Thursday, September 30, 2010

பாபரி மஸ்ஜித் தமிழ் பாடல் + நீங்கள் நீதிபதியானால் !!!உங்கள் தீர்ப்பு ? சொடுக்கி படித்து பாருங்கள்

தயவு செய்து ஒவ்வொன்றையும் சொடுக்கி படித்து பாருங்கள்
அயோத்தித் தீர்ப்பு : கடப்பாறை கையிலெடுத்தால் ஜெயிப்பீர்கள்
Posted: 30 Sep 2010 11:39 AM PDT
அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள "வினவு" தளத்துக்கு நன்றி!


”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி - இரண்டிலும் தோற்பவர் நீங்கள்!அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?

பாபர் மசூதி : நீதிபதிகள் செய்த கட்ட பஞ்சாயத்து!

http://maniblogcom.blogspot.com/2010/09/blog-post_7527.html

vote please 

--
எனக்கு வந்த மெயில்
---------------------------------------------------------------------------------------------------------------------
பாபரி மஸ்ஜித் தமிழ் பாடல்

அன்பு மனைவியே ! உன்னை யாரும் இடிக்க விடுவேனா ! மனம் மகிழுங்கள்

பூங்காவில் உலாவ சென்ற காதல் ஜோடிகள்.

கணவன் மனைவியிடம் பாசம் காட்டிய விதம்.....!

மனம் மகிழுங்கள்

கொஞ்சம் சிரிங்க....!
ஆண்களைக் கெடுக்கும் பெண்களின் கவர்ச்சி ஆடைகள்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்....


ஆண்களைக் கெடுக்கும் பெண்களின் கவர்ச்சி ஆடைகள்.
அமெரிக்க ஆய்வாளா்கள் இன்றுதான் சொல்கிறார்கள் 
இஸ்லாம் அன்றே சொன்னது
தொகுப்பு   Muaadh M.I.Sc

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில்இ நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும்இ வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும்இ ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும்இ அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும்இ தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும்இ நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும் உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.

இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும் பணித்தளங்களிலும் பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும் உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும் ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில்இ தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

ஆடை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள்இதமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.    
அல்குர்ஆன் (24 : 31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்இ தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.    அல்குர்ஆன: (33 : 59)

திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தில் ''பெண்கள் அலங்காரத்தை வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது'' எனக் கூறப்படுகிறது.

இங்கே 'ஜீனத்' என்ற மூலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள்.அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது நகைகளால் ஜோடனை செய்வது 'மேக்கப்' பொருட்களைப் பயன்படுத்துவது ஆடைகளால் அழகை அதிகரிப்பது இவை ஜீனத் என்ற சொல்ரிலில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக்கூடாது.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள 'ஜீனத்' என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறுஇ அலங்காரம் வேறு என்பதை அவர்கள் உணர்வதில்லை.

சீலையை பெண்கள் உடுத்தும் வழக்கம் நம் நாட்டில் உள்ளதால் இஸ்லாமிய பெண்களும் சீலையை உடுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆடை பெண்களின் இடுப்புப்பகுதியையும் முதுகுப்பகுதியையும் மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகளையும் வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணியப்படுகிறது.

பின்வரும் செய்தியை கவனத்தில் வைத்துக்கொண்டு ஹிஜாப் விஷயத்தில் பேணுதலாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள். 

அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ர¬)
நூல் : முஸ்லிம் (3971)

வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டப் பகுதி

பெண்கள் தமது உடல் அழகில் கைகள்இ முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிரிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)

('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (6228)

கொடுக்கல்இ வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.

பெண்கள் முழங்காலிலிருந்து ஒரு முழம் வரை உள்ள பகுதிகளை மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முழங்காலிலிருந்து ஒரு முழம் என்பது கரண்டை வரைக்கும் வரும். எனவே கரண்டைக்குக் கீழே உள்ள பாதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

பெருமைகொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா (ரலி அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி)
நூல் : திர்மிதி (1653)

முகத்தை மறைப்பதில் தவறில்லை.

பெண்கள் முகத்தை மறைத்துக்கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லை.

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1838)


முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்கு தடை இல்லை என்பதை இதி¬ருந்து விளங்கிக்கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த போது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரிடத்தில் ஆயிஷா (ரலி அவர்கள் ஒட்டகச் சிவிகையில் இருந்து இறங்கினார்கள். ஆயிஷா (ரலி அவர்கள் திரும்பி வருவதற்குள் படை சென்றுவிட்டது. ஸஃப்வான் பின் முஅத்தல் என்ற நபித்தோழர் ஆயிஷா (ரலி) அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள் தம் முகத்தை மறைத்துக்கொண்டார்கள்.

ஸஃப்வான் பின் முஅத்தல் என்னை அறிந்து கொண்டு இன்னா¬ல்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (4750)


எனவே பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை. என்றாலும் முகத்தை மறைப்பதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.


தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையை கேடையமாக பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாக செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
by mail from Fajur Hadi

படம் பார்க்க ஆசை இருந்தால் இதனையும் பாருங்கள்
பெண் எனப்படுபவள்

பெண் எனப்படுபவள்..

உங்கள்
காதலை
சம்மதிக்கும் வரை
கடவுளாகத்தானே
எங்களை
கண்டீர்கள்
பின்பு ஏன்
அணிவித்தீர்கள்
வித..வித..முகமூடிகளை
தோழி என்றும்
காதலி என்றும்
மனைவி என்றும்
குடுமபத்தலைவி என்றும்..

நன்றி:  http://uumm.wordpress.com/பெண் எனப்படுபவள்


Wednesday, September 29, 2010

யதார்த்த மயக்கம்!

யதார்த்த மயக்கம்!


படுப் பதுவோ...
போர்த் துவதோ...
கண் ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,

நடந் ததுவும்...
நடப் பதுவும்...
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும்
மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்!

திறந்த கண்களும்...
பறந்த பார்வையும்...
உறத்த நோக்கும்
அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!

காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்...
மூச் சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை,
நினைப்பதும்...
செய்வதும்...
செய்ததை உலகம்
நினைத் திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!

உயிர் கழிதலும்...
உணர் வழிதலும்...
மெய் வீழ்தலும்...
அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாம லிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்!

தெரியாதவை தெரிதலும்...
புரியாதவை புரிதலும்...
விளங்காதவை விளங்கலும்...
அல்ல ஞானம்,

தெரிந்ததை தெரிவித்தலும்...
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே...
ஞானம்!


மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!

-சபீர்
Source ; http://adirainirubar.blogspot.com/2010/09/blog-post_30.html

நான் ஆண் ஜாதி ..டும் ..டும்


திருமணத்திற்கு முன் உன்னை மிகவும் நேசித்தேன்  உணக்காக எதுவும் செய்ய காத்திருப்பதாக சொன்னேன் .உணக்காக என் உயிரைக் கூட தறுவேன் உன் மடியில் உயிர் விடுவதாகவும்  சொன்னேன் . அப்பொழுது நமக்குள் கருப்பு  சிகப்பு தெரியவில்லை.
ஏன்! பணம் பற்றியும் யோசிக்கவில்லை
திருமணத்திற்கு பின் உன்னை நான் நேசம் கொள்ளவில்லை,  நேசம்,நாசம் ஆனது .ஏன்?  நீ நினைப்பது
ஆண்கள்  அனைவரும் மோசமானவர்கள் என்று. ஆனால் உன் தவறு என்ன என்பதனை சிறிதாவது சிந்தித்தாயா!
அது உன்னால் முடியாது . உன் தாய் மற்றும் நம் காதல் திருமணத்தினை விரும்பாதவர்கள் அதற்கு உன்னை சிந்திக்க
விட்டு விடுவார்களா !
நீ நினைப்பது நான் உன்னை அடிமையாக்கி  விட்டேன் என்று.உண்மையில் நீ என்னை அடிமையாக்கி நான் என் அன்புத்  தாய்  மீது வைத்திருக்கும் பாசத்தினை கெடுத்து என்னை பாவியாக்கினாய். சரி விடு. உனக்கும் உன் குடும்பத்தாருக்கும்  ஒரு டாட்டா !
யானைக்கும் அடி சருக்கும் என்பது மொழி. எனக்கு அப்படி  அல்ல.
எனக்கு இளம் வயது .
   புதிய இளம் பெண் கிடைக்கும். புதிய மனைவியுடன் அருமையாக இல்லம் நடத்துவேன்
பாவம் . நீ கை பட்ட ரோஜா .உன்னை மணக்க யார் வருவார் ?
நான் ஆண் ஜாதி கவலை இல்லை .நான் கல்யாண மாப்பிள்ளையாக்கும்
ஆகா ..ஆகா  டும் ..டும்..

(நான் ஆண் ஜாதி கவலை இல்லை .நான் கல்யாண மாப்பிள்ளையாக்கும்
ஆகா ..ஆகா  டும் ..டும்..
(humorously)வேடிக்கையாக ஆணின்  வாடிக்கையான திமிரை ஆணவத்தை ஒழிக்க காட்ட போடப்பட்டது)


''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 291

Tuesday, September 28, 2010

முல்லா நஸ்ருதீனும் இங்கிலாந்தைச் சார்ந்த ஆர்தர் லாங்க்ரனும் போட்டி

முல்லா நஸ்ருதீன் 100 வயதினை தாண்டி வாழ்ந்து கொண்டிருகிறார் அவரை பாராட்டி பேட்டி கண்டு வரலாம் என்று ஒரு நிருபர் சென்றார். அதற்கு  முல்லா நஸ்ருதீன் சொன்னார், "எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மது மங்கை மாமிசம் பக்கம் நெறுங்க .மாட்டேன் மற்றும் நேரத்தில் படுத்து நேரத்தில் எழுந்து விடுவேன்" என்றார் ,இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது மாடியிலிருந்து ஒர்  ஓசை வந்து கொடிருக்க நிருபர் "அது என்ன   சப்தமாக உள்ளது" என வினவ அதற்கு முல்லா சொன்னார் "ஒன்றுமில்லை எனது   தந்தை ஒரு குடிகாரர் மற்றும் எல்லா  கெட்ட பழக்கமும் அவருக்கு உண்டு அதுதான் இப்போழுது   குடித்து விட்டு  கத்திக்கொண்டிருகிறார் "என்று சொன்னார்.

இது எப்படி இருக்கு!

நாம்  தெரிந்துகொள்ள வேண்டியது நல்ல பழக்கம் மட்டும் நெடு நாள் வாழ  ஒரு காரணம் அல்ல. மற்ற காரணங்களும்   உண்டு  என்பதுதான்.

சரி பின் வரும் புதிய  செய்தி பாருங்கள் .
இதுவரை 2,92,000 சிகரெட் ஊதித் தள்ளியும் உயிரோடு இருக்கும் இங்கிலாந்தைச் சார்ந்த தாத்தா ஒருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு நாளைக்கு ஒருமுறை விஸ்கி குடிக்கும் பழக்கமும் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆர்தர் லாங்க்ரன் என்ற இவர் (Arthur Langran) இரண்டாம் உலக போரின் போது சிப்பாயாக பணிபுரிந்த போதும் கிரானைட் வெடிவிபத்திலும் ஒருமுறை உயிர் தப்பியுள்ளார்.இரு ஆண்களுக்கு தந்தையான இவர் தனது இருபதாவது வயதில் சிகரெட்டை ஊதி தள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். தினமும் 10 சிகரெட் ஊதி தள்ளுவது இவரது பழக்கம், மேலும் உறங்குவதற்கு முன் ஒரு 'ரவுண்ட்'  ஸ்காட்ச் விஸ்கியையும் இறக்கி விட்டுதான் படுப்பாராம்.

சிகரெட் தாத்தாவின் சீக்ரெட் "யாரும் செய்ய கூடாது என்று சொல்லும் செயலை செய்வது தான் நான் ”என்று இங்கிலாந்திலுள்ள சன் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்
(செய்தி Source :http://www.inneram.com )
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புகை பிடிக்கும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது, புகையிலையை பற்ற வைத்து அதன் கடுமையான புகையை உள்ளிழுத்து விடுகிறோம் நுரையிரலில் அதன் கழிவுகள் படிகிறது இதனால் ஏற்படும் விளைவுகளை இன்று மருத்துவம் கூறிக்கொண்டிருக்கிறது. இறைவன் நம்மீது புரிந்திருக்கும் கருணையைப் பாருங்கள், புறவெளியில் காற்றில் வேறு பல வகையான வாயுகளும் அசுத்தங்களும் கலந்திருக்கின்றன் என்பதற்;;காக நமக்கு வேண்டிய ஆக்ஸிஜனை மட்டும் அவற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்ததிற்கு கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான நுண்ணிய அறைகள் கொண்ட நுரையிரலை இறைவன் படைத்திருக்கிறான்.

நாம் என்ன செய்கிறோம் புகையிலையின் நச்சு புகையை உள்ளே செழுத்துகிறோம், அந்த நுரையிரல் வாயிருந்தால் நம்மை சபிக்கும் பாவி மனிதனே இதற்காகவா நான் படைக்கப் பட்டேன் என்று கூறும்.

குடிப்பழக்கமும் அது போல் தான் உடலுக்கு தேவையில்லாத திரவத்தை குடலுக்குள் இறக்குகிறோம் இதனால் கல்லிரல் பெருமளவு பாதிக்கப் படுகிறது. உடலில் சர்கரையின் அளவை இரத்ததில் சரியாக வைத்துக் கொள்ளவும், இரத்ததிலிருந்து நச்சுத் தன்மையை நீக்கவும், இரத்த உற்பத்திக்கும் பயன்படும் கல்லீரல் ஒரு கடுந்திரவத்தால் பாதிக்கப் படுகிறது. இது போன்று உடல் உறுப்புகளை சேதப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை.

இழப்பதற்கு முன்

Monday, September 27, 2010

அக மகிழ்ந்து ஆனந்தம் அடைய .முல்லா நஸ்ருதீன்

 முல்லா நஸ்ருதீன்
அவசரமான உலகில் சிறிது இளைப்பாறி அக மகிழ்ந்து   ஆனந்தம் அடைய .முல்லா நஸ்ருதீன்  கதை நமக்கு உதவும் .
கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. நாமும் முல்லா மாதிரியே ஏதோவொரு தருனத்தில் உணர்ந்திருக்கிறோம். செயல்பட்டிருக்கிறோம்.
முல்லா நஸ்ருதீன் சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். உள்ளத்தை ஆராய்வது சூஃபித்துவத்தின் அடிப்படை.முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர்.முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை.வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள்.ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார்.

முல்லா நஸ்ருதீன் ஒரு நாள்சோகமாக உட்கார்ந்திருந்தார். முல்லாவைப் பார்க்க வந்திருந்த நெருஙகிய சிநேகிதன்  ஏன் சோகமாக இருக்கிறாய்  என்று கேட்க  முல்லா அழ ஆரம்பித்துவிட்டார். என் மாமா தன் பெயரிலிருந்த சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு  போன மாசம் இறந்துவிட்டார். அதை நினைத்தேன்... அழுகிறேன்... என்றார் முல்லா.
 உன் மாமாவை எனக்குத் தெரியும். அவருக்கு எண்பது வயதாயிற்றே... மரணம்
 இயற்கையானதுதானே... அதற்கென்ன இத்தனை பெரிய சோகம் உண்மையில் பார்த்தால்/ அவரது திரண்ட சொத்து கிடைத்தற்காக நீ சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும் ! என்று முல்லாவுக்கு நண்பன் ஆறுதல் சொல்ல முயன்றான்... முல்லாவோ/ என் சோகம் உனக்குத் தெரியாது நண்பா ! போன வாரம்தான் என் சித்தப்பா/ என் பெயரில் ஒரு லட்ச ரூபாய்
 சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் செத்துப்போனார் என்று சொல்லிவிட்டு/ இன்னும் பெரிதாகச் சத்தம் போட்டு அழத்தொடஙகினார். நண்பனுக்குக் குழப்பம் ! உன சித்தப்பாவையும் எனக்குத் தெரியுமே... அவருக்கு எண்பத்தைந்து வயது... பணம் வந்ததை நினைத்துச் சந்தோஷப்படாமல் முட்டாளைப்போல இப்படி அழுகிறாயே  என்று நண்பன் எரிச்சலுடன் கேட்டான். என் சோகம் இன்னும் அதிகம். எனது நுறு வயது தாத்தா
 இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலே என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு நேற்று இறந்துவிட்டார் ! என்றார் முல்லா.வெறுத்துப்போன நண்பன் எனக்குப்   புரியவில்லை. நீ ஏன்தான் அழுகிறாய்  என்றான்.முல்லா கண்களைத் துடைத்தபடியே சொன்னார். செல்வந்தர்களான என் மாமா/ சித்தப்பா/
 தாத்தா மூவருமே இறந்துவிட்டார்கள். இனிமேல் என் பேரில் சொத்து எழுதி
 வைத்துவிட்டுச் சாக உறவினர்கள் யாருமே இல்லையே !
 மிக முக்கியமான ஒரு கருத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது. சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. 

அவர்கள் என்னை மாற்றி விட முடியாது!

by எஸ்.ஏ.மன்சூர் அலி.M.A.,

தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை "பொறுப்பு" (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்!  .
      ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது! 
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான். மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் - தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)   
     அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா -  என்பது தான் அந்த சந்தேகம்.

     இந்தத் தகவல் அபூ பக்ர் சித்தீக் அவர்களின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் அந்த சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சொன்னார்: இறைவன் அருளால் என் பதவி எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுக்கும் பணியை தொடருவேன்! அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம், "உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?" என்று கேட்பது வழக்கம்.
     இதனைத் தான் நாம் பொறுப்பு என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறோம்.
     பொறுப்பு என்பதற்கு இன்னொரு பரிமாணம் இருக்கின்றது.
     இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். அதில் சிறப்பானது  - "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவாகும். அதில் தாழ்ந்தது - பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஆகும். இன்னும் நாணமும் - இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். (நபி மொழி ஆதார நூல்: புகாரி)    
 
     பாதையில் கற்களும் முற்களும் கிடக்கின்றன.  பொறுப்பில்லாதவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? பிறரைக் குறை சொல்லத் துவங்கி விடுவார்கள். பின்பு போய் விடுவார்கள் அங்கிருந்து! 

     ஆனால் பொறுப்புணர்ச்சியுள்ளவன் என்ன செய்கிறான்? அவற்றைப் பார்க்கின்றான். உடனே அப்புறப் படுத்துகின்றான். வேலை முடிந்து விடுகிறது. அவன் யாரையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில்லை. உடனே களத்தில் இறங்கி விடுவான். இதற்குப் பெயர் தான் Initiative என்பது.  
     இப்போது "உங்களில் ஒவ்வொருவரும்" நபி மொழியையும் "இறை நம்பிக்கை" நபி மொழியையும் ஒரு சேர சிந்தித்துப் பாருங்கள்.
     இஸ்லாத்தில்  இறைநம்பிக்கையும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது! (ஏனெனில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஈமானின் கிளைகளில் ஒன்று).
     அது போல - தலைமைத்துவமும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது!
 
     எனவே இஸ்லாத்தில் இறைநம்பிக்கை - தலைமைத்துவம் - பொறுப்பு மூன்றுமே இணைந்து நிற்கிறது!     

     பொறுப்பு என்பதன் மூன்றாவது பரிமாணம் - ஒரு தலைவன் தான் எடுக்கின்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டால் தோல்விக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 
     வெற்றிகரமான ஒரு விளையாட்டுப் பயிற்சியாளர். அவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப் பட்டது. அவர் சொன்னாராம்: எனது விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் - வென்றார்கள் என்பேன். ஆனால் என்னால் பயிற்சியளிக்கப் பட்டவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன்."
     ஆனால் - இன்று தோல்விகளுக்கு, பிரச்னைகளுக்கு, இழப்புகளுக்கு - பொறுப்பேற்பவர்கள் மிகவும் குறைவு.      

     கண்ணா மூச்சி விளையாட்டில் - கதவு திறந்திருந்த ஒரு லிஃப்ட்டில் ஒளிந்து கொள்ள ஒரு சிறுமி பெட்டியில் காலடி வைக்க - அங்கே அது இல்லாததால் (?) - கீழே விழுந்து ஒரு சிறுமி இறக்கிறாள் - காரணம் - நீண்ட நாட்களாக சரி செய்யப் படாத ஒரு யந்திரக் கோளாறு. யார் பொறுப்பு?

     21 வயது நிரம்பிய ஒர் பெண். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் பெற்றோர்கள். வேலைக்குச் செல்லும் வழியில் ஒரு துப்புரவு லாரி இடித்து இறந்து போகிறாள்! லாரியை ஓட்ட வேண்டிய ஓட்டுனர் - வண்டியைத் தகுதி இல்லாத இன்னொருவரிடம் கொடுத்து  ஓட்டச் சொன்னதால் இந்த  விபத்தாம். - யார் பொறுப்பு? 
     பொறுப்பு என்பதன் நான்காவது பரிமாணம் - "நான் யாருக்கு பதில் சொல்லிட வேண்டும்?" என்ற கணக்குப் பிரச்னை. அதாவது Accountability.
     இந்தியா உட்பட பல நாடுகளில் - பெண்சிசுப் படுகொலைகள் (female infanticide) கோடிக் கணக்கில் நடக்கின்றனவாம். ஒரு அறிஞர் கேட்டார்: இவர்கள் "நாம் யாருக்கும் பதில் சொல்லிடத் தேவையில்லை என்று நினைத்தனால் தானே இத்தனை கொடூரமான படுகொலைகள்?
     இந்த நிலை ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு இல்லையே?
     "நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்!" (அல் குர் ஆன் 17: 31)
     எந்த ஒரு செயல் குறித்தும் - அது குறித்து - இறைவனுக்கு முன்னால் நாம் விசாரிக்கப் படுவோம் என்று அஞ்சுகின்ற ஒரு இறை நம்பிக்கையாளனே பொறுப்பான தலைவனாக விளங்கிட முடியும்.
     போரில் தன் ஒரே மகனையும் இழந்து விட்டு, மதினாவுக்கு அருகில் ஒரு குடிலில் ஒரு மூதாட்டி வசித்து வருகிறார் என்பது கலீஃபா அபூ பக்ர் சித்தீக் அவர்களின் கவனத்துக்கு வருகிறது. அவருக்கு இனி மேல், இறைவனுக்கு அடுத்தபடியாக தாமே ஆதரவாக இருக்க மனதில் உறுதி கொள்கிறார்கள். இதன் படி தினமும், அதிகாலையில் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று அதனை சுத்தம் செய்வதோடு, அவருக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் வழங்கி விட்டு வருவது அவர்களின் அன்றாட அலுவல் ஆகி விட்டது.
     இந்நிலையில் அந்த மூதாட்டி பற்றிய செய்தி, உமர் (ரலி) அவர்களுக்கும் எட்டுகிறது. ஒரு நாள் விடியற்காலையில் அங்கு சென்று அவர்கள் பார்த்த போது அந்த மூதாட்டிக்குரிய தேவைகள் முன்னரேயே நிறைவேற்ற்ப் பட்டிருப்பது தெரிய வருகிறது.
     யார் அது? - என்ற கேள்வி - உமர் (ரலி) அவர்களுக்கு. மறு நாள் சற்று முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமர் அவர்கள் அந்தக் குடிலின் பின்புறம் மறைந்து கவனித்த போது - அது அபூ பக்ர் அவர்கள் தாம் என்பதை அறிந்து வியக்கின்றார்கள்!
     இருவருக்கும் - என்ன ஒரு பொறுப்புணர்ச்சி பார்த்தீர்களா? இங்கே நுணுக்கமாக ஒரு விஷயத்தைக் கவனித்திட வேண்டும். அபூ பக்ர் சித்தீக் அவர்கள் தாம் கலீஃபாவாக ஆவதற்கு முன்பேயே - ஏழைச் சிறுமிகளின் ஆடுகளுக்குப் பால் கறந்து கொடுத்தவர். இரண்டாவது கலீஃபாவாக வருவதற்கு முன்னரேயே உமர் அவர்கள் அதிகாலையில் மூதாட்டி ஒருவருக்கு உதவி செய்திட ஓடுகிறார்.
     இது எதனை உணர்த்துகிறது?
     சிலர் சொல்வார்கள். எனக்குப் பதவி கொடுக்கப் பட்டால் - இதனைச் செய்வேன் அதனைச் செய்வேன் என்று. ஆனால் பதவிக்கு வந்ததும் எல்லாம் காற்றில் பறந்து போய்விடும்.
     பதவிக்கு வந்தால் பொறுப்பேற்பேன் என்பது வெறும் வாய்ச்சொல். பொறுப்பேற்றால் பதவி தானாக வரும் என்பது தான் இஸ்லாமிய நியதி.
     சரி, அப்படிப் பட்ட பொறுப்புள்ள தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்களா?

     கண்ட கண்ட இடத்தில் குப்பைகளைப் போட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குறை கூறும் பொது மக்கள், மாணவர்களைக் குறித்த அக்கரையற்ற ஆசிரியர்கள், சுற்றுப் புறச் சூழல் குறித்த அக்கரையற்ற உற்பத்தியாளர்கள், உணவில் கலப்படம் செய்து விற்கும் கல் நெஞ்ச வியாபாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்தை மீறிச் செயல் பட அனுமதிகின்ற அதிகாரிகள், நோயாளிகளை ஏமாற்றுகின்ற மருத்துவர்கள், அரை குறை கட்டிடங்கள் கட்டித் தருகின்ற பொறிஞர்கள்.... 

     - இப்படி சமுகத்தின் எல்லா அங்கங்களும் பொறுப்பற்ற மனிதர்களால் நிரம்பி வழிந்தால் - பொறுப்புள்ள தலைவர்கள் நமக்கு எங்கே கிடைப்பார்கள்? 
     நீதிபதி ஒருவர் சொன்னாராம். "நீதிபதிகள் நேர்மையாக நடந்திட வேண்டும் என்று பெரிதும் எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால் நாடே "பாலைவனமாக" காட்சியளிக்கும் போது நீதித்துறை மட்டும் எப்படி "சோலைவனமாக" விளங்கும்?
     பாலைவனத்தைச் சோலை வனமாக்கிட முடியுமா?
     முடியும்! ஆனால் அது நமது கைகளில் தான் உள்ளது!
     ஏன் தெரியுமா?

     "எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ், அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை!" (அல்-குர் ஆன் 13: 11)

     எல்லாரும் மாறினால் தான் நானும் மாறுவேன் என்பவன் பொறுப்பற்றவன்.
     ஆனால் இவரைப் பாருங்கள்.
    1997 - ல் அமெரிக்கா, ஈராக்கின் மீது பல பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்த போது அதற்கு வன்மையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பிய ஒரு அமெரிக்கக் குடி மகன் - வெள்ளை மாளிகை முன்பு எரியும் மெழுகு வர்த்தி ஒன்றுடன் தினமும் நின்று கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாராம். ஒரு நாள், மழையையும் பொருட்படுத்தாமல் மெழுகு வர்த்திக்கு ஒரு குடையையும் பிடித்துக் கொண்டு நின்றாராம் அவர். இதைப் பார்த்து வியந்த வெள்ளை மாளிகை சேவகர் ஒருவர் அவரிடம் கேட்டாராம்:
     நீங்கள் ஒருவர் இப்படி நின்று கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்று எண்ணுகிறீர்களா?
     அதற்கு அவர் தெரிவித்த பதில்:
     "நான் அவர்களை மாற்றி விடலாம் என்பதற்காக இங்கு நிற்கவில்லை. மாறாக என்னை அவர்கள் மாற்றி விட முடியாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் - இங்கு நான் நிற்கிறேன்!"

Source : http://counselormansoor.com/index.php?option=com_content&view=article&id=86:1-&catid=11:leadership&Itemid=15
-------------------------------------
 
 சகோதரர்  எஸ்.ஏ.மன்சூர் அலி. நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க." 

Sunday, September 26, 2010

கருக்கலைப்பு + குடும்ப கட்டுப்பாடு (வீடியோ )நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.திருக்குர்ஆன்-17:31


அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.

திருக்குர்ஆன்6:140

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாகஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

23:14திருக்குர்ஆன்

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்ப டுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

திருக்குர்ஆன்22:5


உயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.


.அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 4:17,18

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

திருக்குர்ஆன் 39:53

கருக்கலைப்பு--- by நிந்தவூர் ஷிப்லி

ஜனனங்களுக்காய்

படைக்கப்பட்ட

கருவறைகள்..

இன்றோ

மரணங்களுக்கான

கல்லறையாய

புதிய பரிமாணம்


உயிரணுக்களின்

உயிர்கள்

அணுவணுவாய்

கொல்லப்படுகிறது

மருத்துவச் சித்ரவதைகளுடன்....


தொப்புள்கொடிகளே

தூக்குக்கயிறுகளாகின்றன

இந்தக்கருக்கலைப்பில்....“


புக்களை தீயிட்டு

எரிப்பதைப்போல”

என்பதை தவிர

வேறெந்த உவமைகளும்

பொருந்தப் போவதில்லை

இந்த அகால மரணங்களுக்கு...


மனிதாபிமானம்

செத்துப்போய்விட்டதை

பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா

சிசுக்கொலைகள்...?


உண்டான பிறகு

சிதைப்பதை விட்டுவிட்டு

உண்டாகும் முன்

சிந்தியுங்கள்

ஏனெனில்நீங்கள்

சிதைப்பது உயிர்களை அல்ல

இவ்வுலகின்


கருக்கலைப்பு

கொண்டலாத்தி -Kondalathi

க்ரியாவின் புதிய வெளியீடு, ஆசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு‌ கொண்டலாத்தி
 க்ரியாவின் புதிய வெளியீடும், ஆசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்புமான‌ கொண்டலாத்தி என்ற‌ புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முழுவதும் பறவைகளைப் பற்றியவை. தற்காலத் தமிழ்க் கவிதையில் முழுவதும் பறவைகளைப் பற்றிய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு வெளியாவது இதுவே முதல்முறை. மேலும் இந்தத் தொகுப்பில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளின் முப்பது வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 180 (அஞ்சலில் பெறக் கூடுதலாக ரூ.25/. அயல்நாட்டவர்கள் எங்களது இணையதளத்தின் மூலம் www.crea.in பெற்றுக்கொள்ளலாம் ). இந்த மின்னஞ்சலுடன் உள்ள இணைப்பில் கொண்டலாத்தி தொகுப்பிலிருந்து சில பக்கங்களை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.

க்ரியா வெளியீடுகளை எளிதாகப் பெற க்ரியாவின் இந்தியன் வங்கிக் கணக்கில் நீங்கள் பணம் செலுத்தலாம். விவரங்கள்: 

Bank: Indian Bank
Branch: L.B. Road Branch
Account Name: Cre-A: Publishers
Account No.: 768660941

பணத்தைச் செலுத்திவிட்டுத் தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சலிலோ 
விவரத்தைத் தெரியப்படுத்தினால் உடனே  புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள் .
                                          


குமரேஷ்
நன்றி, வணக்கம்.
க்ரியா
 ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com
www.crea.in


எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி

 ------------------------------------------------------------------------

Saturday, September 25, 2010

தமிழ் அல்-குர்ஆன் - 96 சூரத் அல் -`அலக் (The Clot) - (Tamil Quran - 96 Surat Al-`Alaq (The Clot) - سورة العلقسورة العلق


(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
அல்-குர்ஆன் 96:2
´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:11
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
96:14
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்


பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும்  இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Source இந்நேரம்.காம்ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள்
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.
நன்றி : http://www.mudukulathur.com
குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails