Saturday, November 9, 2013
ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
மூளையில் ஏற்படும் இரசாயன நிலை மாற்றத்தினால் தூக்கத்தின் நிலை மாறுபடுகின்றது.
ஆழ்ந்த தூக்கம், தடைப்பட்ட தூக்கம் என்ற பல நிலைகள் தூக்கத்திலும் உண்டு.
அதிகமான கனவுகள் மகிழ்வைத் தரக்ககூடியதாக இருந்தாலும் சில கனவுகள் நம்மை அதிசிய வைக்கும் நிலையில் இருக்கும். தினமும் கனவுகளின் காட்சி தொடர்ந்து வருவதும் ,அச்சமூட்டக் கூடியதாக குழந்தைகள் காணும் கனவுகள் காண்பதும் மனோ நிலையில் பாதிப்பை உண்டாக்கும் .
குழந்தைகளுக்கு தேவையற்ற பயம் தரக் கூடிய நிகழ்வுகளை காண வைப்பதும் பயமூட்டி வளர்ப்பதனாலும் இம்மாதிரியான பயம் காட்டக் கூடிய கனவுகள் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இருதயம் பட படக்க கண் விழித்து அலறுகின்றது.
பகல் நேரங்களில் நல்ல நினைவுகளும் அழகிய காட்சிகளும், சிந்தனையும் தூய்மையாக இருந்து மற்றும் உடல் உழைப்பு ,தேவையான உடற் பயிற்சி, ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளும் நமக்கு கிடைக்கும்போது தேவையற்ற கனவுகளை வராமல் தவிர்க்கலாம்.
தூங்கும் நிலை நம்மை தன்னிலை மறக்க வைக்கும் நிலை.
இமைகள் மூட, தசைகள் தளர்வடைந்த நிலையில் நரம்புகள் தன வேலையை குறைத்துக்கொள்ளும் நிலை. சக்தி பெரும் நிலையில் குறைவு இருப்பினும் முக்கியமான பகுதிகளான இதயம் மற்றும் நுரையீரல்கள் தங்களது வேலைகளில் தொய்வில்லாமல் வேலை செய்கின்றன .இதயத் துடிப்பின் வேகம் மற்றும் உடலின் சூடும் குறையும்.
கனவு காணாத மனிதன் உலகில் இல்லை என்பது உண்மை. மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே’ என்றும் சொல்வார்கள் . அப்படியென்றால் கனவில் பார்த்தது வாழ்வில் நடைபெற வாய்ப்பும் உண்டு. கனவின் கோலம் ஒரு மாதிரியாக இருந்து அதன் அடிபடையில் இதில் சில மாற்றங்களுடன் வரலாம்.
ஒளி கண்டேன் ஒலி கேட்டேன்
அலை கண்டேன் ஓசை கேட்டேன்
காதல் கொண்டேன் ஆசை கொண்டேன்
கனா கண்டேன் கண் விழித்தேன்
அங்கும் வெளிச்சம் இங்கும் வெளிச்சம்
கனா நின்று மறைந்தது நினைவு நிலையாய் நின்றது
கற்பனை ஊரும் களைந்து போகும்
கற்பனைக்கு நங்கூரம் இருப்பின் நிலைத்து நிற்கும்
மனோநிலை மாறி மாறி வரும் காலம் மாறுவதுபோல்
கனாவின் நிலையும் மாறி மாறி வரும் விழித்தால் மறைந்து விடும்
கனா மகிழ்வையும் அச்சத்தையும் மாறி மாறி கொடுக்கும்
கனாவை நினைவாக்க முயல்வதற்கு முன் மறைந்து மறந்து போகும்.
மறந்துபோகும் கனவே மனிதனை பித்தம் பிடிக்காமல் பாதுகாக்கும்
நல்ல கனா ! கெட்ட கனா என உனக்குள் ஒரு பிரிவுண்டோ!
நடந்த நிகழ்வால் நீ கனாவாய் வந்தாயா!
நிகழப் போவதுற்கு முன் நினைவைத் தந்தாயோ !
ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
நடக்கமுடியாததை கனாவாய் வந்து மகிழ வைத்தாயோ!
மறக்கும் கனாவாய் சில நிலைத்து நிற்கும் கனாவாய் சில வந்து விளையாடுவதேன்!
பயமுறுத்தும் கனாவாகவும் மகிழ்விக்கும் கனாவாகவும் வேடிக்கை காட்டும் விநோதத்தினை எங்கு கற்றாய்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment