Saturday, October 31, 2009

தாய்ப்பாசத்தினாலும் பக்தியினாலும்

எதிர்ப்பார்பு
ஏமாற்றம் தந்தாலும்
உறவு நிலைக்கும்
அது தாய்ப்பாசம்

எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்போது
வழியற்று வெதும்பும்
பின் மீண்டும்
எதிர்பார்க்க தொடங்கும்
அது பக்தி

தாய்ப்பாசத்தாலும்
பக்தியினாலும் ஆனது
உன்மீதான என் காதல்
 நன்றி:அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
அன்புடன் புகாரி

Thursday, October 29, 2009

பத்து வயசில...

பத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல.

அஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள்? சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.

அஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும்  அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ?) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது)

பிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை,  இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ? என்னத்தைச் செய்தென்ன? பிள்ளையெல்லா படிக்கவேணும்,  பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ? ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.

இப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.

முதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு பரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட  வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம்  வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல).

உயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.

நன்றி!/thaaimadi

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 53காகிதமும் மின் கடத்தியா?  
சுர் என்று சுட்டதே  
மின்சார கட்டணம்!
நன்றி :  http://nizardeen.blogspot.com

உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்

உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,
அது உயிர் பெறும் போது விதி வெல்லும்!
கனவுகள் கண்ணுள் நடை பயிலும்,
கண்ணிமை மூடி மனம் துயிலும்!
நரம்பின் நாளத்தில் நடனமிடும்...
இதயத்தின் ஆழத்தில் புதைந்துவிடும்!!

உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்,
அது உறக்கம் மறந்து விழிப்பு தரும்!
வசந்தம் வாசலில் வட்டமிடும்,
பருவம் பாதையில் வழி நடத்தும்!
அன்பாய் தழுவி அரவணைக்கும்...
இன்பத்தின் எல்லையில் இணைந்துவிடும்!!

உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்,
அது உள்ளத்தின் எழுச்சியில் உருகிவிடும்!
கடலலை போல எழுந்து வரும்,
கடமைகள் மறந்து கவிதை தரும்!
காதல் தழுவலில் கனிந்து விடும்...
மோகத்தில் தன்னை இழந்து விடும்!!

உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,
அது உரிமையுடனே ஆட்கொள்ளும்!
தனிமையில் நினைத்தால் தவிப்பு தரும்,
தவிப்பினில் புதிய துடிப்பு வரும்!
அமைதியில் நெஞ்சம் தடுமாறும்...
அனுதினம் அதற்கு மனம் ஏங்கும்!!

-சுமஜ்லா
.source:http://sumazla.blogspot.com"
நன்றி!

Monday, October 26, 2009

மழை
இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

(நன்றி:மறுபாதி)
source:http://faheemapoems.blogspot.com

Sunday, October 25, 2009

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு


நாள் நட்சத்திரம் பார்க்காமல்,
ஜாதகக் குறிப்பையும் புரட்டாமல்,
மணம் முடித்தன
சுக்கிலமும் சுரோணிதமும்!

இரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள
இதயமாய் துடித்தேன் நான்!

குழாய் மூலம்
வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவது போல
நேரத்துக்கு நேரம்
எனக்கு சோறு பாய்ச்சினார்கள்!

பேரில் பனி இருந்தாலும்
இந்த குடத்துக்குள்
குளிரில்லை!
நீரில் நான் மிதப்பதால்,
தண்ணீர் பஞ்சம்
எனக்கில்லை!!

இடத்தகராறு நிலத்தகராறு
நான் செய்யாமல்,
கிடைத்த இடத்தில்
குந்திக் கொள்வேன்!
திட உணவு உண்ணாவிட்டாலும்,
சத்துக்களை உறிஞ்ச மட்டும்
முந்திக் கொள்வேன்!!

தடைச்சுவராய் தோள்சுவர்கள்,
தாண்டிடுவேன் ஒரு நாள் நான்!

விடைதருவேன் கருவறைக்கு
வியனுலகைக் கண்டிடவே!!

கோபமென்றாலும் குஷியென்றாலும்
விடுவேன் ஒரு உதை!
என் உதைக்கு
மனிதவதைத் தடுப்பு சட்டத்தில்
தண்டனை தர வழியில்லை
என்பதால்,
தைரியமாகச் சொல்கிறேன் இதை!!

அம்மா!
நீ தூங்கும் போது
உனக்கே தெரியாமல்
மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும்
அப்பாவின் செய்கையை,
நீ அறிவாயா?!

கொஞ்சம் குறைவாக
சாப்பிடேன் அம்மா!!
இல்லாவிட்டால்,
என்னை எல்லாரும்
குண்டு பாப்பா என்பார்கள்!!

ஐயோ, என்ன இது?
என்னை என்னமோ
ஊடுருவிப் போகுது?!
ஓ!!
ஸ்கேன் பார்க்கிறாயா நீ!!

போம்மா,
நான் பையனா பொண்ணானு
காட்ட மாட்டேன்,
எனக்கு வெட்கமா இருக்கு!!

நான் நல்லா
வளர்ந்திட்டேன் அம்மா!
உள்ளே ஒரே இட நெருக்கடி!!

உதைத்துக் காட்டுகிறேன் பாரு,
அப்ப புரிஞ்சுக்குவ
என் பலத்தை!

போரடிக்கு அம்மா!
நான்
கதவைத் தட்டிக் கிட்டே
இருக்கிறேன்!

வெளியே வர நான் ரெடி!
நீ எப்ப
கதவைத் திறக்கப் போகிறாய்?!

-சுமஜ்லா.
.source:http://sumazla.blogspot.com"
நன்றி!

Saturday, October 24, 2009

பழகலாம் வாங்க.....

எனக்கு அரபு நபருடன் பழக்கமிருக்கிறது . எனக்கு அரசியல் வாதியுடன்
பழக்கமிருக்கிறது .
இப்படி பலர் அல்லது சிலர் கூற நாம் கேட்டிருக்கலாம் அல்லது நாமே
சிலரிடம் கூறியிருக்கலாம்.
பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் .அந்த பழக்கம்
நட்பாக காதலாக மாறலாம் நட்பிற்கு நாடோ மொழியோ நிறமோ இனமோ தடையில்லை . ஆத்மார்தமான அன்பு மட்டுமே போதுமானது.
சிலருடன் நாம் பழகும் போது அவர்களுடைய பழக்கத்திற்கு நம்மை அழைத்து
செல்வார்கள் .அல்லது நம்முடைய பழக்கத்திற்கு நாம் ஈட்டுச் செல்வோம் . இது அவரவரின்
மன வலிமையை பொருத்தே நிகழ்கிறது.

பழக்க வழக்கத்தினால் ஒரு மனிதன் முன்னேற்ற மடையவும் முடியும்
தாழ்வு நிலைக்கு செல்லவும் முடியும்.

பெற்றோர்களின் வளர்ப்பில் குழந்தைகள் மனதில் முதன் முதலில்
பழக்கம் பதிவாகிறது. இந்த பதிவு குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவனாகி வாலிபனாகி வயதாகும் வரையில் பதிவான பழக்கம் முழுமையாய் மாற்றமடைவதில்லை . அதனால் தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தர வேண்டும் என்பார்கள்.

வளரக்கூடிய சூழ்நிலையில் வாழக்கூடிய சூழ்நிலையிலும் எத்தனையோ
மாற்றங்கள் பழக்கத்தினால் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தீய பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை அவர்களைச் சார்ந்திருக்க கூடிய அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்.

நல்ல பழக்கத்தினால் ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ நூரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால்
அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம் ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும் .என்கிறார் ஒரு ஆய்வாளர்.

நம்மை விட உயர்தவர்களோடு பழகுவதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அந்த பழக்கம் நம்மை அவர்களவிற்கு சமமாக உயரச் செய்யும்.

நம் பழக்கத்தை விட குறைந்தவர்களோடு நாம் பழகிக் கொண்டிருந்தால்
அவர்களுடைய குணதிசயங்கள் நம்மில் தொற்றிக்கொள்ள நிறைய்ய வாய்ப்பிருக்கிறது .பின் நாமும்அவர்களைப் போலாகி விடுவோம்.

அது மட்டுமல்ல தாழ்வு மனப்பான்னை உடையவரோடு நாம் பழகினால்
நம்மால் எதையும் சாதிக்க முடியாது எதிலும் வெற்றி பெற முடியாது . நமக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி விடும்.

தாழ்வு மனப்பான்மையுடைய நண்பர்களை பெற்றவர்கள் அவர்களை நீங்கள் மாற்றிவிடுங்கள் இல்லை யெனில் நீங்கள் மாறிவிடுவீர்கள் .

நமது முன்னேற்றதிற்கு நம் பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு
வகிக்கிறது என்பதை மறந்திடக்கூடாது . கவனமாயிருக்க வேண்டும்.தீய பழக்க வழக்கத்தை கொண்டவரோடு நட்பு வைத்துக் கொள்வதை விட நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.அவர் திருந்தாத வரையில்.


நம்மோடு பழகும் நம் நண்பர்களின் பழக்க வழக்கங்களை நாம்

கூர்ந்து கவனிக்கதான் வேண்டும். அவர்களின் தீய பழக்கத்தினால் நமது முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைப்படக் கூடாது.


சில தீய பழக்கம் உடம்பை கெடுக்கும் சில பழக்கம் மனதை கெடுக்கும் அதனால் உறவுகள் இடையே விரிசல் கொடுக்கும்.


நமது நடத்தை பெரும்பாலும் பழக்கமே யாகும் . இவை நாம் சிந்திக்காமலேயே தானாகவே வந்து விடுகின்றன. பண்பு என்பது நமது பழக்க வழக்கங்களின் மொத்தத் தொகையாகும். நல்ல வித பழக்க வழக்கங்களுடன் ஒருவர் இருந்தால் அவர் நல்லவிதப் பண்பு உடையவர் என்று கருதப்படுகிறார்.


எதிர் மறைப் பழக்க வழக்கங்களை எதிர் மறை பண்புடையவர் ஆகிறார்.பழக்க வழக்கங்கள் தர்க்கத்தையும் பகுத்தறிவையும் விடவும் மிகப் பலமானவை .
தொடக்கத்தில் பழக்க வழக்கங்கள் நம்மால் அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிக பலவீனமாக இருக்கும் இறுதியில் அவற்றிலிருந்து வெளிவர முடியாத அளவிற்கு மிகப் பலமானவையாகி விடும் . பழக்க வழக்கங்களைத் தன்னிச்சையாகவோ அல்லது மன உறுதியானாலோ வளர்த்துக் கொள்ளலாம்.

நான்சிறுவனாக இருந்த போது எனது பெற்றோர்கள் நீ நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பழக்க வழக்கங்களே பண்பை உருவாக்குகின்றன. என்று என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது என்கிறார் ஷிவ்கெரா.


ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் நல்ல பழக்க வழக்கத்தினால் அந்த கம்பெனி அவர் மீது நம்பிக்கை வைக்கிறது அதனால் அவருக்கு உயர் பதவியை அது சம்பாதித்து தருகிறது. நல்ல நண்பர்களை தேடி தருகிறது. பலர் நம்மிடம் பழகுவதற்கு ஆர்வப்படுவார்கள்.நல்ல சிந்தனையாள்களுடன் பழகும் போது நமக்கும் நல்ல சிந்தனைகள் மலரும்.


நல்ல பழக்க வழக்கங்களை கொண்ட சிலர் சில சந்தர்பங்களில் தீய பழக்கத்திற்கு மாறிவிடுவதுண்டு இதற்கு பல வித காரணங்கள் கூறுவார்கள் இவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதில் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம் இதிலிருந்து மீள்வதற்கு இவர்களின் நண்பர்கள் உதவி செய்ய முன் வர வேண்டும் இது இவர்களின் மீது கடமையாகும்.
ஓரு பழக்கத்தை வளர்ப்பது என்பது நிலத்தை உழுவது போன்றதாகும்.
நல்ல பழக்கத்தை வளர்ப்பது ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவது போலாகும்.

எதையும் அறிவுரைகள் என்று நாம் கருதவும் கூடாது அதை ஒதுக்கவும் கூடாது இவைகள் யாவும் நமது அனுபவத்தின் பிரதிலிப்பு. 


கிளியனூர் இஸ்மத் 
நன்றி:source:www.kismath.blogspot.com

நனைந்த கன்னங்கள் !!! !!! !!!

 
அந்தத் திருமண சூழ்ச்சியில்
விழுந்த பொருளாதாரச் சறுக்கல்களின் தலைவாயில்கள்
 
பெற்ற பாவத்திற்காக விற்ற சொத்துக்கள்
பட்டியலிடப்பட காரணமான காரணகர்தாக்கள்
 
குடிசை ஓரத்தில் கேட்கும் விசும்பல் சத்தத்தில்
எதிரொலிக்கும் சோகப் பின்னணிகள்
 
பெண்னைப் பெற்றவனின் மூளை நரம்புகளில்
துளிர்த்த வியர்வைத் துளிகள்
 
இவைதான் "வரதட்சணை" என்ற கொடிய அரக்கனின்
சுய விமர்சனங்கள்
 
இனி ... இதோ
திருமணத்தால் விழி பிதுங்கும்
பெண் வீட்டாரின் சோகப் பிரசுரங்கள்

பெற்ற பெண்னை கரையேற்றும் நோக்கத்தோடு

கவலைகளைப் போர்த்திக்கொண்டு தூங்குபவனை
பயமுறுத்தும் கனவுகள் எதார்த்தமானவை

இந்த இரவு கழிய

உள்ளக் குமுறல் மட்டுமே மூலதனமாக்கப்பட்டது
ஆனாலும்...
"நாளைய திருமணம் சிறப்பாய் நடைபெற வேண்டும்"
என்ற ஆவல் பிரதிபலிக்கத் தவறவில்லை.
 
மூத்தவளுக்கு வாங்கிய நகைகளை அணிந்து
அழகு பார்த்துக் கொண்ட
இளைய சகோதரிகளின்
கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு
அர்த்தம் தெரியவில்லை!

துக்கத்திற்க்கும் தூக்கத்திற்க்கும் மத்தியில்

கழிந்தன இச்சோதனை இரவுகள்

மணப் பெண்னுக்கு வாங்கிய

உயர் ஆடைகள் ஒரு புறமிருக்க
துவைத்துக் காய்ந்து கொண்டிருந்தது

தகப்பனாரின் வெள்ளாடைகள்

அது கரை படப் போவதும்

இவர் குறைபடப் போவதும்
தவிர்க்கமுடியாதது

அந்தப் பேராசைக் காரர்களின்

சூழ்ச்சியில் சிக்கித் தவித்து
சின்னாபின்னப் படப் போவது

இவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.

மறுநாள்

மூன்று வாடகை டம்ளர்கள் தவறி
அதன் விலை கொடுக்கப்பட்டது
 

இன்னும் வழக்கமான
பிரியாணியில் உப்பு இல்லை
எங்களுக்கு வரவேற்பு சரிஇல்லை
என்ற குறைபாட்டு கோஷங்களுக்கிடையில்
திருமணம் சிறப்பாய் நடந்தேறியது .

பிறந்த வீடு துறந்து வெளியேறினாள் புதுப்பெண்
அந்த உள்ளத்தில் எழுந்த "பாச எரிமலைகள்"

உதட்டில் அடக்கப்பட்டு
விழிகளில் வழிந்தது
 
உற்சாகமாய் கையசைத்து வழினுப்பியது
அந்த இரண்டு வயதுக் குழந்தை
ஆம்.. அந்த தந்தையின் நான்கில் ஒரு பங்கு
சுமை இறக்கப்பட்டிருக்கலாம்...

ஆறு மாதங்கள் உருண்டோடின!
புகுந்த வீட்டு அராஜகங்கள் குறித்து

மகள் எழுதிய ஆறு பக்க கடிதம்
தகப்பனின் வாயிற் கதவைத் தட்டியது
 
நான்கு மாதத் தவணையில்
தர ஒப்புக்கொண்ட வரதட்சணை பாக்கி
என்ற இடத்தில் அடிக் கோடிடப்பட்டிருந்தது
இருந்தாலும் என்னைப் பற்றி

கவலைப்பட வேண்டாம்
என்று முடிக்கப்பட்டிருந்தது.
 இதயப் புண்களில் கசியும்

இரத்தத்தில் பாய்ச்சப்பட்டது இன்னுமோர் அம்பு
அணைந்த விளக்குகளில் நனைந்த கன்னங்கள்
துடைத்துக் கொள்ளப்பட்டன
 
தோளில் துண்டோடு பணம் தேடப் புறப்பட்டார்
சோகத்தில் திரும்பி வந்தவருக்கு
சுபச் செய்தி சொல்லப்பட்டது
ஆம்.. இளைய மகள் பூப்பெய்தி விட்டாள்.
from Faizurhadi          

பணமா..? குணமா...?


பணம்
மனிதனை மனிதனிலிருந்து
மாற்றி விடும்
குணம்

இதைத்தேடுவதில்
தன்னை
தொலைத்துக் கொள்ளும்
மனித இனம்

கேட்டதும்
கொடுக்கவில்லையெனில்
உறவுக்குள் ஏற்படும்
சினம்

வழிபாடுகள்
வேறுபட்டாலும்
கொடுக்கல் வாங்கலில்
உடன்படும்
மனம்

வெட்டிக் கொள்வதும்
கட்டிக்கொள்வதும்
பணத்தினால் ஏற்படும்
மனஊனம்

செத்தும் கொடுத்தவர்களும்
சொத்தையே கொடுத்தவர்களும்
பலரின் வாழ்க்கைக்கு
பாலம்

குணம் மிகைத்தவர்கள்
இனம் வகையில்லாமல்
என்றும் கொடுப்பார்கள்
தானம்


கொடுப்பதற்கு இருந்தும்
பறிப்பதற்கு பாயும்
பணப்பிச்சனின் உள்ளம்
சாணம்

பணம்தான் வாழ்க்கை
என்பவர்களிடம்
இல்லை குணம்
அவர்களிடம் இருக்கும் உயிர்
என்றும் பிணம்…!

நன்றி: சிந்தனை கிளியனூர் இஸ்மத்
souurce:6வது அறிவு...

வலி உன்னை வளர்த்தெடுக்கும் தாய்-- byஅன்புடன் புகாரி


வலி
உன்னை
வளர்த்தெடுக்கும் தாய்

உன்னை
உனக்கே உரித்துக்காட்டும்
அம்மணம்


தேடாத விழிகளில்
திசைகளெல்லாம்
ஊமைகளாய் மூடிக்கிடக்கும்

வலியே
தேடலின் வல்லமை


உன் உண்மை முகவரியை
எழுதும் முள்

இருட்டை உடைத்து
வெளிச்ச வழி குடையும்
சிற்றுளிகளின் பேரியக்கச் சக்தி


மனிதா
நீ எப்போதும்
எதையும் வென்றதே இல்லை


உன் தோல்விகள்தாம்
ஒன்றுகூடி
வலிகள் பெறுக்கி
வெற்றியிடம் உன்னை
அடித்து இழுத்துக்
கொண்டுபோய்ச் சேர்க்கிறது

நன்றி:அன்புடன் புகாரி

Friday, October 23, 2009

நேற்று, இன்று, நாளை! அளவோடு கவலைப்படு!

தன்னுடைய  Just Enough Anxiety என்ற புத்தகத்தில், கவலைகள் நமக்குகூர்ந்து கவனிக்கும் ஆற்றலைத் தருகின்றன, கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களோடு ஒப்பீடு செய்து மாற்றிக் கொள்வதற்கும், ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதற்கும், உண்மையிலேயே சிறந்த பலனைத் தருவதாகவும் ஆன கருவியாக ஆக முடியும் என்று சொல்கிறார்.  கவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை  தான்! அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான்! ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும்! அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா? அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு  அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக  நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.


நமக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வீணை, கிடார் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்திகள் போதுமான அளவுக்கு முறுக்கேற்றினால் தான்  தேவையான ஒலி கிடைக்கும். அளவுக்கு அதிகமாக முறுக்கினால், தந்தி அறுந்து விடும், அளவு குறைந்து போனாலோ தொய்ந்து போய் ஒளியே வராது என்பது போல, கவலைகளால் ஏற்படும் முறுக்குத் தன்மை கூட அவசியம் தான் என்பது இவருடைய வாதம்..

பாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.

கவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை! கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற
source:consenttobenothing

Thursday, October 22, 2009

நிறைவான வாழ்வு

தலைமையேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் நடத்தைகளை சிறப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டும். எல்லோரிடமும் இன்முகத்துடன் நடக்க பழகி கொள்ள வேண்டும். வேண்டியவர்கள் வேண்டாதவர் என பாகுபாகுபடுத்தி பார்க்கக் கூடாது. தன்னலம் பாராத பொது நலத்தொண்டில் பிரியப்படுவறதாக இருத்தல் வேண்டும். அமைதி, பொறுமை, நிதானம், நீதி நேர்மை சகிப்பு தன்மை இவற்றுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சலுகை என்பதை யாருக்காகவும் செய்யக்கூடாது. வன்முறையை தவிர்ப்பவராக இருத்தல் வேண்டும்.
காட்டுக்கு போனாலும் கூட்டு உதவாது இருவருக்கு மேல் மூவறாகவோ செல்லும்படி நேரிட்டால் உங்களுக்குள் ஒருவரை தலைமை ஏற்க செய்து அவர் சொற்படி நடக்க வேண்டும் தலைமைக்கு கட்டு பட்டுதான் நடக்க வேண்டும் அல்லாமல் ஒழுங்கீனமாக நடக்கக்கூடாது. துலைமையை குறை கூறாமல் தவறுகளிருந்தால் சுட்டி காட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால்
குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அத்தியாவசியமாகும். தாய்பால் கொடுப்பதால் குழந்தை நல்லதிட காத்திரமாகவும், நோய்களை தடுக்கும் வலிவும் உடம்பில் ஏற்படுகிறது. தாயின் குண நலன்கள் பிள்ளை பெற்று குடும்ப நலன்காக்கும் பந்தபாசம் ஏற்பட்டு பெற்றோர்களை காப்பாற்றுவார்கள். குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் குழந்தைக்கு தாயிடம் சுரக்கும் சீம்பால் தான் கொடுக்க வேண்டும். சீம்பால் கெடுதல் அல்ல! சீம்பாலில் குழந்தையின் இதயம், நுரையீரல், மூளை போன்ற முக்கியமான அவயவங்கள் வலுப்பெற்று வளரவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடியது! தவறாமல் சீம்பால் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானதும் ஆகும்.

குழந்தை வளர்ப்பு
உங்கள் குழந்தைகளை பாசத்துடன் வளருங்கள். செல்லத்துடன் வளர்த்து விடாதீர்கள். பாசத்துடன் வளரும் குழந்தைகள் பிற்காலத்தி;ல் பாசத்தைகாட்டி பெற்றவர்களை காப்பாற்றும். செல்லத்துடன் வளரும் குழந்தைகள் பின்னாளில் தானும் சீரழிந்து பெற்றவர்களையும் மன வேதனைகளுக்கு ஆளாக்கி தலை குனிவை உண்டாக்கிவிடும்.

அடிமை
பெண்கள் அடிமைகளோ, விளையாட்டு கருவிகளோ, போகப்பொருளோ அல்ல. அவர்களுக்கும் உணர்வுகளும், உணர்ச்சிகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனகிளர்ச்சிகளும், விருப்பு வெறுப்புகளும், உண்டு என்பதை ஆண்கள் (கணவர்கள்) உணர்ந்து நடந்து கொண்டால் வீட்டில் என்றும் இன்ப சூழ்நிலை நீடிக்கும்.

அடக்கம்
பெண்கள் நவ நாகரீக உடையணிந்து தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் அலங்கரித்துக் கொள்வதம் தங்கள் கணவனுக்காகவே அல்லாமல் பிறருக்காக இருத்தல் கூடாது. எனவே நகைகளை அளவுடன் அணியுங்கள். அதிக அல்லாமல் வீண் அலங்காரமோ வீண் ஆடம்பரமோ நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகல்ல வாங்கு சிட்டியும் கால்விரல்களில் பவுன்மெட்டியும் முழங்கை வரை வளையல்களையும் அணிந்து கொள்வதால் பிறரின் ஏக்க பார்வைகளுக்கும் கண்ணெரிக்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும். மேலும் அது நம்மையும் நம் செல்வத்தையும் அழித்துவிடும். இது தேவைதானா? யோசியுங்கள்!

- M.A.P. ரஹமத்துல்லா

மனைவிக்கு மட்டுமா உபதேசம்?


‘ஒரு மனிதன் பாவியாகிவிட, அவன் உணவளிக்க கடமைப்பட்டவரு(மனைவி)க்கு உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.)
ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் அவள் கரம்பிடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து அவனது கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அவளது கடமை என்பதில் இருகருத்தில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற, “நல்ல பெண் எவரென்றால், கணவன் அவளைக் காணும்பொழுது மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கீழ்படிந்து நடப்பாள். தனது விஷயத்திலும்; தமது பொருள் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை கடைப்பிடிக்க மாட்டாள்!’ என்ற நபிமொழிக்கொப்ப, ஒரு பெண் பணிந்து வாழ்ந்தால்தான் அவள் சிறந்த பெண்மணி என்ற நற்பெயரை அடைய முடியும்.

கண்ணியம் வாய்ந்த கணவனை அவமதிக்கும் வகையிலும் பெற்ற பிள்ளைகளை நிராதரவாக விட்டும் ஒரு பெண் வாயடித்துக்கொண்டும், வம்பளத்துக்கொண்டும், அடங்காப்பிடாரியாக சுற்றியளைந்தாள் என்றால்…ஊர்மக்கள், இவளா? ராட்சசியாயிற்றே! வாயாடியாயிற்றே பெண்ணுருவில் நடமாடும்…ஆயிற்றே! என்றெல்லாம் (அவள் காதில் விழாதவாறு) பேசத் தலைப்படுவர். இத்தகைய பெண்களை நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்துரைத்துள்ளார்கள்.

‘கணவனுக்கு மாறு செய்வதன் மூலமும் வந்தபடி பிறரை சாபமிடுவதன் மூலமும் அனேக பெண்கள் நரகம் புகுத நான் கண்டேன்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, ஒரு கணவன் தமது மனைவியுடன் இன்புற்று வாழ அப்பெண் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க முறைகள், சட்டமுறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி இஸ்லாம் நன்குரைத்துள்ளது. இதன்படி வாழ்வது இஸ்லாமிய பெண்ணின் கடமையாக இருக்கிறது.

ஆயினும் ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் கூறிய அளவு அறிவுரைகளை, அவளைக் கரம்பிடித்த கணவனுக்கு எடுத்துரைக்கவில்லையா? என்ற கேள்விக்கணை பல ஊர் முஸ்லிம் பெண்கள் தரப்பிலிருந்து எழுந்தவாறுள்ளது. இவ்வாறு இவர்கள் கேள்வி எழுப்ப நியாயமான காரணங்களும் உள்ளன.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? ஒழுக்கம் பேண வேண்டும்? கணவனையும், குழந்தைகளையும், அண்டை அயலாரையும் அவள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பெண்ணுபதேசங்கள் நிறைய உள்ளன. அவை ஒவ்வொரு ஊரிலும் பிசங்கங்களில் உபதேசிக்கப்படுகின்றன. ஆனால், இவைபோன்ற அறிவுரைகள் கணவனுக்கும் அதிகம் இருந்தும் கணவனுக்கு செய்யும் உபதேசங்கள் குறைவாக உள்ளன.! இது ஏன்? ஏன்ற கேள்வியை பேண்கள் கேட்கின்றனர்.

தவிர, ஒரு சில குடும்பங்களில் சில கணவன்களால் குடும்பப்பெண்கள் கடும் பிரச்சனைக்கும் தொல்லைக்கும் ஆளாகி, அவனது கொடும்பிடியில் நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை. ஒரு சில கணவன்கள் பெண்களை அடிமைகளைப்போலெண்ணி இழிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் தமது குடும்பப்பொறுப்பை எண்ணி சம்பாதிக்காமல் மாமனார் வீட்டை உறிஞ்சிக்கொண்டு மிடுக்குடன் பவனி வருகின்றனர். மற்றும் சிலர் மணமுடித்த கையோடு பெண்ணை அந்தரத்தில் விட்டு திரும்பிப்பாராமல் தலைமறைவாகி விடுகின்றனர். வேறு சிலரிடம் சொல்ல முடியாத உடல்கூறு நோய்கள், கடும் பிணிகள் இருப்பதால் பெண்கள் தமது சுகமான வாழ்வை இழக்கும் நிலை!

இப்படி எத்துனையோ வெகு மோசமான குற்றங்கள் குறைகள் பல கணவன்களிடம் உண்டு. இதில், தந்தை, நாத்திகளின் அவதூறுகளையும் கிசுகிசுப்புகளையும் காதில் போட்டுக்கொண்டு அமைதியின் வடிவங்களாகத் திகழும் பெண்மணிகளை அணுஅணுவாக இம்சித்து சித்ரவதை செய்யும் கொடும்பாவிகளும் உண்டு. ஊர்தோறும் இப்படிப்பட்ட அவஸ்தைகளால் மனம் குமைந்து குமுறி அவதியுறும் அபலைப் பெண்களின் ஈனஸ்வரங்கள்தான் சில சமயம் கேள்விக்கணைகளாக மாறுகிறது.

அதாவது, பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாம் இவர்களைப்போன்ற கொடுமைக்கார கணவன்களுக்கு ஒன்றும் கூறவில்லையா? என்பதுதான் அந்தக் கேள்விக்கணைகள்! உண்மையில் கணவன்மார்களுக்கும் இஸ்லாம் நிறைய அறிவுரைகள் நல்கியுள்ளன. இதோ, ஒரு பெண்ணை கரம்பிடித்து விட்டால், அந்த நிமிடமே கணவனின் கடமையென்னவென்பதை தெளிவுபடுத்துகிறது.

நீங்கள் அப்பெண்களை நல்ல முறையில் வாழச்செய்யுங்கள். இது சுருக்கமான திருக்குர்ஆன் வசனமாகும். இதைத்தொடரந்து இவ்வாறு உபதேசிக்கிறான் அல்லாஹ். ‘அவர்களை நீங்கள் வெறுத்தால்; நீங்கள் அவர்களை வெறுக்கலாம்-ஆனால் அல்லாஹ் அவர்களில்தான் உங்களுக்கு பெரும் நன்மைகளை வைத்திருப்பான்.’ – அல்குர்ஆன் 4:19

பெண்ணினத்தின்மீதே நல்லபிப்ராயத்தை விதைக்கும் வகையில் இவ்வசனங்களை அல்லாஹ் கூறியுள்ளான். இனிய வாழ்க்கை, இரணவிருத்தி, மன அமைதி போன்ற பாக்கியங்கள் ஒருவன் மணமுடித்தபின் கரம்பிடித்தவள் மூலம் பெறவியலும்-அதை முறையாகப் பெறுவது கணவனின் கடமை என்பது இவ்வசனங்களின் நோக்கம்.

ஒரு மனிதன் பதவி பட்டங்கள் சொத்து செல்வங்கள் குழந்பை;பேறுகள் மூலம் அடையாத அமைதியை தமது இல்லாள் மூலம் அடைய முடியும். தமது மனைவி மூலம் அவன் காணும் அன்பும் ஆதரவுமே அத முக்கியமானது, நீடித்தது, கலங்கலில்லாதது! என்பதை இதோ இன்னொரு வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ‘நீங்கள் சேர்ந்து வாழும்) மனைவிகளை அவர்களிடம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து அல்லாஹ் அவர்களைப் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டுபண்ணினான்  – அல்குர்ஆன் 30:21

இந்தளவு பெண்ணின் பெருமையை அல்லாஹ் கணவன்களுக்கு அறிவித்துள்ளான். ஒரு பெண்ணுக்குரிய கடமைகளை தனது திருமறையில் விபரித்துள்ளதுபோல், ஆணுக்கும் தெளிவாக உபதேசித்துள்ளான். இஸ்லாமியப் பெண்களில் பலர் குர்ஆன், ஹதீ }; அறிவுரைகளை கற்பதிலும் மார்க்க நூல்களை படிப்பதிலும் அக்கறையில்லாமல் இருப்பதால், கணவன்மீது தங்களுக்குரிய உரிமைகளைப் பெறத் தெரியாமல் இருக்கிறார்கள்.

பெண்ணுரிமை நிலைநிறுத்தும் உபதேசங்கள் திருக்குர்ஆனில் நெடுகேயுள்ளன. குர்ஆனில் எங்கெல்லாம் பெண்களுக்கான உபதேசங்கள் இடம்பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் ஆண்களுக்கும், உபதேசிக்கப்பட்டுள்ளன. சுpல எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். ‘நபியே! விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறும்!அவர்களும் தமது பார்வையை கீழ் தாழ்த்தி தமது கற்பை அரட்சித்துக் கொள்வார்களாக! அதுவே அவர்களுக்கு பரிசுத்தமானதாகும். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாகும்.’ – அல்குர்ஆன் 24:30 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: ‘ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக் குரியதாகும். பெண்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே உரியதாகும்.’ – ஆல்குர்ஆன் 4:32

இப்படி ஆண்களுக்கும் பெண்ணுரிமைகளை போதிக்கும் பொன்மொழிகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் சட்ட அமைப்பிலும் நிறையவுள்ளன.

அதேபோல், பெண்கள் விஷயத்தில் ஆண்களுக்கு சற்று அதிகமான அறிவுரைகள் உள்ளன. அதில் முத்தாய்ப்பாக் ‘அப்பெண்களுக்கு உரிமைகள் உள்ளன! கடமைகள் உள்ளதுபோல்!’ என்ற திருக்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இவ்வசனத்தில் பெண்களின் கடமைகளை காட்டும் சொல்லைவிட அவர்களது உரிமைகளுக்கு குரல் எழுப்பும் சொல் முதன்மை இடம் பெற்றுள்ளது. பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு இஸ்லாம் முழுமையாக செவி சாய்த்துள்ளதற்கு இவ்வசனம் ஒன்றே பலமான சான்று!

ஒரு கணவனால், தமது மனைவிக்கு நியாயமான முறையில் வாழ்க்கையை தரவில்லையெனில் அவளுக்கு அன்பான முறையில் விவாக விடுதலை அளித்து விடுவதே அவனது மனுஷத்தன்மைக்கும் மனித நேயத்துக்கும் அடையாளமாகும்.

அண்டை அயலாருக்கும் தமது பணியாட்களுக்கும் ஏன் முஸ்லிம் அல்லாதோருக்கும்-இன்னும் சொல்வதெனில் வாயற்ற ஜீவன்களுக்கும் புற்பூண்டுகளுக்கம் அத்துணை படைப்புகளின் உரிமைகளையும் போற்றச்சொல்லும் இஸ்லாம் கணிசமான மஹரீந்து கண்ணியமான முறையில் ஒரு பெண்ணை கரம் கோர்க்கச் செய்யும்போது அவளது பெண்ணுரிமையை எந்தளவு போற்றும்ஃ என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணை ஆதரித்து பாதுகாக்கும் முறையை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்: ‘நீங்கள் உண்ணும்பொழுது மனைவியையும் உண்ணச்செய்யுங்கள். உங்களுக்க உடை வாங்கும்போது அவருக்கும் வாங்குங்கள். அவரது முகத்தில் அடிக்காதீர்கள். அசிங்கமாக பேசாதீர்கள். வீட்டில் தவிர (வெளியில்) அவரை கண்டிக்காதீர்கள்.’ (ஆதாரம்: அபூதாவூது)

இதுபோன்ற ஹதீஸ்களெல்லாம், ஒரு பெண்ணை இரக்கமின்றி தண்டிப்பதையும், அவளது பாசம் மிக்க பெற்றோரிடமிருந்து அரக்கத்தனத்துடன் அவளை பிரித்து வைப்பதையும், அனாதையாக அவளை விட்டு விட்டு ஒதுங்கி பதுங்கி விடுவதையும், தமது அக, புற நோய்கள் காரணமாக அவளுக்கு வாழ்வளிக்க முடியாத பொழுது, இதமான முறையில் விவாக விலக்களித்து அவளது மறுவாழ்வுக்கு இடந்தராதிருப்பதையும் பெரிதும் கண்டிக்கின்றன.


‘ஒரு மணிதர் அவரது மனைவி மக்களை நேர்மையுடன் பராமரிக்க வேண்டியவராக இருக்கின்றார். அது பற்றி அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்!’ (ஆதாரம்-புகாரி) என்ற ஹதீஸை சம்மந்தப்பட்ட கணவன்கள் சிந்திக்க வேண்டும். தமது மனைவியை எந்தவொரு வகையில், இம்சித்தாலும், தமக்கு விளையும் இறை முனிவுகள் தண்டனையிலிருந்து எந்த ஆணும் தப்பிக்கவியலாது.

நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் சமுதாயத்துக்கு அவர்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான பிசங்க நிகழ்ச்சிகளில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு அவர்கள் நிகழ்த்திய அரஃபாத் பிரசங்கம் வரலாற்று சிறப்பு கொண்டதாகும். இக்காலம் இஸ்லாம் முழுமை பெற்றிருந்த காலமாகும். பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் இறையோனைக் காணச்செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்த காலமாகும். லுட்சக்கணக்கான சஹாபாக்கள் குழுமியிருந்த அந்த சபையில் அவர்களின் பெரும்பகுதி பேச்சு பெண்ணினத்துக்கே பெருமை சேர்ப்பதாகவும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்தது.

‘மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.’ (ஆதாரம்-புகாரி)

‘உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடம் சிறந்தவராகும்! நான் எமது மனைவியரிடம் நல்லவனாக இருக்கிறேன். என்ற நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிக்கிணங்க- ஒவ்வொரு ஆண் மகனும் தனது துணைவியின் உரிமைகளையும், அந்தஸ்துகளையும் காப்பாற்றுவது புனித கடமையாகும்.


மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம்,,
 நன்றி::nidur.info

பூவும் பொன்மின்னலும்


பூப்பூக்கும் ஓசை
அந்தப் பூவிற்கே கேட்பதில்லை
பொன் மின்னல் பூக்கும் ஓசையோ
இந்த பூமியெங்கும் கேட்கும்
பூவாகவும் இருப்போம் நாம்
பொன்மின்னலாகவும் வாழ்வோம்


நன்றி:அன்புடன் புகாரி

உங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – முகமன் கூறுதல்!

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).
பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, மேதைகளோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.
கொள்ளைக்காரனைக் கூட கொள்கை வீரனாக மாற்றிவிடும் வார்த்தையே இந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது கல் நெஞ்சங்களையும் இந்த ஸலாம் கரைத்துவிடும். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். நூல்:முஸ்லிம்
இந்த நபிமொழியின் முதல் வாசகத்தை சற்று விளக்கமாக பார்த்து விட்டு அடுத்த விஷயங்களில் நுழைவோம். உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் செல்லாக்காசுகளே!
உலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட பல நல்ல காரியங்களை செய்வதைப் பார்க்கிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு சுவனம் கிடைக்குமா? என்றால், நிச்சயமாக இல்லை. சுவனம் செல்வதானால் இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.
இறை நம்பிக்கை இல்லையெனில் எந்த நற்செயலும் அது எவ்வளவு பெரிய மலையைப் போல் இருப்பினும் கானல் நீரே! இதைப்பற்றி அல்லாஹ்வும் இவ்வாறு கூறுகிறான்.
மேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)
நான் வேலை செய்கிறேன், ஆனால் என்னுடைய பெயர், ஊழியர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போல் தான் ஸலாம் கூறாமலிருப்பதுமாகும். மனிதர்கள் தரும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கே தலை சுற்றுகிற அளவிற்கு நிபந்தனைகளைப் போடுவதை ஏற்றுக் கொள்கின்ற நாம் நிரந்தர சுவனத்தை, அளவிலா இன்பத்தை சம்பளமாக தரும் இறைவன், அவன் மட்டும் நிபந்தனைகள் போடக்கூடாதா? எல்லைகள் வகுக்க கூடாதா? அதை ஏற்கின்ற நாம் இதை மட்டும் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்.
அடுத்து நமக்கு உண்டாகும் சந்தேகம் இதுதான். ஸலாம் சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் பாசமோ, பிரியமோ, நேசமோ, சமாதானமோ உண்டாவதாக தெரியவில்லையே. சண்டைகளும், சங்கடங்களும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் ஸலாம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி நாம் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல வேண்டும்? வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா? போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா? இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும்?! நிம்மதி உண்டாகும்?!. எப்படி சண்டைகள் தீரும்?! இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா? அல்லாஹ்வை, ஆம் ஸலாம் என்பதும் அல்லாஹ்வின் பெயர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்றி ஒன்பது திருபெயர்கள் உள்ளன. அவற்றை (விளங்கி) மனனம் செய்பவர் சுவனம் சென்றுவிட்டார். நூல்: புகாரி
தொண்ணூற்றி ஒன்பது திருப்பெயர்களில் ஒன்றுதான் இந்த ஸலாம். அவைகளில் ஒன்று அஸ்ஸலாம் என்று கீழ்காணும் வசனம் தெரிவிக்கிறது.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன்; பெருமைக்கு உரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.(அல்குர்ஆன் 59:23)
எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் ஸலாத்தினை அதன் உண்மையான வடிவில், பொருளுணர்ந்து ஸலாம் கூறுபவர்களாக ஆக்கி அருள்வானாக!
- சாதாதுல்லாஹ்
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்
 நன்றி:இஸ்லாம்கல்வி.காம்

புன்னகையைக் கொடு

முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்
வழமையாய்ப்
பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு
போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து
உதிர்ந்து போகும்

அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
 நன்றி::அன்புடன் புகாரி

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?


இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.

இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.

அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

நிச்சயமாக இஸ்லாம் மதம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. ஆடை கட்டுப்பாடையே அது வலியுறுத்துகிறது. சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். என்றால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.

படிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.

பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.

அவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளைச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போத‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

முஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.

பெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.

முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது. பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.

ஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.

முஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.

வேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.

படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.

மத அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிகளில் பெண் கல்வியின் அவசியத்தை தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.

இன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் ரொம்ப உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.

 அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
 நன்றி::அன்புடன் புகாரி

Wednesday, October 21, 2009

புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள் ( 1 )


புனித ஹஜ்ஜின்  பயணக் குறிப்புகள்

தொகுப்பு
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்

வழக்கறிஞர்,பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க


தல்பியா

வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை

உம்ரா நிய்யத்:

அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்ரத்தன்
இறiவா உம்ராவை நாடி நான்
இஹ்ராமைக்கட்டியுள்ளேன்.  இதை எனக்கு
இலேசாக்கித் தந்து ஏற்றுக் கொள்வாயாக.

உம்ரா

உம்ராவுடைய பர்ளு
1.  நிய்யத்    2. இஹ்ராம் ஆடை    3. தவாபு    4.  சயீ
5.  முடி சிரைத்தல்


ஹஜ் நிய்யத்
அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன்
இறiவா

ஹஜ்ஜை நாடி நான் இஹ்ராமைக
கட்டியுள்ளேன்.  அதை இலேசாக்கிதந்து
ஏற்றுக் கொள்வாயாக.

ஹஜ்ஜுடைய பர்ளு

1.  நிய்யத்    2. இஹ்ராம்    3. தவாப்ஜியாரத்    4. சயீசெய்தல்
5.  அரபாத்தில் தங்குதல்

பிரயாண துஆ

சுப்ஹானல்லதி ஸஹ்ஹரலனா ஹாதா
வமாகுன்னா லஹ{ முக்ரினீன்
வஇன்னா இல ரப்பினா லமுன்கலிப+ன் ஜித்தாவிலிரந்து மக்கா 76 கி;.மீ தூரம் 55 வது கி.மீட்டரில் ஹரம் எல்லை ஆரம்பம்.

அங்கு ஒத வேண்டிய து.ஆ இறiவா இந்த இடம் நிச்சயமாக உன்னுடையதும்.  உன் திருத்தூதருடையதுமான புனிதமான இடமாகும்.  உன்னுடைய அடியார்களை எழுப்பும் அந்த நாளில் எனக்கு உனது வேதனையிலிருந்து அபயம் அளிப்பாயாக மக்கா நகரம் நுழையும் போது ஓதும் துஆ.

    இறைவா திருமக்காவில் இருக்கும் வரை என் மனதிற்கு அiதியைத் தந்து அருள்வாயாக ஹரம் ஷரீபான கஅபாவில் சபா மர்வாகுபதியில் (புயவந ழே.24)

    பாபுஸ்ஸலாம் வாசல் வழியாக நுழையும் போது ஓத வேண்டிய துஆ.

    பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! அல்லாஹ{ம்ம அன்தஸ்ஸலாம் வமின் கஸ்ஸலாம் வஇலைக்க யர்ஜிஉஸ்ஸலாம் ஹய்யினா… யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன் உன் மூலமே சாந்தி ஏற்படுகிறது.  எனவே எங்களைப் படைத்து பரிபாலிப்பவனே! எங்களை சாந்தியோடு வாழச் செய்வாயாக! ஆதன் பின் ஸலவாத் ஓத வேண்டும்.

முதன் முதலாக கஅபாவைப் பார்த்தவுடன் ஓதவேண்டிய துஆ:எ

    யாஅல்லாஹ்! புனிதமான இந்த உனது வீட்டிற்கு சிறப்பையும் மகத்துவத்தையும்; கண்ணியத்தையும் கம்பீரத்தையும் அதிகப் படுத்துவாயாக என் வாழ்க்கையில் கேட்கப்போகிற அனைத்து ஹலாலான, துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக (மற்றும் நாம் நினைக்கும் எல்லா துஆக்களையும் கேட்ட பிறகு) ஸலவாத் ஓத வேண்டும்.

துவாபை ஆரம்பிக்கும் முன்பு ஓதவேண்டிய துஆ:

    புனிதம் மிக்க உனது திரு வீட்டை ஏழு சுற்று நாடி உம்ராவின் தவாபை உக்காகச் செய்கிறேன்.  அதை இலேசாக்கித் தந்து, என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! தவாப் ஆரம்பிக்கும் முன்பு “ஹஜ்ருல் அஸ்வத்” முன்பாக ஓதவேண்டிய துஆ.

இறைவா! உன்னை விசுவாசம் கொண்டவனாக, உனது கட்டளையை நிறைவேற்றியவனாக, உனது திருநபியின் வழியைப் பின்பற்றியவனாக, மேலும் உனது திருநபியின் மீது ஆசியும், ஆசீர்வாதமும் கூறியவனாக, உன் திருநாமம் கொண்டு ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுகிறேன்.  பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர்.  தவாப் செய்து முடித்தவுடன் மகாமே இப்ராஹீம் பின்னால் 2 ரக அத் தொழுதபிறகு ஜம்ஜம் கிணறுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு ஓத வேண்டிய துஆ:


“பயனுள்ள கல்வியையும், தாராள சம்பத்தையும், இரண பாக்கியத்தையும், எல்லா நோய்களுக்கும் அருமருந்தாகவும் ஆக்கி வைக்க யா அல்லாஹ்! உன்னிடம் வேண்டுகிறேன்.

    ஜம்ஜம் நீர் பருகியதும் கஅபாவின் வாசல் முல்தஜிமைப் பிடித்து ஓதவேண்டியதுஆ

    “பழமையான புனிதமான இவ்வீட்டிற் குறித்தான யா! அல்லாஹ்! நரகிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக! இன்னும் நீ எங்களுக்கு அளித்தவற்றில் அபிவிருத்தி (பரக்கத்) செய்வாயாக! உனது சிறந்த கூட்டத்தாரிகளில் எங்களை சேர்ப்பாயாக! நீ எங்கள் மீது புரிந்த அருளுக்காக, உனக்கே எல்லாப் புகழும்.  அனைத்து நபிமார்கள் தூதர்கள், நேசர்களின் தலைவரான எம்பெருமானார் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் மீதும், இன்னும் அவர்களின் தோழர்கள், நேசர்கள், குடும்பத்தினர் மீதும், உனது அருள் உண்டாகட்டுமாக!” பிறகு சயீ செய்யச் செல்ல வேண்டும்.  பனீ மக்ஜும் வழியாக (கஃபா மஸ்ஜித் ஹராமை விட்டு வெளியாக வேண்டும்.

    சுபா குன்றில் நின்று கஅபாவை முன்னோக்கி இரு கரங்களையும் வானத்தை நோக்கி ஏந்தி ஓதவேண்டிய துஆ:

“யா அல்லாஹ்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலாவாத்தும் பரக்கத்தும் அருள் புரிவாயாக.” அல்லாஹ{ அக்பர் (3 தடவை) அல்ஹம்து லில்லாஹ் நான்காம் கலிமாவை ஓதிக கொண்டே சயி செய்யலாம்.  மற்ற தெரிந்த, உலமாக்கள் கற்பிக்கும் துஆக்களையும் ஓதலாம் மைலனீல் அக்ளரைன் (பச்சை விளக்கு அடையாளமுள்ள இடம்) வரும் போது, “யா அல்லாஹ்! நீ அறிந்த பாவங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! என்று சொல்லி கஅபாவைப் பார்த்தவாறு ஆண்கள் மட்டும் ஓடவேண்டும்.  பெண்கள் மெதுவாக நடந்து செல்ல வேண்டும்.  இவ்வாறு 7 தடவை தபா மர்வாபவில் சுற்றி மர்வாவுக்கு வெளியே உள்ள சலூனில் சுன்னத்தான முறையில் அவசியம் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்.  பெண்கள் தலைமுடியின் முனையை கத்தரித்துக் கொள்ள வேண்டும்.  இதோடு உம்ரா முடிந்துவிட்டது.  வீட்டிற்குச் சென்று இஹ்ராம் களைந்து குளித்து சாதாரண ஆடைகளை அணியலாம் தவாபு செய்யும் போது முறிந்தால் ஒளு செய்துவிட்டுத் தான் தொடர வேண்டும்.  பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாபை நிறுத்தி வெளியாகிவிட வேண்டும்.  ஆனால் சயீ செய்யும் போது ஓளு முறிந்தாலும் மாதவிடாய் வந்தாலும் சயீ தொடரலாம்.  பெருமானார் (ஸல்) அவர்கள் மொத்தம் மூன்று உம்ராக்களையும் ஒரு ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.
ஹிஜ்ரி 7ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் நபி வழியில் ஹஜ் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
அரபாவிலுள்ள குன்று ஜபலுர்ரஹ்மத் (மலை) 30 மீட்டர் உயரம்.  மதீனாவில் மஸ்ஜித் நபவியில்மிம்பருக்கு அருகில் தூண்கள் உள்ள இடத்திற்கு, “றவ்ளத்துஷ் ஷரீபா” (சுவனப் ப+ங்கா) என்று பெயர்.
மதீனா

மதீனா நகரம் ஜித்தவிலிருந்து 425கி.மீட்டரும், மக்காவிலிருந்து 497 கி.மீட்டரும் உள்ளது.  கடல் மட்டத்தை விட 597 மீட்டர் உயரத்தில் இருப்பதால் குளிர் காலத்தில் குளிர் அதிகமாகவும், கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகவும் இருக்கும்.  அதற்குத் தகுந்தாற் போல் ஆடைகள் எடுத்துச் செல்ல வேண்டும்.  குளிர் காலத்தில் செல்லும் போது காலுறை (சாக்ஸ்) எடுத்துச் செல்வது நல்லது.  மஸ்ஜித் நபவி ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளதால் உள்ளே காலை இரவு நேரங்களில் சாக்ஸ் அணிந்து குளிரைத் தடுக்கலாம்.

மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது குறைந்தது ஆயிரம் ஸலவாத் ஓத வேண்டும்.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) மதீனா வாழ்க்கை பற்றிய வரலாறும் படிக்கலாம்.

ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் கட்டிசோறு சேண்ட்விச், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் போன்றவற்றைப் பழங்கள், மருந்துகளுடன் எடுத்துச் சென்றால், மக்கா-மதீனா வழிப்பாதையில் உணவுக்காக நிறுத்தும் இடத்தில் ஹோட்டல் உணவைவிட, நாம் தயாரித்து எடுத்துச் சென்ற உணவை அந்த உணவு விடுதிலேயே வைத்து உண்ண வசதியாக இருக்கும்.  கூடிய வரை டின்களில் விற்கப்படும் பழச்சாறு பருகாமல், பழங்களையோ அல்லது புதிதாக தயார் செய்து தரும் பழச்சாறு பருகுவது நல்லது.  பாலில்லாமல் தேநீர் அருந்துவதும் உடல் நலத்துக்கு நல்லது.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அத்தர், வெண்மையான ஆடைகள் விருப்பமானது என்பதால்

நாமும் வெள்ளைநிற ஆடைகள், மதீனாவில் உடுத்தி, அத்தர் அதிகமாக உபயோகிக்க வேண்டும்.  பேரீச்சம் பழம் தஸ்பீஹ் மணிகள், அத்தர் ஆகியவைகளை மதீனாவில் தான் வாங்க வேண்டும்.  மஸ்ஜித் நபவியில் ஒவ்வொரு முறை தொழுதுவிட்டு வரும் போதும் மறக்காமல் ரவ்ளா ஷரீப் சென்று பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்), அபுபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) ஆகியோருக்கு ஸலாம் சொல்லி வரவேண்டும்.
பாபுஸ்ஸாம் வழியாக மஸ்ஜித் நபவி சென்று மிக்க உள்ளச்சத்துடனும், மன அமைதியுடனும், கம்பீரத்துடனும் 70 முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கப்ருமபாரக்கின் அருகாமையில் ஓதுவதே சாலச் சிறந்ததாகும்.  “சுவன ப+ங்கா” எனப்படும் இடத்திலும் தஹஜ்ஜுத் மேடையிலும் சுன்னத், நபில் தொழுவது சிறப்பு.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் மஸ்ஜித் நபவியில் குர்ஆன் ஓதவேண்டும்.  தினமும் காலையில் பஜ்ரு தொழுதபிறகு மஸ்ஜித் நபவி அருகிலேயே உள்ள ஜன்னத்துல் பகீஃ சென்று அங்கு அடக்கமாகி இருக்கும் பெருமானார் (ஸல்) குடும்பத்தினர், சஹபாக்களையும் ஜியாரத் செய்து விட்டு வரவேண்டும்.  மதீனாவில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்.

உஹத்மலை

வியாழக்கிழமை சென்று அங்கு ஷஹீதான ஹம்ஜா(ரலி), அப்துல்லா இப்னு ஜஹ்ஷ்(ரலி), ஸஹ்லுப்னு கைஸ் (ரலி) போன்ற சஹாபிகளுக்கு ஜியாரத் செய்யவேண்டும்.  அங்கு மொத்தம் 64 அன்சாரி சஹாபிகளுக்கும், 6 முஹாஜிரீன்களும் அடக்கப் பட்டு;ள்ளார்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு பல் ஷஹீதான இடத்தையும் தெரிந்து கொண்டு அங்கும் சென்று வரலாம்.  தனியாக ஒரு நாள் அங்கு சென்று வந்தால் பொறுமையுடன் பார்த்து வரலாம்.

மஸ்ஜித் குபா


சனிக்கிழமை செல்வது சிறப்பாகும்.  “மஸ்ஜித் குபாவில்” தொழுவது உம்ரா செய்ததின் நன்மை ஆகும்.          - ஹதீஸ்

மஸ்ஜித் ஙமாமா

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு சுல்தான் ஹஸன் இப்னு முகம்முது சாலிஹ{வும் ஹிஜ்ரி 14ஆம் ஆண்டு துரக்கி சுல்தான் அப்துல் ஹமீத்கானும் புதுப்பித்தார்கள்.

மஸ்ஜித் கிப்லதைன்

பைதுல் முகத்தஸை நோக்கித் தொழுத முஸ்லீம்களை கஅபா திசை நோக்கித் தொழச் சொல்லி வஹீ வந்த பள்ளிவாசல்


கந்தக் அஹ்ஸாப் (அகழ்ப்போர்) நடந்த
இடத்தில் உள்ள 5 பள்ளிவாசல்கள்

ஹிஜ்ரி 5ம் ஆண்டு துல்க அதாபிறை 8ல் அகழ்வெட்டும் வேலை ஆரம்பமாகியது.  20 நாட்களில் வேலை முடிந்தது.  கடுங்குளிர், பட்டினி, ஓய்வு இல்லாமை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்களுக்குச் சில நேரத் தொழுகைகள் களாவானது.
“கந்தக்” என்றால் அகழி என்று பொருள்.  “அஹ்லாப்” என்றால் “படைகள்” என்று பொருள் காபிர்கள் ஒன்றுபட்டு படைகளுடன் வந்தால் அஹ்ஸாப் போர் எனப் பெயர் வந்தது” இந்த போரில் முஸ்லிம்கள் ஆயிரம் பேரும், எதிர்ப்படையினர் பத்தாயிரம் பேர்களும் கலந்து கொண்டனர்.  சல்மான் பார்ஸி(ரலி) அவர்கள் சொன்ன யோசனையின் பேரில் அகழி வெட்டப்பட்டது.


மஸ்ஜித் அப+பக்கர் (ரலி) மஸ்ஜித்
அலி (ரலி) 7 கிணறுகள்
பெருமானார் (ஸல்)
அவர்களுக்கு சலாம் சொல்லும் முறை

    “அஸ்ஸாத்து அஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹ்” என்று 70 முறை சொல்லவேண்டும்.  70 முறை ஓதப்பட வேண்டுவது தனிச்சிறப்பு யாதெனில் இந்த எண்ணிக்கையில் ஏற்றுக் கொள்ளப்படுதலின் விசேஷ சிறப்பு இருக்கிறது.  என்பதால் தான் திருக்குர்ஆனிலும் முனாபிக்குகள் பற்றிஅ ண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “நபியே! தாங்கள் அந்த முனாபிகளுக்காக 70 முறை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
    (சூரேதௌபா ஆயத்) 8: தாயகத்திலிருந்து புறப்படும் முன் உறவினர்கள், நண்பர்கள் பெருமானார், (ஸல்) அவர்களக்கு ஸலாம் சொல்லுமாறு வேண்டிக்கொண்டிருந்தால் அப்பெயர்களைச் சொல்லி ஸலாம் சொல்ல வேண்டும்.  பெயர்கள் நினைவில்லாவிட்டால். “அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹி” மிம்மன் அவ்ஸான வஸ்தவ்ஸானா பிஸ்மில்லாஹி அலைக்க


இதன் பொருள்
அல்லாஹ்வின் அருமைத் தூதரே!
    சலாம்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்னிடம் வேண்டிக் கொண்ட அனைவரின் பெயர்களையும் தாங்கள் அறிவீர்கள்.  ஆவர்களைப் பற்றிய விபரங்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்! ஆவைகளை இப்போது ஒப்படைத்து விட்டோம்.  அன்பு கூர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்வீர்களாக!’ என்று அரபி தெரியாதவர்கள் தமிழிலேயே சொல்லலாம்.  பாபுஸ்ஸலாம் வழியாகச் சென்று, நபிகள் நாயகம் (ஸல்), அப+பக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), ஆகியோருக்கு, சலாம் சொல்லியபின் கிப்லா திசை நோக்கி துஆ செய்த பிறகு பாபுஜிப்ரீல் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.


பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
ஸலாம் சொல்லும் வகைகள்
1.    அஸ்ஸலாத்து அஸ்ஸலாமு அகை;க யாரசூலுல்லாஹ்
2.    அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யுவரஹ்…
3.    அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ்
4.    ஸல்லல்லாஹ{ அலைக்க யாரசூலுல்லாஹ். (ஏதாவது ஒன்றை 70 தடவைகள் சொல்ல வேண்டும்.
5.    அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ், யாஹபீபுல்லாஹ் யாகைர கல்கில்லாஹ், யாசஃப் வதுலலலாஹ், யாஸய்யிதல் முர்சலீன், யாஇமாமல் முத்தகீன், யாஷபீஅல்முத்னிபீன் யாகாதமன் நபிய்யீன், அஸ்ஸலாமு அலைக்க வஅலா ஆலிக்க வஅஹ்லி பைத்திக வஅஸ்ஹாபிக அஜ்மஈன்.
தமிழில் “நபியே! உங்கள் மீதும், உங்களது கிளையார் குடும்பத்தார் மீதும், உங்களின் அருமை ஸஹபாக்கள் மீதும், அனைவர் மீதும் எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் பெருமானார் அவர்களுக்கு வஸீலாவையும், சிறப்பையும், தந்தருள்வாயாக! மேலும் நீ பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தின் பால் மறுமையில் அனுப்புவாயாக!”


ஹஜ்
பிறை 8 (முதல் நாள்)

அதிகாலையில் குளித்து இஹ்ராம் துணி அணிந்து கஅபாவில் ஹஜ்ரே இஸ்மாயில் என்கிற (ஹதீம்) இடத்திலோ அல்லது கஅபாவில் ஏதாவது ஒரு இடத்திலோ, அங்கு இடம் கிடைக்காவி;ட்டால், தங்கி இருக்கும் இடத்திலோ, இரண்டு ரகஅத் தொழுது “ஹஜ்ஜை நாடி இஹ்ராம் கட்டியுள்ளேன்” அதற்குரிய செயல்களை எனக்கு இலேசாக்கித் தந்து, அவற்றை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நிய்யத் செய்த பின் ‘லப்பைக்க…’ என்ற தல்பியாவை மூன்று முறை சொல்ல வேண்டும்.
மக்காவிலேயே பஜ்ர் தொழுதபிறகு பேரூந்தில் மக்காவிலிருந்து புறப்பட்டு மினா சென்று, நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்க வேண்டும்.  மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா நாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஜமாஅத்துடன் தொழ வேண்டும்.  அங்கேயே ஹஜ் தொடர்பான நூல்களையும் படிக்கச் சொல்லிக் கேட்பது, திக்ரு, செய்வது உலமாப் பெருமக்கள், பெரியோர்கள் சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகிய அமல்களில் ஈடுபடவேண்டும்,

பிறை 9 (2 ஆம் நாள்)

மினாவில் பஜ்ர் தொழுதபின் (முஜ்தலிபா வழியாக முஜ்தலிபாவில் நிற்காமல்) அரபாத் செல்ல வேண்டும்.
“ஹஜ் என்றால் என்ன?” என்று நஜ்திலிருந்து வந்த ஒரு ஜமாஅத் பெருமானார் (ஸல்) அவர்களைக் கேட்ட போது” அரபாத்தில் தங்குவது தான் ஹஜ்” என்றார்கள்.  துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹ{வுக்கு முன்னதாக அரபாவுக்கு வந்து விடுபவர்களின் ஹஜ் நிறைவேறி விடும், என்று அறிவிப்பு கொடுக்கச் செய்தார்கள்.  அரபாவில் மஃரிபு நேரம் வரை இருந்து உம்மத்தின் மஃபிரத்துக்காக துஆ செய்தார்கள்.  அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும்.. “(இன்றைய நாளில்) உங்களுக்காக உங்கள் மீது என்னுடைய அருட்கொடைகளை (இன்று) முபமையாக்கித் தந்து விட்டேன்.”
-குர்ஆன் 5:4

என்ற புனித வசனம் அரபா நாளில் ஜும்ஆ நாள் மாலை அஸர் வேளைக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகையில் அமர்ந்திருந்த போது அருளப்பட்டது.  வஹீயின் சுமையைத் தாங்க முடியாமல் ஒட்டகம் நிற்க முடியாமல் உட்கார்ந்துவிட்டது.

    தீனின் கடமைகள் முழுமையுடைய ஹஜ் காரணமாக அமைந்துவிட்டது. லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளை அரபாவில் நம்முடன் தங்கி இருக்கும் பெரியோர்களைப் பின்பற்றி ஜமாஅத்தாகத் தொழவேண்டும்.  அரபாவில் இருக்கும் போது ஆண்கள் குளிப்பது விரும்பத்தக்க செயலாகும்.
அங்கு ஓதவேண்டிய துஆக்கள்:
அரபாவில் ஓத வேண்டியவை.
1.    “குல்ஹ{வல்லாஹ{…” சூரா     1000 தடவை
2.    யாஹய்யு யாகைய+ம்         1000 தடவை
3.    லாஇலாஹ இல்லா அன்தகசுப்ஹானக இன்னி குன்து மினல்லாலிமீன்            1000 தடவை
4.    மூன்றாம் கலிமா        1000 தடவை
5.    4ம் கலிமா            1000 தடவை
செய்யுமாறும அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  ஹனபி மத்ஹபின்பழ ஹாஜிகள் முஜ்தலிபாவில் அதிகாலை (ஸ{புஹ{ல் ஸாதிக்) கிழக்கு வெளுத்ததிலிருந்து கதிரவன் உதிக்கும் வரை தங்கி இருப்பது வாஜிபு கடமையாகும்.  புpறை 9ல் தங்குவது லைலத்துல் கத்ர் இரவு போன்று மிகச் சிறப்பானது.  பிறை 11,12,13 ஆகிய நாட்களில் மூன்று ஷைத்தான்களுக்கும் கற்கள் எறிய 63 கற்களும், பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு மட்டும் எரிய 7 கற்களும் ஆக மொத்தம் 70 கற்களை முஜ்தலிபாவில் எடுத்துக்கொள்ள வேண்டும் “முஜ்தலிபா” என்பதற்குப் பொருள் “இணைதல்” பாவா ஆதம் (அலை) அவர்களும் அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் அறபாத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து, முஜ்தலிபாவில் தான் ஒன்று கூடினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

பிறை 10-3ம் நாள்
முஜ்தலிபாவில் பஜ்ர் தொழுதபிறகு தான் மினா செல்ல வேண்டும் மினாவந்தபிறகு

1.    “ஜம்ரதுல் அகபா என்ற பெரிய ஷைத்தானுக்கு 7 கற்கள் எறிய வேண்டும்.
2.    குர்பானி கொடுக்க வேண்டும்.
3.    தலைமுடி எடுத்து இஹ்ராம் களைய வேண்டும்.
4.    மக்காவிற்குச் சென்று தவாபுஜியாரத் செய்ய வேண்டும்.

பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு, இஷ்ராக் தொழுகைக்குப் பிறகு
“பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர்”, என்று சொல்லி முதல் கல் வீசிய பிறகு, தல்பியா ஓதுவதை நிறுத்திவிட வேண்டும்.

ஷைத்தானுக்குக் கல் எறியும் போது ஓதும் துஆ
“ஷைத்தானை விரட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், அவனின் திருநாமம் கொண்டு கல் எறிகிறேன். யா அல்லாஹ் எனது ஹஜ்ஜை ஏற்றுக் கொள்ளப்பட்ட தாயும், எனது பாவங்களை மன்னிக்கப்பட்டதாகவும் ஆக்குவாயாக! ஆமீன்!” நீண்ட துஆ ஓத முடியாது போனால் “பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறினால் போதும்.

ஷைத்தான்களின் பெயர்கள்

1.    ஐம்ரதுல் ஊலா
2.    ஐம்ரதுல் உஸ்தா
3.    ஐம்ரதுல் அகபாஹ்

பிறை 11-(4ம் நாள்)

1.    கதிரவன் நடு உச்சியைத் தாண்டிய பிறகு (ஜலால்) முதல் ஷைத்தானில் கல் எறிய ஆரம்பித்து வரிசையாகச் செல்ல வேண்டும்.  முதலில் பெரிய ஷைத்தானுக்கு எறிந்தால் தண்டம் கொடுக்க வேண்டும்.  திரும்பவும் எறிய வேண்டும்.

துல்ஹாஜ் 12 – (5 ம் நாள்)

    பிறை 11ல் எறிந்தது போல வரிசையாக மூன்று ஷைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும்.  பெரும்பாலோர் பிறை 12ல் கல் எறிந்த பிறகு கதிரவன் மறையுமுன் மக்காவிற்குச் சென்று விடுவார்கள்.  ஆனால் அடுத்த நாள் பிறை 13ல் தங்கிச் செல்வதே சுன்னத்தான நடைமுறை.


பிறை 13 – (6 ம் நாள்)

    முஅல்லிமிடம் ஒரு குழுவாகச் சென்று “பிறை 13ல் தங்கிச் செல்ல விரும்புகிறோம்” என்று சொன்னால் சில கூடாரங்களைப் பிரிக்காமல், அங்கு தங்க ஏற்பாடு செய்வார்.  இல்லாவிட்டால் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட மினா பள்ளிவாசலில் வசதியாகத் தங்கலாம்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை 11,12,13ல் ஜவால் நேரத்திற்குப் பிறகு தான் கல்லெறிந்தார்கள் அவர்கள் மினாவில் தங்கி இருந்த போது தான்.

    “இதாஹாஅ நஸ்ருல்லாஹி” குர்ஆன் சூரா அருளப்பட்டது.
    பிறை 13ல் மினாவில் தங்கி ஜவால் நேரத்துக்குபின் கல்லெறிந்த பிறகு தான் மக்கா புறப்பட்டார்கள்.

    பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் குர்பானி கொடுத்தபின் மொட்டை அடித்துக் கொண்டது போல நாமும் செய்து, அவர்களைப் போலவே நாமும் 70 கற்களை ஷைத்தான்களுக்கு வீசி, அவர்கள் கேட்டதுபோல நாமும் துஆக்கள் தொழுகைகள், அமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட பரிப+ரண ஹஜ்ஜை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்! ஹஜ்முபாரக்!

மதீனா

    நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித் நபவியில் பகல் நேரத் தொழுகையான லுஹர் தொழுகையைத்தான் முதன் முதலில் தொழுதார்கள்.

    ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் பெருநாள் தொழுகை நடந்தது.

    “மதீனா” என்றால் “பட்டணம்” என்று பொருள். “மதீனத்துந்நபி” என்றால் நபியின் பட்டணம்.

    “வெள்ளரியின் களிம்பை உலை அகற்றுவது போல மதீனா, நிச்சயமாக மனிதர்களின் பாவத்தை அகற்றிவிடும்”

    மதீனாவின் தூசி தொழுநோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது.  “நபிமொழி
    கைபர் போருக்குப் பிறகே மஸ்ஜித் நபவியில் மிம்பர் அமைக்கப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு
வருகைதந்தது        கி.பி. 622
பத்ர் போர்        கி.பி. 624
உஹத் போர்        கி.பி. 625

கி.பி.1926ம் ஆண்டு மதீனாவின் மக்கட் தொகை 50,000

1978ல்            ஒரு லட்சம்,
1988ல்            ஏழு லட்சம்

    மதீனாவில் தங்கி மஸ்ஜித் நபவியில் 40 வேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவது சிறப்பானது.

    அரபாத்திலுள்ள பள்ளிவாசலின் பெயர்: மஸ்ஜித் நமிறா, அரபாத்திலுள்ள குன்றின் பெயர்: ஜபலுர்ரஹ்மத். முஜதலிபாவில் உள்ள பள்ளிவாசல் பெயர் : மஷ் அருல்ஹராம் மினாவில் உள்ள பள்ளிவாசலின் பெயர் : மஸ்ஜித் கைப் மக்காவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் மு அல்லா. மதீனாவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் பகீஃ

    ஹிஜ்ரத் பயணத்தில் பெருமானார் (ஸல்) அவர்களும் அப+பக்கர் சித்திக் (ரலி) அவர்களும் தங்கிய இடம் தௌர் குகை. “ஓதுவீராக” என்ற முதல் இறைவசனம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இடம்: ஹீராமலைக்குகை.

ஹஜ்

    ஒருவர் ஒரு தடைவ ஹஜ் செய்தால் அவர் இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செய்தவராகிறார்.  இரண்டு தடவை ஹஜ் நிறைவேற்றினால் இறைவனை தமக்கு கடனாளியாக்குகிறார்.  மூன்று தடவை ஹஜ் முடித்தால் நகர நெருப்பிலிருந்து தம்மை விடுதலையாக்குகிறார்.

ஹஜ்ஜும், உம்ராவும் அதிகமாக நிறைவேற்றுவது ஏழ்மையைத் தடுத்து விடுகிறது.

    ஹஜ் செய்யுங்கள் செல்வந்தராவீர்கள்.  பிரயாணம் செய்யுங்கள் சுகம் பெறுவீர்கள்;;: நபிகள் நாயகம் (ஸல்)

    நயவஞ்சகர்கள் ஜம்ஜம் நீரை வயிறு நிரம்பக் குடிக்கமாட்டார்கள். நபிமொழி.

மருத்துவக் குறிப்புகள்

1.    ஹஜ் பயணத்தில் மூக்கில் இரத்தம் வந்தால் இரண்டு சொட்டு எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டால், அல்லாஹ் அருளால் உடனே இரத்தம் நின்றுவிடும்.
2.    பாலில்லாத தேநீர் பருகி வந்தால் குளிர், வெப்பத்தைத் தாக்கிப் பிடிக்கவும், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் இருக்கவும் உதவும்.  அரபிகள் அப்பழத்தான் பருகுவார்கள்.
3.    பழச்சாறு, (தேன்) ஐம் ஐம் அடிக்கடி பருகவேண்டும்.
4.    வெப்பமாக இருந்தால் எலுமிச்சைப்பழச் சாரில் உப்பு சேர்த்துப் பருகலாம்.
5.    ஜலதோஷம் (சளி) பிடிக்காமலிருக்க ஏர்கண்டிஷன் உள்ள இடங்களில் காலுறை (சாக்ஸ்) அணிவது நல்லது.
6.    சைவ வணவு, காரம், எண்ணெய் இல்லாத உணவு, வணக்கங்களில் ஈடுபட வசதியாக இருக்கும்.
7.    இரவில் விரைவில் தூங்கினால் தான் தஹஜ்ஜுத் குறித்த நேரத்தல் தவறாது தொழலாம்.
8.    வெப்பத்தாக்கு (சன்ஸ்டிரோக்) குளிர்காலத்தில் இருக்காது என்றாலும் பகல் 11 லிருந்து 2 மணி வரை வெயிலில் வெளியில் சுற்றாமல் இருப்பது நல்லது.  அவசியம் ஏற்பட்டால் தலையில் வெள்ளைநிற ஹஜ் துண்டு போட்டு வெள்ளை நிறக் குடை பிடித்துச் செல்ல வேண்டும்.  தேவையான ஓய்வு, உறக்கம் அவசியம்.

எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள்

1.    2½மீட்டர் இஹ்ராம் துணி.
2.    முஸல்லா, மிஸ்வாக், தஸ்பீஹ்
3.    மருந்துப் பொருள்கள்
4.    உணவுத்தட்டு 2, கிண்ணம் 2, குவளை 2
5.    டைரி
6.    சின்ன அலாரம் (கடிகாரம்
7.    பெட்ஷீட், போர்வை, காலுறை ஏர்பில்லோ, ஹவாய் செருப்பு
8.    மதீனாவில் உபயோகிக்க வெள்ளைநிறத் துணிகள்
9.    அங்குள்ள அன்பர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள்.


மற்ற குறிப்புகள்

மக்காவில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் இடங்கள்.
1.    தவாபிலும், தவாப் சுற்றும் இடத்திலும்
2.    முல்தஜிம்
3.    மீஜாபுர் ரஹ்மத்
4.    கஅபாவின் உள்ளே
5.    ஜம்ஜம் கிணற்றருகே ஜம்ஜம் அருந்தியபின்
6.    மகாமே இப்ராஹீமிற்கு அருகே
7.    ஸபா, மர்பாவில்
8.    ஸயீ செய்யுமிடங்களில்
9.    அரபாவில்
10.    முஜ்தலிபாவில்
11.    மினாவில் இரண்டு ஷைத்தான்களுக்குக் கல் எறிந்த பிறகு ஜம்ரதுல் அகபா நீங்கலாக.
12.    முதன் முதலாக கஅபாவைக் காணும் போது
13.    (ஹத்தீம் ஹஜ்ரே) இஸ்மாயில் உள்ளே.
14.    ஹஜ்ருல் அஸ்வத் ருக்னுல் யமானிக்கிடையே

பெருமானார் ஹஜ் பயணத்தில்

    ஹஜ் பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபாவிலிருந்து முத்தலிபாவுக்கு ஒட்டகத்தில் பயணம் செய்த போது உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களின் பின்னால் ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள்.  முஜ்தலிபாவி விருந்து மினாவுக்குச் செல்லும் போது பெருமானாருக்குப் பின்னால் ஒட்டகத்தில் ஹஜ்ரத் பசல்இப்னு அப்பாஸ் (ரலி) உட்கார்ந்திருந்தார்கள்.

பிறை – 10 ல்

    ஹஜ்ரத் மஃமர் (ரலி) அல்லது ஹஜ்ரத் கர்ராஷ் (ரலி) அவர்களை அழைத்துத் தலைமுடி சிரைத்துக் கொண்டார்கள்.


நுழைவு வாசலிலிருந்து
குறிப்பிடப்பட்டுள்ள
பேயர்களின் விபரங்கள்

1.    ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி).  ஈவர்கள் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களுடைய சிறிய தந்தையாகும்.
2.    ஃபாத்திமாக நாயகி (ரலி).  இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களது மகளாகும்.
3.    ஹஸன் முஜ்தபா (ரலி) இவர்கள் ஹஜ்ரத் அலியின் புதல்வர்.
4.    ஜைனுல் ஆபிதீன் (ரலி)
5.    முஹம்மது பாகீர் (ரலி)
6.    ஜஃபர் சாதிக் (ரலி)
இம்மூவரும் இஸ்லாத்தின் நான்காம் ஜனாதிபதி ஹஜ்ரத் அலிய்யுப்ன அபீதாலிப் (ரலி) அவர்களது பேரர்களாகும்.
7.    உம்மூல் பனீன் (ரலி)
8.    ஆத்திகா (ரலி)
9.    ஸஃபிய்யா (ரலி) ஆகிய இம்மூவரும் நாயகம் (ஸல்) அவர்களுடைய மாமிகள் (தகப்பனாருடன் பிறந்த சகோதரிகள்)
10.    ஜைனப் (ரலி)
11.    உம்முகுல்ஸ{ம் (ரலி)
12.    ருக்யா (ரலி) இம்மூவரும் பெருமானார் (ஸல்) அவர்களது புதல்விகளாகும்.
13.    அப்துல்லாஹ் பின் ஜஃபர் தய்யார் (ரலி) அலிரலி அவர்களின் சகோதரர் மகன்
14.    அகீல் இப்னு அபீதாலிப் (ரலி) அலி-ரலி அவர்களின் சகோதரர்.
15.    மாலிக் (ரலி) பிரபல “ஹாதீஸ் அறிவிப்பாளர் மாலிக் இப்னு அவ்ஸ் என்பவராகும்.
16.    நாபீஃ (ரலி) இவர்களும் “ஹதீஸ் அறிவிப்பாளராகும்”.
17.    இப்ராஹ{ம், இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களுடைய புதல்வராகும்.  பிறந்து 15-வது மாதத்திலேயே வபாத்தாகிவிட்டார்கள்.
18.    உஹது ஸஹ{துகள்.  மதீனாவிலேயே உள்ள உஹது மலை அடிவாரத்தில் நடந்த யுத்தத்தில் உயிர் நீத்த தியாகிகளில் சிலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
19.    இஸ்மாயில்
20.    ஹலீமா சஃதிய்யா (ரலி) இவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரண்டாண்டுகள் தாய்ப்பாலூட்டிய செவிலித்தாயாகும்.
21.    ஃபாத்திமா பின்த்தி அஸது (ரலி)
22.    உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) இவர்கள் இஸ்லாத்தின் 3-ம் ஜனாதிபதியாகும் நபி (ஸல்) அவர்களது இருமகள்களை மணந்து துன்நூரைன் எனப் பெயர் பெற்றவர்கள்.
பின்வரும் ஒன்பது பெண்மணிககும் ரசூல் (ஸல்) அவர்களது மனைவிகளாகும்.  உம்மஹாத்துல் முஃமினீன் என அழைக்கப்படுவார்கள்.
23.    ஜுவைரிய்யா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
24.    ஸவ்தா (ரலி) பின்த்தி ஸம்ஆ
25.    ஆயிஷா (ரலி) பின்;த்தி அபீபக்ரு
26.    மைமூனா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
27.    ஹஃப்பசா (ரலி) பின்த்தி உமர்
28.    உம்முஹபீபா (ரலி) பின்த்தி அபீஸீப்யான்
29.    உம்முஸலமா (ரலி)
30.    ஸஃபிய்யா (ரலி) பின்த்தி ஹ{யய்யி
31.    ஜைனப் (ரலி) பின்த்தி ஜஹ்ஷ்

LinkWithin

Related Posts with Thumbnails