Tuesday, August 20, 2019

What is wrong with Islam today? | Head to Head

Al Jazeera English | Live

Kelvigal Aayiram: இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடும் போது கவனிக்க ...

கதையல்ல வரலாறு : இந்தியாவை ஆண்ட தமிழர்களின் கதை

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவின் அம்சங்கள் என்ன? | Motor Vehic...

உஷார்!!! இனி 25,000 ரூபாய் அபராதம்... புதிய மோட்டார் வாகன சட்டம் |Motor...

வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி


Abu Haashima Videos-part 1 - samaiyal


Monday, August 19, 2019

அந்த நாள்...! ஆனந்த திருநாள்!!

Dr.Vavar F Habibullah
காதல் - திருமணம்
இது பற்றி ஒரு முறை
கேள்வி கேட்ட போது
கிரேக்க தத்துவ மேதை
சாக்ரடீஸ் சொன்னான்...

வாழ்வில்...
மனிதன், தான்
விரும்பியது கிடைக்காத
போதும் மனம் வருந்துகிறான்!
விரும்பாதது கிடைக்கும்
போதும் மனம் வருந்துகிறான்!!
விரும்பியதே கிடைத்த
போதும் மனம் வருந்துகிறான்!!!

கிடைத்ததை முழு மனதுடன்
விரும்புவதே வாழ்வில்
மகிழ்ச்சி தர உதவும்
மாமருந்தாகும்.

சாலை சுமை தாங்கி... போல்
வாழ்வில் இந்நாள் வரை எனை
தாங்கி பிடித்த எங்கள் வீட்டு
இல்லத்தரசிக்கு நன்றி...நன்றி!
ஆம்...ஆயிரம் நன்றிகள் உரித்து!!

Saturday, August 17, 2019

சீதாராம் VS ஜெய் ஸ்ரீராம் - கன்னையாகுமார்

அதிக விஷயம்... விஷம்.


சிந்திக்க!

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர்படுத்தேன்.

குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..

படுக்கவிடாமல் படுத்தாறங்களே.

காலையில் நடக்க சொன்னார்கள் நடந்தேன் நேராக நடக்க கூடாது எட்டு போட்டு தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

வெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களும் ....

Abdul Gafoor

வெளிநாட்டு சம்பாத்தியங்களும்
சமுதாய முன்னேற்றங்களும் ....

மூன்றாம் பாகம் 
எழுபதுகள் எண்பதுகளில்
நிகழ்ந்தேறிய நீங்கா நினைவுகள் ....

முந்தைய பதிவுகளின் சுருக்கம் ....

நமது சமுதாயங்களின் மூதாதையர்கள் நாற்பது ஐம்பது அறுபதுகளில் பர்மா ரங்கூன் மலேஷியா சிங்கப்பூர் புருணே போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கப்பலில் பயணித்து தங்கள் குடும்பங்களுக்காக வருமானம் ஈட்டிய கடுமையான உழைப்புக்கு பின்னர் அடுத்த தலைமுறையினர் அரேபிய தேசங்களுக்கு பணிகள் தேடி ஏஜெண்டுகள் வாயிலாக பம்பாய் நகருக்கு ரயிலில் பயணிக்கிறார்கள் ....

Saturday, August 10, 2019

ஒரு தந்தையின் வாழ்த்து. by. Haja

புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்


வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன் --புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக். ...
தல்பியா
வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை

Assalamu Alaikkum and Eid Mubarak.
புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்!!!

ஹஜ் ஒரு பார்வை

ஆக்கம் Dr.Vavar F Habibullah
ஹஜ் கடமை என்றாலும் அது
தரும் அநுபவம் அளப்பறியது.
அநுபவித்தால் மட்டுமே
அறியப்படும் ரகசியம் இது.

பெற்ற மகனை, தந்தை
அறுத்து பலியிடத் துணியும்
தியாகப் பலி,இறை
கட்டளையால் மிருகப்
பலியான அதிசயம்!
பாலை வனத்தில்
குழந்தை இஸ்மாயில்
காலடியில் உருவான
வற்றாத ஜம்ஜம் நீரூற்று!
அழும் குழந்தையின் தாகம்
நீங்க அன்னை ஹாஜரா நடந்த
சபா மர்வா மலைப்பாதை...!
வலம் வரும் கஃபா ஆலயம்
அதை கட்ட வானில் இருந்து
இறங்கிய அஸ்வத் விண்கல்
என்ற விஞ்ஞானம் சொல்லும்
மெஞ்ஞானக் கல்...!!

தமிழர் மரபணுவை செதுக்கியவர்கள்.

மரங்களைப் பாடுவேன்........ வாரும் வள்ளுவரே,

வாரும் வள்ளுவரே,
மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
வணக்கம், அவ்வையே!
நீட்டோலை வாசியான் யார் என்றீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அத்தனை இழிவா?
பக்கத்தில் யாரது பாரதிதானே?
பாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்க‌ள் என்றீர்!
மரங்கள் என்றாள் அவ்வளவு கேவலமா?
மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சர்யகுறி!

Thursday, August 8, 2019

கவிஞர் மு. மேத்தா பெயரில் மு.மேத்தா அறக்கட்டளை சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் தொடங்கப்படுகின்றது.

செப்டம்பர் 5 அன்று, கவிஞர் மு. மேத்தா பெயரில்
மு.மேத்தா அறக்கட்டளை சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் தொடங்கப்படுகின்றது.
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ரூபாய் 5 லட்சம் நிதி அளித்து உள்ளது.
அனைத்து கல்லூரி இளங்கலை முதுகலை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கவிதை-கட்டுரை-சிறுகதை என சுழற்சி முறையில் போட்டி நடத்தி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசும், நூலும் வெளியிடப்படும். அத்தோடு புதுக்கல்லூரி தமிழ்த்துறை மு.மேத்தா விருதும் அளித்து கவுரவப்படுத்தும்.

Musthafa Mohamed M A

Tuesday, August 6, 2019

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen ஒருவர்! "
சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம் அதன் தொடர்ச்சி அவரது முகநூல் பதிவுகள்

Monday, August 5, 2019

அல்லாஹ்வின் #அருட்கொடை

சுப்ஹு சிந்தனை 06/08/19 #தலைப்பு_அல்லாஹ்வின் #அருட்கொடை நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் முஹம்மது இஸ்மாயில் பாகவி

காஷ்மீரின் கதை

Friday, August 2, 2019

வெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களும் ....


ஆக்கம் :Abdul Gafoorமனசில் படருகிற
சரித்திர நிகழ்வுகளை
தொகுத்து தொடருகிற
இரண்டாம் பதிவு ....

இடக்கை வலக்கை மாற்றி உலக்கை கொண்டு உரல்களில் இடித்த அரிசி மற்றும் கோதம்பு போன்ற மாவுகள் கலந்து உருவாகிய உணவு பதார்த்தங்களை பெரும்பாலோரின் நாவுகள் மென்று சுவைத்திடாத எழுபதுகளும் எண்பதுகளும் நினைவெனும் யதார்த்தங்களை நமது உள்ளங்களுக்கு விருந்தாய் பரிமாறுகிறது ....

உலைகளில் இட்டு வடித்திட ரேஷன் அரிசியும் சின்ன கும்பாக்களில் ஊற்றி குடித்திட பழங்கஞ்சியும் வயிற்று பசியாற்ற அவித்த மரச்சீனி கிழங்குகளும் குடும்பமெனும் நீரோட்டங்களில் சங்கமமாகி நீக்கமற அங்கம் வகித்தது ....

Wednesday, July 31, 2019

நார்வே Norway

நார்வே Norway
ஐரோப்பாவில் உள்ள நாடு
நார்வே பூமியின் மிக அழகான நாடுகளில் ஒன்றாகும். இது ஃப்ஜோர்ட்ஸ், மலைகள் மற்றும் நள்ளிரவு சூரியன் போன்ற இயற்கை ஈர்ப்புகளுக்கு பிரபலமானது, ஆனால் இது ஒரு துடிப்பான கலாச்சார வாழ்க்கைக்கு நன்கு அறியப்பட்டதாகும். நார்வே நகரங்கள் காஸ்மோபாலிட்டன் மற்றும் அதிர்ச்சியூட்டும் ஸ்காண்டிநேவிய கட்டிடக்கலை நிறைந்தவை.
ஆங்கிலம் நார்வேயில் பரவலாகப் பேசப்படுகிறது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நார்வேஜியரும் சரளமாக பேச முடியும் (அல்லது குறைந்தபட்சம் புரிந்து கொள்ளலாம், ஆங்கிலம். சுற்றுலா தகவல் பொதுவாக பல மொழிகளில் அச்சிடப்படுகிறது. ... பல நார்வேஜியர்களும் இரண்டாவது வெளிநாட்டு மொழியைப் பேசுகிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள், பெரும்பாலும் ஜெர்மன், பிரஞ்சு அல்லது ஸ்பானிஷ்.

What Does the World Eat for Breakfast?

குடல் புண் | சாப்பிட்டவுடன் டாய்லெட் போற ஆளா நீங்க? | Irritable bowel syndrome remedy (IBS)

குடல் புண் | சாப்பிட்டவுடன் டாய்லெட் போற ஆளா நீங்க? | Irritable bowel syndrome remedy (IBS)
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி : Dr.Subramanian | Sirkali TV


Tuesday, July 30, 2019

S1:E482 - Welcome to America!

கனடா புகாரி CANADA BUHARI / வாழ்த்துப் பாடல் இசையுடன்

ஜோதி புகாரி/ பாடல் இசையுடன்

ஜோதி புகாரி
வாழ்க வாழ்க நலமே
- தேரிழந்தூர் தாஜுத்தீன்
முகம்மது அலி ஜின்னா 

காசு பணஞ் சேத்துவரக் கடல் கடந்த மச்சானே / ஆடியோ இசையுடன்

வேணுமுங்க ஒங்கதொணை

கிராமத்தின் நதிக் கரைகளில் ஓடிவிளையாடிய கோடி வர்ண வானவில் அவள். ஏழ்மையின் தாழ்வாரங்களில் பிறந்தாலும், ஒரு மச்ச அழுக்கும் தொற்றிப் பிறக்காத பேரழகுப் பெட்டகம்.
அவளின் ஓடிய கால்களை நிறுத்தி ஆடிய கரங்களைப் பற்றி இழுத்துவந்து மணமேடையில் ஒரு குங்குமப் பொட்டாய்க் குந்த வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள்.

முப்பதே நாட்கள், முத்தமும் மூச்சுக்காற்றுமாய் இருந்துவிட்டு காசுதேடி கண்ணீரோடு கடல் கடந்தான் அவன். மாதம் ஒன்றுதான் ஆனது என்றாலும், அந்தக் கற்பூரக் காதலுறவு அவளுக்குள் ஒரு புத்துயிருக்கு முன்னுரை எழுதி விட்டது.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற அறிவுரைக்குப் பின் எத்தனையெத்தனை சோகங்கள் கிடக்கின்றன என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். அதில் ஒரு சிறு பகுதிதான் இந்தக் கவிதை, அந்தச் சூல்முகில் எழுதும் மடலாக கிராமத்து மொழியிலேயேமலர்கிறது.
அன்புடன் புகாரி

காசு பணஞ் சேத்துவரக்
கடல் கடந்த மச்சானே
ஊசி மொனை மேல நின்னு
ஒங்க வுசுருத் துடிக்குதுங்க

கொடிமுல்லை / இசையுடன்
அன்புடன் புகாரி

மணமகன், என் மகன் சுகைல் 15 வயதானபோது எழுதியது

கொடைமிளகாய்க் கண்ணழகா 
கொத்தவரும் மூக்கழகா
விடைசொல்லாச் சிரிப்பழகா
ஊசிவெடிப் பேச்சழகா


தொடைமீறும் நடையழகா
தொட்டழியா ஆணழகா
எடையில்லா இடுப்பழகா
எஃகிரும்புத் தோளழகா

நேத்துவர எம்மனச நெலப்படுத்தி நானிருந்தேன் / இசையுடன்

அன்புடன் புகாரி நேத்துவர எம்மனச
நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
பருசமுன்னு சொன்னாங்க

வேத்துவழி தெரியாம
விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
ஒன்னெனப்பா பொங்குதிப்போ

*கல்யாணமாம் கல்யாணம்* ஊரலசி உறவலசி / ஆடியோ வீடியோவுடன்


ஒருவழியாகத் திருமணமும் முடிந்து ஓரிரு வருடங்கள் கழித்து நான் என் திருமணத்தை நினைத்து அதன் கதையை இப்படி ஒரு கவிதையாய் எழுதினேன். அந்தக் கவிதைதான் இது:
அன்புடன் புகாரி

*கல்யாணமாம் கல்யாணம்*
ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

பனிமலரே / பாடல் இசையுடன்

பிரிகின்றேன் கண்மணி
எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில் அதுவும் ஒன்றாகிவிடுகிறது. இக்கவிதை அம்மாதிரி ஒரு பிரிவின் துயரை இங்கே விவரிக்கிறது.

பனிமலரே புது நிலவே
பருவமழைத் தேன் துளியே
தனிமரமாய் நீ நின்று
தவிப்புடனே எனை நோக்க

கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்


இனியென்ன ஆறுதலோ
என்னிடமோ வார்த்தையில்லை
அணிச்சப்பூ நீயல்ல
அதைவிடவும் ஓர்படிமேல்

இனிக்கவென்றே வாழ்க்கையென
எனைத்தேடி வந்தவளே
திணித்தேனே உன்நெஞ்சில்
திரள்திரளாய் துயரத்தை


மணிக்கணக்காய் உரையாடி
மடிமீது துயில்கொண்டு
இனிப்பாகத் துடுப்பசைத்து
இதயத்தில் படகுவிட்டோம்

தனிப்பறவைச் சிறகசைத்தால்
தங்கவெளி தான்வருமோ
கனியமுதே உன்னோடு
கண்டேனே சொர்க்கவெளி


துணையல்ல நீயெனக்குத்
துயிலவைக்கும் தாய்மடிதான்
மனைவியென நீ வந்த
மறுகணமே நான் பிறந்தேன்

அணைத்து மெல்லத் தலைகோதி
ஆறுதலாய்ப் பார்ப்பாயே
உனைப்பிரிந்த நொடியேயென்
உயிரெந்தன் வசத்திலில்லை


மனைவியுனைப் பிரிந்துவந்த
மனமெந்தன் மனமில்லை
நினைவெங்கும் நீயிருக்க
நினைப்பேனோ உனைப்பிரிய

எனைவென்ற இல்லாமையை
இல்லாமல் ஒளித்துவிடத்
துணையுன்னைப் பிரிவதற்குத்
தூண்டியது நீயுந்தானே


இணைந்துவிட்ட உயிர்கள்நாம்
இதுநமக்கு உடற்பிரிவே
உனைச்சேர சிறகசைத்து
ஓராண்டு முடிவினிலே

எனைவெல்லும் எல்லாமும்
என்முன்னே மண்டியிட
அணையுடைக்கும் வெள்ளமென
அன்பேயுன் மடிவீழ்வேன்
பிரிகின்றேன் கண்மணி

The United States of America - summary of the country's history

Romania

10 Best Places to Visit in Portugal - Travel Video

Top 10 Things to Do in Ecuador (Ecuador Travel Guide)

நீதான் நீதான் நீயேதான் என் பச்சை மிளகாய் இளவரசி / பாடல் இசையுடன்

பச்சை மிளகாய் இளவரசி

நீதான் நீதான் நீயேதான்
என் பச்சை மிளகாய்
இளவரசி

யாரும் உன்போல் இருப்பாரோ
மிகச் சின்னஞ் சிறிய
கன்னித்தாய்

தன்னை மகளாய் ஈன்றவனை
மன வயிற்றில் சுமந்து
பெற்றவளாய்

காலை எழுந்தால் உன்முகத்தை
என் கண்ணின் மணியே
தேடுகிறேன்

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி


இன்று (ஜூலை 30-ந் தேதி) இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.

வானூறி மழைபொழியும் / தஞ்சாவூர்

தஞ்சாவூர்என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கி விடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டி வைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?
வானூறி மழைபொழியும்
        வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
        தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
        கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
        பசியாறும் தஞ்சாவூர்

Monday, July 29, 2019

சிந்தனையாட்டம் ....

Abdul Gafoor


நேர்மையாடுகிற உள்ளத்தின்
செயல்களில் உண்மையாடும்
அலையாடுகிற கடலின்
நுரைகளில் வெண்மையாடும்
கலையாடுகிற சிற்பத்தில்
சிற்பியின் திறமையாடும் ....

நான் கவிஞனுமில்லை!

ஆக்கம் :.Vavar F Habibullahசில வேளைகளில்,எதிர்பாராத
நேரங்களில்,சில சூழல்களில்
சில கவிதைகள் எனக்குள்
தோன்றி மறைந்ததுண்டு.

இஸ்லாமிக் ரெஸ்டாரன்ட்

இஸ்லாமிக் ரெஸ்டாரன்ட்
ஏனங்குடி அப்துர் ரஹ்மான் அவர்கள் ஆரம்பித்து அவர்கள் பேரன் கலீல் நடத்தி வருகின்றார்

Sunday, July 28, 2019

Mont Saint Michel

Paris in Snow White Effect

டங்கிர்க் (Dunkirk)

பிரான்ஸின் வடக்கே வட கடலை ஒட்டியுள்ள ஒரு கடற்கரை நகரம்.

இரண்டு உலகப்போரின் நிகழ்வுகளை தன்னுள் வரலாறுகளாக பதிந்து வைத்திருக்கும் நகரம்.

ஐரோப்பாவின் பெரும் பகுதியை கைப்பற்றியதுடன் பிரான்ஸையும் கைப்பற்றிய ஹிட்லரின் நாஜிப்படைகளை, பிரிட்டிஷ் படைகள் எதிர்க்கொண்ட கடற்கரை பகுதி இது.

இந்த நகரத்தை ஒட்டியுள்ள அழகிய கடற்கரை பகுதி Malo les bains என்று பெயர் .

பரந்து விரிந்த மணற்பரப்பை கொண்டுள்ள இந்த கடற்கரையின் மணல் தூசு போல மிக மிருதுவானதாக இருப்பது இதன் சிறப்பு.

 இங்கிருந்து ஆங்கில கால்வாயை கடந்தால், இங்கிலாந்தை அடைந்து விடலாம் பெல்ஜியம் நாட்டின் எல்லை இங்கிருந்து மிக அருகாமையில்  இருக்கிறது.
ஃபிரோஸ் கான்
https://vawai.blogspot.com

கல்வி பற்றி Gobinath பேச்சு!

தொழும்போது_நம்கவனம்_எங்கிருக்க_வேண்டும்

சுப்ஹுசிந்தனை 29/07/19 நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் முஹம்மது இஸ்மாயில் பாகவி
Nidur AbuAyman

துரைமுருகனின் கதை | Durai Murugan Story | DMK |

பல ரசிகர்களை வியக்க வைத்தவர் கவிக்கோ.

Vavar F Habibullah
கவிக்கோ

சென்னையில்
எனது வீட்டு லைப்ரரியில்
சில புத்தகங்களை தேடிய போது
தம்பி அபுஹாசிமாவின் பழைய
முற்றம் இதழ் கண்ணில் பட்டது.
கவிஞர் கவிக்கோவின் படமும்
கவிஞர்கள் பற்றி அவர் எழுதிய
கட்டுரையும் அதில் இடம் பெற்று
இருந்தது.

கவிக்கோவின் ரசிகன் நான்.
ஜாதி மதம் கடந்த மத
நல்லிணக்க கவிஞர்
அவர் என்பதாலேயே என்
போன்றோருக்கு அவரை
மிகவும் பிடிக்கும்.

திக்ரின் சிறப்பு

நீடுர்-நெய்வாசல்  ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர் 
மௌலானா மௌலவி  அல்ஹாபிழ்  ஷுஐபு  மிஸ்பாஹி  ஹஜ்ரத் அவரகள் ஆற்றிய உரை .

Saturday, July 27, 2019

அல்லாஹ்வின் வேதம்

This is Germany


வெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களும் ....

ஆக்கம் : அப்துல் கபூர்பேரிறைவன் ஊட்டிய பேரருளில் நனைகிற இன்றைய நமது சமுதாயத்தின் அன்றைய பெரும்பாலான குடும்பங்களில் வறுமை பாய் விரித்து அமர்ந்திருக்க வாய் சுவைத்து வயிறு நிறைய அருந்தும் உணவுகளுக்காக தாய் தந்தையர் கஷ்டப்பட்ட பழங்காலங்கள் நமது மனசில் அசைந்து செல்லுகையில் அந்த நினைவுகள் நம்மை பிசைந்து கொண்டே இருக்கும் ....

கடந்து போன நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் நம்முடைய பாட்டன்களும் பூட்டன்களும் பணம் நாடி பிழைப்பு தேடி நெஞ்சினில் தைரியம் சூடி தீர்க்கமாகவும் கடல்வழி மார்க்கமாகவும் பர்மாவிலும் ரங்கூனிலும் கால்கள் பதித்து பணியாற்றி உழைப்புதனை அர்ப்பணித்து வாழ்ந்தனர் ....

குறையொன்றுமில்லை


( மண்ணில் மலர்ந்த மகத்தான சிறாப்புக் குழ்ந்தைகளுக்கு சமர்ப்பணம் ........)


------ ஆக்கம் : கவிஞர் காயல் முஸ்தாக் அஹமது   ---ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும்
வானுக்கு பாரமில்லை
மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும்
மண்ணுக்குப் பாரமில்லை ..

பிறப்போடு குறைகள், வளர்ப்பதோடு கண்டு
மருத்துவம் அளித்திருந்தால் - நாங்கள்
சிறப்பான குழந்தைகளே - துயரம்
எங்களின் தூரங்களே..

Sunday, July 21, 2019

Irfan's view

ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு.....”


Hussain Ammaயோசிச்சுப் பாத்தா, சின்ன வயசிலல்லாம் நமக்கு தோட்டம் போடணும், செடி வளர்க்கணும்னு பெரிசா ஆசைலாம் இருந்ததில்லை. ஏன்னா, நம்மைச் சுற்றியும், வீடுகளிலும் முற்றத்துப் பகுதியில் நிறைய மரம்,செடி,கொடிகள் தாராளமாக இருந்தன. முக்கியமா, வயல்கள்!! நிறைய வீட்டில் விவசாயம் செய்து வந்தாங்க. அதனால், வயக்காடு, களத்து மேடு இதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதியாவே இருந்துச்சு.

பின்னர் கால ஓட்டத்தில், இவை குறைந்த போதுதான், தொட்டிகளில் செடி வளர்த்து வீட்டுத் தோட்டம் போடணும் அப்படிங்கிற கான்ஸெப்டே வந்துது போல. எனக்கும் நினைவு தெரிந்து, நான் வேலைக்குப் போகும்போதுதான், மாடியில் தொட்டிகளில் செடி வைத்து வளர்த்தேன். (அவையெல்லாம் நான் கல்யாணமாகிப் போனது யாரும் கண்டுக்கலை என்பதால் வாடி விட்டன... கேட்டால், ”இருக்க வேலையில மாடிக்குப் போயெல்லாம் தண்ணி ஊத்த நேரம் இல்லை” என்று பதில் வந்தது!!)

What I did in America "நான் அமெரிக்காவில் என்ன செய்தேன்" -Irfan's view


Friday, July 19, 2019

நூலகங்களின் பட்டியல்

WRITTEN BY நூருத்தீன்.

தமிழகத்தில் தனியார், சமூக அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களின் பட்டியல் இது. ஊர்வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு தகவல்கள் வரும்பொழுதெல்லாம் இந்தப் பட்டியல் புதுப்பிக்கப்படும்.

தாங்கள் அறிந்த நூலகத்தின் பெயர் இதில் இல்லாதிருப்பின், அதன் பெயர், முழு விலாசம், தொலைபேசி எண் ஆகியனவற்றை admin@darulislamfamily.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-நூருத்தீன்

Photo by: David Clarke on UnsplashLast updated: July 17, 2019

No. Name Address City
1 Islamic Information Centre
(இஸ்லாமிய தகவல் மையம்) Kottai Bangalow
Umar Road
Ambur - 635 802
Vellore District.

Contact: 9894176776 Ambur
2 Anjuman Arivagam and Islamic Centre Station Road
Ayyampettai - 614201
Thanjavur Dist.

Contact: 9514153790, 9840277450 Ayyampettai
3 Human Guidance and Welfare Centre (HGWC) 28/21, Abdhullah Street,
First Floor, Above Hazara Store,
Choolaimedu,
Chennai - 600094.

காற்று ....


பகலோடு 
உறவாடுவதால் 
கோடைக் காற்று ....

இரவோடு 
உறவாடுவதால் 
வாடைக் காற்று ....

மழையோடு 
உறவாடுவதால் 
குளிர்க் காற்று ....

சுகமாக 
உறவாடுவதால் 
தென்றல் காற்று ....

மணப்பந்தல்

 

Thursday, July 18, 2019

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....

ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே....

ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...

அண்ணல் நபியை தந்தோனே..

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே... 

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...

மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா....

மாண்பு மிகுந்தவன் நீயே....

நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal

Monday, July 15, 2019

வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றேன்

வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றேன்
மணாளன்: சுகைல் புகாரி (அன்புடன் புகாரி &யாஸ்மின் புகாரி அவர்களது புதல்வன்  )
மணாளி: சியாசனா இக்பால்  (இக்பால் &சம்சியா இக்பால் தம்பதியரின்  புதல்வி )
“பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”
(அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக, நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக)
ஆமீன்
முகம்மது அலி

விவசாயிக்கு பொண்ணு கொடுக்க தயாரா? பட்டி மன்றம் - Patti Mandram

Friday, July 12, 2019

வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்

வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்

வஹிதா ரஹ்மானுக்கும் நாகூருக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. இதனைப் படிப்பவர்கள் நான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடு’வதாக நினைக்கத் தோன்றும்.

அகில இந்திய அளவில் கனவுத் தாரகையாக, இந்தி திரைப்பட உலகில் கொடிகட்ட பறந்த அந்த பிரபல பத்மஸ்ரீ பத்மபூஷண் நடிகைக்கும், தென்னிந்தியாவின் ஏதோ ஓரு மூலையில் இருக்கும் சிறிய ஊரான நாகூருக்கு அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும்?

இதற்கு ஒரு சின்ன ‘ப்ளாஷ்பேக்’ தேவைப்படுகிறது.

என் இளம்பிராயத்தில் நான் முதன் முதலாக பார்த்த இந்திப்படம் “பீஸ் சால் பாத்”. திருச்சிக்குச் சென்றிருந்தபோது மதுரை ரோட்டில் அமைந்திருந்த ராஜா திரையரங்கில் அப்படத்தை பார்த்த அனுபவம் என் மனதில் ஒரு ‘திகில்’ உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இரவில் உறங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று அந்த படத்தில் வெள்ளை உடை அணிந்து பாட்டு பாடித்திரியும் அந்த பெண் பேயின் நினைவு கனவில் வந்து என்னை பயமுறுத்தும். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தபடி அழுவேன்.

எனது பாட்டி அம்மாஜி திருமறை வசனங்கள் என் மீது ஓதி ஊதி பயம் தெளிய வைப்பார்கள். மறுநாள் “அந்த படம் யார் நடித்தது?” என்ற பேச்சு எழுந்தபோது நான் அவர்களிடம் ”வஹிதா ரஹ்மான்” என்று கூறினேன்,

Tuesday, July 9, 2019

உகாண்டாவில் நுழைந்திட பாதைகள் அமைத்த பெரியவர்

உகாண்டாவில் நுழைந்திட
பாதைகள் அமைத்த பெரியவர்
மர்ஹூம் தையுபு சாகிபு ....

அன்பிற்குரிய நட்புகளே சில நிமிடங்கள் என்னோடு அமருங்கள் ....

இறைவன் நல்கிய அருள்தனை சுமந்து குடும்ப கஷ்டங்களின் இருள்தனை போக்கிட நமது சமுதாயத்தின் முந்தைய இன்றைய தலைமுறைகள் பயணித்து வாழ்ந்த வாழுகிற 'பர்மா ரங்கூன் மலேஷியா சிங்கப்பூர் வளைகுடா உகாண்டா' போன்ற தேசங்கள் நம் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டை கைகள் கொடுத்து உயர்த்தியது என்பது காலத்தால் அழியாத வரலாறுகள் ....

Monday, July 8, 2019

��LIVE : Puthiya Thalaimurai Live |Tamil News Live | Budget 2019| ICC Wor...

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்...

Colachel Azheem


கேரள மாநிலம் ஹரிப்பாடு கடற்கரை நகரில் கணவர், ஐந்து பிள்ளைகளுடன் குதூகலமாக வாழ்ந்த வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழ்ந்த சோதனைகளையும், வேதனைகளையும் வைராக்கியத்துடன் எதிர்கொண்டு தனது ஐந்து பிள்ளைகளையும் சாதனையாளராக மாற்றியுள்ளார் ஜாஸ்மின்...

லியாக்கத் ஹரிப்பாடு மீனவர் கிராமத்தில் ஐஸ் கம்பெனி வைத்து தொழில் செய்து வந்தவர்.. ஓரளவு வருமானத்தில் ஐந்து பிள்ளைகளுடன் மனைவி ஜாஸ்மினுடன் நிறைவாக வாழ்ந்து வருகையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வேதனையில் மரணம் அடைந்து விடுகிறார்..

கணவரையிழந்து செய்வதறியாது ஐந்து பிள்ளைகளுடன் சிறிது காலம் உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்த ஜாஸ்மினுக்கு முதல் அதிர்ச்சி வங்கியிலிருந்து வந்தது...
கணவர் லியாக்கத் ஐஸ் கம்பெனி நடத்த வாங்கியிருந்த லோன் திரும்ப செலுத்தாததால் குடியிருந்த வீடு ஜப்திக்கு வந்தது...
அன்றிலிருந்து சோதனையும் ஆரம்பமானது..

EDUCATIONAL BACKWARDNESS IN CHILDREN

Vavar F Habibullah
EDUCATIONAL
BACKWARDNESS
IN CHILDREN

உங்களுக்கு தெரியுமா!
உங்கள் குழந்தை
18 மாதங்களில்
20 வார்த்தைகள்
பேச வேண்டும்.
2 வயதில்
50 வார்த்தைகள்
பேச வேண்டும்.
21/2 வயதில்
2 அல்லது 3 வார்த்தைகளை
சேர்த்து வாக்கியமாக்கி
பேசப் பழக வேண்டும்.
நிறங்களை வேறுபடுத்தி
பார்க்கும் திறன் பெற வேண்டும்.

SEASONS Family

Saturday, July 6, 2019

உங்களில் சிறந்தவர் யார்? சுப்ஹுசிந்தனை

06/07/19 நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் முஹம்மது இஸ்மாயில் பாகவி Nidur AbuAyman

Friday, July 5, 2019

THOUGHTS FEELINGS AND THE BRAIN

Vavar F Habibullah

உங்கள் குழந்தைகளின்
மூளை தான் அவர்களின்
எண்ணங்களை (thoughts)
உணர்வுகளை (feelings) மற்றும் செயல்பாடுகளை(actions)
கட்டுப்படுத்துகிறது.

ஒரு குழந்தை
இடது புற மூளையை
படிப்பதற்கும்,
வலது புற மூளையை
கற்பனை மற்றும்
கலைத்திறன் வளர்ச்சிக்கும்
பயன்படுத்துகிறது.

Friday, June 28, 2019

தூர்தர்ஷன் நிகழ்ச்சியின் Free Legal Aid - (27-06-2019)

எனது அண்ணன் மருமகன் ரசீது அவர்கள் பாண்டிச்சேரி பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியின் முழு தொகுப்பு. கேள்வி பதில்களுடன்...பார்க்க

Thursday, June 27, 2019

எதை நோக்கிய பயணம்

எதை நோக்கிய பயணம்

இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் தன் அதிகபட்ச சாதனையாக கருதுவது

 பண்டிகை காலங்கள், திருமண நிகழ்வுகள் அல்லது விருந்து நிகழ்ச்சிகள்,சுற்றுலா செல்லுதல் இது போன்றவைகளுக்கு ஒரே மாதிரியான ஆடையணிந்து புகைப்படமெடுத்து பகிர்வதும் பெரும்பாலும் சாப்பாடு நிகழ்வுகளுக்கே இரவென்றாலும் பகலென்றாலும் படையெடுத்துச் செல்வது மட்டும்தான் என்றவகையில் இருக்கும் அவர்களின் நகர்வு
மிகவும் வேதனைக்குறிய விசயமாக உள்ளது.

ஊரில் இருக்கும் இளைஞர்கள் தான் வெளி அனுபவம் என்னவென்று தெரியவில்லை
செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்

 வெளிநாடுகளில் வந்து கஷ்டபட்டு
 விடுமுறையில் போகின்றவர்களும் அவர்களோடு சேர்ந்து ஊக்குவிக்கும் விதமாக சுற்றுவது அதைவிட கொடுமை.

Tuesday, June 25, 2019

கேட்டாரே ஒரு கேள்வி!

by Vavar F Habibullah

ஊரறிந்த ஞானியும்
இறை அறிந்த மெஞ்ஞானியும்
நேருக்கு நேர் எதிர்பாராத
விதமாக வழியில் சந்தித்து
கொண்டனர்.

‘எங்கய்யா வேகமாக போகிறீர்!’
ஞானி சற்று இடக்காகவே தான்
கேள்வி கேட்டார்.
“காற்று, என்னை எந்த இடம்
வரை இழுத்து செல்லுமோ
அந்த இடம் வரை போவேன்”

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

with J.M.Salih, Mahadi.,Jamal Mohamed

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

with J.M.Salih, Mahadi.,Jamal Mohamed

Monday, June 24, 2019

எனக்குப்பிடித்த பாடல்கள் 5 / வே.நடனசபாபதி

எனக்குப்பிடித்த பாடல்கள் 5
உருவத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா?

உருவத்தில் சிறியதாய் இருப்பவர்கள் என்றால் நம்மில் பலருக்கு ஏளனம்தான். அவர்களைப்பற்றி நம்மிடையே தான் எத்தனைவழக்குச்சொற்கள்!

'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே'
குள்ளனைக்கொண்டு ஆழம் பார்.
போன்றவை பல உண்டு.

Friday, June 21, 2019

#வள்ளவிளை / Abu Haashima

குமரி மாவட்டத்தின் ஒரு அழகான கடலோர முஸ்லிம் கிராமம்
வள்ளவிளை.
பெயருக்கேற்றார்போல் கடற்கரையெங்கும் மாநாடு நடத்துவதுபோல் வள்ளங்களின் அணிவகுப்பு..
இங்கேயுள்ள பள்ளிவாசல் அழகாக இருக்கும்.
மிகப்பெரிய தென்னந்தோப்பின் நடுவே அமைந்துள்ளது பள்ளிவாசல்.
பள்ளிவாசல் பின்புறம் வாய்க்கால் ஓடிக் கொண்டிருக்கிறது.
சுற்றிலும் இயற்கையின் வனப்பு.
தண்ணீரின் செழிப்பு.
பள்ளித் தோட்டத்தில் வாழையும் இளநீரும் கைக்கெட்டும் உயரத்தில் காய்த்து தொங்குகின்றன.
நோன்பு கடைசி நாளில் நான் அங்கே போயிருந்தேன்.
ரமளானின் கடைசி நாள் கஞ்சியை
வெகு சிரத்தையாக வைத்துக் கொண்டிருந்தார் சமையல்காரர்.
இனி இந்த கஞ்சி காய்ச்சும் காட்சியைக் காண ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
நல்ல மனிதர்கள்.
அமைதியான ஊர்.
பள்ளி இமாம் கேரளத்துக்காரர்.
கண்ணியமான மனிதருக்கு பொருத்தமான கண்ணியமான தோற்றம்.
பள்ளியின் மிக பக்கத்தில் மீனவர்களின் கிராமம். பெரிய சர்ச்.
கடற்கரையில் மக்கள் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.
என்றென்றும் சாந்தி நிலவட்டும் என
வாழ்த்திவிட்டு வந்தேன்.

                                              Abu Haashima

குடிநீர் தட்டுப்பாடு... அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

விஜயகாந்த் சொத்துக்கள் ஏலத்துக்கு வந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

பயனுள்ள சமையல் குறிப்புகள்!

ஆக்கம்: சத்தியமார்க்கம்

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.
2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.SHAME! SHAME! SHAME!

Thursday, June 20, 2019

Aloor Sha Navas Vs Maalan

தமிழ்_வாழ்க Vs ஜெய் ஸ்ரீராம்
ஆளூர் ஷாநவாஸ் Vs மாலன்
News18 Tamil Nadu காரசார விவாதம்

Sunday, June 16, 2019

கல்வியின்_சிறப்பு

رَبِّ زِدْنِيْ عِلْمًا

ரப்பி ஜித்னி இல்மா

Rabbi zidni ilma

என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! அல்குர்ஆன் - 20 :114

My Lord! Increase me in knowledge - Al Quran 20 :114

சுப்ஹு சிந்தனை #கல்வியின்_சிறப்பு நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் முஹம்மது இஸ்மாயில் பாகவி அவர்கள்

Saturday, June 15, 2019

சிறந்த கவனம் / மேற்கோள்கள்“திசையின் பற்றாக்குறை, நேரமின்மை அல்ல, பிரச்சினை. நாம் அனைவருக்கும் இருபத்தி நான்கு மணி நேர நாட்கள் உள்ளன. "
ஜிக் ஷிக்லார்

“நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பும் போதெல்லாம், கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள், கவனம் செலுத்துங்கள், நீங்கள் விரும்புவதை சரியாக அறிவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாரும் தங்கள் கண்களை மூடிக்கொண்டு தங்கள் இலக்கை எட்டிவிட முடியாது. "
பாலோ கோயல்ஹோ

"இது எங்கள் இருண்ட தருணங்களில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்."
அரிஸ்டாட்டில் ஓனாஸிஸ்

“கையில் இருக்கும் வேலையில் உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் கவனம் செலுத்துங்கள். சூரியனின் கதிர்கள் கவனம் செலுத்தும் வரை எரியாது. "
அலெக்சாண்டர் கிரகாம் பெல்

சோகம் , பயம் , துக்கம். வலி. வேதனை சந்தோசமா அனுபவிங்கள் - Enjoy the Trouble

Youtube , பா ரஞ்சித் , ராஜா ராஜா சோழன் , சீமான் , மோடி

Friday, June 14, 2019

இது கதையல்ல... நிஜம்


3 மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராகிய
துப்புரவு பெண் தொழிலாளி

30 ஆண்டுகள் வெளிவராத ரகசியம் பிரிவு உபச்சாரத்தில் ஊருக்கு தெரிந்தது

ஜார்க்கண்ட், ராஜ்புரா நகராட்சியில்
பார்வையாளர்களை நெகிழ வைத்த சம்பவம்

ராஜ்புரா, ஜூன். 10–

இது கதையல்ல நிஜம்... என்று சொல்ல வைத்திருக்கும் ஒரு சம்பவம். இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் விடுவார்கள். இப்படியும் ஒரு தாயா என்று ஆச்சரியக் கேள்வி எழுப்பி விழி ஓரம் திரளும் ஆனந்தக் கண்ணீரை துடைத்து மானசீகமாக அந்த தாயை வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.

Wednesday, June 12, 2019

உள்ளத்தை தூய்மை படுத்துவோம்

#சுப்ஹுசிந்தனை
நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் முஹம்மது இஸ்மாயில் பாகவி

Tuesday, June 4, 2019

ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

எம் இனிய
ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!
                       *********************** *
இந்த உலகில் எல்லாருக்கும் அருள்பாலிப்பவனும்

 மறுமையில் தன்னை நம்பி, தனக்கு அடிபணிந்து நடந்த அடியார்களுக்கு மேலதிகமாக அன்பு செய்பவனும் ஆன

வல்ல அல்லாஹ்,

தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்,

 இதயத்தில் அன்பையும்,

ஆன்மாவில் மெய்நம்பிக்கையை(ஈமானை)யும்,

சிந்தனையில் ஞானத்தையும்,

செயல்களிலே நன்மைகளையும்

செல்வத்தில் தூயவற்றையும்

வெள்ளமென வெளிப்படுத்துவானாக …

ஆமீன் ….

வானவரை வாழ்த்த வந்த இறை நோன்பு

Saturday, June 1, 2019

#லைலத்துல்_கத்ர் ...#இறுதிப்_பாகம் #குகைக்குள்_இறங்கிய_குர்ஆன் அபு ஹாஷிமா


#இறைவனே_ஆசிரியன்

விந்தை புரிய வந்த
வித்தகனின் தூதரவர்
மென்னகைப் புரிந்தார்
வார்த்தையொன்றை உதிர்த்தார் !

" ஓதுவீராக "
வேதத்தின் முதல் வரியை
வேதம் கொடுத்த முதல்வனின்
ஒளித் தூதர் ஜிப்ரீல்
உலகத்தில்
முதன் முதலாக
அண்ணலுக்கு உபதேசித்தார் !

ஜிப்ரீலின்
அருள் வார்த்தை
ஒளியாக உருவெடுத்து
உத்தமரின் உள்ளத்தில்
ஊடுருவியது !

Bangkok Mosque Tamil Muslim Association in Thailand/ தகவல் தந்தவர் Kiyasudeen Sahabudeen

தகவல் தந்தவர் Kiyasudeen Sahabudeen

TAMIL CARTOON ON ISLAMIC TOPICS

iblis

iblis from mannu on Vimeo.

அருள்மிகு இரவு

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அருள் மிகு இரவு !

almighty-arrahim.blogspot.com
சபீர் அஹ்மது 
ஆற்றல் நிறை அல்லாஹ்
ஏற்றம் உடை யிரவில்
அருள் மறை அளித்தான்
இருள் அகல இகத்தில்


Friday, May 31, 2019

Islamic Cartoon வானம், பூமிக்கும் இடையே, அல்லாஹ்வின் நுட்பமான படைப்பாற்ற...

லைலதுல் கத்ர் இரவின் சிறப்பு - Lailathul Qadr ᴴᴰ | Moulavi Abdul Basith...

Islamic Cartoon | உலக முஸ்லீம்கள் நபி (ஸல் ) அவர்களை உயிரினும் மேலாக நே...

முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை வரலாறு

002 நபிகள் நாயகம் வரலாறு

mohammad life story in tamil

லைலதுல் கத்ர் இரவின் சிறப்பு - Lailathul Qadr ᴴᴰ | Moulavi Abdul Basith...

29ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி) 29.46-29.69

29ஸூரத்துல் அன்கபூத் 
(சிலந்திப் பூச்சி) 29.46-29.69

முயற்சியாக இஸ்லாமியக் குழந்தைகளுக்கு கார்ட்டூனில் இஸ்லாம் பற்றி

சகோதரர்களே ஒரு புதிய முயற்சியாக இஸ்லாமியக் குழந்தைகளுக்கு கார்ட்டூனில் இஸ்லாம் பற்றியும் முஹம்மது நபி அவர்களை பற்றியும் குர்ஆன் எனும் சேனல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் யூட்யூபில் குர்ஆன் சேனலை சப்ஸ்கிரைப் செய்து நம் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே இஸ்லாமிய அறிவை கார்ட்டூன் வழியாக தெரிந்துகொள்ள வைப்போம். வீணாக குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் கார்ட்டூன்களை புறக்கணிப்போம் இஸ்லாமிய சிந்தனையை குழந்தைகள் மனதில் விதைப்போம் அல்லாஹ் நமக்கு அருள் செய்வானாக

https://www.youtube.com/watch?v=d_RxpCa8bp8
https://twitter.com/qurantv114/status/923449734576013312


மேலே கொடுக்கப்பட்டுள்ள  லிங்கையும் நிச்சயம் பாருங்கள் எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு அனைவரும் துஆ செய்து மிக சிறந்த வெற்றியை தந்து அடுதடுத்த புதிய முயற்சிகளுக்கு உதவுங்கள்

மண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே

மண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே
மண்டியிட்டு வேண்டல் மறையை தந்த ஒருவனுக்கே

அறிதலில் எளிமை
புரிதலில் உயர்வு
புகழ் பாடுதலில் புண்ணியம்
புவியாளும் இறையோனுக்கே
புகழ் பாடுதலில் புண்ணியம் கிடைக்கும்
புவியாளும் இறையோனைப் புகழ்தளால்

ஆனந்தமாய் நிறைந்த மனம் அல்லாஹ்வை போற்றி நின்றது
அடுத்து நின்ற நபிமார்கள் வழிகாட்டல் சிறப்பானது
வகை வகையாய் வாழ்வின் சிறப்பு உயர்வானது
நிறை நிறையாய் நிறைவாக நித்தம் இறையோனை தொழுது நின்றேன்
ஆனந்தம் பேரானந்தமாய் பொங்கி நிறைவானது
அனைத்தும் புகழும் அல்லாஹ்வுக்கே (இறையோனுக்கே) சொந்தமானது

Noor Saadeh: An American Convert to Islam

நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வரும்

Ramadan in Korea VLOG | Visiting the Mosque

லைலதுல் கத்ர்/ தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் பாடியது

LinkWithin

Related Posts with Thumbnails