Sunday, August 31, 2014

பணம் ஒன்றே குறிக்கோளாய்

பணம் ஒன்றே குறிக்கோளாய்
ஓடித்திரிந்த என்னை
உயிலெழுதக்கூட
அவகாசமின்றி
ஒரே நாளில்
முடக்கிப்போட்டது முதுமை.

இன்னும் சில நாட்களில்
நான் இறந்து விடுவேனாம்...
இப்போதுதான் என் ஆயுள்ரேகை
குறித்துவிட்டு போகிறார்
எங்கள் குடும்ப டாக்டர்.

Tuesday, August 26, 2014

நான் யார்


பத்துமாதமேனும்
என் பரிசுத்த நிம்மதிக்கு
சொர்க்க அறை தந்த
தாயிடம் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

வாழ்வெனும் ஓட்டை ஓடத்தின்
வழிபாதைகளையும்
அக்கறையாய்ச் செப்பனிடும்
தந்தையைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கவிஞர் தாஜ் தீன்


தாஜ் தீன் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
முகநூலில் (ஃ பேஸ்புக்கில்) Taj Deen  (தாஜ் தீன்) அவர்களின் பக்கம்
 
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் தாஜ் தீன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

கமகமக்கும் கருவாட்டு சிப்ஸ்


சென்னையை சேர்ந்த பாத்திமாவும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மாஜித்தும் சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து கொண்டனர். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும்... அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யோசித்த இந்த தம்பதியினர் கண்டறிந்ததுதான் 'கருவாட்டு சிப்ஸ்'.

இப்போது சென்னாகுன்னி, நெத்திலி, இறால் போன்ற மீன்களிலிருந்து சிப்ஸ் தயாரிக்கும் இவர்கள் விரைவில் சுறா, வாள மீன்களிலிருந்தும் சிப்ஸ் தயாரிக்க இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சக்கைப்போடு போடும் இவர்களது 'கருவாட்டு சிப்ஸ்' ஹலால் முறைப்படி தயாராவதால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளிலும் பட்டையை கிளப்புகிறது. மொறு மொறு கமகம என்று நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் இவர்களது சிப்ஸை சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் 'கருவாட்டின்' அருமை தெரியும்.

வரும் ஞாயிறு (31.08.2014) 'தினகரன்' நாளிதழுடன் வெளியாகும் 'தினகரன் வசந்தம்' இணைப்பிதழில் இந்த தம்பதியினரின் பயணத்தை இரு பக்கங்களில் வாசிக்கத் தவறாதீர்கள்
                                                            கே. என். சிவராமன்

Monday, August 25, 2014

முகநூல் புலம்பல்

 
 
முகநூல் புலம்பல் -1

முன்பெல்லாம்
தனியாய் சிரித்தால்
பைத்தியமென்பர்.
இப்பொழுதோ
கணினி முன்னமர்ந்து
பதிவுகள் பார்த்து
தனியே சிரிக்கிறேன்,
நானோர் முகநூல் வாசி
---------------------------------
முகநூல் புலம்பல் - 2

அருகில் இருப்போரை
அன்னியமாக்கிடும்
அறியாதவர்களை எல்லாம்
நண்பர்களாக்கிடும்
மாய வலை.

மேடையேற்றும் தமிழ்

மேடை என்று ஏறிவிட்டால் அங்கே சொல்வது எது என்பதைவிட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே முன்னின்று விடுகிறது. புலன்கள் ஐந்து. கண்களால் எழுத்துக்களை வாசிக்கிறோம், அது ஒரு சுகம். நாவால் எழுத்துக்களை உச்சரிக்கிறோம் அது ஒரு சுகம், செவியால் சொல்வதைக் கேட்கிறோம் அதுதான் பெருஞ்சுகம்.

மொழி கூடுகட்டிக் குடியிருப்பது நூல்களில் என்று நாம் தவறாக நினைத்திருகிறோம். அது கூடுகட்டிக் குடியிருப்பதெல்லாம் செவிப்புலன்களில் மட்டும்தான். செவி கேட்கும்போது தொடுபுலன்கூடச் சிலிர்க்கின்றது. நாசிக்குள்ளும் வாசனை என்றால் அந்தக் கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஒரு குழந்தை ஆயிரந்தான் கண்களுக்கு விருந்து வைத்தாலும் முதன் முதலில் அம்மா என்று அழைக்கும்போது பெறும் இன்பத்தைப் பிறகு எப்போதும் பெறவே முடியாது. பேசு பேசு என்று தவமிருக்காத காதல் இருக்க முடியாது. மரணப்படுக்கையும் செவிப்புலனால்தான் உயிரைப் பற்றிப் பிடித்துக் கிடக்கிறது.

Saturday, August 23, 2014

ஆயிஷாவின் அப்பா!

நான்கு ஆண்டுகளுக்கு முன் மகள் 4ம் வகுப்பு படிக்கும் போது, ஒருநாள், தமிழாசிரியை தன்னுடன் மிகவும் கடினமாக நடந்து கொள்வதாக புகாருடன் வந்தாள். சரி நான் வந்து பேசுகிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்திவிட்டு மறந்துவிட்டேன்.

அடுத்த ஓரிரு நாள்களில் சில குழந்தையிலக்கியம் புத்தகங்கள் வாங்குவதற்காக பாரதி புத்தகாலயம் (தேனாம்பேட்டை) போயிருந்தேன்.

அப்போது நிலையத்தின் மேலாளர் Mohammed Sirajudeen 'ஆயிஷா’ என்ற புத்தகத்தைக் கொடுத்து படித்துப் பாருங்கள் என்றார். அங்கேயே அந்தப் புத்தகத்தை படித்து முடித்தேன். என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே என் நினைவுக்கு வந்தவர் என் மகளின் ஆசிரியை. அவருக்கு இந்தப் புத்தகத்தை படிக்கக் கொடுக்கவேண்டும் என்று தோன்ற, இரண்டு புத்தகங்களாக வாங்கினேன்.

வேட்கை / தாஜ்

கண்களுக்குப் புலப்படாத
வெற்றிக் கம்பம்
எல்லோரையும் ஈர்க்கிறது
பலரும் கூடங்கூட்டமாய் ஓடினார்கள்
ஒருவரை ஒருவர் முந்த
இடித்து தள்ளியப் படிக்கு
ஆவேசம் கொண்டு ஓடினார்கள்
நானும் ஓட ஆரம்பித்தேன்.

சிராய்ப்பு கொண்டவர்களின்
இரத்தக்கறை
வழிநெடுக இரைந்து கிடக்க
முதிர்ந்து களைத்தவர்களும்
கால் ஒடிந்தவர்களும்
பாதையோரங்களில்
ஒதுங்கிக் கிடந்தார்கள்.

பெண் பார்வையாளர்களின்
கையசைப்புகள்
ஓட்டத்திற்கு உற்சாகம் தந்தது.
எல்லோரையும்
முந்தனும் என்றே ஓடினேன்.

அழைப்பு / கதிர் வேல்

                                              அழைப்பு

ஒரு வாசகர் எழுதி இருக்கிறார்:

‘எந்த பத்திரிகையையும் நான் நம்புவது இல்லை. ஒவ்வொரு பத்திரிகையும் அதற்கென தனிப்பட்ட சில குறிக்கோள்களுடன் செயல்படுகின்றன. உள்நோக்கத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. சில செய்திகளை திரித்து அல்லது மிகைப்படுத்தி பிரசுரிக்கின்றன. சில செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன, அல்லது ஒரேயடியாக அடக்கி வாசிக்கின்றன. சமூக நலன், நாட்டு நலன் கருதி உள்ளதை உள்ளபடி வெளியிடும் இதய சுத்தியும் நேர்மையும் துணிவும் எந்த பத்திரிகைக்கும் இருப்பதாக நான் நம்பவில்லை. அதனால் சோஷல் மீடியாவில் கிடைக்கும் தகவல்களை தெரிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். வீட்டில் என் தந்தைக்காக மட்டும் ஒரு தமிழ், ஒரு ஆங்கில நாளிதழை வாங்குகிறேன். நான் அவற்றை தொடுவதுகூட கிடையாது’.

Friday, August 22, 2014

எங்கள் வாசல் தேடிவந்த வசந்தமே...வா மழையே வா


ஆயிரம் குளங்கள்
கொட்டினாலும்
இப்படிக் குளிருமா ?
ஆறுகள்
பாதை மாறிவந்து
பாய்ந்தாலும்
புழுக்கம் மாறுமா ?
சூரியனை தழுவிக் கொண்டு
காற்று வந்து
தேகத்தை
தீண்டினால்
சுகம் வருமா
வியர்வை வருமா ?
அம்மம்மா...
நாளெல்லாம்
நளமாகராஜனாக
அடுப்படியில் வெந்ததுபோல்
வாட்டி எடுத்து விட்டதே
வெயில் !

சூரியன் பண்பலை நடத்திய வைரத்தின் நிழல்கள் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
என்ன சொல்லி விழுகிறது
ஏன்
ஆயிரம் கண்களால் அழுகிறது ?

கருக்கொண்ட முகிலின்
கதவுடைத்த
குறைப் பிரசவக் குழந்தையா ?

மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கையில்
தவறி விழுந்த மழலையா ?

ஒருவேளை,
புகுந்தவீட்டுப் பயத்தில்
தாவித் தவிக்கும்
தளிர் பருவக் குமரியோ ?

ஈரம் கசியக் கசிய
என்னதான் சொல்கிறது மழை ?

Wednesday, August 20, 2014

தலைவர் யார் !?

1.   நானே பெரியவன்.... நானே சிறந்தவன்.... என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரணும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது

2.   விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது

3.   எதிர்மறையாகச் சிந்திப்பது

4.   பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.

5.   தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது

6.   அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது

7.   தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.

8.   சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது

9.   மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது

10. பதவி...! பதவி...!! பதவி...!!!

என்ற நினைவில் எப்போதும் வாழ்வது

போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு


Tuesday, August 19, 2014

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கும் துபாய் ஷேக் படத்திற்கும் என்ன சம்பந்தம்?


Image credit WAM / GN
 அண்ணா நாமம் வாழ்க!
----------------------------------
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில்,
24 முறை சுவரில் ஒட்டப்பட்டிருந்த ‘டைல்ஸ்’ விழுந்து, 25வது முறைக்குக் காத்திருக்கிறோம்; வெள்ளிவிழா கொண்டாட, என்று நமது தமிழ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

பிறகு முகநூலில் ஒரு நண்பர், “சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறி விட்டேன், தலை தப்பியது” என்று கிண்டலாக ஒரு நிலைத்தகவலைப் பதிந்திருந்தார்.
விளையாட்டாய் படித்துவிட்டுப் போனாலும், வேதனயாய் இருந்தது.

ஒரு காலத்தில் (சென்னை) பன்னாட்டு விமான நிலையம் என்பது நமது (தமிழ்) நாட்டு மக்கள் வெளிநாடுகளிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கும், தாய்நாட்டிலிருந்து வெளிநாடு செல்வதற்கும் உள்ள இடமாக / முனையமாக இருந்தது.

Monday, August 18, 2014

பொய் சொல்லலாம்.....


என்ன சமைக்க?
கோழியா மீனா?
சாம்பாரா தாழ்ச்சாவா?
பொரியலா அவியலா?
முறுக்கா அப்பளமா?
சுண்டைக்காவா வெண்டைக்காவா?
பச்சடியா ஊறுகாவா?

நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்


சந்திப்பதற்கான ப்ரியம்
பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து
ஆரம்பிக்கிறது
உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம்
தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி
               
ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது
நீ பரிசளித்த அக் கிளி
சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை
கிளையில்லை ; ஆகாயமில்லை
ஒரு கூண்டு கூட இல்லை

Sunday, August 17, 2014

பகவத்தின் போதை பரிகசிக்கப்படுகிறது பகவத் கீதை....

 
அமெரிக்காவில் உள்ளவர்கள்
அமெரிக்கர்கள்

அட
ஆமாம்
அமெரிக்கர்கள்தான்
சத்தியமோ சத்தியம்
மாத்துக் கருத்தே இல்லை

கனடாவில் உள்ளவர்கள்
கனடியர்கள்
அட
ஆமாய்யா
கனடியர்களேதான்
இதில் என்ன
பெரிய
கண்டுபிடிப்பு இருக்காம்

Saturday, August 16, 2014

தூக்கமற்ற நிலை தொடர் கதையானது

தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது

Thursday, August 14, 2014

முகநூல் / வெத்துக் குறிப்புகள்: ரகிமுல்லாவின் பதிவும் - என் ஒப்புதலும்

இங்கே முகநூலில் சொல்லப்படும் நீதியும், நேர்மையும், ஆலோசனைகளும், அழகிய உபதேசங்களும், வாழ்வுக்கோ, வாழ்ந்து கரை சேரும் நிலைகளுக்கோ, பீடைகள் நீங்கி சுபிட்சம் காண்பதற்கோ சொல்லப்படும் உபதேசங்களன்று, அவரவரால் முயற்ச்சி செய்து பார்த்து முடியாதவைகளும், சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற் போல் அவைகளை பிரயோகிக்க முடியாத நிலையும் உணர்ந்துதான், தாங்கள் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிற வேதனையின், சோதனையின் எண்ணச் சிதறலாய் மட்டுமே, அவையெல்லாம் இந்த சுவற்றில் வந்து மோதி தெறிக்கிறது. மிகவும் கை தேர்ந்த நிபுணர்களால் மட்டுமே கையாளப்படும் இதுபோன்ற உபதேசங்களை, அதற்கு தகுந்தாற் போல் உள்ள தேர்ச்சி பெற்றவர்களின் துணையின்றி யாரும் தங்கள் வாழ்க்கையில் பரிசோதித்து பார்க்க வேண்டாம் என்று பொதுவில் அறிவுறுத்தப்படுகிறது, இந்த எச்சரிக்கையையும் மீறி செயல்படுபவர்களுக்கு, இந்த முகநூல் பொறுப்பல்ல என்று இதனால் எல்லா பேர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது!
Raheemullah Mohamed Vavar
 

சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்

 சுதந்திர தின வாழ்த்துகள் 

இந்திய நாட்டின் சுதந்திரம்
இந்திய மக்கள் அனைவருக்கும்
இந்திய மக்கள் வெளிநாட்டில் இருந்தாலும்
இந்திய மக்கள் உள்நாட்டில் இருந்தாலும்
இந்திய குடியுரிமை பெற்றோர் அனைவரும் கொண்டாடுவோம்
சிலர் சொல்வதுபோல்
சிலர் பிரிவு படுத்துவதுபோல்
சிலர் இந்தியா சிலருக்கு சொந்தம் என்று சொல்வதுபோல்
சிலர் இந்திய குடியுரிமைக்கு புதிய விளக்கம் கொடுப்பதுபோல் அல்லாமல்
நாம் மொழி ,இனம் .மதம் .மார்க்கம் என்ற பிரிவில் பிரிந்து நிற்காமல்
நாம் பிரிந்து நிற்காமல் கொண்டாடுவோம்
நாம் ஏழையாக இருந்தாலும் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவோம்
இந்தியா சுதந்திரம் பெற்றது அனைத்து மக்களின் அயராத சுதந்திர வேட்கையால் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம்
சுதந்திரம் பெற்றதால் நன்மை கிடைத்ததா அல்லது ஒரு சிலருக்கு மட்டும் நன்மை பெற்றார்களா என்ற மன பேதம் கொள்ளாமல்
சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்
சுதந்திரமாக குழந்தைப் பெற இந்நாட்டில் உரிமை உண்டு
என்பதை மனதில் நிறுத்தி சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்
வாழ்க பாரதம் ,வாழ்க இந்தியா

( ஹிந்தியா ! ?அல்லது ஹிந்துத்துவா ! ? ஆய்வு வேண்டாம் )
--------------------------------

Wednesday, August 13, 2014

எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவனாய்..

 
 
ஓடியே தேய்கிறேன்
உன்னை தேடி
ஓயாமல் உழைக்கிறேன்
உன்னை சேர்க்க
உறங்காமல் விழிக்கிறேன்
உன்னை காக்க
உருண்டோடி விடுகிறாய்
சக்கரம் போல.

Tuesday, August 12, 2014

மதம் / மார்க்கம்

மதம் தவறான வார்த்தை அல்ல
மதம் என்ற வார்த்தை அதனோடு இணையும் வார்த்தையைப் பொறுத்து பல பொருளைத் தரலாம்
மதம் என்றால் மார்க்கம் என்று பொருளும் கொள்ளலாம்
மதங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலானவை.
நம்பிக்கை இல்லை என்றால் மதத்தில் பிடிப்பு இல்லை
நம்பிக்கைகள் அறிந்து வாழும் முறைக்கு நேர் எதிரானதாகவும் அமையும்
மதமே மனிதனுக்கு இறுதி அடைக்கலம்
மதம் ஒரு மனிதனுக்கு வழிகாட்டி ,ஏணி
மதம் கெடுதல் செய்வதை தடுக்கும் வேலி

இதுதான் இஸ்லாம்

ஓ.... மன்னா!

நாங்கள்
அறியாமையிலும்
ஒழுக்கக் கேட்டிலும்
மூழ்கிக் கிடந்தோம்

சிலைகளை
வணங்கிக் கொண்டும்
செத்தவைகளைப்
புசித்துக் கொண்டும்
வாழ்ந்திருந்தோம்

அப்பாவின் நினைவாக....

அந்த இரவில் என்னால் தூங்கவே முடியவில்லை.

எப்போதும் என்மீது செல்லமாகவே இருக்கும் அப்பாவின் கையால் அடிவாங்கிய இரவு அது. அடித்தது வலிக்கவில்லை. அடித்து விட்டாரே எனும் எண்ணம் தான் வலித்துக் கொண்டிருந்தது.

எனக்கு அப்போது ஐந்து வயதோ, ஆறு வயதோ இருக்கலாம். ஒழுங்காக டவுசர் உடுக்கத் தெரியாத வயது. ஆனாலும் அந்த வலியை மனதுக்குள் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மீண்டெடுக்க முடிகிறது.

தூங்காமல் கண்ணை மூடியபடி படுத்துக் கிடந்த எனக்குள் சின்ன வயது சிந்தனைகள் நிரம்பின. “அப்பாவுக்கு என் மேல பாசமே இல்லை. இல்லேன்னா இப்படி அடிச்சிருப்பாரா?” என்பதே எனது மனசில் எழுந்து கொண்டிருந்த ஒரே கேள்வியாய் இருந்தது. அந்தக் கேள்வி எனக்குள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால் என்னால் தூங்கமுடியவில்லை.

Sunday, August 10, 2014

உங்களால் கட்டவும் ,இடிக்கவும் முடியும்! பழைமையின் தனித்தன்மையை கொண்டு வர முடியாது.

உங்களால் அழகிய அரண்மனையை கட்ட முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தர முடியும்
உங்களால் அழகிய அரண்மனையை இடித்துத் தள்ளவும் முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தகர்த்துத் தள்ளவும் முடியும்

உங்களால் இங்கும் அங்கும் கட்டடங்கள் கட்ட முடிந்தாலும்
உங்களால் இங்கும் அங்கும் ஆட்சியை அமைக்க முடிந்தாலும்

உங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும்
உங்களால் உருவாக்கப் பட்ட ஆட்சிகளிலும்
உங்களால் பழமையின் தனித்தன்மையை
உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது

Saturday, August 9, 2014

நட்வர் சிங் உண்மைகளின் பலம் என்ன?




”இந்தியாவுக்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. நம்முடைய பண்பாடு, கலாசாரம், மதிப்பீடுகள் உன்னதமானவை. ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் பிறந்து வளர்ந்த எவரும் வயதில் பெரியவர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். உதவி செய்தவர்களை எட்டி உதைக்க மாட்டார்கள். நெருக்கடியில் கூட இருந்தவர்களை ஒதுக்கி வைக்க மாட்டார்கள்.


”ஆனால் சோனியா காந்தி இது அனைத்தையும் செய்தார். இந்தியாவுக்கு வந்து இங்கே குடியேறி, மிக உயர்ந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பிறகும்கூட எந்த ஒரு இந்திய பெண்ணும் செய்ய துணியாத காரியங்களை அவர் செய்தார். இதற்கு காரணம், அவர் இன்னமும் உண்மையில் ஓர் இந்தியனாக மாறவில்லை என்பதாகவே இருக்க முடியும்”.

இப்படி சொல்லி இருக்கிறார் நட்வர் சிங். முன்னாள் அதிகாரி. அரசியல்வாதி. அமைச்சர். 40 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் விசுவாசியாக தன்னை காட்டிக் கொண்டதில் பெருமை அடைந்தவர். ஒரு ஜென்ம்ம் போதாது என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்கள் என்று பல விஷயங்களை அள்ளி தெளித்து இருக்கிறார்.

Friday, August 8, 2014

முதுமை தீபத்தின் கால்களில்


முதுமையின்
ஓய்வுப் படுக்கையை...
குழந்தையாகவே ஆகிப்போகும்
இயற்கை மாற்றத்தை...
மரணப்படுக்கையாக
மாற்றிக் கண்டு
பதறுகிறது
பாசம்

அது
பாசத்தின் இயல்புதான்
பிழையில்லை என்றாலும்...

Thursday, August 7, 2014

உலக முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர் / Muslim scientists of the world

 இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
 முஸ்லிம்கள் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்  பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்புகளை உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தந்துள்ளார்கள் .அவர்கள்  விஞ்ஞானத்திலும் சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அந்த விஞ்ஞானிகள் மார்க்க பற்றிலும் தங்களை உட்படுத்திக் கொண்டு சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அவர்களது உடுத்தும் உடைகள் மற்றும் வாழ்வின் நெறி முறைகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையிலேயே இருக்கும்.
----------------------------------
அறிவு சார்ந்த சமுதாயமே இனி வரும் காலங்களில் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் காண முடியும் அதிகாரமும் அவர்கள் கையில் நிற்கும் .

தேவையான கல்வி இல்லாமையும அதனை முறையாக பயன் படுத்தாமையும்தான் பின்தங்கிய நிலையில் நம்மை நிறுத்தி வைகின்றது .அதிலும் ஒற்றுமை அற்ற குணம் மேலோங்கி நிற்கின்றது இது இஸ்லாத்திற்கு உடன்பாடானதல்ல

நாம் அனைவரும் அல்லாஹ்விடம் எங்கள் தோல்விக்கு நாங்களே வழி வகுத்துக் கொண்டோம் . இறைவா ! நீ அனைத்து வளங்களையும் தந்தாய் நாங்கள்தான் அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என மன்றாடி மன்னிப்பு கேட்டு இனியாவது நாங்கள் நீ கொடுத்த அறிவை விசாலமாக்கி அந்த அறிவைக் கொண்டு உன்னை தொழுவதோடு உன்னால் கொடுக்கப்பட்டதனை முறையாகப் பயன் படுத்தி இன்ஷா அல்லாஹ் ஆற்றல் மிக்க முஸ்லிம்களாக இருக்கின்றோம் அதற்க்கு நீயே துணை நின்று அருள்வாயாக! ஆமீன் 
--------------------------------

அன்புடன் ,
முகம்மது அலி ஜின்னா

முதல் முறை உன்னைக் கண்டேன் ...

முதல் முறை முதல் முறை
உன்னைக் கண்டேன்
இதயம் சற்றே நின்றதடா

மறுமுறை உன்னைக்
காணும் வரை
துடிக்க மாட்டேன் என்றதடா

கனவில் பூக்கும்
எந்தன் கண்கள்
உந்தன் பின்னால் சுற்றுதடா

உன்னை மட்டும்
தொட்டுச் செல்ல
எந்தன் மூச்சும் செல்லுதடா


Wednesday, August 6, 2014

கதியற்றோர் வாழ்வு ?

