Wednesday, June 28, 2017

இந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார மாற்றங்களும்


Abu Haashima 
புதிய நாகரீகங்களும் தோன்றின.
அப்போது இந்தியா ஒரே நாடாக இல்லை.
பல நூற்றுக்கணக்கான நாடுகளாகத்தான் இருந்தது.
தமிழ்நாடே சேர சோழ பாண்டிய நாடுகளாக பிரிந்து கிடந்தது.
ஆன்மீகச் செல்வர்களால் இங்கே இஸ்லாம் பரவுவதற்கு முன்னரே
அரபு நாட்டு வணிகர்களால் தமிழகத்தோடு அவர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்தது.
அதனால் அவர்களின் உணவு கலாச்சாரமும்
இங்கே அறிமுகமானது.
முஸ்லிம்கள் எண்ணிக்கை இங்கே அதிகரித்தபோது
கல்வி , கலை , கலாச்சாரம் , கட்டிடம் போன்ற துறைகளில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டது.
உணவு பழக்க வழக்கங்களில் மிகப்பெரிய புரட்சியே ஏற்பட்டது.

Tuesday, June 27, 2017

ஒரு கண்ணீரின் பயணம்....

கருகமணி கட்டிவிட்டு காத தூரம் போனவரே
கருகமணிகளை எண்ணியபடி கண்கலங்கி நிற்கிறேன்
மாதமொன்றை எனக்காகவும்
மீதமானதை பணத்துக்காகவும்
வாழ்பவரே
தவிக்க விட்டுவிட்டு போனீரே
என் தலைவனே 
உன் வாசம் இன்னும் போகலையே
நித்தம் உன்னை
தொலைபேசி வழியே
நான் சுவாசிக்கிறேன்

நண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இருந்த ஐயர்.

அப்பாவுக்கு புதுக்கோட்டையில் எலக்ட்ரிக் கடை. நான் குட்டி பையனா இருந்தப்ப கணேஷ் ஃபேன்னு ஒரு ஃபேன் வந்துச்சு. அதை தமிழ்நாடு முழுக்க சூப்பர் ஸ்டாகிஸ்ட் எடுத்து இருந்தாரு ஒரு ஐயரு. ரொம்ப ஆச்சாரமானவரு. அந்த ஐயரு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு எங்க அப்பாவை டீலராக்கி இருந்தாரு. இப்ப வரைக்கும் அவரு பேரு எனக்குத் தெரியாது. காரணம் அப்பா அவரை கணேஷ் ஃபேன் சாமினு தான் சொல்லுவாரு கூப்பிடுவாரு. ரெண்டு பேரும் அண்ணன் தம்பி மாதிரி பழகுவாங்க.

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1

பள்ளியில் படிக்கும் காலத்தில் வாத்தியார் எங்களை (முஸ்லிம் மாணவர்களை) பார்த்து கூறுவார்..உங்களுக்கு என்ன எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட வேண்டியது..ஜாலியா இருக்க வேண்டியது..! இதெல்லாம்
என்ன கணக்கு என்று நக்கலாகவும்,குத்தலாகவும் பேசுவார்..
ஆனால் அன்று அவர் கேள்விக்கு பதில் கூற திராணி இல்லை என்று சொல்வதை விட அதற்குரிய அறிவை பெற்றிருக்கவில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும்....

எல்லா புகமும் இறைவனுக்கே.....

எல்லா புகமும் இறைவனுக்கே.....
பள்ளபட்டியைச் சேர்ந்த ரிபாத் சாருக் கலாம் சாட் என்ற கையடக்க செயற்கைக்கோளை தயாரித்தார் , சமீபத்தில் நாச விண்கலத்தில் ஏவப்பட்டது.
தந்தை இல்லாமல் , தன்னுடைய சொந்த முயற்ச்சியில் , எந்த ஒரு உதவியும் கிடைக்காமல்,குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்களிடம் உதவி கிடைக்கவும் இல்லை, இஸ்லாமிய சமுதாய மக்கள் வழிகாட்டவும் இல்லை அந்த சிறுவனுக்கு......ஆனால் இன்று என் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் என்று பெருமை மட்டுமே கொள்கிறார்கள் இஸ்லாமிய மக்கள்......!!!!
உண்மையிலேயே ரிபாத் சாருக் போன்ற பல இளம் விஞ்ஞானிகளை மதம் பார்க்காமல் தொடர்ச்சியாக வழிகாட்டுதல் கொடுத்து ,சாதனையாளராக்கியவர் யார் தெரியுமா ?
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வரும்
சகோதரி, ஸ்ரீமதி கேசன் .
(அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
மேலும், கலாம் சாட் செயற்கைக் கோளை தயாரிக்க , ஸ்ரீமதி அவர்களுடைய வழிகாட்டுதலுடன் , இளம் அறிவியல் விஞ்ஞானி ரிபாத் சாருக் தலைமையில்

Yagna Sai ,Lead technician
Mohamed Abdul Kashif
,Lead Engineer
Tanishq Dwivedi ,Flight engineer
Vinay bharadwaj ,Stuctural engineer
Gobinath ,Biologist,
Sivasooriya ,Botanist.
போன்றவர்களும் பணியாற்றி இருக்கிறார்கள்.

Monday, June 26, 2017

இஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங்கு சொன்ன நிகழ்வு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Bill from Israeli parliamentarian on ban of Azan. a Muslim Parliamenterian in Israel Parliament Recite Azan as a Protest which Shock Parliamenterians . இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் பாங்கு சொல்வதற்கு தடைவிதிக்கும் மசோதா தொடர்பாக பேச்சு பிரதமர் நேதன்யாஹூ தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது, அஹமது திபி என்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து சென்று, அழகிய ராகத்தில் பாங்கு சொன்னார். இதனை சற்றும் எதிர்பார்த்திராத யூத விரோதிகள், அவரை அமரும் படி கூச்சலிட்டனர். இருப்பினும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அஹமது திபி பாங்கும், பின்னர் பாங்கு துஆவையும் கூறிய பின்னர் புன்முறுவலுடன் இருக்கையில் அமர்ந்தார். இந்த செயல் யூதர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்தனை இஸ்லாமிய எதிரிகளின் முன்னர், ஒரு இஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங்கு சொன்ன நிகழ்வு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மாஷா அல்லாஹ்

Sunday, June 25, 2017

இறைவன் தந்த பெருநாள் பரிசு💰

Samsul Hameed Saleem Mohamed
நேற்றைய தினத்தில் "நான் கண்ட பெருநாட்கள்" என்று தலைப்பிட்டு நான் எழுதிய பதிவிற்கு இன்று அந்த பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தினத்தில் ஒரு பெரும் பரிசு கிடைத்தது!
ஆம்..! முகநூல் மெசேன்ஜர் வாய்ஸ் கால் மூலமாக ஒரு அன்புக்குரல் என்னை அழைத்து சலாம் கூறி பிறகு பெருநாள் வாழ்த்தும் கூறுகிறது! அதைக்கேட்ட மாத்திரத்தில் ஒரு இன்ப பேரதிர்ச்சியும் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பும் என்னை பற்றிப்பிடித்துக்கொண்டது காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரர் அப்படிப்பட்டவர் என்பதால்!
அவர் யாரென்று கேட்கிறீர்களா..? அவர்தான் எங்கள் நீடூர்-நெய்வாசலை சேர்ந்த வழக்கறிஞரும், நல்ல கருத்துமிக்க எழுத்தாளரும், கொண்ட தானத்தாலும், தனத்தாலும், குடும்ப பாரம்பரியத்தாலும் பெற்ற அகவையாலும் உயர்ந்து நிற்கும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய '@Mohamed Ali அவர்கள்!

🎉நான் கண்ட பெருநாட்கள்...!!!

Samsul Hameed Saleem Mohamed 
என் வாழ்நாளில் சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை சந்தித்த ஒவ்வொரு பெருநாளையும் நான் என்றுமே மறக்கமுடியாது! அதுவும் பால்ய காலத்தில் கொண்டாடி குதூகலித்த அந்த பெருநாட்களை எண்ணும் போதே மனதிலிருந்து ஆசை அருவி அப்படியே அளவின்றி வழிந்தோடி ஆற்பரித்து காத்து நிற்கும்!
நோன்பு தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே பெருநாளைக்கு தேவையான புதுத்துணிமணிகளை தேர்வு செய்ய அம்மாவின் கைபிடித்து மாயவரம் சென்ற நாட்கள் மறக்க முடியாதவை!

Friday, June 23, 2017

வெளியுலகத்திற்கு மகளை அழைத்துச்செல்லுதல்..! #நிஷாமன்சூர்

#நிஷாமன்சூர்
முதன்முதலாக பள்ளியில் தவறிவிழுந்து
ரத்தம் கொப்பளித்த சிராய்ப்புடன் வீடடையும் மகள்
உதடுபிதுக்கி அழத் துவங்குகிறாள்
காயத்தின் வலியைவிட
பதைபதைத்து ஓடிவந்து தூக்கிவிடும்
கரங்களற்ற பள்ளியின் வெறுமை
அதிகம் வலித்திருக்கிறது அவளுக்கு
நாம் அவளை இறுகக் கட்டியணைத்துக் கொள்கிறோம்

நம்பிக்கை மகா வலிமையானது


நம்பிக்கை
மகா வலிமையானது
காடுகடக்கும்
ஒரு சிட்டுக்குருவிக்கு
அடர்த்தியான
இறகுகளைக் கொண்ட
சிறகுகளைப்போல

நம்பிக்கை
இல்லா நிலையில்
மரணம்
மிக நெருக்கமானது
வழுக்கும்
கண்ணாடிச் சிலையை
நடுங்கும் கரங்களில்
ஏந்தி நிற்பதைப்போல

Thursday, June 22, 2017

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில்

தகவல் Pattabi Raman
இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது._
_உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்..._
_இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்._

Wednesday, June 21, 2017

திருமணமென்பது,

திருமணமென்பது, இருவர் இச்சமூக உடன்படிக்கையின்படி பரஸ்பரம் தங்கள் உடலையும், மீதமிருக்கும் வாழ்நாட்களையும் ஒப்படைக்கும் சடங்கு. அதற்கு பின்னாக இருவரின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ப்ரியங்கள் அனைத்தும் ஒன்று கலந்து பெரும் பிரவாகமாய் புரிதலுடனுன் கூடிய தெள்ளிய காதல் இழையோடத் துவங்கும் பொழுதுதான் விலைமதிப்பில்லாத மனது மானசீகமாக ஒப்படைக்கப் படுகிறது.

நோன்பு_ஒரு_அகப்பார்வை

எளிய மக்களை எப்போதும் வயிறுதான் ஆள்கிறது. தலைதான் மனிதனின் எஜமான் எனினும் வயிற்றின் கட்டளைகள் அல்லது தேவைகளுக்குதான் அடிபணிய நேர்கிறது.
தன்னிறைவடைந்த வயிற்றுக்காரர்களைத்தான் இச்சை(ஹவா நஃப்ஸ்)ஆளமுயற்சிக்கிறது, ஈகோ எனும் தன்முனைப்பு ஆள முனைகிறது.
ஆனால் வயிறு தன்னிறைவடையாதபோதோ நான் எனும் அகந்தையும் ஆசைகளும் செயலற்று ஸ்தம்பித்து விடுகின்றன. ஆகவேதான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் திருமணம் செய்துகொள்ள வசதி இல்லாதவர்களை நோன்பு வைக்கப் பணித்தார்கள். ரமலான் என்றால் கருக்குதல் என்று பெயர். பாவங்களைக் கருக்குதல் என்று பொருட் கொண்டாலும் எல்லாப் பாவங்களுக்கும் காரணமாக உள்ள ஈகோவையும் இச்சைகளையும் அடக்கிவைக்கும் பயிற்சியாகவே நோன்பு இருக்கிறது

நிஷா மன்சூர்

ஒரு நோன்பாளியின் மரணம் ...

Abu Haashima

உதுமான் ( ரலி ) அவர்கள் கலீபாவாக இருக்கும்போது நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டன.
கலகக்காரர்கள் கலீபாவின் வீட்டை சுற்றி முற்றுகை இட்டிருந்தார்கள்.
அது ஹஜ்ஜுடைய காலம்.
ஹஜ்ஜுடைய காலத்தில் யாரும் கலவரம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்களை ஹஜ்ஜுக்கு செல்ல அனுப்பி வைத்தார்
கலீபா உதுமான் ( ரலி ) அவர்கள்.
கலீபாவுக்கு ஆதரவான சஹாபிகள் மதீனாவில் இல்லாத நிலையை பயன் படுத்திக் கொண்ட கலவரக்காரர்கள் கலீபாவின் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்தார்கள்.
கலீபா உதுமான் அவர்களுக்கு வயது 82 . அறிவு முதிர்ச்சி பெற்ற பெருமகனார் அமைதியாக உட்கார்ந்து குரான் ஓதிக் கொண்டிருந்தார்.
" வயது முதிர்ச்சியால் மூளை மழுங்கிப்போனக் கிழவரே ... " என்று கூறிக் கொண்டே உதுமான் அவர்களின் நீண்ட தாடியை பற்றிப் பிடித்து இழுத்தார் ஒருவர்.
அவர் வேறு யாருமல்ல...
அபூபக்கர் சித்தீக் ( ரலி ) அவர்களின் அன்பு மகன் முஹம்மதிப்னு அபூபக்கர்தான்.

Tuesday, June 20, 2017

புனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அண்ணனோடு எனக்கு பல ஆண்டுகளாகப் பழக்கம். என்மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டவர். அவரது ”பால்வீதி” என்ற புதுக்கவிதை நூல் எங்களையெல்லாம் புரட்டிப் போட்ட நூலாகும். நாங்கள் அப்போது முதுகலை மாணவர்கள். நான், இயக்குனர் அகத்தியன் போன்றவர்கள். புதுக்கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்த காலமது. பால்வீதி ஒரு புதிய உலகத்தை எங்களுக்குக் காட்டியது. அடடா, இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா என்று வியக்க வைத்த காலம் அது.

அவருடைய ”ஆலாபனை” தொகுப்புக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தாலும் அது உண்மையில் ”பால்வீதி” தொகுப்புக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.  ”பால்வீதி”தான் அவருடைய மாஸ்டர் பீஸ். ஆனால் எல்லா தேசிய விருதுகளின் பின்னாலும் அரசியல் உள்ளது நமக்குத் தெரிந்ததுதான். பரவாயில்லை. கவிக்கோவுக்கு விருது கொடுக்கப்பட வேண்டும். கொடுத்தாகிவிட்டது. அது எந்தத் தொகுதியாக இருந்தால் என்ன?

Monday, June 19, 2017

ஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.

அல்லாஹ்வின் நாட்டமில்லாமல்
யாரும் யாரையும் அழிக்க முடியாது.
யாரையும் வாழ வைக்கவும் முடியாது.
இதுதான் நிஜம்.
இந்த நிஜத்தின் மற்றொரு பெயர் ஈமான்.
ஈமான் என்பதன் பொருள்
நம்பிக்கை.
இறை நம்பிக்கையுள்ளவர்கள்
இறைவனுக்கு மட்டுமே பயப்படுவார்கள்.
மற்ற எதற்கும் பயப்படமாட்டார்கள்.
இறை நம்பிக்கை பலஹீனமானவர்கள்
இறைவனைத் தவிற எல்லாவற்றுக்கும்
பயப்படுவார்கள்.

இது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்

காரணமாகவோ..காரணமில்லாமலோ.... யாரையும் காயப்படுத்துவதோ கோபம் கொள்வதோ... கேலி கிண்டல் செய்வதோ...பிறர் மத்தியில் அவதூறு செய்வதோ....
அவரைவிட...தம்மையே அதிகம் பாதிக்கும்...அது அப்பொழுது மகிழ்ச்சியாகவோ,
பழிவாங்கி விட்டோம் என்ற திருப்தியையோ.. நிம்மதியையோ கொடுத்தது போல் இருக்கும்..
ஆனால் அது கொடிய விஷம் போல் நம்மில் நம் மனதில் பரவி... பேரிழப்புகளை ஏற்படுத்திவிடும்....
கோபம் கொள்வதும்.. பழிவாங்குவதும்.. போதை பொட்களுக்கு அடிமையாவது போல் தான்..

சாதுர்யம்

அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறு மொழி அனுப்பியிருந்தார்.

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது.

அன்பைத் தேடி ஒரு தப்பித்தல்

- எம்.ரிஷான் ஷெரீப்

     'ஒவ்வொரு தடவையும் நாம் எமது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்க முற்படும்போதும், ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உடனே அவர் கலவரமடைந்து விடுகிறார்'

   
திருமணம் முடிப்பதற்காகப் பேசி வைத்திருக்கும் மணப்பெண்ணான நெகாருடன் தமது வாழ்க்கை பற்றிக் கலந்துரையாட முற்படும் போதெல்லாம் மணமகன் இமானை ஒரு தொலைபேசி அழைப்பு குறுக்கிடுகிறது. அதனைத் தொடர்ந்து அவன் கலவரமடைந்து உடனே அவளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறான். அவள் அவனைச் சந்திக்கும்போதெல்லாம் அவளைப் புதிருக்குள்ளும், குழப்பத்துக்குள்ளும் ஆழ்த்தும் அத் தொலைபேசி அழைப்பு பற்றி வினவுகிறாள். தனது கணவனாகப் போகிறவன் ஏதோ ஒரு பெருந் துயரத்துக்குள் சிக்கியிருப்பதை அவள் உணர்கிறாள். அவளது தொடர்ச்சியான கேள்விகளின் பிறகு அவன், வாழ்நாள் முழுவதும் தான் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய இன்னுமொரு நபர் தனது வாழ்வில் இருப்பதாகக் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகிறாள். இத் திருமணத்தை அந் நபர் விரும்பவில்லை என்றும் இத் திருமணத்தின் மூலம் அவர் மிகுந்த கவலைக்காளாவார் எனவும் கூறுவது அவளை மென்மேலும் குழப்பத்துக்குள் தள்ளி விடுகிறது. இமான், தனது வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவ் வீட்டுக்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் நெகாரிடம், இமானின் தாய் அவளுக்குள்ள முக்கிய பொறுப்பினை மிகுந்த பரிதவிப்புடனும் அன்புடனும் விளக்குகிறார். அன்பளிப்பாக ஆபரணங்களை வழங்குகிறார். பின்னர் இமான், அவன் குறிப்பிட்ட அந் நபரைச் சந்திக்க அவளை அழைத்துச் செல்கிறான். அவள் அதிர்ச்சியடைகிறாள். தனது வீட்டுக்குக் கவலையோடு திரும்பும் அவள், அவர்களது திருமணம் குறித்த எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறுகிறாள்.

டி.ஆர்...! ஒரு ஃபிளாஷ்பேக் ஸ்டோரி ?

Gajini Ayub
1982 கால கட்டத்தில் (ஒரு தலை ராகம் திரையிடப்பட்டு ரசிக்கப்பட்ட பின்) தமிழக ரசிகர்கள் டி ராஜேந்தரின் அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த காலமது...
டி ஆர் தன் அடுத்த பட இயக்க வாய்ப்புக்கு சிலரை அணுகியபோது ஜேப்பியார் வாய்ப்பு தந்ததில் புதுசா " வசந்த அழைப்புகள்" என்று தலைப்பிட்டு திரைக் கதை எழுத ஆரம்பித்தார்! ( அதற்கு முன் இந்த படக்கதைக்கு' என் பிரிய வசந்தமே' என்று பெயர்.ஏனோ மாறிவிட்டது)
அதற்கு முன் தன் பொருளாதாரபற்றா குறையால் சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலி தெருவில்( அறங்கக்குடி எஸ்.எம்.சம்சுதீன் அவர்களின் ஹேப்பி மேன்ஷனில்) ஆதரவுகேட்டு தரைவிரிப்பு போட்டு தங்கிகொண்டிருந்த டி ஆர் , தயாரிப்பாளர் அடுத்த வாய்ப்பு கொடுத்ததால் சென்னை மூன்று நட்சத்திர
ஹோட்டலான சுதர்ஸன் இண்டர்நேஷனலில் தங்க வைக்கப்பட்டிருந்தார் ...!

Sunday, June 18, 2017

ஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெகிழ வைக்கும் ! / Abu Haashima


எப்பொழுதும் நான்
உருகுவது 
அவனை எண்ணித்தான் .
எத்தனை முறை படித்தாலும்
அலுப்பே வராத என் ஆத்மாவின்
ஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் 
எப்போதுமே என்னை நெகிழ வைக்கும் !
*********
இறைவா...
யாவையும் 
பிறக்கவும் இறக்கவும் 
வைப்பவன் நீ !
பிறப்பே இல்லாத 
பேரதிசயமும் 
நீ !
பிரபஞ்சமெங்கும் 
பெருங்காற்றை 
புரள வைப்பவன் நீ !
அதில் 
துளிகூட கொடுக்காமல் 
மூச்சுக் காற்றை 
மூடி விடுபவனும் 
நீ !
காவியமும் 
ஓவியமும் 
எல்லாமும் 
எழுத வைத்து 
அறிய வைப்பவன் நீ !

தலைமுறை இடைவெளி

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக்கும் தந்தைக்கும் 47 வருட வயசு வித்தியாசம். நான் அடிக்கடி சொல்வேன் தலைமுறை இடைவெளி என்று ஆனால் என் மீது அவர் பொழிந்த பாசமும் அன்பும் மிகையானது.
என்னை 6 ம் வகுப்பில் விடுதியில் சேர்த்தார் 10 ம் வகுப்பு வரை விடுதி வாழ்க்கை அதற்கு பிறகு தந்தையுடன் கல்லூரி வரை ஆனால் தாய் ஊரினில். 8 ம் வகுப்பு வரை படித்து அதற்குப்பின் கொழும்பில் இரவு வகுப்பு படித்து தனது ஆங்கில அறிவையும் பட்டை தீட்டிகொண்டவர். அரசியல், ஆன்மிகம், கலை என்று அனைத்து துறையிலும் சரளமாக உரையாடுவார் ஓர் குறிப்பிட்ட காலம் வரை இடது கம்யுனிஸ்ட், அய்யா கல்யாண சுந்தரம் , KT ராஜு , பாப்பா உமாநாத் என்று அவர் வட்டம் தீவீரமானது . SAS என்று செல்லமாக அழைப்பார்கள் அவரது காலம் வரை பொருளுக்குக்காக அவர் தன்னை மாற்றி கொண்டதில்லை.

என் தந்தை.../ Raheema Beevi

Raheema Beevi
நாங்கள் ஆறு பேரும் பெண்களாக பிறந்தும் ஒரு நாள் கூட ஆண் குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டதில்லை.எங்களை ஒருபோதும் கடிந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை. ஒரு அடிகூட அடித்த ஞாபகம் இல்லை.ஒரு ஆண்குழ்தையை எதிர்பார்த்து எதிர்பார்த்து பெண்ணாக பிறக்கும் போது உம்மா ஆதங்கத்தில் அழுவாங்களாம். அல்லாஹ் கைகால் சுகத்துடன் குறையில்லாமல் அழகான குழந்தைகளை தந்திருக்கிறானே என்று அப்போது கூட உம்மாவை ஆறுதல் படுத்துவது வாப்பாதான்.

திரும்பிப்பார்க்கிறேன்_தந்தையே

எல்லாம் வல்ல இறைவன் நம் குருதி வழியே உயிரும் உணர்வும் கொடுத்து உருவாக்கிய உறவில் தந்தை மிகவும் மகத்துவம் மிக்கவர்! தந்தை கொடுத்ததால் தாய் பெறுகிறார் அதன் வழியே இருவரும் பெற்றோர் ஆகின்றனர்.
அதுமட்டும் இன்றி தான் பெற்ற பிள்ளையை எல்லாம் பெற வைப்பதிலும் தந்தையின் பங்களிப்பே மிகைத்து நிற்கும் பல சமயங்களில், அந்த மிகைத்ததலின் விளைவே நாமெல்லாம்!
பொடு போக்கான தாய் தந்தைக்கு பிறந்து தனது மூன்றாம் வகுப்பைக்கூட முழுமை பெற்று முடிக்காமல் பத்து வயது நிரம்பும் முன்பே திருச்சி சென்னையின் திரையரங்குகளின் உள்ளே தன் தோளில் சுமந்து பதார்த்தங்களை விற்கத் துவங்கி அதன் பிறகு உணவகங்களில் சர்வர் பணிக்கு சென்று வஞ்சமில்லாமல் உழைத்து காலம் கொடுத்த பதவி உயர்வுகளின் அடிப்படையில் என் தாய்க்கு கணவராகி! அதன் வழியே என்னைப் பெற்று தந்தையாகி! இந்த உலகில் நான் இயன்றவரை எல்லாம் பெற வைத்து அழகு பார்த்து தாயுமாகி அல்ல யாவுமாகி நின்றவர் என் தந்தையெனும் என் கதை நாயகர்.

தந்தை .../ J Banu Haroon

 J Banu Haroon
=======
என் தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் பெருநாளைக் கொண்டாடாத வெறுமையான மனநிலையில், செய்வதறியாது இருந்தோம் ...
எப்போதும் போல் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்திறங்குவதாக பக்கர் மாமாவின் கடிதம் வந்து சேர்ந்த இரவு இரயிலில் வந்திறங்கினவரை அழைத்துவர அண்ணன் கிளம்பிப்போனார் ...
எப்போதும் மாமா எங்கள் வீட்டிற்கு அம்மாவைப் பார்க்க வரும்போதெல்லாம் காலையில் கடிதம் வரும் ...அன்றிரவு இரயிலில் மாமாவே வந்திறங்குவார்கள் ..சிதம்பரத்தில் அப்போதெல்லாம் மாலையில் மீன் விற்பனை அமோகமாக இருக்கும் ...மாமா மீன் விரும்பி .''.நல்ல மீன் வாங்கி ஆக்கி வை'' ...என்கிற வரிகளும் கடிதத்தில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் ...மாமாவுடன் வரும் நண்பர்களும் மீன் விரும்பிகள்தாம் ...பலவிதங்களில் அம்மா ஆட்களை வைத்துக்கொண்டு மீன்களை சமைத்து வைப்பார்

Saturday, June 17, 2017

தாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன?


  நாஷித் அஹமத்

...நாம் தாங்கிக் கொள்ள இயலாத சோதனைகளை அல்லாஹ் நமக்கு தர மாட்டான் என்கிற அல்லாஹ்வின் வாக்குறுதியை நாம் சரியாக புரிந்து வைத்திருக்கிறோமா?

எதையெல்லாம் தாங்க இயலாத சோதனை என்று நாம் கருதுவோமோ அவை எதையும் அல்லாஹ் நமக்கு அளிக்க மாட்டான் என்பது இதன் பொருளல்ல.

பெற்றோருடன் அன்புடன் வாழும் ஒரு பிள்ளை, பெற்றோர் த‌ம்மை பிரிந்து விடுவது தாங்க இயலாத சோதனை தான் என்று கருதுவார்.

மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்பவரிடம் உங்களுக்கு தாங்கவே இயலாத சோதனை என்றால் எதை கருதுவீர்கள்? என்று கேட்கிற போது, மனைவியோ குழந்தையோ இறந்து விடுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது என்பார்.

பெயரில் என்ன இருக்கிறது? எவ்வளவோ!

Shahjahan Rahman
குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். நல்ல பெயராக நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்பார்கள். சிலர், குறிப்பிட்ட எழுத்தில் துவங்குகிற பெயரைப் பரிந்துரைக்குமாறு சொல்வார்கள். சிலர், இன்ன பெயர் வைக்கலாம் என்று விரும்புகிறேன், கருத்துக் கூறுங்கள் என்று கேட்பார்கள். இதைப்பற்றி யோசிக்கும்போது பல விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாதான் என்பது ஷேக்ஸ்பியரின் வாதம். ஆனால் பெயரில் எவ்வளவோ இருக்கிறது என்பது சாதியக் கட்டுமானம் கொண்ட நமது சமூகத்தில் எதார்த்தம்.


Friday, June 16, 2017

வேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுகளை பகிர்கிறேன்

வேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுகளை பகிர்கிறேன்
சிலருக்கு இதனை கண்டு அயர்ச்சியாக இருக்கலாம். அன்பர்கள் சிலர் பல ஆண்டுகளாக ஓர் நிறுவனத்தில் இருக்கலாம் அவர்கள் கம்போர்ட் ஜோன் எனப்படும் மனநிலையில் இருப்பவர்கள் சிலர் வேலை தேடும் நேரத்திற்கான நிர்பந்தம் எப்பொழுதும் ஏற்படலாம் . ஆண்டுகள் பல கடந்தும் அங்கீகாரம் இல்லாமல் மாற்றம் விரும்புபவர்கள் சிலர் பொருளாதார தேவைகளுக்காக சிலர் முயற்சிப்பர்.
இன்றைய சூழலில் எந்த நிறுவனமும் உங்களை கொண்டாட தயாரில்லை நான் 8 வருடம் உழைத்த நிறுவனத்தில் எனது ராஜினாமாவை அறிவித்ததும் நடத்தப்பட்ட விதம் மிகவும் வேதனையானது. உங்களது உழைப்பு மற்றும் சாதனைகள் அந்த நேரத்தில் அவர்களின் கண்ணுக்கு தெரியாது சிலர் இதனை தனிபட்ட ஓர் விடயமாக கருதுகின்றனர். அன்றைய காலகட்டத்திற்கு உங்களை நீங்கள் தயார் செய்திடவில்லை எனில் போட்டியான உலகில் நீங்கள் நிற்பது கடினம். 8 வருடம் நான் கற்றுக்கொண்ட வித்தைகளை விட அதிகமான விசயங்களை கடந்த இரண்டு வருட அனுபவத்தில் கற்றேன்

கடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா

அமீரகம் வந்து 12 ஆண்டுகள் நிறைவடைய போகிறது இதில் ஊருக்கான மூன்று பயணங்கள் தந்தை மற்றும் உடன்பிறப்புகளின் இழப்பிற்காக. இறைவன் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் நற்கிரியைகளை பொருந்திகொண்டு அவர்களுக்கு சுவனத்தை அருள் புரியட்டும்.
மனம் கனக்கிறது அமைதி அடைய மறுக்கிறது 4 உடன்பிறப்புகளுடன் பிறந்த நான் இன்று அனைவரையும் இழந்து பெற்றோரையும் இழந்து தனியாக .ஓர் உடன்பிறப்பை பார்த்தது இல்லை மற்ற மூவரும் வளர்ந்து ஒன்றாக திரிந்தோம் இன்று அவர்களும் இல்லை.

Thursday, June 15, 2017

மூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த வீடியோ

நேற்று இலண்டனில் 24 அடுக்கு மாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 23வது தளத்தில் அநேகமானோர் சிக்கிக்கொண்டதாகவும், புகை சூழ்ந்து உயிருக்குப் போராடும் ராணியா இப்ராஹிம் எனும் பெண் உதவி கேட்டு ஃபேஸ்புக் 'லைவ்' இல் கதறிய காட்சி
மற்றோருடன் அவரும் அவருடைய மகள்கள் (5 வயது மற்றும் 3 வயது) இருவரும் இறந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. :(
இதுவரை சுமார் மூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த வீடியோ லிங்க் முதல் கமெண்ட்டில்
Rafeeq Sulaiman
https://www.facebook.com/ribrham/videos/1499323993475925/?pnref=story

Wednesday, June 14, 2017

"சார் உங்க பெயர் ரஃபீக் தானே?" என்று அவர் உறுதி செய்துகொண்டதுதான் வியப்பிலாழ்த்திய விசயம்.


2015 ஆம் ஆண்டு (சென்னை) புத்தகக் கண்காட்சி என்று நினைவு. ஒரு அரங்கில் RJ ஒருவர் "நான் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலவாமல் தமிழில் இரண்டு நிமிடங்களுக்கு உரையாட உங்களால் முடியுமா?" என்று அங்கு வருவோரையெல்லாம் மடக்கிக் கொண்டிருந்தார்.
நண்பரொருவர் என்னை அந்த அரங்கிற்கு அழைத்துக்கொண்டு போய், "இவரிடம் பேசுங்க...." என்று என்னை மாட்டிவிட்டார் :)
கேட்கும் கேள்விகளுக்கு நிதானமாக மிகவும் யோசித்து யோசித்து.... ஆங்கிலம் சேர்ந்துவிடாதபடி பேசி..இரண்டு அல்ல நான்கு நிமிடங்களைக் கடந்தவுடன்....... அந்த தம்பி, "சார்.. உங்க மொபைல் நம்பர் கொடுங்க ... என்று 60-40% தமிழ் ஆங்கிலம் கலந்து கேட்க எல்லோரும் சிரித்தது அல்ல நாம் இப்போது பேசப் போகும் விசயம். .
எனது எண்ணை அவரிடம் சொன்ன மாத்திரத்தில், "சார் உங்க பெயர் ரஃபீக் தானே?" என்று அவர் உறுதி செய்துகொண்டதுதான் வியப்பிலாழ்த்திய விசயம்.
எனது பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?

சேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.

முகநூலில் GLOBAL SPIRITUAL GARDEN என்ற பெயரில் ஒரு பக்கம் திறந்துள்ளேன். குழுவில் இருக்கும் அனைவரும் அதற்கு வரும்படியும் அவர்களது அலைபேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கொடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். முகநூலில் என் நண்பர்களாக இருப்பவர்களும் அங்கே வரும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆடியோ, வீடியோ போன்றவற்றை எளிதில் பகிர்ந்துகொள்ள இந்தப் பக்கம் வாட்ஸ் அப்பை விட எளிமையானதும் ஆற்றல் மிக்கதுமாக உள்ளது. இக்குழுவின் நோக்கங்கள் பற்றி நான் ஏற்கனவே எழுதியதை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மனிதனின் தேவை !- மன அமைதி ..

மனிதனின் தேவை !- மன அமைதி ..
( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )

“அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)

நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற மனிதனே இன்றைய நவயுகத்தில் இல்லையென்று கூறும் அளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது.


மனிதர்கள் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி, சக்திக்கேற்ப தங்கள் சரீரத்தைப் பீடித்த நோய்க்கு சிகிச்சையளிக்கின்றனர். ஆனால் அனைவருமே சிகிச்சையளிக்க வேண்டிய முக்கியமான ஒரு உறுப்பைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள்.

அந்த உறுப்பு செயலற்றுவிட்டால், ஏனைய உறுப்புக்கள் எவ்வளவு திடகாத்திரமாக இருந்தாலும் பயனில்லை. ‘மையித்து’ என்று இனம் காட்டப்பட்டு ஒதுக்கி தள்ளப்படுகிறது. அந்த உறுப்பு இயங்கிக் கொண்டிருந்தால் மற்ற உறுப்புகள் துண்டாடப்பட்டாலும், புழுத்துக் கொட்டினாலும் மனிதன் என்ற மரியாதையளிக்கப்படுகிறது.

வீடு என்பது இறைவனின் அருட்கொடை!

வீடு என்பது இறைவனின் அருட்கொடை!
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :
👇
உச்சியிலே கண் சுருக்கி,
அண்ணாந்து பாத்து பாத்து

வராத மழைக்காக ஏங்கி நிற்கும்
ஏழை உழவன்,

தூரல் கொஞ்சம் விழுந்ததுமே,
விதைபோட கடன் வாங்கி,

இருப்பதெல்லாம் அடகு வச்சு,
ஏரோட்டி விதைச்சுடுவான்.,

முளை விட்ட பயிர்கண்டு
பிள்ளை பெற்ற ஆனந்தம்

களை வெட்டி உரம் வச்சு
கண்ணைபோல பாதுகாத்து

ஒட்டிப்போன வயிறோடு
மாடாக உழைச்சிடுவான்

போட்டதுல அரைவாசி
வேசையில கருகிடவே

கலங்காம அறுவடைய
காலத்துல செஞ்சிருவான்

அடிச்சு வச்ச மூட்டையெல்லாம்,
மனக்கணக்கு போட்டிடுவான்

படிக்காத மேதை

படிக்காத மேதை ஒசாமா

இன்று இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது..

பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் “ஒசாமா” என்ற அரபு இளைஞர் டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார்.

Tuesday, June 13, 2017

இது 2017


எல்லைக் கோடுகளால்
உடைந்து உடைந்து
உலகம்
சாக்கடையில் விழுந்த
தின்பண்டமாகக் கிடக்கிறது

அன்றெலாம்
மாவீரனென்று அழைக்கப்பட்டவனை
இன்றெலாம்
நான் மனதாரப் புகழ்கிறேன்

அவன்
சிறுசிறு எல்லைக் கோடுகளைச்
சிலந்திக் கூடுகளாய்ச் சிதைத்தான்
இருண்ட வாசல்களை உடைத்தெறிந்தான்
உலகம் ஒற்றைக் கூடுதான் என்று
வீரமுழக்கம் செய்தான்

இந்நாள்
வல்லரசுத் தலைகளோ
சீழ்பிடித்தவை

உலகப் போர் உலகப் போர் என்று
ஒவ்வொரு போரிலும்
பூமியெனும் ஒற்றைப் பந்தைக்
கிழித்துக் கிழித்துக்
கழுத்தில் தொங்கவிட்டுக்
கூத்தாடுகின்றன

சுயநலம் பெருகிப் பெருகி
சொந்தமண் சொந்தமக்கள்
சொந்த இனம் சொந்த நிறம் என்று
நெஞ்சம் சுருங்கச் சுருங்க
நரகப் பாடல்கள் பாடுகின்றன

எந்த மண்ணைக் கொண்டுவந்து
இந்த மண்ணில் இட்டான்
மனிதன்?

இந்த மண் வாய்விழும்போதும்
விழுங்கப் போவது
மண்ணா மனிதனா?

இந்தப் பிரபஞ்சத்தில்
பால்வீதியே ஒரு புழுதிச் சுழல்
அந்தப் புழுதிச் சுழலில்
உற்று உற்றுப் பார்த்தாலும்
இந்த பூமி
தெரியப் போவதே இல்லை

அத்தனைத் துக்கடாத் தூசு
இந்தப் பூமி

அந்தத் தூசுக்குள்
இத்தனைப் பெரும் நாசங்களா?

இந்த உலகம்
எல்லா இனங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா மதங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா நிறங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா உயிர்களுக்குமானது

இந்த உலகம்
ஒரு புழுவுக்கும்
சிறு பழுதுமில்லாதது

- அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in/

ஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்தர்!

கத்தரின் மீது சவூதியுடன் இணைந்து பல தடைகளை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்படுத்தியபோதும் அதே முறையில் பழிதீர்க்காமல், ஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் கத்தர் பாதுகாக்கும் விசயம் தற்போது வெளியாகியுள்ளது.

கத்தரின் ஆகாய மற்றும் கடல் வழி போக்குவரத்துகளைச் சவூதியுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகமும் தடை செய்தது. இதனால் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முதலான கிழக்கு நாடுகளுக்குக் குறைந்த தூரத்தில் சென்று சேரும் ஆகாய வழித்தடம் கத்தருக்கு மறுக்கப்பட்டது. அதே நேரம், இப்பகுதியின் மிகப் பெரிய துறைமுகங்களான ஜபல் அலி, ஃபுஜைரா போன்றவை கத்தருக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் தடுத்தது. இதனால் கத்தருக்கு வரும் உணவில் சுமார் 40 சதவீதத்துக்கு மேல் குறைந்தது.

Saturday, June 10, 2017

அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை

Shahjahan R


அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை
(தில்லிகை – 10-6-2017 சனிக்கிழமை)
இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமியர் பலரிடையே – எங்கள் பகுதியில் ஒரு வழக்கம் உண்டு. இறந்தவரை நல்லடக்கம் செய்த பிறகு, மூன்றாம் நாள் மற்றும் 10-20-40ஆம் நாள், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று பாத்திஹா ஓதிவிட்டு நறுமணத் தைலங்களையும் சந்தனத்தையும் பூக்களையும் தூவிவிட்டு வருவதுண்டு. இப்போதெல்லாம் இந்த வழக்குகள் அருகி வருகின்றன என்பது வேறு விஷயம். அப்படிச் செல்லும்போது, கபரஸ்தானில் இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை ஒட்டியிருக்கும் இதர கல்லறைகளுக்கும் பூக்களைத் தூவுவார்கள். அதுபோல அப்துல் ரகுமான் பற்றிப் பேசுவதற்கு முன் அவருடைய சமகாலக் கவிஞர்கள் சிலரின் கல்லறையிலும் சில சொற் பூக்களைத் தூவ விரும்புகிறேன். ஏனென்றால், அவர்களும் அப்துல் ரகுமானுடன் பயணித்தவர்கள், அப்துல் ரகுமான் போலவே தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

Thursday, June 8, 2017

20 of the most unusual mosques from around the world

முளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..

முளைவிடும் விதையின்
புத்தம்புது வேரினைப்போல
பாலையில் திரியும்
உடல்வற்றிய பூனையைப்போல
கரையில் எறியப்பட்ட
சின்னஞ்சிறு மீனினைப்போல
உச்சிச் சூரியன் முகம்துடைத்த
வரண்ட காற்றினைப்போல

Tuesday, June 6, 2017

ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்!

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/767425913438352/
மார்க்க அறிஞர் ஷேக் மக்சூத் இம்ரான் ரஷீத் வட நாட்டில் பிரபலமானவர். அவருக்கு நியூயார்க்கில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு விவரிக்கிறார். அதனை தமிழில் மொழி பெயர்க்கிறேன்.....

'நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் லிஃப்டுக்காக காத்திருந்த போது எனது அருகில் ஒரு பரிச்சயமான முகம் தென்பட்டது. அட... இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புன்முறுவலோடு கை கொடுத்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு 'எந்த அறையில் தங்கியுள்ளீர்கள்?' என்று கேட்டார்.  நான் அறையின் எண்ணை சொன்னேன். சலாம் கூறி விட்டு பிரிந்து விட்டார்.

Monday, June 5, 2017

“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”


“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்து :
முஸ்லிம்களுக்கு ஊடகங்கள் வாய்ப்புகளை மறுக்கினறன என்ற ஏக்கம் ஒரு காலத்தில் இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில், ஃபேஸ் புக் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கியது. முஸ்லிம்கள் அதில் அதிகமாக பங்கேற்றனர். ஆனால் அது சமுதாயத்திற்கு நன்மை தருவதற்கு பதில் தீமைகளையும், ஆபத்துகளையும் உருவாக்கி வருகிறது.

வல்லோனே…. ஏகனே இறையோனே ….!

இறையே இறையின் நிறைவே 
=== அருளே அருளின் அருவியே 
ஒளியே ஒளியின் ஒளிர்வே 
=== கருவே கருவின் கர்த்தாவே!
ஆதியே ஆதியின் ஆரம்பமே 
=== உண்மையே உண்மையின் ஊற்றே 
தூய்மையே தூய்மையின் உறைவிடமே 
=== பெருமையே பெருமையின் பிறப்பிடமே!
புனிதமே புனிதத்தின் புண்ணியமே
=== கருணையே கருணையின் கடலே

Sunday, June 4, 2017

அணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது

கலாம்!

இந்தப் பெயரை நான் அன்று உச்சரித்ததைப்போலவே இன்றும் உச்சரித்துப் பார்க்கிறேன். நெடுங்காலம் கட்டப்பட்டுக் கிடந்த என் ஞாபக முடிச்சுகள் சட்டென்று தளர்ந்து அவிழ்ந்து கொள்கின்றன. அதிலிருந்து சிதறித் தெறித்து ஓடுபவை முத்துக்களா பவளங்களா மாணிக்கங்களா என்று வகை பிரிக்கத் தெரியாமல் மனதில் ஏறும் சுகத்தை தடுக்கவும் முடியாமல் அப்படியே விட்டுவைக்கிறேன். அது நில்லாமல் மேலே மேலே ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சுகத்தின் கால்களில் என் இதயத்தின் சந்துகள் புல்லரித்துச் சிவக்கின்றன.

கலாம் ஒரு கவிஞனாம். அதுவும் மரபு பிறழாமல் வளையாத சொற்களையும் வளைத்துப் பிடித்து தமிழையும் கவிதைகளையும் நிமிர்த்திப் பிடிக்கும் விரல்களைக் கொண்டவனாம்!

கலைஞர் 94 வாழ்த்துரை ....

அப்துல் கபூர் 


அஞ்சுகம் அம்மையாரின் 
கருக்குவளையில் உயிராகி 
தமிழகத்தை ஆண்டிட 
திருக்குவளையில் பிறந்தவனே ....
தடையற்ற உற்சாகமேந்தி 
அகவைப் பயணமதில் 
நூற்றாண்டு கண்டிட 
நடையுற்று முன்னேறும் 
வைரவிழா நாயகனே ....

பற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்


இறக்கப்போகிறவனே! நில்
கணக்கை முடித்துவிட்டுப்போ!
வாழ்க்கையெல்லாம் பற்றெழுதியவனே!
உன்பங்குக்கு ஒரு வரவாவது
வைத்துவிட்டுப்போ!
இந்த பூமிக்கு 
ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய்!
ஒரு கடனாளியாக
சாகப்போகிறாயா?
என்னுடையதென்று
நீ உரிமைகொண்டாடும் எதுவும்
உன்னுடையதல்ல!
உன் உடல்
உன் பெற்றோரிட்டபிச்சை!

அற்ப_துனியா(உலகம்)

 அற்ப_துனியா(உலகம்)
மேலே உள்ள இந்த வார்த்தையை இதுவரை கேட்டிறாது ஒரு இஸ்லாமியர் கூட இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பள்ளிதோறும் முழங்கும் வெள்ளிமேடைகளிலும் இன்னபிற இஸ்லாம் சார்ந்த நிகழ்வுகளிலும் இன்றளவும் இதுவே பிரதானப்பட்டு நிற்கிறது இமாம்கள் எனும் மத குருமார்களின் பிரசங்கங்களில் ஆனால் அவர்கள் கூற்றுப்படியே இந்த அற்ப உலகத்தில் நமக்கானதாக எதை தேர்ந்தெடுத்துக்கொண்டு எப்படி வாழ்வது என்பதில் கிடைக்கும் தெளிவு என்பது குறைவிலும் மிக குறைவு.
இந்த பெரியார் இப்படி இருந்தார், அந்த பெரியார் அப்படி வாழ்ந்தார், இமாம் ஹசன் பஸரி, மாலிக் இப்னு தீனார், ராபியத்துல் பஸரியா, உவைஸ் கருணி, முகைய்யதீன் அப்துல் காதிர் ஜெய்லானி மற்றும் எத்தனையோ பெரியார்களைப்பற்றி சுவாரஸ்யமான அழகான கதைகள் எல்லாம் இன்றளவும் நில்லாது ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த கதைகளை கேட்ட சமுதாயம் இவைகளால் என்ன பலனை அடைந்தது என்று இதுவரை தெரியவில்லை.

நலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு!

by நாகூர் ரூமி
10– ஸ்வீட் எடு, கொண்டாடு!

 எறும்புகள் எப்போதும் இனிப்பான உணவுப் பண்டங்களையே சுவைக்கின்றன. ஆனால் அவைகளுக்கு எப்போதுமே சர்க்கரை நோய் வந்ததில்லையே! – யாரோ.

முன் கதைச் சுருக்கம்

ஒருமுறை நானும் என் எழுத்தாள நண்பர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பரும் எழுத்தாளருமான ஒருவர் – இப்போது அவர் ஒரு பிரபல பத்திரிக்கையின் ஆசிரியர் – தனது டயபடிஸ் பிரச்சனை பற்றிப் பேசினார். சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடியும் என்று சொன்னார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக சிறுகதைகள். ஆனால் அதற்காக அவர் சொல்லும் ஒரு தவறான கருத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன?

 அப்படியெல்லாம் இல்லை நண்பரே, டயபடிஸ் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று நான் சொன்னேன்.

Thursday, June 1, 2017

கவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார் (வஃபாத்தானார்).

சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் காலமானார்
பதிவு: ஜூன் 02, 2017

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

http://www.kaniyam.com/tamil-wallpapers-creativecommons/
இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம்.
நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் தமிழில்?

இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம்.

Wednesday, May 31, 2017

எமது மக்களுக்காக உங்களால் இயன்ற உதவியைச் செய்ய இணைந்து கொள்ள வேண்டுகிறேன்.

இது கொழும்பு மருதானை புகையிரத நிலையத்தின் நுழைவு வாயில். ஏனைய நாட்களைப் போல அல்லாது இன்றைய தினம் காலை நேரம் அதன் தோற்றம் சற்று மாறியிருந்தது.

வாயில் முழுவதும் உணவுப் பொதிகளும், தண்ணீர் போத்தல்களும் நிறைந்திருந்தன. அவை, எமது தேசத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி உயிர் பிழைத்திருக்கும் மக்களுக்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்தவர்கள் தந்து சென்றவை.

அன்புடன் வாழ்த்தும் ராஜா வாவுபிள்ளை

நட்பின் இலக்கணம்
இரக்கத்தின் இருப்பிடம்
இன்முகத்தின் இனியவர்
அன்பான குழந்தைக்குணம்
அறிந்ததை பகிரும் பெருந்தன்மை
இளையோரை தூக்கிவிடுவார்
நல்ல மனதுடன் வாழ்த்திடுவார்
நன்மக்கள் நட்பு நன்மைகள் தரும்
அத்தனையும் ஒருங்கே கொண்ட
சகோதரநட்பு Mohamed Ali

நோய்நொடியின்றி இறையருளுடன் மனமகிழ்வுடன்
பல்லாண்டு வாழ ஏகன் இறையோனை வேண்டுகிறேன்.
ஆமீன்.
நட்பில் தொடர நாளும் மட்டற்ற மகிழ்வுடன் நாடுகிறேன்.

ராஜா வாவுபிள்ளை with Mohamed Ali..
வாவுபிள்ளை and Mohamed are celebrating 3 years of friendship on Facebook!https://www.facebook.com/kanakkan.kanakkan/videos/2004764529747334/

Tuesday, May 30, 2017

பன்றி இறைச்சி தடை ஏன் ?


பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

Monday, May 29, 2017

உகாண்டாவின் மண்ணின் மைந்தன். முன்னாள் அதிபர் ஈத் அமீனின் இனத்தை சார்ந்தவர்

எனக்குத் தெரிந்து ....!
குடும்ப நிறுவன நிலைப்பாடு.
எனக்குத் தெரிந்து, நேர்மையுடன் திறமையும் கொண்டு கடினமாக உழைப்பவர்களுக்கு வளர்ச்சியும் உயர்ச்சியும் நிச்சையம் கிடைக்கும்.
ஆனால் அதை தக்கவைத்து முன்செல்ல வேண்டுமானால் அவரால் மட்டுமே முடிவதில்லை.
உற்றார் உறவினர் உறுதுணை கண்டிப்பாக தேவைப்படும்.
இன்றும் எனது தொழில்வழி நட்ப்பில் இருக்கும் ஒருவர் உகாண்டாவின் மண்ணின் மைந்தன். முன்னாள் அதிபர் ஈத் அமீனின் இனத்தை சார்ந்தவர். இப்போது பெரும் செல்வந்தர் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் அவரை அறியவரும்போது அரசியல் மாற்றங்களில் அடிபட்டு குடும்பமே சிதைந்து சின்னாபின்னமாக நிலையில் இருந்தார்.

இது என் சந்தோஷக் கவிதை./ Abu Haashima

இது என் சந்தோஷக் கவிதை.
*******
விசித்திரமானவர்கள் 
முசல்மான்கள் !
பொழுது விடிந்தால்
சாயா காப்பியிலிருந்து
பொழுது அடைந்தால் பேயம்பழம்வரை 
ஆகாரங்களால் 
வயிற்றை அடைத்தே வாழ்பவர்கள் 
நாங்கள் !
காலை பத்து மணிக்குள்
இடியாப்பமோ
ரொட்டியோ 
முறுகின முறுவலோ 
உள்ளே போகாவிட்டால் 
க்ஷீணம் வந்து விடும் எங்களுக்கு !
மதிய வேளை 
மணக்க மணக்க 
பொரிச்ச மீனும் 
கறிவச்ச மீனும் 
இருந்தால்தான் 
தொண்டையில் இறங்கும் சோறு !
ராத்திரிக்கு 
இருக்கவே இருக்கு 
பானு சிக்கன் புரோட்டாவும் 
மட.டன் சால்னாவும் !
ராத்திரி ஒரு நேரம் 
கொஞ்சம் குறைந்தாலும் 
வயிறு பொறுக்காது 
குப்புறப் படுத்தாலும் 
தூக்கம் வரவே வராது !
வக்கணையாய் 
மூணு நேரம் உண்டாலும்
ஏத்தங்காய் சிப்சும்
மயில்கடை சமோசாவும்
அக்காம்மா கொடுத்துவிட்ட 
ஆட்டுக்கால் கேக்கும் 
தின்று முடிச்சுதான் 
சாயங்காலம் 
சாயா குடிப்போம் !

Saturday, May 27, 2017

எனது புத்தகம் விரைவில் கிடைக்க துஆ செய்யுங்கள்/ MOHAMED RABIK

ஒரு முறை எனது புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் நான் முமுவதுமாக புறக்கணிக்கப்பட்டேன்.நான் தான் அந்த புத்தகத்தை எமுதினேன் என்பதை பலருக்கும் தெரியாது, வெளியிட்டு நிகழ்ச்சியில் நான்காவது வரிசையில் இருந்தேன். இருந்தாலும் அந்த புத்தகத்தை எமுதியதற்க்கான உயர்வை வல்ல இறைவன் எனக்கு தான் கொடுத்தான். புத்தகம் வெளியிட்டு நிகழ்ச்சிக்கு வந்த என் மாணவர் மிகவும் வருத்தம் அடைந்தான்.அவன் எனக்கு தம்பி மற்றும் நல்ல நண்பர் கூட. அவனுக்காகவே எனது கல்வி நிகழ்ச்சிகளை தனியாக நடத்த ஆரம்பித்தேன் மற்றும் புத்தகங்களை தனியாக வெளியிட்டேன்.
கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் புகைபடங்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.(வரலாறு ரொம்ப முக்கியம்) .அப்போது இருந்துதான் சமூக வலைதளங்களை என் கல்வி செய்திகளை அனுப்ப கற்றுக் கொண்டேன்.ஒவ்வோரு நிகழ்ச்சிகளையும் பதிவு செய்தேன்.

ரமளானே வருக ....


விண்ணுலக தலைவனின்
இதயமது பொழிகிற
அருள்தனை சுமந்து
மண்ணுலகம் புறப்படும்
ரமளானே வருக ....
ஈமானிய மனங்கள்
புனிதமதை பருக

Sunday, May 21, 2017

அம்மா என் அம்மா / அன்புடன் புகாரி

அம்மா
என் அம்மா

ஓடி விளையாடிக்கொண்டிருந்த
உன்னை
தூக்கிக்கொண்டுவந்து
மணக்கோலத்தில்
உட்கார வைத்தபோது
உனக்கு வயது 13 - 1955

நீ
அக்காவைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 16 - 1958

நீ
என்னைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 18 - 1960

Friday, May 19, 2017

சிங்கப்பூர் பயணம்./ Mohamed Salahudeen

சிங்கப்பூர் பரப்பளவில் மிகச் சிறிய நாடுதான் ஆனால் உலகின் பல பெரிய நாடுகள் இந்த நாட்டிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமானத் திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது.
எங்கே மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கே மக்களின் செயலூக்கமும் திறனும் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது.
இங்கே மூன்று இன மக்கள், நான்கு பெரும் மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், பிணக்குகள் இல்லை.
மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் அரசு அக்கரையோடுச் செயல்படுகிறது.
மக்களிடமும் அந்த எண்ணம் இருக்கிறது.
நான் பயணித்தக் காரில் காரோட்டி வந்த சீனப் பெண்மணி சொன்ன வார்த்தை இது.
" we are united family la"
நாங்கள் ஒன்றுப்பட்டக் குடும்பம்.
கேட்பதற்குத்தான் எத்துணை மகிழ்ச்சியாய் இருக்கிறது.

Thursday, May 18, 2017

முத்தம்'


Noor Mohamed
முத்தம்'
**********
முத்தம்
மெல்லிய சத்தம்
கேட்குது உலகில் நித்தம்!
அன்னையின் முத்தம்
அன்பைப் பொழியும்
கன்னியின் முத்தம்
காதலைப் பொழியும்
கல்வியில் முத்தம்
அறிவை வளர்க்கும்
கலவியில் முத்தம்
காமத்தைப் பெருக்கும்
மேகங்கள் தம்மோடு முத்தமிட
பேரொலியாய் இடியானது

குதூகலம் ....

இறையளிக்கும் ஆற்றலில் 
மேகங்கள் பாட்டெழுதி
ஆகாயம் இசையமைக்க 
மழையெனும் இன்னிசை 
பொழிவதில் குதூகலம் ....
பிஞ்சு குழந்தைகள்
வெண்மையாய் புன்னகைத்து
நாவினில் கனிந்திடும் 
பஞ்சு மொழிகளை
மொழிவதில் குதூகலம் ....

சொல்ல முடியாதுங்...

பாத்தரம் கழுவறது கூட்டித் தொடைக்கறது சுத்தம்பண்றது எல்லா வேலயும் பாப்பனுங்
ஒன்பது மணிக்கு வந்துரணும்மா
இல்லீங்,பத்து மணிக்கி வந்துருவனுங்.
இல்லம்மா,கம்பனி டைம் ஒன்பது மணிதான்
அந்தாளு படுத்துக் கெடப்பானுங்,புள்ளகள பள்ளிக்கோடமனுப்பீட்டு அந்தாளு கெளம்பனவுன்ன வந்திருவங்
யாரும்மா அந்தாளு
புருசங்காரந்தாங்
ஓ....புருசனா என்ன வேலை பாக்கறாரு ?

✒நலம் நலமறிய ஆவல்✒

✒நலம் நலமறிய ஆவல்✒
................................................
மேற்சொன்ன அவ்வாசகம் எத்தனை பேருக்கு பரீட்சையமானதோ என்னவோ எனக்கு பல ஆண்டுகள் என் வாழ்வில் நிறைந்து நின்ற ஒன்று. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதிலும் குறிப்பாக என் தந்தை அவர்களுக்கும் எழுதிய எல்லா கடிதங்களிலும் இந்த வாசகமே பிரதானம்.
இன்று கடிதம் எழுதுவது என்பது உறவுகளிலும் நட்பு வட்டங்களிலும் அற்றுப்போன ஒன்றாக இருக்கலாம் ஆனால் என் பள்ளி கல்லூரி நாட்களில் வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருப்பவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள இதுமட்டுமே பிரதான வழி. இன்று காலசக்கரத்தின் சுழற்சியால் கடிதங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. காலம் மாறி காளன் வரும்வரை வரும் எல்லா மாற்றங்களையும் ஆமோதித்து அனுமதித்தே ஆகவேண்டும் என்பது ஏட்டில் எழுதப்படாத நியதி!☺

வாழ்த்துக்கள் ஆயிஷா பேகம் !

முகநூலில் மூழ்கி விடாமல் , இளமையை இழிவான மிருகங்களிடம் இழந்து விடாமல் , தனது தாயை இழந்த நிலையில் , ஏழைத் தந்தைக்கு உதவியாக சைக்கிளில் வியாபாரம் செய்து + 2 தேர்வில் 1101 மதிப்பெண்கள் பெற்ற தங்கை ஆயிஷா பேகம் .... வாழ்த்துக்கள் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியவில்லை ......

Wednesday, May 17, 2017

மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் சிறப்பாக


Mohamed Salahudeen

சிங்கப்பூரில் மக்களின் போக்குவரத்துக்கான மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் சிறப்பாக இருப்பது எல்லோரும் அறிந்ததுதான் ஆனால் அது இத்தனைச் சிறப்பாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை.
இன்று பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தேன், என் அருகே ஒரு வயதான முதியவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

Sunday, May 14, 2017

எனக்குத் தெரிந்து ....! கைக்கு எட்டும் சிகரம் .

எனக்குத் தெரிந்து ....!
கைக்கு எட்டும் சிகரம் .
எனக்குத் தெரிந்து, மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதும் செய்யும் தொழிலில் சிறப்புகளுடன் உயர்நிலையை அடைவதும் கூடவே பெரும்பணம் சம்பாதிப்பதும் யாரும் படிப்பித்து வருவதில்லை.
மேலும், ஒரே நாளில் உச்சம் தொட்டவர்களும் அல்ல.
அறியாப்பருவத்திலேயே ஆழ்மனதில் விருப்பு விதைக்கப்பட்டு செயலெனும் நீரூற்றி திட்டமிடுதலெனும் பக்குவம் பார்த்து அறுவடைசெய்யும் ஆயிரம் காலத்து பயிரென்றே பார்த்துப் படித்ததில் அறிந்துகொண்டேன்.

ஒரு விநோதத் தாய் விந்தைத் தனயன்…!

ஒரு விநோதத் தாய்
விந்தைத் தனயன்…!
1963ஆம் ஆண்டு காலகட்டமாக இருக்கலாம், உரிமைக்குரல் வார இதழ் காயிதெ மில்லத்தை நிறுவநராகவும் என் தந்தை அ.க. ரிபாயி சாஹிபை ஆசிரியராகவும் கொண்டு உதயமானது. இதுதான் முஸ்லீம் லீக் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் வார இதழ்.
நிறுவநருக்கும் எந்தப் பணமும் வாராது, ஆசிரியருக்கும் எந்தச் சம்பளமும் கிடையாது.
எங்கள் தந்தையார் சென்னையிலும் நாங்களெல்லாம் தென்காசியிலும்(நெல்லை) வாழ்ந்துவந்தோம்.
ஒரு முறை எங்கள் தந்தையார் ஒரு வாரம் தென்காசியில் வந்து தங்கினார்.
சென்னைக்கு மீண்டும் செல்கிறார். எனக்கும், என் சகோதரர்களுக்கும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

நீ ஹீரோ ஆக வேண்டுமா

நீ ஹீரோ
ஆக வேண்டுமா

அது
ரொம்ப சுலபம்

ஒரு
நல்லவனைத் தேடிப்பிடி
அவன்
வில்லன் வில்லன் என்று
பொய்கள் புனைந்துகொண்டே
இரு

கட்டுக்கதைகளால்
அவனைச் சுற்றிச் சுற்றி
இறுக்கிக் கட்டு

முதலில்
மக்கள்
நம்பமாட்டார்கள்தான்

சிந்தனையாடுது ...

மழையினிலே மயிலாடும் 
பாட்டினிலே குயிலாடும் 
அணலினிலே வெயிலாடும்
கனவினிலே துயிலாடும் ....
இருட்டினிலே திகிலாடும் 
காற்றினிலே துகிலாடும் 
வானிலே முகிலாடும் ....
காதலிலே மோகமாடும் 

Wednesday, May 10, 2017

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா??? - எழுதியவர். Shakila Kadher
"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்.எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன்-7:10) என்பது இறைவாக்கு.

Tuesday, May 9, 2017

இயல்பும் , இழுப்பும் , இயலாமையும் !...

இயல்பும் , இழுப்பும் , இயலாமையும் !...

விவாதத்தை
எதிர் கொள்பவர்கள்
இயல்பாகவே
எழுதுகிறார்கள் !

வீண் விவாதத்தை
செய்பவர்கள்
ஒரு வெறியோட
குதறுகிறார்கள் !

காற்றுக்கு
உருவம்
உண்டென்கிறான்

குயிலுக்கும்
தோகை
உண்டென்கிறான்

படச்சவன் நமக்கு விதிச்சதை சந்தோசமா ஏத்துகிட்டு நாம வாழணும்


அபு ஹ்ஷீமா வாவர்
இந்த முகநூல்ல
எவ்வளவோ எழுதி இருக்கேன்.
எழுதிகிட்டும் இருக்கேன்.
எழுதுவது எல்லாமே ஞாபகத்தில் இருப்பதில்லை.
சில சமயங்களில் எப்போதோ எழுதியதைக்
காணக் கிடைக்கும்போது
எனக்கே ஒரு பிரமிப்பு ஏற்படுவதை
தவிர்க்க முடியவில்லை.
அப்படிப்பட்ட பதிவுகளில் இதுவும் ஒன்று.
#மரிச்சாலும்_அழமாட்டாயா_உம்மா ...?
நூறு வயசுக்கு மேலிருக்கும் உம்மாவுக்கு...!
ஆனாலும் ..

Monday, May 8, 2017

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

சுகப்பிரசவம் சுலபமே!

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும்.

உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?

Sunday, May 7, 2017

S.E.A.MOHAMED ALI JINNAH

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. Personal Links * Screenshotநீடூர் சீசன்ஸ் * Screenshotseasonsali * Screenshotseasonsnidur - சீசன்ஸ் நீடூர் * Screenshotseasonsali.wordpress.com * Screenshotnidurseason * ScreenshotSeasons Ali Video * Screenshotnidurseasons.ucoz.com * Screenshotnidurali * ScreenshotNidurali * Screenshotseasonsnidursite * ScreenshotSEASONS-NIDUR * Screenshot nidurseasons * Screenshotniduraliseasons. # Blogroll * NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் * Nidurali * nidurseasons.com * nidurseasons.ucoz.com * Seasons Ali Video * seasonsali * Seasonsali Blogger * seasonsnidur -- சீசன்ஸ் நீடூர் * SEASONSNIDUR.wordpress.com/category/english-article/ * seasonsnidursite S.E.A. முஹம்மது அலி ஜின்னா Jazakkallahu Hairan நன்றிS.E.A.MOHAMED ALI JINNAH

Friday, May 5, 2017

தீக்குச்சியாய் இருப்பது எளிது

தீக்குச்சியாய் இருப்பது
எளிது
தீயணைப்புப் படையாய்
இருப்பதோ கடினம்

தீக்குச்சி தன் தலையில்
கொல்லி நெருப்பின்
கனத்தோடு
இருப்பது சுலபம்தான்

வெட்டி எண்ணங்களை வெட்டுவது எப்படி

Thursday, May 4, 2017

ஆக, எங்கேயும் எல்லாமும் அப்படித்தான் இருக்கிறது போலும்.


Raheemullah Mohamed Vavar 
ஆக, எங்கேயும் எல்லாமும் அப்படித்தான் இருக்கிறது போலும். ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் என்றாலும் இவ்வளவு தள்ளுமுள்ளு ஏற்படும் என்று நினைக்கவேயில்லை. அவர்களைப் போன்றவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமுமின்றி அப்படியேதான் தங்கள் தீண்டாமை நிலைப்பாட்டை பேணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்….

மாமியாரும்_மருமகளும்...!


மாமியார் தன் மருமகளை எவ்வாறெல்லாம் மனவருத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்குகிறார் என்பதற்கான சற்று விரிவான காரணங்களை பார்ப்போம்:
• மருமகள் அந்தியில் மல்லிகை சூடி அதனால் அதிகாலை தலை குளித்தல் கூடிப்போனால் ஆகாமல் போகும் சில மாமியாருக்கு.
• மகனுக்கு மருமகளுக்கும் ஏதாவது ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி அன்யோன்யம் கூடினால் சில மாமியார்கள் கேட்கும் அறிவார்ந்த கேள்வி யாதெனின் 'எதைக்காட்டி மயக்கினாய் என் மகனை'...?
• மருமகள் ஆடை மாற்றி அலங்காரம் செய்தாலும் ஆகாது என பேசும் சில மாமியாரும் உண்டு்

Wednesday, May 3, 2017

துபாயில் தலப்பாக்கட்டு பிரியாணி

தலப்பாக்கட்டு பிரியாணி இன்று தான் முதல் முறையாக சாப்பிட்டேன் . துபாயில் மற்ற செட்டிநாடு உணவகங்களுக்கு வியாபாரம் இவர்களால் சிறிது குறைந்துள்ளது.
இந்த பிரியாணி திருச்சி தக்னி வீட்டு பிரியாணியை நினைவுபடுத்தியது. இங்கே பாஸ்மதி அரிசிக்கே அனைவரிடமும் வரவேற்பு இருக்கும் ஆயினும் மலையாளிகளையும் பார்க்க முடிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் கையை முகர்ந்து பார்த்தால் வாசனை பெரிதாக இல்லை.

Monday, May 1, 2017

திறக்கப்படாத ஒரு கடையின் தூசி படிந்த திண்ணை

திறக்கப்படாத
ஒரு கடையின்
தூசி படிந்த திண்ணை
எனக்குத் தரும்
தனிமை சுகம்
பங்களாவின்
குளிரூட்டப்பட்ட உன் அறைகளில்
உனக்குக் கிடைப்பதில்லை என்பதை
கோபம் வழியும்
உன் கண்களின் வழியே
நான் அறிவேன்

Sunday, April 30, 2017

இது ஒரு பரவசமூட்டும் உணவு சுற்றுலா.

இது ஒரு பரவசமூட்டும் உணவு சுற்றுலா. மிகவும் வித்தியாசமானதும் கூட. சீனாவில் இருந்து ஐரோப்பா வரை நீண்டிருக்கும் பண்டைய கால தொழிற் வர்த்தக பாதை 'சில்க் ரூட்' என்று அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மைல்கள் நீளும் இந்த பாதையில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் உணவுகளை அறிமுகப்படுத்துவதே இந்த உணவு சுற்றுலாவின் நோக்கம். சில்க் ரூட்டில் உள்ள பெரும்பாலான நாடுகள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளாக காலப்போக்கில் மாறிவிட்டன. மேற்கு சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

மொழியும் மொழிதலும் ....!

சாந்தியும் சமாதானமும் யாவருக்கும் உரித்தாகுக.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மிருகங்கள்கூட தன்னினத்து சக மிருகத்தை காணும்போது நலம் விசாரித்துக் கொள்கின்றன.
மனிதரில் ஒவ்வொரு பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொள்கின்றனர்.
நான் வசிக்கும் உகாண்டாவில் 56 பழங்குடி இனத்தவர்களும் அவர்களுக்கென தனியான மொழியும், கலாச்சாரமும், பண்பாடுகளும் ஏன், வாழ்த்து சொல்வதும் இருக்கிறது.

எம்மெஸ் சலீம் ...உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு ஏற்பு.


எம்மெஸ் சலீம் ...
என் மருமகன்.
நாகர்கோயிலில் தொழிலதிபராக இருந்தவர் இன்று உகாண்டாவில் பணிபுரிகிறார்.
திறமைமிக்கவர்.
பல துறைகளில் விற்பன்னர்.
பொது நலப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்.
சென்ற இடமெல்லாம் சிறப்புகளை பெற்று வரும் சலீமைத் தேடி புதிய சிறப்பொன்று வந்திருக்கிறது.
அது ...
உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் வெற்றிகளை ஈட்டிய சலீம்
உகாண்டா தமிழ் சங்கத் தலைவர் பதவிக்கும்
பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

Friday, April 28, 2017

யோகா VS தொழுகை : முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை. தொழுகை Vs யோகா முக்கிய அம்சங்கள் !!

முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை.

முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுயாரையாவது அழைக்கிறோமா?நமக்குத் தேவையும் இல்லை.

யோகா தினம் என்று ஒன்று ஜூன் 21 தேதி உருவாக்கப்படுவது ஏன்?கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐ உருவாக்கியDr.Keshav Baliram Hedgewar

Wednesday, April 26, 2017

தாவூதும் கோலியாத்தும்

Vavar F Habibullah 

ஆண்டவனுக்கும் - ஆள்பவனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஆட்சி மாற்றங்கள் நிகழ, ஆண்டவன் தான் காரணமா?

ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் போது அதை தூக்கி எறிகின்ற சக்தி படைத் தவர்கள், மனிதர்களா அல்லது ஆண்டவனா?

ஆண்டவன், நேரிடையாக இவ்விஷயத்தில் தலையிடாவிட்டாலும் மக்கள் மூலமாகவே இதை நடத்தி காட்டுகிறான்.

Monday, April 24, 2017

எழுதப்படாத புத்தகங்கள்

நேற்று புத்தக தினம். எல்லாரும் ஏதாவது எழுதினார்கள். இன்னும் எழுதப்படாத புத்தகங்கள் குறித்து நான் எழுத விரும்புகிறேன். ஆமாம்.... பேஸ்புக்கில் சிலருடைய எழுத்துகள் புத்தகமாக வரத் தகுதியுடையவை. பேஸ்புக் என்னும் குறுகிய வட்டத்துக்கு வெளியே அச்சில் ஆவணமாக்கப்பட வேண்டியவை. சட்டென நினைவில் வருகிறவர்கள் (இந்த நால்வரும் இதுவரை புத்தகம் வெளியிடாதவர்கள், பத்திரிகைகளிலும் எழுதாதவர்கள். )—

மழையில் ஒரு மெளன💘யுத்தம் /

மழையில் ஒரு மெளன💘யுத்தம்
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
Saif Saif
உன் பார்வையின் அர்த்தங்களை பரிமாறிக் செல்கையில்
பளிச்சென்ற மின்னல்
கணபொழுதில் அதை
களவாடி பறந்து விட்டதே..
உன் இதயத்தின் விம்மல்களை
உள் வாங்கச் சொல்கையில்
இடியோசை ஒன்று அதை
தூரமாக்கி தொலைத்து விட்டதே..
மழையில் தெறித்த
சாரல் நீரில்
வரைந்த முகக் கோடுகளில்
உன் விசும்பல்களின் கண்ணீர் மறைந்திருக்கிறது..

Sunday, April 23, 2017

இறைவன் சகோதரனைத் தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும் ஆமீன்

உயிரை
இழக்கவே முடியாது
ஆனால் இழந்துதான் ஆகவேண்டும்
மரணம் தோற்பதே இல்லை
துக்கத்தைப்
பெறவே முடியாது
ஆனால் பெற்றுத்தான் ஆகவேண்டும்
கொடுந்துயர் வலுக்கட்டாயமானது
கண்மூடி மண்மூடி முடிந்தாயிற்று
நெற்றிமூடி நித்திரைமூடி அழுதாயிற்று
நெஞ்சுமூடி நினைவுமூட வழியில்லை
காட்சிமூடி கண்ணீர்மூட முடியவில்லை
செய்திகேட்டதும்
கனடாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு
நெருப்பில் ஏறிப் பறந்து வந்தேன்
என் நேரிளைய தம்பி காலிதுக்கு
ஈமச்சடங்கு செய்துவிட்ட
ஈரக்கையுடன் எழுதுகிறேன்
நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்தாலும்
மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்
- குரான் 4:78
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவனிடமிருந்து வந்தோம்
இறைவனிடமே செல்கிறோம்
இறைவன் அவனைத்
தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும்
ஆமீன்
*
காலிது அசன்பாவா
மரணம் ஏப்ரல் 17, 2017 @Santa Maria
அடக்கம் ஏப்ரல் 19, 2017 @Livermore - Five Pillars Farm
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

Wednesday, April 19, 2017

உயிர்த்துளிகளை சேமிப்போம் / Shahjahan R

உயிர்த்துளிகளை சேமிப்போம்
(விரைவில் வாட்ஸ்அப்பில் / பேஸ்புக்கில் ஆயிரக் கணக்கில் பகிரப்பட இருக்கிற பதிவு!) :)
பூமியில் உள்ள மொத்த நீரில் 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர் - Freshwater. அந்த 2.6%டிலும் ஏறக்குறைய முக்கால்வாசி போலார் பகுதியில் இருக்கும் பனிமலைகள். அது எல்லாம் போக, ஆறுகளில் குளம் குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும்? இதைத்தான் நாம விவசாயம், தொழிற்சாலை, குடிநீர், கட்டுமானம் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். படத்தைப் பாருங்கள். பெரிய துளிதான் 2.6% நன்னீர். சிறிய புள்ளிதான் நமக்குப் புழங்குவதற்குக் கிடைக்கும் நீர்.
ஒவ்வொரு துளியின் முக்கியத்துவத்தை அறிய மேற்கண்ட விவரம் போதும், இது வெறும் நீர் அல்ல, உயிர்த்துளி. சிக்கனத்துக்கான குறிப்புகள் எல்லாமே எல்லாருக்கும் தெரிந்திருக்காது. அவரவர் தம்மால் முடிந்த அளவில் சிக்கனத்தைப் பின்பற்றினால், நாம் சேமிக்கும் நீர் வேறு ஒருவருக்கு உதவியாக இருக்கும். அதற்காக சில குறிப்புகளை தொகுத்து கீழே தருகிறேன். (நல்லதொரு பிளம்பரைப் தேடிப் பிடித்து தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள்.)

சாதக மனோபக்குவம் ....!

வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும் விளைவுகள் இரண்டு வகையாக இருக்கும்.
ஓன்று வெற்றி.
மற்றொன்று தோல்வி.
தோல்வியில் படிப்பினை கிடைக்கிறது அது வெற்றியை நோக்கி முன்னேற வழி காட்டுகிறது.
வெற்றியில் தொடர்து முன்னேற உத்வேகம் கிடைக்கிறது.
போட்டியே வாழ்க்கைமுறை என்பதே பாலர்பள்ளியில் இருந்து
பாடையில் போகும்வரை எடுத்து கையாளும்படியாகவே சமூக கட்டமைப்புகள் பன்னாட்டு சந்தை கொள்ளையர்களால் புகுத்தப்பட்டு சாதாரண மக்களின் மூளை சலவையால் சுத்தமானதாக காட்டப்பட்டு கவரப்பட்டுவிட்டது. இதனால் ஆக்கத்தைவிட அழிவே அதிகமாக இருக்கும். என்றாலும் அதை அறிந்தவர்கள், நான் உட்பட, யாராலும் அதிலிருந்து தம்மை பிரித்துக்கொள்ள முடியாதபடி மாயவலை பின்னப்பட்டுவிட்டது.

Thursday, April 13, 2017

அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்

அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்
மேலும் மேலும்
இத்தனைச் சோதனைகளா

என்றால்
ஏதோ மிக நல்லதொன்று
உங்கள் வாழ்வில்
வெகு விரைவில் மலரப் போகிறது

Tuesday, April 11, 2017

விவசாயிகள் போராட்டம் குறித்து இன்பாக்சில் கேள்வி மேல் கேள்விகள்.

Shahjahan R
போனீர்களா... பார்த்தீர்களா... தடியடியாமே... எப்போது முடிவு வரும்... என்னதான் நடக்கும்... வெற்றி கிடைக்குமா... அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே....
சுமார் ஒரு மாத காலமாக தலைநகரில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரத்துக்காகப் போராடுகிறார்கள், ஆடிகார் அய்யாக்கண்ணு என்று ஒரேயடியாக ஒதுக்குவது எவ்வளவு தவறோ, அதே அளவுக்குத் தவறு - கோரிக்கைகள் அனைத்தும் சரியானவை என்பதும்.
கோரிக்கைகள் குறித்து எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, நதிநீர் இணைப்பு.
இருக்கட்டும். இப்போது அது விஷயமில்லை.

Thursday, April 6, 2017

அந்த இளைஞரை எண்ணி நான் வியக்காமல் இருக்க முடியுமா?

நேற்று முன்தினம் திருவாரூரில் தொடங்கிய பயணம் நேற்றிரவு மும்பையில் முடிந்தது. திருவாரூரில் தொடங்கி மும்பை வரை இரண்டு மொபைல்களிலும் மாற்றி மாற்றி தமிழிலும் இந்தியிலுமாகப் பேசிக் கொண்டிருந்தார் மார்வாடி இளைஞர்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சைத் தொடங்கினேன். ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், சேலைகள் மற்றும் துணி வணிகம் செய்கிறாராம்.
திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகை பகுதிகளுக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சப்ளை செய்கிறாராம். எவ்வகையான பொருள்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன எனப் பார்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தப் பகுதிகளுக்கு வந்து செல்வாராம்.

Wednesday, April 5, 2017

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!

படம் source
பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார்! அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!

சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் அக்ரம், நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்டார். இவரது அப்பா அப்துல் ஹமீத் பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து, இந்தச் சிறுவனும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட அப்பா, அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம்.

ஒரு கட்டத்தில் கற்கும் திறனும் தட்டச்சுத் திறனும் அசாத்தியமான வேகத்துக்குச் சென்றன. அறிவாற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட்டபோது, `அக்ரம் இயல்பான குழந்தை இல்லை’ என்பதை பெற்றோர் புரிந்துகொண்டனர். அறிவையும் நினைவாற்றலையும் வளர்க்க ஊக்கப்படுத்தினர்.
மேலும் படிக்க கீழ் உள்ளதை சொடுக்குங்கள்
400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!

LinkWithin

Related Posts with Thumbnails