Wednesday, September 30, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (4)

 Vavar F Habibullah
எனக்கு நன்கு அறிமுகமான, ஒரு பிரபல தொழிலதிபர் குடும்பம் ஒன்று, புனித ஹஜ் ஜை நிறைவேற்ற, மக்கா மாநகருக்கு வருகை புரிந்தது. அவர்களுடன் 85 வயது மதிக்கத் தக்க, ஒரு மூதாட்டியையும் அழைத்து வந்திருந்தனர். அந்த வயதான பெண்மணியை அழைத்துக் கொண்டு, என்னை பார்ப்பதற்காக நான் பணி புரிந்த மருத்துவ மனைக்கு வந்தனர்.

மிகுந்த மூச்சுத்திணரல் (respiratory distress) நோயால் அவதிப்பட்ட அவரை, ICU வில் வைத்து அவசர சிகிச்சை மேற் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்த உடல் நிலையில் அவரை ஹஜ் பயணம் மேற்கொள்ள எப்படி அநுமதி வழங்கினார்கள் என்பது மருத்துவர்களான எங்களுக்கும் புரியவில்லை. ஹஜ் பணியை மேற் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. அவர் உடலில் சக்தியும் இல்லை. அவருடன் வந்த உறவினர்கள் மதினா செல்லும் அவசர கதியில் இருந்தார்கள். அந்த பெண்மணியை உடன் இருந்து கவனிப்பதற்கும் எவரும் இல்லை.

Tuesday, September 29, 2015

எதிரும் புதிரும்../ ‎அடப்‬ போங்கப்பா

அவனுடன் கூட்டு சேராதே என்பார்கள்..இவர்கள் மட்டும்
கூடி குலாவுவார்கள்..

இல்லாதவனிடம் பேச மாட்டார்கள்.
இருப்பவனிடம் தூக்கத்திலும் பேசுவார்கள்..

ஊருக்கு உபதேசம் சொல்வார்கள்.உபகாரம் கேட்டால் ஊரிடம் கேட்கச் சொல்வார்கள்..

தியாகத்தின் நிறம் பச்சை என்பார்கள்.முதுகில் குத்தி விட்டு சிகப்பு என்பார்கள்..

நாக்கில் தேனை தடவி பேசுவார்கள்.மனதில் விஷத்தோடு இருப்பார்கள்..

சேவையே உயிர் மூச்சு என்பார்கள்.விழுந்து கிடந்தால் மிதித்தே கொல்வார்கள்.

வேலையில் கவன குறைவாய் இருப்பார்கள்..அடுத்தவன் வேலையில் ரெம்ப கவனமாய் இருப்பார்கள்..

தற்பெருமையே கிடையாது என்பார்கள்.ஒரு லைக் போட கெளரவம் பார்ப்பார்கள்..

வயிற்றுப் பசிக்கு உணவுக்
கேட்டால் மையத்திற்கு வந்து பாத்தியா ஓதுவார்கள்..

‪#...‎அடப்‬ போங்கப்பா
 
                                                                                                                                                            Saif Saif
Saif Saif

அடங்காத ஆசைகள் ....!


அடங்காத ஆசைகள்
ஆர்ப்பரித்து அலைக்கழிக்கும்
முடங்காத வேலைகள்
முழுமைபெற்று முன்னேற்றும்

தடங்காத பயணங்கள்
முன்சென்று இடம் சேர்க்கும்
விரும்பாத விசயங்கள்
காலவிரயத்தை வரவேற்கும்

விளங்காத கருத்து
விவாதத்தில் வலுவிழக்கும்
உழைக்காத கரங்கள்
வெறும் அலங்காரம் ஆகும்

கல்லாத இளமை
காலத்தால் வீண்விரயம் ஆகும்
பயிற்சிக்காத கலைகள்
பயனற்றுப் போகும்

மெல்லாத உணவு
உடலில் நஞ்சை சேர்க்கும்
பற்றில்லாத உறவு
பாதை மாறியேப் போகும்
ராஜா வாவுபிள்ளை

Monday, September 28, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (2)+(3)

 Vavar F Habibullah

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (2)

"வக்ப் வாரியம், கோடிக்கணக்கான சொத்துக் களை உள்ளடக்கிய, மகா நிறுவனம். சட்ட நுணுக்கம் அறிந்த, திறமையான வழக்கறிஞர் அல்லது ஒரு சிறந்த நீதிபதியால் மட்டுமே இதை நன்கு நிர்வகிக்க முடியும்" என்ற என் கருத்து, அவருக்கு பிடித்து போயிருக்கலாம் என்று எண்ணுகிறேன். வக்ப் வாரியம் திருத்தி அமைக்க பட்ட போது, அதன் தலைவராக வழக்கறிஞர் ரஸாக் அவர்கள் நியமனம் செய் யப்பட்டார். நாகர்கோவில் வந்த அவர், எனது மாமா இப்ராகீம் அவர்களின் வீட்டில், விருந்தி னராக தங்கியிருந்த போது, அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர், மறைந்த பி.எஸ.எ. ரஹ்மான் அவர்கள்......
Vavar F Habibullah

தொடரும்

முகங்கள் சொல்லும் பாடம்


அபூ பாஸிம்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ - இது பழமொழி. அகம், முகம் இரண்டுமே எழுத்திலும், எண்ணத்திலும் ஒன்றிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. அகத்தின் எண்ணவோட்டங்களை முகம் மொழிபெயர்க்கிறது. எனவே தான் முகம் பார்த்து மனிதனை படம்பிடித்துக் காட்டுகிற 'FACE READING' என்கிற கலை சாத்தியமாகிறது.