 
சொந்த மண்ணில் தஞ்சமாகி
சோகமதைச் சொந்தமாக்கி
மதியிழந்து நிற்கதியாய்
மாறியதோ உந்தன் வாழ்வு

நெஞ்சு பதைக்கும் நீங்கா நிகழ்வு
எஞ்சியிருக்கும் நிழலாய்த் தொடர
பந்தங்கள் பட்டினியால்
பரவிக்கிடக்குது அகதிகளாய்
கெதியற்றுப்போயினரே
கதியற்ற வாழ்க்கையாக

Tuesday, August 5, 2014

மௌத்தையே நீ மறந்து' பாடலை நாதிர் என்கிற கேரள பொடியன் பாடுகிறான்.

தாய் மொழிகளில் ஹிந்தி வாசனை வீசும்!





தாய் மொழிக் கல்வி ,இரு மொழிக் கல்வி, மும்மொழிக் கல்வி பாடத்திட்டங்கள் எதைப் பற்றியும் இங்கு இருந்து பேசுவதால் ஒரு பயனும் கிடைக்காது


ஹிந்தி பேசும் மக்களால் முழு ஆதரவோடு ஆட்சி அமைத்த பி.ஜே.பி. அரசு ஹிந்தி பேசும் மக்கள் சொல்வதையே கேட்கும்
நாம் விரும்புவதை டெல்லியில் ,அதுவும் பாராளுமன்றம் முன்பு, மக்களை சேர்த்து வேண்டியதை கேட்க வேண்டும்

நீர்ப் பறவையின் நீள் அழைப்பினுள்


ஓர்
அழகெழில் நீர்ப்பறவை
என்னைத்
தன் காந்தக் காதலோடு
கவர்ந்திழுத்தே அழைத்தது

அதன் கவர்ச்சியில்
தகர்ந்து
வெணிலா பனிக்குழைவின்
நட்டநடுவினில்
விரும்பியே தவறி விழும்
செந்திராட்சைக் கனியாக
சரக்கென விழுந்தேன்

அதன்
ராட்சசச் சிறகினைப்
பித்து ரசிகனாய்ப்
பற்றியே ஏறிக்கொண்டேன்

Friday, August 1, 2014

GAZAAAAAA..! காஸா..!


இந்தியனாய் வெள்ளையனிடம்
அடிமைப்பட்டோம் சண்டையிட்டோம்
தமிழனாய் சிங்களனிடம்
ஒடுக்கப்பட்டோம் போராடினோம்
இஸ்லாமியானாய் யூதனிடம்
நசுக்கப்படுகிறோம் அழுகின்றோம்

உங்களிடமிருந்து பாதுகாக்க எங்களிடம் கிடைத்ததோ தெருவில் கிடக்கும் கற்கள்


ஏவுகனையால் எங்களை தாக்குகிறாய்
இயந்திரங்களைக் கொண்டு எங்களை நசுக்குகின்றாய்
உலகத்தை ஆட்டி வைக்கும் போலிஸ் அமெரிக்கா உனக்கு துணை

எங்களிடம் கிடைத்ததோ
உங்களிடமிருந்து பாதுகாக்க
தெருவில் கிடக்கும் கற்கள்
கற்களே எங்களுக்கு இந்நாள் வரை
எங்களுக்கு தற்காப்பு ஆயுத எவுகனை
எங்களுக்கு எங்கள் அருகிலுள்ள அரபு நாட்டவர்
அந்நியனாக நிற்கின்றனர்
எங்களோடு இணைந்து நிற்கும் இறைவன்
எங்களை உங்களிடமிருந்து பாதுகாப்பான்
எவுகனை அறிந்து அதனை உபயோகிக்கும் திறனறிந்து
நாங்களே எங்களை பாதுகாத்துக் கொள்ள இறைவன் திறன் கொடுப்பான்
- காசா மக்களின் நம்பிக்கை