Saturday, March 31, 2018

உங்களை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளை விரட்ட வேண்டும் என்ன செய்வது ?.


‬: قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌  اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌  اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 39:53)

ஒருவர் அவரை  அறியாமல் அல்லது தெரிந்தே  சன்னசன்னமாக அல்லது ஒரேயடியாக அழித்துக் கொள்வது, அவர் பாரம்பரிய செல்வங்களை அல்லது அவர்  கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊதாரித்தனமாக செலவுசெய்து அதனால் வறுமை, மது பழங்களுக்கு அடிமையாகி உடல் நலம், கண்ணியம், குடும்பம் உறவுகள் மற்றும் தன்நிலை மறந்து தனது வாழ்க்கையை அழித்துக் கொள்வது. ஆண் பெண் தவறான உறவால் செல்வம் தொழில் முடக்கம். தவறானவர்களின் நட்பால் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளல். இப்படி இவைபோன்ற வற்றால் வறுமை, நோய், செல்வங்களை இழப்பு, உறவுகளின் வேறுப்பு கடைசியில் மனம் உடைந்து தவறான முடிவு எடுத்துக் கொள்ளும் நிலைவுடையவர்களைப் பார்த்து இறைவன் மேலேயுள்ள இறைவசத்தின் மூலம் இறைவனின் கருணையிலிருந்து நீங்கள் நிராசையாகி விடாதீர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்!


 * காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

காவேரி ஆறு இன்றைய நிலை பாரு!!!

Akbar Abbas Travels
நினைவலைகள் – 2
காவேரி ஆறு இன்றைய நிலை பாரு!!!
சிறுவயதிலிருந்தே காவேரி ஆற்றுக்கும் எனக்கும் நெருங்கிய பந்தமுண்டு. இன்று என்னை காவிரியை பற்றி எழுத என்னை தூண்டிய அண்ணன் நீடூர் அஷ்ரப் அலி அவர்களுக்கு என் முதற்க்கண் நன்றி. முகநூலில் அவர் இன்று போட்ட வாய்க்கால் படம் தான் என்னை காவிரியை பற்றி எழுத தூண்டியது.
நான் சிறுவயதில் காவிரி செட்டித்தெருவில் குடியிருந்ததால், தினமும் காவிரில் குளிக்கக்கூடிய அரும்பெரும் வாய்ப்பு எனக்கு நிறைய கிடைத்தது.அதுஎன்னவோ தெரியல காவிரியை பார்த்துவிட்டால், அது கரை புரண்டு ஓடும் அழகை பார்த்தால், மனதில் ஒரு சந்தோசம் வருமே! அதை சொல்ல வார்த்தைகளே கிடையாது. என்னுடைய நெருங்கிய நண்பர்களில் காவிரியும் உண்டு என்றால் அது மிகையில்லை. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் (வீட்டுக்கு தெரிந்தும்,தெரியாமலும்) ஆற்றுக்கு சென்று மணிகணக்கில் குளிப்பது தனிசுகம்.

Friday, March 30, 2018

தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத் ஷா !!


ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.

Thursday, March 29, 2018

ஒக்காப்பி ....!

ராஜா வாவுபிள்ளை
காங்கோ நாட்டின் அடர்ந்த காடுகளில் மட்டுமே உயிர் வாழுகின்ற ஒரு அரிய உயிரினம்.
உலகின் வேறுஎந்த பகுதியிலும் காணக் கிடைக்காத ஒரு மிருகமாகும்.
வரிக்குதிரையும் ஒட்டகச்சிவிங்கியும் கூடியதில் உருவான ஒரு கலப்பினம். காங்கோ நாட்டு மக்கள் இதை 'ஒக்காப்பி' என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இது பார்ப்பதற்கு வரிக்குதிரையின் சாயலில் இருந்தாலும் ஒட்டகச்சிவிங்கியின் குடும்பத்தைச் சார்ந்தது.

பாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் !View or Download

பாருங்கள் அல்லது க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் 

Al-Fatiha_Basfar.mp3


 My Ummah Intro (PakHeaven.Com).mp3

l-Muallim.mp3


02 - Nazeel Azami - Opening.mp3

Ć
1La Ilaaha Illallah Hoo.mp3

Ć
1Taif Nagarattu Veediyile.mp3



View Download




 Shiver2.ppsView Download 


1

 sunnah_authority3.ppsView Download 


1

 sunnah_authority2.ppsView Download 


1

 sunnah_authority1.ppsView Download 


1

 stayingpositive.ppsView Download 


1

 theProphetsWives.ppsView Download 


1

 StandardBearersofTruth.ppsView Download 


1

 Tears.ppsView Download 


1

 tipsforcomputerusers.PPSView Download 


1

 WhatisCholesterol.ppsView Download 


2

 wheredowestand.ppsView Download 


1

 WalletNeuropathy.ppsView Download 


1

 walking.ppsView Download 


1

 ZamZam.ppsView Download 


1

 Say_Thank_God_Tamil.pptView Download 


1

 rsi.ppsView Download 


1

 QuranHealing.ppsView Download 


1

 ProtectYourBack-ENG.ppsView Download 


1

 Prostration.ppsView Download 


1

 pmmankind.ppsView Download 


1

Wednesday, March 28, 2018

#ஆனால்_நான் ... ! - அபு ஹாஷிமா விசா வாங்காமல் டிக்கட் எடுக்காமல் அண்டை நாடு


- அபு ஹாஷிமா
விசா வாங்காமல்
டிக்கட் எடுக்காமல்
அண்டை நாடு 
அயலான் நாடு என்ற
பாகுபாடில்லாமல் 
எல்லாவற்றுக்கும் பறந்து செல்ல ஆசை ...!
ஆனால் ...
நான் பறவை இல்லையே !
ஆதம் நபியின்
பாதம் பதிந்த

Fowzia Fathima The First Woman Cinematographerஃபோஜியா பாத்திமா முதல் பெண் ஒளிப்பதிவாளர்

Vavar F Habibullah 



The Chennai born woman cinematographer and director of national repute, Fowzia learnt her craft and art in FTII Pune and taught the art of cinematography to her students at the famous SRFTI Calcutta.She is the first woman in this male dominant field.
She worked as an assistant Camerawoman to the famous cinematographer PC Ram in her early days and done many movies to her credit.Now that she has moved to her husband’s native, Trivandrum and doing lots of professional creative works in her chosen field of Malayalam cinema.
Films Gulmaal, mugavari and many other movies speak volumes about her talents.

ஸலாஹுத்தீன் ஐயூபி (முன்னுரை)

ஸலாஹுத்தீன் ஐயூபி!

யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே - ஏன்?

எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்? வருவாரா மீண்டும் ஒருவர் என்று கட்டுரைகளும் பதிவுகளும் மக்களின் விழிகளும் தேடலும் கேள்வியுமாக அலைபாய்கின்றனவே - எதற்கு?


Tuesday, March 27, 2018

மனித நேயமும் மத நல்லிணக்கமும் ஏ.ம்.ஸயீத் .

அனைத்துலகங்களும் அவற்றிளுள்ள எல்லா வஸ்துகளும் அல்லாஹ{த் தஆலாவின் படைப்புக்களாகும்.  இவற்றுள் மனித இனமே மிகவும் விசேஷம் வாய்ந்தது.  சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மறுமைப் பயனுக்குரிய சரியான வழியை வகுத்து செயல்படுவதால் மனிதர்களில் முஸ்லீம்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் சமூகமாக பிரிந்து வாழ்கின்றார்கள்.  அவ்வாறின்றி மொழி, நிறம், நாட, இனம், குலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு சமூகங்களாகப் பிரிக்கப்படும் முறை இஸ்லாத்தில் கிடையாது.

ஒவ்வொரு சமூகத்திற்கும் சில தனித்துவங்கள் உண்டு.  இத்தனித்துவத்தில் அடிப்படையில் தான் ஒவ்வொரு சமூகத்திற்கும் பெயரிடப்படுகின்றது.   இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமான இதர கொள்கைகளை கடைப்பிடிப்போர் அனைவரும் பிற சமூகத்தினர் என நாம் கணிக்கின்றோம்.  உலக மனிதர்கள் இவ்வாறு இரு சமூகங்களாக பிரிக்கப்பட்டாலும் எல்லோரும் அல்லாஹ்வின் சிருஷ்டிகளாகும்.

நாம் அனைவரும் பகுத்தறிவுடைய மனிதர் என்ற வகையில் பிறமனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் முஸ்லீம்கள் என்ற வகையில் பிற சமயத்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் வைக்க வேண்டிய தொடர்புகள் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

மூஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்

அல் ஹாபிழ் மௌலவி எஸ். சுஹ்பத் அலி மிஸ்பாஹி
பேராசிரியர் - அல் பத்ரியா அரபுக்கல்லூரி – கறம்பக்குடி – புதுக்கோட்டை
முன்னாள் பேராசிரியர் - திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹ{தா

ஈமான் என்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை எவ்வித திருத்தமும் மாற்றமுமின்றி உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிவதற்கு ஈமான் என்று கூறப்படும்.

இஸ்லாம்

முஸ்லிம் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதுடன் அவனால் தடுக்கப்பட்டவர்களைத் தவிர்ந்து கொள்பவருக்கு முஸ்லிம் என்று சொல்லப்படும்.  எனவே ஒரு முஸ்லிம் இறைவனின் சட்டதிட்டங்களை நிலைமைக்கேற்ப அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  உதாரணமாகத் திருமணம் செய்ய நாடுபவன் திருமணத்தின் சட்டங்களையும் அதே போல ஒரு வியாபாதி இஸ்லாமிய வியாபாரச் சட்டங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  அதன் அடிப்படையில் அறிய வேண்டிய அவசியச் சட்டங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை நான் தொகுத்துள்ளேன்.  அப்புத்தகத்தின் ஒரு சில கருத்துகளையே இங்கு கட்டுரையாக தொகுத்து வழங்குகிறேன்.

ஆடம்பரத்தின் முடிவு அழிவு!

நீடூர் ஏ. முஹம்முது சயீது பி.ஏ.,பி.எல்.


“எந்த ஊரையாவது நாம் அழிக்க நினைத்தால் சுகபோக வாழ்க்கை வாழும் அதன் மக்களுக்கு கட்டளைகள் அனுப்புகிறோம் அவர்கள் அதில் மாறுசெய்கிறார்கள் அவர்களுக்கெதிரான வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டுவிடுகிறது.  அதற்கு மேல அதை நாம் அடியோடு அழித்து விடுகிறோம். - அல்குர்ஆன் 17 : 16

இறைவனின் இந்தததிருவசனத்தை படிக்கும் போதெல்லாம் எத்தகைய பேருண்மை அதில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

உலகெங்கும் பரந்துகிடக்கிற சமுதாயத்தினரின் வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்து பார்க்கின்ற போது இறையச்சத்தை மறந்து இம்மையின் தற்கால சுகபோகங்களில் சிக்கி வாழ்க்கைப் பாதையில் நடந்தவர்களெல்லாம் பரிதாபத்துக்குரியவர்களாக வாழ்ந்து மடிந்ததை வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது.

‘மனிதருள் மாணிக்கம்’ லால்பேட்டை மர்ஹூம் ந.ப. முகம்மது இப்ராஹீம் ஹஜ்ரத்

நீடூர் ஏ. முஹம்முது சயீது பி.ஏ.,பி.எல்.

இறைவன் படைப்பினில் மனிதன் சிறப்புள்ளவன்.  அத்தகைய மனிதரில் ஒரு சிலரே மாணிக்கங்களாகத் திகழ்கின்றனர்.  இறைவனடி எய்திய நாஜிர்  லால்பேட்டை மர்ஹூம் ந.ப. முகம்மது இப்ராஹீம் ஹஜ்ரத்   அவர்கள் அப்படியொரு மாணிக்கமாகத் திகழ்ந்தவர்கள்.  இஸ்லாமிய உலகம் மறக்க முடியாத மாபெரும் மேதைகளில் ஒருவராக அவர்களைப் போற்றினாலும் மிகையாகாது.  அந்த அளவுக்கு தன்னலத்தைத் துறந்து மார்க்கக் கல்விக்காக அல்லும் பகலும் பாடுபட்டிருக்கிறார்கள்.

சங்க நடவடிக்கையில் உன் பங்கு என்ன தம்பி?

நீடூர் ஏ. எம். சயீத், பி.ஏ.,பி.எல்.


அன்புள்ள தம்பிக்கு,


அஸ்ஸலாமு அலைக்கும்.  இறைவன் அருளால் நலம்; ; நலமறிய ஆவல்.

சென்ற கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த அன்பு வேண்டுகோளின்படி நீயும் உனது நண்பர்களும் உற்சாகமுடன் மீலாத்விழா வெகு சிறப்பான முறையில் கொண்டாடியது அறிந்து மகிழ்ந்தேன் ஒரு சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாக அப்புனித விழாவில் நான் பங்கு பெறும் பேறு கிடைக்காமல் போய்விட்டது.  இது போன்ற இஸ்லாமியத் திருநாட்களில் நீங்கள் விழா நடத்தும் போது உங்களில் பலர் மேடையேறிப் பேசுவது மிக சிறப்பாக இருக்கும்.

இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.

“இல்லறச் செடியில் மழலை மலர் பூக்கப் போகிறதாம்!”

“இல்லறச் செடியில் மழலை மலர் பூக்கப் போகிறதாம்!”


-நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். ஸயீத் பி.ஏ., பி.எல்.,
புழம்பெரும் எழுத்தாளரும், நாடறிந்து நாவலரும், வழக்கறிஞருமான அல்ஹாஜ் ஏ.எம். ஸயீத் அவர்கள் (20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘முஸ்லிம் முரசு’ 12-ம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலரில் ‘இலட்சியப் பெண்’ என்ற தலைப்பில்) எழுதிய எழுத்தோவியம் இன்றைக்கும் எத்துணை பொருத்தமாகயிருக்கிறது என்பதைப் படித்துப் புரிந்து கொள்ளலாம். – ஆசிரியை



உலகப் பெண்கள் பிரச்சினை

தஞ்சை ஜில்லா கல்விச்சங்க துணைத் தலைவரும், நாடறிந்த நாவலரும்,
வழக்குரைஞருமான
நீடூர் ஹாஜி A.M..சயீத், B.A,.B.L.,

கோப்பன்ஹேகில் உலகப் பெண்கள் பிரச்சினை குறித்த ஒரு கருத்தரங்கம் நடந்தது.  பெண்ணினத்திற்கு சமத்துவம் வேண்டும்; பெண்கள் முன்னேற வேண்டும் என்றெல்லாம் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.  1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தாய்குலத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்கப்பட்டுவிட்டன.  ஆகவே, இஸ்லாமிய சமுதாயத்தில் பிரச்சனைக்கே இடமில்லை.  காலப்போக்கில் நாம் மாற்றான் கலாசரத்திற்கு அடிமையாகி, அலைக்கழிந்துவிட்டோம்.  நம்மை நாமே சீரழிவைத் தேடிக்கொண்டோம்.  அரபு நாடுகளிலே பெண்களுக்கு மஹர்கட்டியே திருமணம் நடைபெறுகிறது.  அங்கு ஆண் ஏழையாகிவிடுகிறான் - பெண் பணக்காரியாகிறாள்! இந்த விழாவில் கலந்து கொள்ள பயந்து கொண்டு கோழைகள் பலர் வரவில்லை.  மஹர் தான் நம் சட்டம்.  ஹிந்துக்களிடையேதான் இந்த வரதட்சனைப்பழக்கம்!  பெண்களுக்கு அங்கே சொத்துரிமை இல்லாததால், பெண்ணுக்கு சீராக ஹிந்துத்தந்தை மகளுக்குக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது.  ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருக்கிறது.  ஆகவே வரதட்சணைத் தேவையில்லை.

உலமாக்கள் ஆலோசகர்களாக திகழ வேண்டியது காலத்தின் தேவையாகும்

மௌலவி. ஏ.ஆர்.எம். மஹ்ரூப்

நபிமார்களின் வாரிசுகள் என்ற வகையில், உலமாக்களின் பொறுப்பு மிக முக்கியமானது. நன்மையை ஏவுவதும் தீமையைத்தடுப்பதும், அதன் அடிப்படையில் சமூகச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதும் இவர்களது கடமையாகும்.  இதனை இஸ்லாமியப்பணி எனவும் தஃவாப் பணி எனவும் அழைக்கப்படுகின்றது.

தஃவாப்பணியின் எல்லை மிக விரிவானது என்பதை நாம் அறிவோம்.  குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவது, சொற்பொழிவாற்றவது, மேடைப்பிரசங்கம் செய்வது, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாமிய போதனைகளை விளக்குவது, மார்க்கத் தீர்ப்பு வழங்குவது, நூல்கள் எழுதுவது, பத்திரிகை, சஞ்சிகை போன்றவற்றை வெளியிடுவது, தஃவா அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற அனைத்து விடயங்களும் தஃவாப் பணியில் அடங்கும்.

பெண்கள் தொழில் புரிதல் - பகுதி 3

03. பெண்கள் தொழில் செய்தல் இஸ்லாம் கூறும் அடிப்படைகள்

1. பெண்களின் இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும்

பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கே உரிய தனியான இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் முதலாவது அடிப்படை.

2. வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது

இஸ்லாம் வலியுறுத்தும் மற்றுமொரு மிக முக்கியமான விடயம்தான், வீடு என்பது பெண்களின் ராஜ்ஜியம் என்பதாகும். அந்த ராஜ்ஜியத்தின் தலைவியாக இருப்பவள் பெண். ஆணின் துணைவியாக, குழந்தைகளின் தாயாக, வீடு என்ற சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரியாக, நிருவாகியாக இருப்பது பெண்ணே. எனவே, வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம், பரிபாலனம் பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே சொன்னார்கள்: