Tuesday, November 26, 2013

முன்னாள் முதலாளியும் முதல் முதலாளியும்.....


விதவிதமான மனிதர்களை கையாளவேண்டியுள்ள சிரமமான வேலை ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் வேலை.அதனால் அவர்களுக்கு பொறுமை மிக முக்கியம்,

நானும் என் வாழ்க்கையை ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் உத்யோகத்தில்தான் ஆரம்பித்தேன்,மாதம் 300 ரூபாய் சம்பளம்.
ஆனால் நான் பணிபுரிந்த கடையில் நான் சாப்பிடவோ அல்லது வேறு வேலையாகவோ வெளியில் சென்றிருந்தால் வாடிக்கையாளர்கள் மன்சூர்தான் அட்டண்ட் பண்ணனும் என்று காத்திருந்து என்னிடமிருந்து வாங்கிச்செல்வர்.

"நீ எந்த வேலை செய்தாலும் உன்னைவிட அந்த வேலையை யாராலும் சிறப்பாகச் செய்யமுடியாத அளவு உன் முத்திரை அதில் இருக்கவேண்டும்" என்கிற என் முதல் முதலாளியின் அறிவுரை என்னை இன்னும் வழிநடத்துகிறது.


சிலவருடங்களுக்குமுன் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த என் முதலாளி தன்னை "நான்தான் மன்சூர் பாயோட முன்னாள் முதலாளி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது
நான் இடைமறித்துச் சொன்னேன்,

"இல்லை சார்,நீங்கதான் என்னோட முதல் முதலாளி"


Nisha Mansur

தகவல் தந்தவர் நிசா மன்சூர்

No comments: