Saturday, July 30, 2011

முனைவர் அ . இரபியுதீன் எழுதிய "நினைத்தேன் எழுதுகிறேன்" என்ற நூலுக்கு நீடூர் சிந்தனைச் சித்தர் அ. மு. சயீது சீருரை.


 தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழகத்   தலைவர் சிந்தனைச் சித்தர் 
நீடூர் அ. மு. சயீது சீருரை.
                                           

                                                           
                                            வல்லான் முற்றும் உணர்ந்தான் தன்னை
                                            சொல்லால் மனத்தால் செயலால் தொழுவோம்.


எந்த சந்தர்பத்திலும், சோதனைகளிலும்,மகிழ்ச்சியிலும், தூய சிந்தனை இருந்தால் மனித வாழ்க்கை சிறப்புடன் அமையும் .
 உழைப்பும் , நேர்மையும் , பரந்த நோக்கமும் , விரிந்த சிந்தனையும் , நன்றி உணர்வும் , மனிதனை இறையருளால்   முன்னேற்றப் பாதையிலேயே  அழைத்துச்  செல்லும்.
    சமுதாய ஒளி விளக்காகத் திகழ்கிற சகோதரர் அல்ஹாஜ் முனைவர் 
அ . இரபியுதீன் நன்றியுணர்வை நன்கு பெற்றிருக்கிறார் என்பதை "நினைத்தேன் எழுதுகிறேன்" என்ற இந்த நூலில் ஆழமாகப் பதித்திருக்கிறார்.
  உச்சத்திற்கு தான் ஏறிய ஏணியை அவர் உதறிடவில்லை. பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் " ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்தல் அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், உதவியரைப் புகழ்ந்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒருவித நன்றிக் கடனாகும்" என்று குறிப்பிடுகிறார்கள். தம் வழிகாட்டிகளில் அதற்கு விளக்கம் தருகின்றார்.
 ஒரு காசை உருட்டிவிட்டால் அது சிறிது தூரம் ஓடிப்படுத்து விடும், அது போலத்தான் உலக வாழ்க்கை. சக்தி உள்ள வரை ஓடி வாழும், இந்த வாழ்க்கையில் தாய் மொழிக்காகவும், தமிழ் பண்பாட்டிற்காகவும் , தான் சார்ந்திருக்கிற சமுதாயத்திற்காகவும், தாய் நாட்டிற்காகவும் பொருளீட்டுவதற்காக வாழும்  நாடுகளுக்காகவும் தன்னால் இயன்ற தொண்டினை தொய்வில்லாமல் தம்பி     இரபியுதீன் ஆற்றி வருகிறார் என்பதை இந்த நூலில் ஒவ்வொரு வரியும் நமக்கு மெய்ப்பித்து காட்டுகிறது.
பண்டிதர் ஜவஹர்லால் நேரு வின் பொன்மொழி ஒன்று இந்த நூலை படித்த போது எனக்கு நினைவுக்கு வந்தது "என்னை பற்றி யாராவது நினைவு கூர்ந்து பார்க்க விரும்பினால், அவர்கள் பின் வருமாறு பேச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்". இந்த மனிதர் தமது மனம் , மொழி, மெய் இவற்றால் முற்றாக இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்தார் . அவர்களும் பதிலுக்கு அவரிடம் அளவுக்கு மீறி சகிப்புத்தன்மை காட்டி மித மிஞ்சிய அன்பை பெய்தனர் ."
வரலாற்று நாயகன் விரும்புவது போலவே "நினைதேன் எழுதுகிறேன் " என்ற நூலின் நாயகனும் நாற்று பற்று உடையவராக , மொழி பற்று உடையவராகத் தம்மை வளர்த்துக்  கொண்டிருப்பதை  வாசகர்கள் உணரலாம் . இரபியுதீன் அவர்களின் நினைவுகள் கற்பனை பெட்டிகளல்ல, பகுத்தறிவின் பொக்கிஷம்; மனசாட்சியின் பதிவிடம்; சிந்தனையின் ஆலோசனை அறை!
வாழ்க்கையில் விரக்தி கொள்ளாது , பிரச்சனைகளின் தாக்குதல்களில் மனநோயாளியாகாமல் , நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வத்தைப் பெற்று, ஆன்மீக அளவுகோலை அறிந்து , உழைப்பால் உயரலாம் என்று உற்சாகம் பெற்று , வாழ்கையின் வெற்றி கனியைத் தட்டிப்  பறிக்க , இன்றைய இளைஞர்கள்  இந்நூலைப்  படித்தேயாக வேண்டும் .
படிப்பவர்களை சிந்திக்க தூண்டுவதே இலக்கியத்தின் பொறுப்பாகும். சிந்திக்க வைப்பதோடு விட்டு விடாமல், மனிதகுல முன்னேற்றதிர்க்காகவும் , சமூகம் செழுமையுறுவதற்கும்     வழிகளை காண்பிக்க இலக்கியம் துணைபுரிய வேண்டும் . அந்த வகையில் இந்த நூல் இலக்கியத்தின் பட்டியலில் இடம் பிடிகிறது .


நபிதோழர் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள் : "நன்மைகள் செய்வதன் காரணமாக இதயத்தில் ஒளியும் , முகத்தில் அழகும் , உடல் உறுதியும் வாழ்வில் வளமும் , மக்களிடத்தில் அன்பும் ஏற்படுகின்றன "


ஆம் ! சகோதரர் இரபியுதீன் நல்லவைகளையே நினைத்து நற்தொண்டு ஆற்றுவதையே வாழ்வின் இலக்காக வைத்திருப்பதால் , அவர் முகத்தில்  அழகு தெரிகின்றது  .
என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்த அறிவும் , எப்படிச்  செய்ய வேண்டும் என்பதை அறிந்த ஆற்றலும் , அதை செயல்படுத்துகின்ற அறமும் பெற்றிருக்கிற நூலாசிரியர் , இது போன்ற நல்ல பல நூல்களை தமிழ் இலக்கியத்திற்குத் தந்து நீடித்து வாழ பிரார்திகின்றேன் . வாழ்த்துகின்றேன் .


S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan நன்றி
-----------------------------------------------------------------------------------------------------------

Friday, July 29, 2011

எல்லாம் இன்டர்நெட் மயம்! ("மாயம்")

 ஒரு தனிப்பட்ட இணையதளம் உருவாக்க  தற்போது எளிய வழியாக  உள்ளது. இதனால்  நீங்கள் முழுமையாக நவீன உலகில் உங்களை  பங்கேற்க வழி வகுக்கின்றது  மற்றும் நீங்கள் விரும்பினால் அதனை  ஆதாயத்திற்காகவும்   பயன்படுத்திக் கொள்ள  வாய்ப்பினை அளிக்கும்.  ஒரு தனிப்பட்ட இணையத்தளம் உங்களது சமூக கருத்துக்களை பரப்புவதற்காக சிறந்த வழியாகவும் அமையலாம்.. தனிநபர் தளங்கள் அமைதியான  மிகவும் பயனுள்ள கருவியாக இருக்க முடியும்.
ஒரு மகத்தான இந்த நம்பமுடியாத தொழில்நுட்பத்தின் மூலம், நாம் ஒருவரை ஒருவர் பற்றி அறிந்து கொள்ள வாய்புகள் அதிகம்.  நிச்சயமாக மின்வெளி மூலம் -  உலகம் முழுவதும் மக்களை சந்தித்து ,
இன்டர்நெட் தகவல் சாதனம், தகவல்  நவீன தகவல் சாதனங்களும் இன்டர்நெட் மூலம் நடைபெறும் ஒருவருக்கொருவர் புரிந்து, மற்றும் வெளிப்படையாக நேரடியாக மனித பொதுவான பந்தம் உருவாக்கிக் கொள்ள முடியும்.
தற்பொழுது அனைத்து மொழிகளிலும்  இன்டர்நெட் வழியே செய்திகளை பறிமாறிக் கொள்ளலாம்.  ஒரே இணைப்பு மூலம் இன்டர்நெட் , டெலிபோன், டி.வி. வசதி: பி.எஸ்.என்.எல். என வசதிகளை நாம் அடையலாம்.

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3


* அமீரகத்திலிருந்து எனது நண்பர்களில் சிலர் தாயகத்திற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் இலக்கிய நண்பர் ராஜகிரியைச் சேர்ந்த அண்ணன் அப்துல்கதீம் அவர்கள்.

அமீரகக் கவிஞர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவி தலைவரும் இல்மு அமைப்பின் தலைவருமாவார்கள்.

இவர் தற்போழுது தஞ்சையில் வசித்து வருகிறார்கள் நான் தாயகம் வந்ததும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.. அவசியம் தஞ்சைக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள்… திருச்சி செல்லும் வழியில் உங்களை சந்திக்கிறேன் என்றேன்… அவர்களும் ஆர்வத்துடன் இருக்க திருச்சி செல்ல நான் திட்டமிட்டிருந்த நேரம் மாறிப்போனதால் போகும் வழியில் கதீம் அண்ணனை சந்திக்க முடியவில்லை என்று அவர்களிடம் தொலைபேசியில் கூறிக் கொண்டேன்..

திருச்சியிலிருந்து திரும்ப வரும்போது அவசியம் வாருங்கள் என்றார் சரி என்று கூறினேன தவிர வரும்போதும் சந்திக்க முடியவில்லை… வாய்பிருந்தால் இன்னொருமுறை சந்திக்கலாம் என்றேன் அதற்கு அவகாசம் இல்லை அண்ணன் ஸ்டேட் புறப்பட்டு விட்டார்கள் எப்படியும் திரும்ப வரும்போது துபாயில சந்திக்கலாம்… ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதில் இந்தியாவைவிட துபாய் சிறந்தது எப்படியும் சந்தித்துவிடுலாம்…!

சந்திக்க முடியாமல் போனதிற்கு காரணம் கீழே படிக்கும்போது விளங்கிக் கொள்வீர்கள்…

* எனது துணைவியார் மற்றும் குழந்தைகள் துபாயிலிருந்து இரவு 11 மணிக்கு மிஹின்லங்கா விமானத்தில் புறப்படுவதற்கு துபாய் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அவர்களுடன் எனது துணைவியாரின் தோழி குடும்பமும் மற்றும் எனது மைத்துனரும் படைசூழ சென்றுள்ளார்கள்.

இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 5.00 மணிக்கு தான் புறப்படும் என்று கூற ஆர்வத்துடன் வந்த என் துணைவியார் டென்சன் ஆகிவிட்டார். இந்த மாதிரியான விமானத்தில் ஏன் டிக்கேட் போடுறீங்க என்று கோபப்பட்டுக் கொண்டார்.

Thursday, July 28, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/2011072818138/south-african-cricketer-parnell-accepts-islam-amla-link

பிரிவின் இடைவெளி


ஐயம்:  
பொருள் ஈட்டும் காரணத்தினாலோ மற்ற பிற காரணத்தினாலோ மனைவியினை விட்டு ஒரு சில காலங்கள் பிரிந்து வாழ்வதால் பல தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது?

- சகோதரர் முஹம்மது அலி ஜின்னா (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

'வாழ்வாதாரத் தேவைகளைப் பெறுவதற்காக பொருளீட்டும் காலத்தில் கணவனும் மனைவியும் பிரிந்திருக்கும் சந்தர்ப்பத்தில், தம்பதியரில் ஒருவரிடமோ அல்லது இருவரிலுமோ தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்பதை, "கற்பொழுக்கம் தவறி, சோரம் போய்விடுதல்" என்று வெளிப்படையாகவே எடுத்துக்கொள்வோம்! இவ்வாறு நிலைதடுமாறிவிடுவதையும் இஸ்லாம் விபச்சாரம் என்றே சொல்கிறது. விபச்சாரம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு:
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (17:32).
ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், "என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்" என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் அக-புற மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடைசெய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. எனவேதான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமில்லை. எனவேதான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: மூகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்கள்: புகாரி 7416, முஸ்லிம் 3001, அஹ்மத், தாரிமீ.

மணமுடித்திருந்தும் மனைவி கருத்தரிப்பதற்காக கணவனல்லாத மாற்றானுடன் உடலுறவு கொள்வதும், ஏக காலத்தில் ஒருத்திக்குப் பத்து கணவர்கள் என்றும் விபச்சாரம் என்பது திருமணம் என்ற பெயரிலேயே வெளிப்படையாக ஆங்கீகரிக்கப்பட்டிருந்த காலத்தில் (புகாரி 5127, அஹ்மத்) இஸ்லாத்தின் மீளெழுச்சி தொடங்கியது. ஏக காலத்தில் ஒருத்திக்கு ஒரு கணவன் என்கிற மஹர் கொடுத்து மணமுடிக்கும் திருமணத்தை ஆகுமாக்கி, மற்றவை வெளிப்படையான / மறைவான மானக் கேடாகும் என்று இஸ்லாம் தள்ளுபடி செய்துவிட்டது. பருவமடைந்த பின்னர் இஸ்லாத்தில் தம்னை இணைத்துக் கொள்வோர் விபச்சாரம் செய்வதில்லை என்கிற தார்மீக உறுதிமொழியையும் வழங்கிடவேண்டும்!

நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளைக் கொல்வதில்லை என்றும், கைகள்-கால்கள் (வைத்து) இடையில் அவர்கள் கற்பனை செய்கிற அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான(காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து (எனும் வாக்குறுதி) அளித்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன் (60:12).

ஒழுக்கம், பண்பாடு கற்பு நெறியுடன் வாழ்தல் அவசியம் என முழு மனித குலத்திற்கு அழுத்தமாக அறிவுரை வழங்கியுள்ளதன் மூலம் இஸ்லாம் என்பது முழு மனுக்குலத்தின் வாழும் வழி; வாழ்க்கை நெறி என்பதை உறுதி செய்கிறது. மணமுடிக்காத, மணமுடித்த ஆண் பெண்ணாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவேண்டாம். இதுவே இறைக் கட்டளையாகும்! இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர் வெளிப்படையான, அந்தரங்கமான மானக் கேடான செயல்களிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயப்படுத்தியுள்ளது.

இனி, கேள்விக்கு வருவோம்.

மணம் செய்து கொண்ட ஆணாயினும் பெண்ணாயினும் பிறர் மனை நாடுவதற்கான அடிப்படையாக உள்ளவை:
 1. தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது
 2. மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.
 3. இல்லற சுகத்தில் ஏமாற்றம்
 4. உடன் போக்குதலை ஊக்குவிக்கும் சின்னத்திரை சீரியல்களால் மனரீதியான மாற்றம்
 5. மஹ்ரமில்லாத ஆண்களோடு பெண்களும் மஹ்ரமில்லாத பெண்களோடு ஆண்களும் நெருங்கிப் பழகும் சூழல்
 6. இறையச்சக் குறைவு
 7. நீண்ட காலப் பிரிவு
மேற்காணும் ஏழு காரணங்களுள் கேள்விக்குத் தொடர்பான "நீண்ட காலப் பிரிவு" என்பது இறுதியானதாக இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்குத் தகுந்தாற்போல் வரிசை முன்/பின் ஆகலாம்.
 • கணவன் கொலை; கள்ளக் காதலனும் மனைவியும் கைது!
 • தம்பியோடு உறவு கொண்ட மனைவியைத் தட்டிக் கேட்ட கணவனுக்குக் கத்திக் குத்து!
 • கணவனை மீட்டுத் தருமாறு மனைவி நூதனப் போராட்டம்!
 • இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டு, தாய் தலைமறைவு; காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு!
 • புதுப் பெண் தலைமறைவு; திருமணம் ஆன ஒரு மாதத்தில் மாயம்!
 • கணவனின் துரோகம் காரணம்; மனைவி தற்கொலை முயற்சி!
திருமணம் ஆனதிலிருந்து பிரிந்துவிடாமல் ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தவர்களைப் பற்றி மேற்காணும் செய்திகளுள் ஏதேனும் ஒன்றை வாரந் தவறாமல் நாளிதழ்களில் நாம் வாசித்து வருகிறோம்.

மணமுடித்தலின் நோக்கம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சட்ட ரீதியாக பரஸ்பரம் இல்லற சுகம் அடைவதும் அதன் மூலம் மழலைச் செல்வங்களைப் பெறுவதும் ஆகும். இல்லறத்தில் இணைந்த தம்பதியரிடையே தாம்பத்திய சுகத்தைப் பறிமாறிக் கொள்ள முடியவில்லையெனில் அவர்கள் மணமுடித்துக் கொண்டது அர்த்தமற்றதாகிவிடும்.

வாழ்க்கையில் இணைந்த தம்பதியர் இருவரும் தாம்பத்திய சுகத்தைப் பெறுவதில் பொதுவாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். வெளியூர் செல்லும் கணவன், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் திரும்புவதாகக் கூறி, மனைவியின் சம்மதத்துடன்தான் செல்கிறான். திருமண உறவை ஒப்பந்த உறவாக இஸ்லாம் அறிவித்திருப்பதால், கணவனிடமிருந்து பெறும் தாம்பத்திய சுகம் எப்போதெல்லாம் தனக்கு வேண்டும் என்பதையும் மனைவி தீர்மானிக்கலாம். நீண்ட காலம் கணவனைப் பிரியமுடியாது எனக் கருதும் மனைவி, கணவன் தன்னை நீண்ட நாள்கள் பிரிந்து செல்வதைத் தாராளமாகத் தடுத்து நிறுத்தலாம். இதற்கான உரிமை தம்பதியர் இருவருக்கும் உள்ளது!

ஒரு வாரம், ஒரு மாதம், ஓராண்டு அல்லது இதைவிட அதிகமான காலம் கணவன் மனைவி பிரிந்திருக்க நேரிடும் என்ற நிலை ஏற்படின் இதைத் தெரிந்து தம்பதியர் இருவரும் சம்மதித்தப் பின்னரே ஒருவரையொருவர் பிரிகின்றனர்.
இன்னும் சொல்வதென்றால், கவுரவத்துக்காகவும் ஆடம்பரச் செலவுகளுக்காகவும் தன் கணவன், தன்னைப் பிரிந்து சென்று வெளிநாட்டில் பொருளீட்டுவதை விரும்பும் மனைவிகளே நம் சமுதாயத்தில் அதிகம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. (விதிவிலக்காக, வெகு சொற்பமான கணவர்கள் தங்கள் மனைவியரைத் தாங்கள் பொருளீட்டும் வெளிநாடுகளுக்கு வரவழைத்துக் குடும்பத்துடன் வாழ்கின்றனர்).
"திரைகடலோடியும் திரவியம் தேடு" எனும் முதுமொழி நம் சமுதாயத்துக்கென்றே ஆகிப்போனதுபோல், "கட்ட வெளக்கமாறா இருந்தாலும் கப்ப வெளக்கமாறா இருக்கணும்" (குப்பை அள்ளினாலும் மாப்பிள்ளை வெளிநாட்டில் அள்ளுபவராக இருக்க வேண்டும்) எனும் புதுமொழி நம் சமுதாயப் பெண்மணிகளால் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு, கணவனைக் கழுத்தைப் பிடித்து வெளிநாட்டுக்குத் தள்ளிவிட்டு, தெரிந்தே பிரிந்த பின்னர் உணர்வுக்குப் பலியாகி விபச்சாரத்தை நாடுவது ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் துரோகச் செயல்!

நவீன காலத்தில் வீட்டிலும் வெளியிலும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் தாரளமாக உள்ளன. வீட்டில் தொலைக்காட்சியாகவும், வெளியில் நேரிலும், விளம்பரக் காட்சியாகவும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை!
இந்நிலையில் இறையச்சத்தை மேன்மைப்படுத்தி மற்றவற்றைத் முற்றாகத் தவிர்த்துக்கொள்வது மட்டுமே மேற்காணும் கேள்விக்கு இஸ்லாம் கூறும் தீர்வாக அமையும்.

அனைவரும் அல்லாஹ்வின் மார்க்கத்தை அழகாகப் பின்பற்றிட அருள் புரிவானாக!

(இறைவன் மிக்க அறிந்தவன்)
மிக்க நன்றி Source : http://www.satyamargam.com/1742

Monday, July 25, 2011

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலையும் புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சும்


தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலையும் புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சும்
அபுதாபியில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் ஒலி, ஒளி குருந்தகடு வெளியீடும், இன்னிசை மாலையும் நிகழ்ந்த விழாவில்  ஒரு பகுதி.

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2

அன்னியநாட்டில் சம்பாதித்து வந்து சிலவு செய்பவர்களைவிட தாயகத்திலேயே சம்பாதிக்கின்றவர்கள் தாராளமாக சிலவு செய்கிறார்கள் எல்லோரிடமும் காசு சரளமாக புரலுகிறது ஒரு லட்சத்திற்கு விலை பேசிய இடமெல்லாம் இன்று இருபது முப்பது லட்சம்,கோடி என்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எனது தாய்மாமன் மகன் மன்சூர். நாங்கள் படித்த காலத்தில் கோடைவிடுமுறையில் ஊர்ஊராக உறவினர்களின் வீடுகளுக்கு சென்று சுற்றி வருவோம்; இன்று அவனிடம் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவு பிஸியாக இருப்பது காற்று உள்ள போதே தூற்றிக் கொள் பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.

அதிகாலையிலிருந்து இரவு வரையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் மச்சான் மன்சூரைப் பார்க்க மனம் மகிழ்கிறது. பல கஸ்டங்களை சந்தித்தவன் குடும்ப நபர்களே ஒரு மாதிரியாக பார்த்த காலம் இருந்தது அவர்கள் இன்று வேறு மாதரியாக பார்க்கிறார்கள். என்ன வித்தியாசம் பைக்கில் சுற்றியவன் இன்று இண்டு இடுக்குகளில் இனோவாவில் சுற்றுகிறான். பைக்கில் சுற்றியபோது பொருள் இல்லை இப்போது பொருளோடு இனோவாவில்.

Sunday, July 24, 2011

கறுத்த மச்சான்..


ஆயிரங் கனவுகளோடு
அடியெடுத்து வைக்கவில்லை
உன்னைக் கைப்பிடிக்கையில்
”ஆனால்”

ஆயிரத்தை தாண்டியும்
என் ஆழ்மனக் கனவுகளும்
அழகாய் நிறைவேற்றி வரும்
ஆருயிரானவன்

பதிமூன்றாம் அகவையில்
பதியமிடப்பட்ட வாழ்க்கை விதை
பனிவிழும் மலர்வனமாய்
பத்தொன்பதாம் வருடத்திலும்
பூத்துக் குலுங்கச் செய்யும்
புதுமையானவன்!

பாலைவன வாழ்க்கையில்
பலசிரமங்களுக்கு நடுவிலும்
பலவருடம் தன்னுடனே வைத்து
பசுமையை மட்டுமே எனக்கு
பகிர்ந்தளித்த பண்புள்ளவன்!

எத்தவறையும் மன்னிப்பவள்
பெற்றதாய் மட்டுமே என்பதை
பொய்யாக்கியவன்
என் குற்றங்குறைகளையும்
குறைசொல்லாமல் மன்னித்த
புண்ணியமனம் கொண்டவன்!

Friday, July 22, 2011

கவலைப் படாதே, மகிழ்வாக இரு !

  மகிழ்வான நோக்கமும், எண்ணங்களும் இதய நோய் வராமல் பாதுகாக்கின்றன. இதற்கு எதிர்மறையான கவலையான சிந்தனைகளும் , நோக்கமும், எண்ணங்களும் தாழ்வு மனப்பான்மையும்  இதய நோய் வருவதற்கு வழி வகுக்கின்றன. 10 ஆண்டுகளின் மிகப்பெரிய எதிர்கால ஆய்வில் நெஞ்சாய்வியல் வல்லுனர்கள் தெரிவிப்பது மன அழுத்த அறிகுறிகள் குறைப்பதன் மூலம் நமது இதயம் பாதுகாக்கப் படுகின்றது என்பதாகும்.இதனால்  இதய நோய் பாதிப்புகள் குறைவாக உள்ளன என்பதாகும் . ஆபத்தை குறைவாக்க தாழ்வு மனப்பான்மை வேண்டாம்  இது நமது  இரத்த அணுக்களையும் பாதித்து எதிர்ப்பு சக்தியினை(Immune system -
"immune system is a system of biological structures and processes within an organism that protects against disease")குறைத்து விடும். மன மகிழ்வாக பல்லாண்டு வாழ கவலையை விட்டொழிப்போம்.


The full PDF article

Don’t worry, be happy! 

Source : http://tabibqulob.blogspot.com

Thursday, July 21, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1


 
(இந்த பதிவை மிக நீலமான பதிவாக பதிவிட எண்ணினேன் படிப்பதற்கு சிரமமாக இருக்கலாம் என எண்ணி தொடராக எழுதுகிறேன்.)

இது ஒரு விடுமுறை அனுபவம்
சூன் மாதம் இருபதில் எனது கோடைவிடுமுறை துவங்கியது அமீரகப் பள்ளிகள் சூலை முதல்வாரம் வரையில் இருந்ததால் நான் மட்டும் பத்துதினங்களுக்கு முன்னதாகவே ஊர் செல்ல தீர்மானித்தேன்.

சூலை முதல்தேதியில் எனது மனைவி பிள்ளைகள் ஊர்வருவதற்கு டிக்கேட் போட்டிருந்தேன் ஒன்றாக சேர்ந்து செல்லமுடியாத காரணம் எனது குருகிய விடுமுறையும், பள்ளியும்தான்.• துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டேன் ஆரம்பமே அபாரமாக இருந்தது அதாவது இக்கணாமி வகுப்புக்குரிய எனது பயண இருக்கையை பிஸ்னஸ் இருக்கைக்கு மாற்றி கூடுதலான வசதியை எமிரேட்ஸ் நிறுவனத்தினர்கள் தந்தார்கள். மகிழ்சியாக இருந்தது. உட்கார்ந்துக் கொண்டு தூங்க வேண்டிய என்னை படுத்துக் கொண்டு தூங்கும்மளவு வசதியைத்தந்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.


• சென்னையிலிருந்து நான்மட்டுமே தனியாக செல்வதால் முன்கூட்டியே இரயில் டிக்கேட் பதிவு செய்திருந்தேன். என்னை அழைப்பதற்கு எனது சகலையின் மகனார் வந்திருந்தார். காலை எட்டு முப்பது மணிக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு திருச்சி விரைவு இரயிலில் பயணித்தேன்.

கோடைவெப்பம் இன்னும் தமிழகத்தில் இருந்துக் கொண்டுதானிருக்கிறது அதனால் ஏசி கோட்ச்சில் பயணம் செய்தது சுகமாக இருந்தது.

எங்கள் இருக்கையில் ஒரு குடும்பம் நான்கு பேர்கள் அமர்ந்திருந்தார்கள். என் இருக்கை எண்ணை கூறியதும் இருதய அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஊர் திரும்புகிறோம் என்று கூறவே சன்னல் ஓர இருக்கையை அவர்களிடம் கொடுத்துவிட்டு மத்திய இருக்கையில் படுத்துக் கொண்டேன்.

அந்த இருதயக்காரர் துபாயிலிருந்து விடுமுறையில் வந்தவர்தானாம் வந்த இடத்தில் நெஞ்சுவலி ஏற்பட சென்னையில் அறுவை சிகிச்சையை முடித்து விட்டு ஊர் திரும்புகிறார்கள்.
அவருடைய மகள் அவரை ரொம்பவும் கவனமாக பார்த்துக் கொண்ட விதம் என்னை நெகிழச் செய்தது. அந்த பெண் கல்லூரியில் படித்து முடித்திருக்கிறாள். அவருக்கு இரண்டு பெண் குழந்தை மூத்தப் பெண்ணுக்கு திருமணத்தை முடித்துவிட்டார் இளையமகளை நன்றாக படிக்க வைத்துள்ளார். அவருடைய மனைவி யாரிடமோ கைபேசியில் உரையாடினார். இந்த அறுவை சிகிச்சைக்கு செய்த சிலவில் ஒரு கல்யாணமே செய்திருக்கலாம் என்று ஆதாங்கப்பட்டுக் கொண்டார்.

பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் கொள்ளைச் சொத்துகளா?

சாதியை அரசாங்கம் அங்கிகரிப்பது பற்றி உங்கள் கருத்து? - மாதவன்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஆனால் பிறந்தவுடன் சாதி ஒட்டிக் கொள்கிறதே! சாதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் சாதியை அரசாங்கம் அங்கீகரித்தே ஆக வேண்டும். சாதி அடிப்படையில் எங்களுக்குச் சலுகை வேண்டாம் என்று அனைத்து சாதிகளும் கூறும் நிலையில் இந்தியா இல்லையே! இன்னும் தீண்டாமைக் கொடுமையும் இரட்டைக் குவளை முறையும் நீடிக்கிறதே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஏட்டில் மட்டுமே உள்ளவரை அரசைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.

ஒன்றரை மாத ஜெ.வின் ஆட்சி எப்படி உள்ளது?- அப்பாஸ், நெல்லிக்குப்பம்

ஒன்றரை மாதத்தில் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் முதலமைச்சர் நாற்காலியில் முழுதாக அமரும் முன்பே தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர் கல்வி வழக்கில் எதிரிடையான நீதிமன்றத் தீர்ப்பு, இரு முறை அமைச்சரவை மாற்றம் மற்றும் மரியம் பிச்சை மரணத்தில் சதி எனப் பரபரப்புத் தகவல் போன்றவை பட்டியலில் ஏறியுள்ளன.

குழந்தைகள் புத்தகங்களின்றி பள்ளி சென்று வருவதைப்பற்றி வமுவின் கருத்து என்ன?- சி. கோயா
புத்தகங்களின்றி வகுப்பை நடத்தும் ஆசிரியர்களைப் பாராட்டியே தீர வேண்டும்.

பொது அறிவு, கதைகள், வரலாறு, பொதுக்கணக்கு, கணினி இயல் எனப் பலவிதமாகச் சொல்லிக் கொடுத்துப் பொழுது கழிவதாக எங்கள் ஊர்த் தனியார்ப் பள்ளி மாணவன் மூலம் அறிந்தேன்.

Wednesday, July 20, 2011

முத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை

முத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை. கொடுப்பதை விட வாங்குவது ரொம்ப கடினம். முதல் கோணல் முற்றிலும் கோணல் .முதல் முத்தமே செயற்கையானால் அடுத்த முத்தம் வர வழியில்லை. இயல்போடு மனதுடன் ஒன்றிய முத்தம் மன மகிழ்வினைத் தந்து உறவை வளர்க்கும். அது அழகைக்  கூட்டி ஆயுளை அதிகமாக்கும்.

முதல் முத்தம் மறக்க அடுத்த முத்தம் தொடரும் .ஒரே முத்தம் முழுமையாகிவிடாது முத்தத்தைப் பொறுத்தவரை . தொடர, தொடர தெவிட்டாதது முத்தம்தான்.அது மனதோடு தொடர்புடையதால் எண்ணங்கள் மாற சுவையும் மாறும். முத்தம் கொடுக்கப்பட்டவரின் உறவுடனும், இடத்தினையும் பொருத்து சுவையும், உணர்ச்சித் தூண்டுதலும்  மாறுபடும்.     

   முத்தம் கொடுக்கப்படுவதற்கு முன் கொடுக்கப்படுவரின் மனதில் இடம் பிடித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் அது மறுக்கப்படும். முத்தம் கேட்டுப் பெறுவதல்ல. கடையில் விற்கப் படும் பொருளாகாது.அன்பு, பாசம், நேசம் போன்ற வற்றை வெளிப்படுத்தவதற்கும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கும்  கிடைக்கும் மாமருந்து.முதல் முத்தம் அது அம்மா  தந்த முத்தம். அது பாசத்தில் கலந்த முத்தம்.அம்மாதான் நமக்கு  முத்தம் கொடுக்க சொல்லிக் கொடுத்தாள். முதலென்றால் கடைசி ..அதனை ஆண்டவன்தான் அறிவான்.  "எதிர்பாராத முத்தம்" இனிய நினைவு தரலாம். முத்தம் கொடுக்காதவர்களும் கொடுக்கப் படாதவர்களும் உலகிலில்லை.
  ஆண்களாகிய நீங்கள் மிருகங்களைப் போல் நடந்து (தாம்பத்ய உறவு) கொள்ளாதீர்கள் .(உறவுக்கு முன் )தூது அனுப்புங்கள்,அதன் பிறகு தாம்பத்ய உறவு கொள்ளுங்கள்  என்று நபி (ஸல்)கூ றியபோது,  தூது என்றால் என்ன?என்று நபித் தோழர்கள்  கேட்டார்கள். அது முத்தங்களைப்  பகிர்ந்துக் கொள்வதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.தாம்பத்ய உறவுக்காக மட்டும் இன்றி, சாதாரணமாகவும் மனைவியரை முத்தமிடுவது நபிகளாரின் நடைமுறை.   
       குழந்தைக்கு(முகத்தில் பல இடங்களில்)முத்தம் கொடுத்துப்  பாருங்கள்.
 ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளிவாகிறது.
 மகிழ்வின் வேறுபாடுகளை முகத்தில் காண முடியும். அகத்தின் அழகு  முகத்தில்.
  துர்நாற்றம்  மூலம் பிறருக்கு சிரமம் ஏற்படுத்துவது கூடாது.
எத்தனையோ பேருக்கு துர்நாற்றம் பிடிக்காது.  கணவன் வாயிலிருந்து அவை வந்தாலும் அது மனைவிக்கு துர்நாற்றமே. இதே துர்நாற்றத்துடன் மனைவியை முத்தமிட்டு கொஞ்சுவதோ, குழந்தைக்கு வாஞ்சையுடன் முத்தம் இடுவதோ… எப்படி சரியாகும்..?

 தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல்,அவர்களிடையே மன அழுத்தம் குறையும். தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே! என்ற சோகம் கொடுமையானது. தனித்து வாழ்பவன்  ஒன்று மிருகம் அல்லது துறவி (இந்த கால சாமியாரும் துறவியும் அல்ல )
படத்தினை அவசியம் இறுதி வரை பாருங்கள்

Sunday, July 17, 2011

நீங்கள் Srebrenica படுகொலையிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?

the 613 massacre victims were laid in rows on Sunday before the formal burial ceremony [AFP] , وصول رفات 613 من ضحايا مذبحة سربرنيتشا بعد 16 عام ليدفنوا اليوم Srebrenica இனக்கொலை கற்றுக் கொடுத்த பாடம்.
என்றென்றைக்கும் 
நீதி வெல்லும்  - உங்கள் உரிமையைப் பெற, நீங்கள் தொடர்ந்து செயல் பட வேண்டும் . படுகொலை ஆவண உரிமைகளை நிலைநாட்டவும் ஒரு அணுகுமுறை உள்ளது - சரியான பதிலாக இருக்க வேண்டும் ,  ஐக்கிய நாடுகள் அல்லது ப்ளூ தொப்பிகளை - கண்மூடித்தனமாக நம்பவில்லையா! நீங்கள் ஒடுக்கப்பட்டாலும் கூட, தைரியமாக இருக்க வேண்டும். நீதி அடைய வழி ஒரு அறிவியல் மற்றும் நடைமுறை அணுகுமுறையில் விடாமுயற்சி தேவை. சரியான மீட்சி அடைந்த பிறகு, நீங்கள் மன்னித்து விட முடியும் , அதில்  ஒரு பண்புஉள்ளது .உரிமை கிடைக்கு முன் மன்னிப்பது தாழ்வு மனப்பான்மைதான் . இதுதான் உலகம் கண்ட வெற்றியின்  வரலாறு.

Please clck to read more What have you learned from #Srebrenica #Genocide?

Source

Saturday, July 16, 2011

என்றும் எம் பெருமானே தலைவர்!

  நபியே, நாம் உம்மை இந்த உலகத்தில் உள்ள சகல மனிதர்களுக்குமே நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பி வைத்திருக்கிறோம் (34:28)
நபியே நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பி இருக்கிறோம் (21:107)
அவனே தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான் (61/09)
நபியே நீர் கூறும், ஓ மனிதர்களே, நான் மெய்யாகவே உங்கள் யாவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் (07/158)

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.

நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376 

"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்."
 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (Book 7 :: Volume 65 :: Hadith 32)  

"விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது முஸ்லிமின் கடமைகளுள் ஒன்று" என்று நபி(ஸல்...) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.  

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)  
நூல் : புகாரி

''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி) 
நூல்கள்: புகாரி , முஸ்லிம் 

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"
- நபி (ஸல்) 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம்
"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவம்  கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."

-திருக்குர்ஆன் 31:18

அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்

    இஸ்லாத்தின் வருகைக்குமுன் யூதம் கிறிஸ்தவம் ஆகிய இரண்டும் பிரதான மதங்களாக இருந்தன. ஆனாலும் அரேபியாவில் அவைகளால் வேறூன்ற முடியவில்லை. யூத மதத்தின் அணுகுமுறை எல்லாவற்றிலும் தீமையைக் காண்பதாக இருந்தது. தாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், கடவுள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் யூதர்கள் நினைத்தார்கள். நபிகள் நாயகத்தின் காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் Trinity எனப்படும் முத்தெய்வக் கொள்கை வழக்கில் இருந்தது. இயேசுவை கடவுளின் மகன் என்று அம்மதம் சொன்னது. இயேசு திருமணம் செய்து கொள்ளாததால் ஆண் பெண் உறவு என்பதே ஏதோ அசிங்கமான ஒன்று என்ற தவறான எண்ணம் விதைக்கப்பட்டது. கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்விக்காமல் அவர்களைத் துறவிகளாக, மடத்தில் கன்னிகாஸ்திரீகளாக சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் கொண்டிருந்தது.

நபிகள் நாயகமவர்கள் இறுதித் தூதர் என்பதால், குறிப்பிட்ட நாட்டோடோ, குறிப்பிட்ட மக்களோடோ அவர்களுடைய தூதுத்துவம் சுருங்கிப் போய்விடவில்லை. இஸ்ரவேலர்களில் வழிதவறிப் போனவர்களை நேர்வழிப்படுத்த தான் அனுப்பப்பட்டதாக இயேசு சொன்னதைப் போல பெருமானார் சொல்லவில்லை. இந்தியர்களுக்கு வேதங்களும், பாரசீகர்களுக்கு ஜென் அவெஸ்தாவும், யூதர்களுக்கு தௌராத்தும், ஹூத், சாலிஹ், மற்றும் இஸ்ரவேலர்களின் கூட்டத்தினரில் வழிகெட்டவர்களுக்காக இஞ்சீலும் அருளப்பட்டன.

ஆனால் மனிதகுலம் முழுமைக்கும் தான் நபியாக அனுப்பப்பட்டதாக பெருமானார்  கூறினார்கள். அகிலம் முழுவதையும் மனித குலத்துக்கான ஒரு பெரிய நாடாக இஸ்லாம் பார்த்தது. பெருமானாருக்குக் கிடைத்த இறை அழைப்பில் எல்லா மனிதர்களுக்குமான பொதுத்தன்மை இருந்தது. ஹிமாலய பள்ளத்தாக்குகளிலேயோ, அல்லது சினாய் மலையின் உச்சிகளிலேயோ வாழ்ந்த ஒரு கடவுளை வணங்க முஹம்மது மனிதர்களை அழைக்கவில்லை. பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஓரிறைவனுக்கான அழைப்பு அவர்களது. அதன் நோக்கம் மனித குலம் அனைத்தையுமே உண்மையின் பால் திரும்பச் செய்வது.

Wednesday, July 13, 2011

இணைய மாநிலம் .. இப்போது! இணைய சக்தியின் அருமை அறிய ! [ வீடியோ ]

ஒவ்வொரு நாளும் இண்டர்நெட் வேகமான முன்னேற்றம் அடைந்து வருகின்றது .அதிலும்  மொபைல் கிடைத்தவுடன் அதிக வளர்ச்சியுடன்  வலைப்பின்னல் தொழில் பூதங்கள் நம் தனிப்பட்ட கவனத்தை தினசரி இணையத்தில் தேடும் முயற்சியில் ஈடுபடவைக்கின்றது. இதன் பயன்பாடுகள் அறிந்துக் கொள்ள இங்கே  வீடியோவையும் பாருங்கள்.

தாலாட்டு ஃபாத்திமா - தமிழ் முஸ்லிம் பாட்டு by தேரிழந்தூர் தாஜுதீன்


ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டை கூட, அறிவையும்,வீரத்தையும் ,பண்பையும் சொல்லித் தரக் கூடிய சிந்தை குளிர வைக்கக் கூடிய பாட்டாக பாடுவது தமிழர் பண்பாடு.

தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
தாயே உன் பிள்ளைக்கு    இஸ்லாத்தை சொல்லி  தாலாட்டு
அது தருகின்ற வழியில் வளர வேண்டும் என்று தாலாட்டு
அல்லா என்  பிள்ளைக்கு அறிவை தா  என்று தாலாட்டு 
உலகில் அனைத்து செல்வமும் அடைத்து வாழ்க  என்று தாலாட்டு
ஹசன்  ஹுசைனார் வழியில் வளர்க என்று தாலாட்டு 
அலியாரின் வீரத்தை பெருக வேண்டும்  என்று தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு

கண்ணே மணியே கண்ணுறங்கு   என்று தாலாட்டு
இறைவன் கருணையால் நல்ல கணவன்  வருவான் என்று தாலாட்டு
காசு வாங்கி உன்னை மணக்க மாட்டான் என்று தாலாட்டு
அவன் கருத்தில்  அடுத்த பெண்ணை நினைக்க மாட்டான் என்று தாலாட்டு
அழகு  மகனே அயர்ந்து உறங்கு என்று தாலாட்டு
உன் அத்தாவைப் போல உழைத்துப் பழகு  என்று தாலாட்டு
பல்லாயிரம்  வாங்கி மணக்க வேண்டாம் என்று தாலாட்டு
நீ மணக்க போகும் பெண்ணின் மனசை வாங்கு என்று தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு

யாரையும்  இழிவாய் நினைக்கக்  கூடாதென்று தாலாட்டு
எந்த ஊரையும் பெயரையும் பழிக்கக் கூடாதென்று தாலாட்டு
உறவினர் பகைத்தால் பொறுக்க வேண்டும் என்று தாலாட்டு
அவர்கள் உறவுக்கு விளக்காய் இருக்க  வேண்டும் என்று தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
தாயே உன் பிள்ளைக்கு    இஸ்லாத்தை சொல்லி  தாலாட்டு
அது தருகின்ற வழியில் வளர வேண்டும் என்று தாலாட்டு

பாடல் எழுதியவர் கிளியனூர் அப்துல் சலாம்
பாடகர் தேரிழந்தூர்  தாஜுதீன் 
இன்னிசை(Music) இன்பராஜ்

Tuesday, July 12, 2011

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை–2

இஸ்லாத்துக்கு முந்தைய அரேபிய வாழ்க்கை

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஒரு அரசாங்கமோ, எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிகின்ற அதிகாரமோ அரேபியாவில் இருந்ததில்லை. எங்கு பார்த்தாலும் சண்டையும் சச்சரவும் ஒழுங்கின்மையும்தான் இருந்தது. விபச்சாரம் செய்வதை, ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்வதை அரேபியர் பெருமையான காரியமாக நினைத்தனர். அதைப் பற்றி கவிதைகளில் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.  கொலை, கொள்ளை, வழிப்பறி, அனாதைகளின் உடமைகளைப் பறித்துக் கொள்ளுதல், சிலை வணக்கம், குலப்பெருமை, குலத்தகராறுகள், பழிக்குப் பழி வாங்குதல், மூட நம்பிக்கைகள், கூடா ஒழுக்கம், பெண்களை ஒரு (போகப்) பொருளாக நினைத்தல், பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல், அடிமைகளைக் கொடுமைப் படுத்துதல், சூதாட்டம், சதுரங்க ஆட்டம், மது, மாது – இவை அத்தனையையும் ஒட்டு மொத்தமாக ஒரு வரியில் குறிப்பிட வேண்டுமென்றால் ‘இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியா’ என்று சொல்லிவிடலாம்.

சூது விளையாடுவதில் அவர்களிடையே கட்டுக்கடங்காத வெறி இருந்தது. இருப்பதையெல்லாம் வைத்து விளையாடித் தோற்றுவிட்டால், தன் சுதந்திரத்தைக் கடனாக வைத்து விளையாடுவார்கள். அதிலும் தோற்றுவிட்டால் ஜெயித்தவரிடம் அடிமைகளாகப் போவார்கள். மனைவியை வைத்து மஹாபாரதத்தில் விளையாடிய மாதிரி.

அரேபியா முழுக்க குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்திருந்தது. குலங்களுக்குத் தலைவர்கள் இருந்தனர். அவர்களின் பொருட்டு ரத்தம் அதிகமாக சிந்தப்பட்டது. ஒரு குலத்தைச் சேர்ந்த யாராவது கொலை செய்யப்பட்டுவிட்டால் அதை குலத்துக்கே நிகழ்ந்த அவமானமாக அவர்கள் கருதினர். தலைமுறை தலைமுறையாக ரத்தம் சிந்தப்பட்டது. தன் குலத்தலைவருக்காக மனைவியைக்கூட ஒருவன் விட்டுக் கொடுத்துவிடுவான்.

Monday, July 11, 2011

மயிலாடுதுறை வரலாறு

மயிலாடுதுறை வரலாறு நூல்  வெளியீட்டு விழா .
முனைவர் அ.அய்யூப் எழுதிய "மயிலாடுதுறை வரலாறு" என்ற அரிய  நூலின்  வெளியீட்டு விழா .மயிலாடுதுறையில்  ஜுன் 15 அன்று மிகச் சிறப்பாக நடந்தது.
   அய்யூப் அறக்கட்டளை நடத்தும் பெஸ்ட்கல்வியல் கல்லூரி வெளியிட்ட நூல் இது. ஏ. ஆர் .சி . விசுவநாதன் நூலை  வெளியீட்டு பேசுகையில் "நமக்குத் தெரிந்த வரலாறுகள் நம்முடன்  அழிந்துவிடும். ஆனால், இந்த நூல் காலந்தோறும் மயிலாடுதுறையின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கும்" என்று கூறினார்.

   முனைவர் அ.அய்யூப் விழாவுக்கு தலைமை  தாங்கினார். அவர் பேசும்போது "ஒவ்வோர் ஊருக்கும் நிச்சயம் வரலாறு இருக்கும் .அந்த வரலாறுகள் நூலாக  வெளிவர வேண்டும் "என்று யோசனை சொன்னார்.

   மதிப்புக்குரிய   நீடூர் பெரியார் டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள்  "மயிலாடுதுறை வரலாறு" முதல் பிரதியைப் பெற்றுக்  கொண்டார்.இந்த  நூலின்  வெளியீட்டு விழாவில் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நூலில் பல (107) தலைப்புகளில் விவரமாக அருமையான கட்டுரைகளாக  பொருத்தமான படங்களுடன் மயிலாடுதுறை  வரலாற்றினை ஆசிரியர்  அய்யூப் அவர்கள் அள்ளித் தந்துள்ளார் ."ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா "  மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் காலம்தொட்டு குறிப்பிடப்படும்  புகழ்வாய்ந்த ஊராக உள்ளது. மயூரபுரி  என்பது மாயவரம் ஆனது என்றும் , மயில்கள் ஆடியதால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி செய்தார்கள். திரு .கிட்டப்பாவின் முயற்சியால் மாயூரம் என்ற பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது.  இதுபோன்று பல விபரங்களை இன்நூலில் காணலாம். நம்ம ஊரு செய்தி

நம்ம ஊரு செய்தி / http://www.nammaooruseythi.com

நம்ம ஊரு செய்தி பத்திரிக்கை நடத்துபவர்   நீடூர்  அய்யூப் அவர்கள்

"பயிற்சி பல தந்து - இந்தப்
பாறை உயர்த்திட வேண்டும்!"
என்ற கொள்கை கொண்டவர் முனைவர் அ.அய்யூப்.
அந்த நோக்கத்துடன்  2000 ஆம் ஆண்டில் அய்யூப் அறக் கட்டளையை அமைத்தார்.

    நீடூர் பெரியார் டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்களின் அன்பு மகனார்தான் முனைவர் அ.அய்யூப் அவர்கள். மரியாதைக்குரிய டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள் சிறந்த சிந்தனையாளர், சீர்திருத்தவாதி , சமய சமரச நோக்காளர். டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள்  தந்தை டி .எஸ்.ராஜ்முகம்மது  அவர்கள் நீடூரில் மிகவும் புகழுடையவர். இவர் மிகவும் நாணயமானவர். அவர் மீது மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர்.மரியாதைக்குரிய  டி .எஸ்.ராஜமுகம்மது அவர்களது  சேவை மிகவும் உயர்வானதாக இருந்தமையால் அவர்  இறந்த பின்பும் அவரது புகழ் காலமெல்லாம் மறையாமல்  நிற்கின்றது.

"மயிலாடுதுறை வரலாறு" நூல் கிடைக்குமிடம்.
நவமணி பதிப்பகம் ,
44,எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை ,
சென்னை- 600018  

Sunday, July 10, 2011

கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்


கூகிள் ப்ளஸ் பற்றிய செய்திகளை கடந்த பதிவில் பதிவிட்டிருந்தேன். தற்போது கூகுள் ப்ளஸ் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். கடந்த ஐந்தாம் தேதி வரையில் கூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் கிடைக்காததால் கவலையில் இருந்தேன். நண்பர் ப்ரேம் அவர்கள் அனுப்பியிருந்த அழைப்பிதழை க்ளிக் செய்தாலும் "Keep Me Posted" என்றே சொன்னது. பிறகு கூகிள் ப்ளஸ் Vice president ப்ராட்லி ஹோரோவிட்ஸ் (Bradley Horowitz) அவர்களுக்கு மெயில் அனுப்பியிருந்தேன். அவர் அனுப்பிய அழைப்பிதழ் மூலம் கூகிள் ப்ளஸ்ஸில் இணைந்தேன்.

கிட்டத்தட்ட பேஸ்புக் போன்றே காட்சி அளித்தாலும் பேஸ்புக்கைவிட கூகிள் ப்ளஸ் நன்றாக இருக்கிறது.

Thursday, July 7, 2011

கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் புதிய அருமையான இணையத்தளம் !


இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி  அவர்களின் உத்தியோக பூர்வ இணையத்தளம் www.drshukri.net நேற்று 06-07-2011 இலங்கை தபால் தலைமையகத்தின் கேட்போர்கூட அரங்கில் வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.
ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேர்காணல்
சமகால இஸ்லாமிய அறிவு ஜீவிகளில்முக்கியமானவராக கருதப்படும் கலாநிதி, எம். ஏ. எம். சுக்ரிஅவர்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாகஜாமிஆ நளீமிய்யா என்ற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார்.வரலாறு, இலக்கியம், திறனாய்வு, கல்வி, தத்துவம், இஸ்லாம், தொல்லியல் ஆராய்ச்சிஎன்று இவரது எழுத்துலகம் விரிந்தது. பன்மொழி ஆளுமை பெற்ற இவர் பன்முக அறிவுப் புலமைமிக்கவர்என்பதை அவரது எழுத்துப் படைப்புகள் சான்று சொல்லும். மற்றும் பன்நாட்டு சர்வதேச அரங்குகளில்இவர் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடனான செவ்விஜாமியா நளீமிய்யா வளாகத்தில் கலாநிதி அவர்களின் விடுதியில் 03.04.2003 வியாழன் அன்று எடுக்கப்பட்டது.
உங்களது காலப்பிரிவில் இருந்தLiberalArts ற்கும் தற்போதைய கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாடு என்ன? அது வீழ்ச்சியைக்காட்டுகிறதா? அல்லது அறிவு நிலையில்ஒரு வளர்ச்சியா?
முதலில் Liberal என்ற பதத்தால் நீங்கள்என்ன கருதுகிறீர்கள் என்பதை நான் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது சுதந்திரமாக கற்கின்றநிலை உங்கள் காலத்தில் காணப்பட்டது. உதாரணமாக மருத்துவத் துறையைச் சார்ந்தவர் வேறுதுறையையும் கொண்டவராக இருந்தார். ஆனால் தற்போது துறை சார்ந்து மட்டும் கற்கின்றவராகக்காணப்படுகின்றார். வேறு துறைகள் குறித்த அறிவு அங்கு அவருக்கு கிடைப்பதில்லை.

ஆம், உண்மையில் இந்த விடயம்எங்களுடைய காலததிலே நீங்கள் கூறுவதுபோல, ஒரு துறை சார்ந்தவர் வேறு துறைகளைப் பற்றிப் படிப்பதற்கான வாய்ப்புக்கள்அவ்வளவு இருக்கவில்லை. ஆனால், வாய்ப்புக்கள் இருந்தது. அது கல்வி முறையின் அங்கமாக இருக்கவில்லை, உதாரணமாக மருத்துவத்துறையைச் சார்ந்தவர் மருத்துவத் துறையைத்தான் படித்தார். கலைத் துறையைச் சார்ந்தவர்அதைத்தான் படித்தார். இதுதான் நிலவக் கூடிய கல்வி முறை. ஆனால் ஒரு முக்கிய பண்பு காணப்பட்டது.எந்தத்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் வேறு துறையைப் பற்றிய அறிவைப் பெற ஆர்வம் காட்டினர்.அதற்கான வாய்ப்பும் இருந்தது. உதாரணமாக பொருளியல் துறையைச் சார்ந்தவர் இலக்கியத் துறையில்ஆர்வம் காட்டினார். இலக்கியத் துறை சார்ந்த பலர் அறிவியல் பற்றிய பல அறிவையும் பெற்றிருந்தார்கள்.இது அக்காலங்களிலே பல்கலைக்கழகங்களில் நடந்த கருத்தரங்குகளிலே, விவாதங்களிலே மிகச்சிறப்பாகப் பிரதிபலித்தது. ஒரு துறையைச் சார்ந்தவர் வேறொரு துறைபற்றி பேசுவதற்கும்கருத்துக்கள் பரிமாறுவதற்கும் ஆற்றல் பெற்றவராக இருந்தார்.
Please click to read more about நேர்காணல்


Wednesday, July 6, 2011

Islamic Months-இஸ்லாமிய மாதங்கள்

இஸ்லாமிய மாதங்கள்
புனித அல்குர்ஆனில் அல்லாஹ் சூரியனின் படைப்பு இரகசியத்தையம், சந்திரனின் வளர்ச்சி, தேய்வு பற்றிய தத்துவங்களையும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளான்.
இன்று வழக்கத்திலுள்ள கி.மு, கி.பி. மற்றும் ஹிஜ்ரி ஆண்டுகள் நபிமார்களை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கி.பி என்பது இயேசு கிறித்து (ஹழ்ரத் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிறப்பை நடுநாயகமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. அதில் கி.மு. கிறித்துவுக்கு முன் உள்ள நிகழ்ச்சிகளையும், கி.பி. கிறித்துவுக்கு பின் உள்ள நிகழ்ச்சிகளையும் இன்றளவும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

Sunday, July 3, 2011

இறுதி வரை யாரோ !


இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக   பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான்   இறுதி என்று நாம் எண்ணுகின்றோம் . இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால்  மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும்  இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .
மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு ,  அவ்வளவுதான் .  ஏன் இறப்புக்கு நாம் பயப்படுகின்றோம் .  வாழ்வே மாயம்,  பின்  ஏன் இத்தனை விளையாட்டு. தேவை தான் !உலகம் உருள்வதுபோல் மனித வாழ்வும் மற்ற பிறவும் உருள்வதற்காக.பால் உணர்வால் உலகம் உருள்கின்றதா?  அதற்கு பணம், அதிகாரம், புகழ் தேவையா !
 பட்டாமணியார் வீட்டில் இறப்பு விழுந்தால் ஆயிரம் பேர்.
பட்டாமணியார் இறந்தால்  பத்து பேர்.   இது அறிந்த உண்மை .
என்ன ஆனது பணமும், புகழும், அதிகாரமும் .
உன்னுடன் வருவது யார் ?
அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”
இப்பொழுது பாமரனும் விளங்க காலமெல்லாம்  பேசப்படும்   கவிஞர் கண்ணதாசன் பாடல்
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

காப்பி அடிப்பது குற்றமா ?ஏற்கனவே ஒருவர்  எழுதியதை அப்படியே மாறாமல் திருப்பி எழுதுவது அல்லது செய்வது என்பது காப்பி அடிப்பது என்று பொருள் படலாம் .
படம் எடுப்போர் தழுவல் முறை கையாள்வர் .
யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்- என்று கமல்ஹாஸன் சொல்வார் .அது அவர் நம்புவது.   அது அவர் தன்னம்பிக்கை .அந்த திறமையை எங்கிருந்து பெற்றார் .அவர் சொல்வார் `பரம்பரை ஜீன்ஸ் வழி வந்தது அல்லது வளர்த்துக் கொண்டது` என்று.   வளர்த்துக் கொள்ள வழி வகுத்தவர் யார் ?கதைக்கு ஏற்றபடி இப்படி நடிக்க வேண்டும் என்று  நடிக்க சொல்லிக்கொடுத்தவர்  யார் ! டைரக்டர் பின் ஏன் ! இதுவும் ஒரு வகை காப்பிதான்.
என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் ஆனால் காப்பி அடிப்பது தவறு என்று மட்டும் சொல்லாதீர்கள் . சில நாடுகளில் புத்தகம் அல்லது கால்குலேட்டர் வைத்துக்கொண்டு  தேர்வு எழுத அனுமதிகின்றாகள் . காப்பி அடித்த மாணவர் மீது நடவடிக்கை அதனால் அவர் மனம் உடைந்து இறந்தார் என்ற செய்தி வேண்டாம் . ஆசிரியர் தன் மாணவனை அல்லது தகப்பன் தனது மகனை பார்த்து சொல்வது “ஏன்டா இப்படி இருக்கே மற்றவரை பார்த்தாவது உன்னை மாற்றிக்கொள் ” இதற்கு என்ன பொருள்? தனித்துவம் வேண்டாம் நல்லதனை காப்பி செய்துகொள் என்பது உள் அடங்கும். இன்டர்வியு என்று உள்ளது .அப்பொழுது அவர் தன்னை தயார் படுத்திக்கொள்வார்.
கல்லூரியில்  படிக்கும் பொழுது தேர்வுக்காக மட்டும்தான். பின்பு படிப்பதுதான்  அறிவினை பெறுவதற்காக இருக்கும்.

Saturday, July 2, 2011

பெண்ணின் பல முகங்கள் !

 பெண் குழந்தையாக இருக்கும் போது வீடு கட்டி விளையாடுவாள் பின்பு பூச் சூடி  மகிழ்வாள். அந்தப்  பூவின் மனம் மகிழ ஒரு மணமகனை நாடுவாள். அந்த மணமகன் கிடைத்த பின்பு தான் மணம் வீசும் மலராக இருந்து அவனது மனம் மகிழ   வைப்பாள். அவனால் கிடைத்த பரிசான பிள்ளைகளை பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு  சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக்  காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து வந்த தாயாகவும் கணவனுக்கு சேவை செய்யும் மருத்துவ தாதியாகவும், அக மகிழ வைக்கும் இனிய இன்பம் தரும் இல்லக்கிழத்தியாகவும், விடியல் விழித்திடும் முன்னே விழித்து சுவையுடன் சமைத்து தரும் அடுபன்கரை  அரசியாகவும் இருந்து  தன்னை அர்ப்பணிப்பாள்.  இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக  "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைக்கின்றது.
  மூன்று விஷயங்களை கண்களால்   காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?Friday, July 1, 2011

நீடூர்-நெய்வாசலில் நிகழவிருக்கும் விழாக்கள் - அழைப்பிதழ்கள் !

15 ம் ஆண்டு  முபல்லிகா ஸனது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் நிகழும்  ஹிஜ்ரி 1432 ஷ பான் மாதம் பிறை 5 (07-07-2011)     வியாழக்கிழமை  அன்று வெள்ளிக்கிழமை  இரவு 7.00 மணிக்கு J.M.H.    நிக்காஹ்  மஹாலில்   நீடூர்-நெய்வாசல்  மத்ரஸத்துன்னிஸ்வானில் பயின்று தேர்வு பெற்ற மாணவியர்களுக்கு  முபல்லிகா ஸனது  (Diploma) வழங்கும்  நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.
  பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ஸனது பெறும் மாணவிகளை வாழ்த்துமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .
இங்ங்னம்,
நாட்டாண்மை &ஜமாத்தார்கள் ,
மற்றும்     சங்கம் ,
ஜாமியா மஸ்ஜித்,
நீடூர்-நெய்வாசல்.

சிறப்புரை
ஜனாபா நூருன்னிஸா அவர்கள்
ஆசிரியை ,மத்ரஸத்துன்னிஸ்வான்,நீடூர்-நெய்வாசல்.

ஸனது பெறும் மாணவிகள்   

L.A. நூருல் அஸ்மா ,
D/O P.M.A.லியாகத்  அலி ,  J.M.H. ரோடு .

N.H நிலோபர் நிஸா,
D/O A.H.  நூருல்  ஹமீது, ஜின்னா தெரு  
M.S. காஜி கனி,  
D/O M. முஹம்மது  சபீர் ,ஷேக்தாவுத் தெரு

M.I. மெஹர் நிஸா,
D/O A. முஹம்மது இக்பால் ,தைக்கால் தெரு, பாவா  நகர்.

A.R. ஆய்ஷா பர்வின்
D/O P.அப்துல் ரஹீம் ஷேக்தாவுத் தெரு


LinkWithin

Related Posts with Thumbnails