர். ஆனால் அந்த நோயையே வென்று உலகப் புகழ் ஏணிக்கு எட்டியுள்ள ஒரு பெண்மணியின் கதையினை இங்கே சொல்வது பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன். .

Friday, November 13, 2015

நிற்க (கவிதை)


நிற்க,

நீரூற்று ஏதுமில்லை

நிலத்திலும் ஈரமில்லை

விழியருவி  பெருக்கும் நீரில்

செழிக்கிறது பாலைவனம்பாலை மணல் பகுத்து

பாத்திப் பாதை வகுத்து

புதர்களால் அலங்கரித்து

பயணிக்கிறது என் பிழைப்பு


பிழைக்க உடல் உழைத்து

களைத்து நான் படுக்க

வதைக்கிறது உன் நினைவு

உறைக்கிறதா உனக்கு அங்கும்


அங்கும் இங்கு மென

தங்கு மிடம் மாற்றி

அடுக்கு மாடி குடியிருப்பில்

ஒடுக்கி உடல் சாய்க்க


சாய்ந்த உணர்வலைகள்

சடுதியில் தலை தூக்க

போர்வைக்குள் விழித்திருக்கு

பேரழகி உன் கண்கள்


கண்களை இமை மூட

கனவுகளில் உன் வதனம்

புரண்டு படுத்தாலும்

முரண்டு பிடிக்கிற தேன்?


ஏனென்று கேட்பதற்கு

எத்தனையோ கேள்விகள்

என்னிடம் உண்டு அன்பே

எவரறிவார் பதிலுரைகள்


பதிலில்லாப் புதிர்களடி

பாலைக்கு வந்த கதை

தீரவில்லை தேவைகள்

தேய்கிறது என்னுடலும்


உடல்வதைத்து உணர்வழித்து

உண்டாக்கிய துதான் என்ன

உன்னருகில் நானின்றி

உழல்கின்றேன் உத்தமியே


உத்தமி உன் நினைவில்

உயிர் வாடிப் போகு முன்னே

ஊருக்கு வருவதற்கு

உன்னிலையை அறிந்திடனும்


அறியத்தா அம்மணியே

அன்பென்ன மாறியதா

காட்சிப் பிழைகளென  என்

கண்கள் உனைப் பார்க்கிறதா?


பார்க்கும் திசைகளெல்லாம்

பாவப்பட்ட நான் தெரிய

புறப்பட்டு வந்துவிட்டால்

பிழைப்புண்டா எழுந்து  நிற்க?

Thursday, November 12, 2015

வேலைக்காக வெளிநாட்டுக்கு வருவான்..

வேலைக்காக வெளிநாட்டுக்கு வருவான்..

ஆரம்பத்தில் அப்பாவியா இருப்பான்...

எதிரியை கூட நண்பனா நினைச்சு பழகுவான்..

வேலைக்காக யாரு காலை வேணாலும் பிடிப்பான்..

தினந்தோறும்
தொலைபேசி போடுவான்..

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்!

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)

1)    பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின்  மீது அமர்ந்து இருந்தோதான் காட்சி அளிக்கும் என்று பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர்  உயரம் 5அடி 6 அங்குலம் ஆகும். அது அப்போதைய பிரான்ஸ் நாட்டின் பிரஜைகளின் சராசரி 5அடி 5 அங்குலத்தினை விட மேலானது. பிரான்ஸ் நாட்டின் அளவை ஆங்கிலேய நாட்டின் அளவினை விட மேலானது. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 5அடி 2அங்குலம் என்றால் அது ஆங்கிலேய நாட்டின் 5அடி 5அங்குலத்திற்கு சமம்.
2)     20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஜெர்மன் நாட்டின் புவியியல் விஞ்ஜானி ஆல்பர்ட் ஈஸ்டன் கணிதத்தில் தோல்வியுற்றவர் என்று சொல்லக் கேள்விப் பட்டுள்ளோம்.
ஆனால் அவர் பள்ளி நுழைவுத் தேர்வில் தான் தோல்வி அடைந்து உள்ளார். அவர் கணிதத்தில் மிகவும் கெட்டிகாரராக திகழ்ந்தார்.
3)     உலக அதிசயங்களில் ஒன்றான சீனாவின் புராதான சின்னமான 2400 அடி நெடுஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால் விண்வெளியிலிருந்து பகலில் பார்க்கும் போது பூமியின் எந்த உருவமும் தெரியாதாம். இரவு நேரத்தில் மட்டும் நகரங்களின் மின் விளக்குகள் தெரியுமாம்.
4)     மூளையின் வலது, இடது பக்க பகுதிகள் தன் வேலையினை தனி, தனியே செய்வதாக கூறுவார்கள்.
ஆனால் இடது பக்க மூளை செய்யும் வேலையினை வலது பக்கமும், வலது பக்க மூளை செய்யும் வேலையினை இடது பக்கமும் நன்கு பரிமாறிக் கொள்கின்றன.
5) வாழை மரம் என்று சுவையான கனியினைத் தருகின்ற வாழையினை நாம் அழைக்கின்றோம்.
ஆனால் உண்மையில் வாழைச் செடி என்பதே சரியானது.

கவிஞர் அப்துஸ் ஸலாம் அவர்களின் நினைவுகள்/ இப்பொழுதும் எங்கள் நினைவுகளில் வந்து செல்லக் கூடிய வழக்கம் பெற்று இருக்கிறது.- ஹிலால் முஸ்தபா.

 கவிஞர் அப்துஸ் ஸலாம்

“இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை!
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் – அவன்

பொக்கிஷத்தை மூடுவதில்லை!”

இந்த இசைக் கவிதை நிகழ்த்தி இருக்கக் கூடிய பிரம்மாண்டங்கள் ஏராளமானவை. இந்தப் பாடலின் ஆசிரியர் கவிஞர் அப்துஸ் ஸலாம். கவிஞர் இன்று நம்மிடம் இல்லை.

இந்தக் கவிதையினை இசை வீரியத்தோடு நாகூர் ஹனீஃபா அண்ணன் பாடி வெளியிட்ட கால கட்டத்தில் , இசை உலகின் வித்தியாசமான இசைக் கவிதையினை எழுதிய இந்த கவிஞரை மானசீகமாக நான் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். இசைப் பாடலில் இருந்த இளமை காரணமாக, இந்தக் கவிஞரை ஒரு புதிய இளைஞராக நான் கற்பனைச் செய்து இருந்தேன்.

இந்தக் காலகட்டத்தில் என்னுடைய “பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்” புதுக் கவிதைத் தொகுதி வெளி வந்திருந்தது. அதனை கவிஞர் அப்துஸ் ஸலாம் படித்து இருக்கிறார். அவருடைய மனக் கண்ணில், “யாரோ ஒரு முதிர்ந்த கவிஞன் இந்த நூலின் ஆசிரியனாக இருக்க வேண்டும்” என்ற நினைப்பு முளைத்து இருந்திருக்கிறது.

Wednesday, November 11, 2015

மண் ….!

மண் ….!

குறைகள் குறைவில்லாமல் இருப்பதும்
மண்ணில் தான்
நிறைகள் நிறைந்து இருப்பதும்
மண்ணில் தான்

மனிதம் பிறந்ததும்
மண்ணில் தான்
மானுடம் தழைப்பதும்
மண்ணில் தான்

மனுநீதி பிழைப்பதும்
மண்ணில் தான்
மந்திரங்கள் ஜெபிப்பதும்
மண்ணில் தான்

மன அமைதியைப் பெறுவது எப்படி?


அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. (அல்குர்ஆன் 13: 28)

ஆம்! மேற்சொன்ன இறைவசனம் மனிதர்களுக்கு நிம்மதியைப் பெற வழி வகுக்கும் என்றால் அது மிகையாகாது.

இன்று மனிதர்கள் எவ்வளவோ வளர்ச்சியடைந்து, தொழில்நுட்பத்தின் மூலமும், பொருளாதாரத்தின் மூலமும் எவ்வளவோ முன்னேறி விட்டான்.

தங்களுடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. இதையெல்லாம் வைத்து மனிதனால் எவ்வளவோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தளவுக்கு, அவனுடைய உள்ளத்துக்கு நிம்மதியை வாங்க முடியவில்லை.

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?


மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.

இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.

Monday, November 9, 2015

நீ‬ ‪ ஏன்‬ ‪ வெளிநாடு‬ போன .?...இந்தியா ல வேலை இல்லையா ?#‎சொல்வதெல்லாம்_உண்மை‬...!!!

#‎நீ‬ ‪#‎ஏன்‬ ‪#‎வெளிநாடு‬ ‬ போன ..இந்தியா ல வேலை இல்லையா ? ன்னு கேட்கும் சில சில ‪#‎அறிவு‬ ‪#‎ஜீவிகளுக்கு‬...!
கடுப்புடன் ..!

உங்கள் ‪#‎அப்பா‬ தாத்தா சம்பாதித்து வச்சி காசை என்ன பன்றது தெரியாம எதோ ஒப்புக்கு ‪#‎காலேஜ்‬ போய் எதோ ஒரு டிகிரி வாங்கி இருக்கும் செல்வாக்கில் அங்கே ஒரு வேலையும் வாங்கி அதுல வரும் காசை என்ன செயறதுன்னு தெரியாம குடி கும்மாளம்னு அடிச்சி ஜாலியா போய்டு இருக்கும் வாழ்கையில் எதோ ஒரு கல்யாணம் செய்து அதுல வரும் வரதட்சணையை வச்சி எதோ ஒரு தொழில் ஆரமித்து . கஷ்ட்டம்னாலே என்னான்னு தெரியாத சில உள்நாட்டில் வேலை பார்க்கும் நண்பர்களே

Saturday, November 7, 2015

அந்த ஆசிரியர் இவர்தான்! -Rafeeq Friend

Rafeeq Friend

 "எனக்குக் கிடைத்த அற்புதமான ஆசிரியர்களே, நான் ஒரு ஆசிரியராக வாழவேண்டும்  என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள்!"
 - அகீலா ஆஸிஃபி
எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. அதுவரையிலும் இருந்த நிம்மதி நிறைந்த வாழ்க்கை, அதற்கெதிராய் மாறி அந்நிய நாட்டில் அகதியாக அடைக்கலம் புகுந்து வாழுமாறு பணித்தது. ஆம், 1992ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி கைப்பற்றப்பட்டு உள்நாட்டுப்போர் வெடித்ததில் சிதறுண்டு போனார்கள் அந்நாட்டு மக்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் நோக்கி ஓடினர்.
தங்களின் சொத்து,சுகம், உறவினர்கள் மற்றும் உடமைகள் என அனைத்தையும் துறந்து ஆதரவற்றோராக அகதிகள் முகாம்களில் அடைபட்டனர். சுகமான வாழ்வு கொண்டிருந்த காபூல் மக்களும் அங்கே கண்கலங்கி நின்றனர். கல்வி கற்றிருந்தோரும் காசுபணம் இழந்திருந்தினர். வருடக்கணக்கில் வடிவமைத்துக் கட்டிய வீட்டை அப்படியே விட்டுவிட்டு, மாற்றுத் துணிகள் கூட இல்லாமல் வந்து சேர்ந்தோர் பலர் இங்கிருந்தனர்.
காபூலில் ஓரளவு வசதியான குடும்பம், கல்வியே பிரதானம் என்று, தம் சகோதர சகோதரிகளோடு (ஆண் குழந்தை / பெண் குழந்தை என்று) பேதம் பாராமல்  கல்வி புகட்டிய பெற்றோர். கற்ற கல்வியின் பயனாக காபூலில் கிடைத்த வரலாறு & புவியியல் ஆசிரியப் பணி, அன்பு செலுத்திய மாணவர்கள் என அனைத்தையும் துறந்து, தம் கணவர் மற்றும் இரு சின்னஞ்சிறு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு வந்தவர்தான் 26 வயது அகீலா ஆஸிஃபி எனும் பெண்.  இவர்தான் நாம் வியக்கப்போகும், ஐ நா போற்றிய இந்த ஆண்டின் ஆசிரியை!

Friday, November 6, 2015

முடிந்ததை செய்....!

அக்கிரமத்தை கண்டு அடங்கிவிடாதே
தவறுகளை தட்டிக்கேட்க தயங்கிவிடாதே
இன்னல்களைக் கண்டு இடிந்துவிடாதே
இறுமாப்பு கொண்டு இருந்துவிடாதே

வேஷங்களை நிஜமென்று நம்பிவிடாதே
உண்மையை உரைத்துரைக்க தவறிவிடாதே
பொய்யை புறந்தள்ள பிந்திவிடாதே
அறியாமை கொண்டு அழிந்துவிடாதே

Thursday, November 5, 2015

அதீத நம்பிக்கை உங்களுடைய வெற்றியைப் பறித்துக் கொள்ளலாம்…!!

 by

நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று பலர் கூறக் கேட்டு இருப்பீர்கள்.இது தவிர இதுவரை நடந்த ஆய்வுகள் பலவற்றில், அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் போது, உங்களது வழியைத் தாங்கும் சக்தி, மன உறுதி மற்றும் மன தைரியம் ஆகியவை அதிகமாகும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இது தவிர உங்களுடைய ஆரோக்கியம், உறவு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை அதிகப் படுத்துவதில் நம்பிக்கை அதிக பங்கு வகிக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பதும் நம்பிக்கைக்கும் பொருந்தும். அதீத நம்பிக்கை உங்களை படு குழியிலும் தள்ளலாம். பொதுவாக அதிக போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், முக்கிய வியாபார உலகில் உங்களுடைய நிலைமையை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அணுகுவது நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.

கடைக்காரர் என்னைப் பார்த்து சிரிக்க நானும் சிரித்துவிட்டு கிளம்பி விட்டேன்.

குடும்ப உறவினரான டாக்டரை வழக்கம்போல் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன்.
அப்படியே பிரஷரையும் செக் பண்ணி பார்த்ததில் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. மாத்திரை எழுதித் தருகிறேன் ... சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு
பல விஷயங்களை என்னோடு பேச ஆரம்பித்தார்.

மாட்டுக்கறி விவகாரத்தில் மோடி அரசும் காவிகளும் நடந்துகொள்ளும் கேவலமான நடவடிக்கைகளை அவருக்கு விவரித்தேன். எழுத்தாளர்களை திட்டமிட்டு கொள்வதையும் மிரட்டுவதையும் சொன்னேன்.
ஷாருக்கானை கூட விட்டு வைக்காமல் அவரையும் பாகிஸ்தான் ஏஜெண்டு என்று விமர்சிப்பதையும் சொன்னேன். டாக்டர் ஆச்சரியப்பட்டார்.

சரி ... மத்தியில் அப்படிஎன்றால் மாநிலத்தில் அதைவிட மோசமாக இருக்கிறது. டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப் பாடிய கோவன் என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. இது என்ன கொடுமை ?
கருத்து சுதந்திரம் இங்கே சுத்தமாக இல்லை என்றேன்.

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.!

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே

எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே
ஆராய முடியாத ஆழ்மனமே

LinkWithin

Related Posts with Thumbnails