உள்ளத்தை முகம் படம்பிடித்துக் காட்டுகிறபோது அதற்கு முகத்தின் ஒவ்வொரு உருப்பும் உதவுகிறது. நேசர்களைக்கண்டு உள்ளம் மகிழும்போது முகத்திலுள்ள கண்கள் மலர்கிறது. சமயத்தில் கண்களே பேசுகிறது. பேசும் விழிகள் கேள்வி பட்டதில்லையா?

வெறுப்பின் உச்சத்தில் நாசி விடைக்கிறது. மகிழ்ச்சியைக் கோடிட்டுக் காட்டும் போதும் இளக்காரமாக நினைக்கும் போதும் இதழ்கள் மிக இலேசாக விரிகிறது. இளநகை, குறுநகை என்றெல்லாம் சொல்வதில்லையா?

Sunday, September 27, 2015

எலெக்ட்ரிக் – எலெக்ட்ரானிக் பொருட்களின் ஆயுட்காலமும், அசத்தல் செயல்பாடும் உங்கள் கையில் !

எலெக்ட்ரிக் – எலெக்ட்ரானிக் பொருட்களின்

        ஆயுட்காலமும், அசத்தல் செயல்பாடும்

                  உங்கள் கையில் !

  வாட்டர் ஹீட்டர், ஃபேன், டி.வி, கணினி, மின்சார அடுப்பு என எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் சூழ வாழும் நாம், அவற்றைப் பராமரிப்பதிலும் உரிய கவனம் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோமா?

இண்டக்‌ஷன் ஸ்டவ்
  இண்டக்‌ஷன் ஸ்டவ், கேஸ் ஸ்டவ் இடையே குறைந்து 5 அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர், எண்ணெய் இதன் மேல் படக் கூடாது. ஸ்டவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச எடையைக் காட்டிலும் அரை கிலோவாவது குறைவாக வைத்துச் சமைக்க வேண்டும். சமையலை முடித்த பின் ஃபேன் நின்ற பிறகே மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும். இண்டக்‌ஷன் ஸ்டவ்வின் கீழ்பக்க ஓட்டைக்குள் கரப்பான் பூச்சி நுழைந்து பழுது ஏற்படலாம் என்பதால், அங்கே ரச கற்பூரம் வைத்து கரப்பான் வருவதைத் தடுக்கலாம்.

Saturday, September 26, 2015

‎காடிழந்த‬ யானைகளின் துயரம் - ‪‎நிஷாமன்சூர்‬எனது "நிழலில் படரும் இருள்" கவிதை நூலில் வெளியான "காடிழந்த யானைகளின் துயரம்" கவிதை தமிழின் சிறந்த கவிதைகளில் ஒன்றாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அக்டோபர் 18-ம் தேதி நுலாக வெளியிடப்படுவதாக நண்பர் அகன் தெரிவித்தார்.
முழு விபரங்கள் தெரிந்தபிறகு மீண்டும் பதிவேன்..!

‎காடிழந்த‬ யானைகளின் துயரம் -
‪‎நிஷாமன்சூர்‬

மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள்

விரும்பி வருவதில்லை அவை
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால்

அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை

பின்னணி முக்கியம் அமைச்சரே!


காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தது.

அந்த வழியாக வந்த எலி சொன்னது: "சகோதரா, ஏன் இவ்வாறு புகை பிடித்து வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..."

புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது..

களைப்பு ஏற்படுவது ஏன்?

டாக்டர் கு. கணேசன்

                                                          ஓவியம்: வெங்கி

நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. கடுமையான உழைப்புக்குப் பிறகு உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கை. மாலையில் அல்லது இரவில் போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டால், காலையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.

Friday, September 25, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள்- Dr. Vavar F Habibullah

உலக ஹஜ் பயணிகளை பற்றி சொல்வதற்கு முன்னால், இந்திய ஹஜ் பயணிகள் பற்றியும் அவர்களை தேர்ந்து எடுத்து அனுப்பும் இந்திய மற்றும் தமிழக அரசு - ஹஜ் கமிட்டிகள் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது அவசியம்

தமிழகத்தில், எம்.ஜி.ஆர் ஆட்சி நடை பெற்ற கால கட்டத்தில், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட் டியில் என்னை உறுப்பினராக நியமனம் செய்து எம்.ஜி.ஆர் உத்தரவு பிறப்பித்தார். அந்த செய்தியை அந்நாளில் அதிகார பூர்வமாக அறிவித்தவர், மூத்த IAS அதிகாரி யும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் செயலாள ருமான E. அகமது IAS அவர்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி; பின் வந்த ஜானகி ஆட்சியிலும் சரி, ஆட்சி கலைந்த பின் நிகழ்ந்த, ஜனாதிபதி ஆட்சியிலும் சரி, தொடர்ந்து வந்த கலைஞர் ஆட்சியிலும் சரி, மிக நீண்ட காலம், தமிழ்நாடு ஹஜ் குழுவில் உறுப்பினராக பணிபுரிந்த அனுபவம் எனக்கு உண்டு.

Wednesday, September 23, 2015

வாழ்த்துகள் சாதிக். தொடரட்டும் உன் நற்பணி.                                        Sadhik Sarafath
அடுத்தவர்களுக்கு உதவுவதிலும், சமூக சேவைகளிலும் பெரிய ஈடுபாடு உடைய பையன். சமீபத்தில் தன் சொந்த சிலவில் குளத்தை தூர் வாரியதாகவும், சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டதாகவும் பதிவு செய்திருந்தேன் அல்லவா. அதில் இந்த பையனின் பங்களிப்பும் இருந்தது. சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்கறீங்களா? இருங்க விஷயத்திற்கு வருகிறேன்.

நேற்று இரவு பதினோறு மணிக்கு எங்க ஊரில் ஒரு விபத்து. ரயில்வேயில் வேலை செய்யும் இரு பசங்க பைக்கில் வேகமாக வந்து ஒரு பள்ளத்தில் தலை குப்புற விழுந்ததில் பயங்கரமான அடி. தலை உடைந்து, முகம் வீங்கி ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இரு பசங்களையும் காப்பாற்றி தன் வீட்டிற்கு தூக்கிபோய் வீட்டிலிருந்த தனது லுங்கியை எடுத்து ரத்தத்தை சுத்தம் செய்து முடித்து ஆம்புலன்சுற்கு காத்திராமல் இன்னும் ஒரு பையனின் உதவியோடு தனது காரிலேயே அறந்தாங்கி மருத்துவமனைக்கு தூக்கி சென்று 'நிலமை ரொம்ப சீரியஸ் இங்கே பார்க்க முடியாது. நேரா புதுக்கோட்டை சென்றால் காப்பாற்றலாம்' என்று அங்கிருந்த மருத்துவர் சொன்னதால் முதலுதவி மட்டும் செய்து, அப்படியே புதுக்கோட்டைக்கு ஒரு ஆம்புலன்சில் அனுப்பி அவர்கள் குடும்பத்தினருக்கும் அந்த நள்ளிரவு நேரத்தில் தகவல் சொல்லி... சான்சே இல்லை.

Monday, September 21, 2015

எண்ணங்களின் எழுச்சி! என். ஜாகீர் ஹுசேன் 

இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் அளப்பரிய ஆற்றலை, தனித்திறமையை வைத்துள்ளான். அதை உணர்ந்து வெளிக்கொணர்ந்து செம்மையாகச் செயல்படுத்துபவர்கள் தான் சாதனையாளர்களாக உள்ளார்கள்.

ஒவ்வொரு வருக்கும் கை கட்டை விரல் ரேகையை தனித்தனியாக மாறுபட்டு அமைத்துப் படைத்திருக்கும் இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் ஆழ்மனத்தில் ஒரு மகத்தான சக்தியை விதையாக வைத்துள்ளான் என்பதை நம்ப வேண்டும். அந்த விதையை விருட்சிகமாக மாற்றுவதில் தான் வெற்றி உள்ளது.

Sunday, September 20, 2015

ஹலோ...ஹலோ... நலமா.!?


நாம் தினம் தினம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை முதல் விசாரிப்பாக எப்படி இருக்கீங்க நலமா.? என கேட்டறிகிறோம். பதிலுக்கு நாம் விசாரிக்கும் நபர் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்றோ அல்லது இரண்டு நாளா ஜுரம்ங்க தலைவலி உடம்புக்கு சரியில்லை அதான் வெளியே வரலே என்று உடல் உபாதையை சொல்லி அழுத்துக் கொள்வதும் உண்டு
.

ஆக நாம் எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் உடல் நலம் சிறிதளவில் சரியில்லையெனில் மனது மகிழ்வுடன் நிம்மதியுடன் இருப்பதில்லை.அப்படியானால் நாம் இவ்வுலக வாழ்க்கையை இனிமையாய் கழிக்க உடல் நலம் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது..அப்படிப்பட்ட உடல் நலத்தை பேணிப்பாதுகாப்பது நமது தலையாய கடமையாக இருக்கிறது.

தூக்க மாத்திரை - Rafeeq Friend


அன்று இரவு உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவேண்டிய கட்டாயமேற்பட்டது.

இரவு உணவுமுடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அந்த வேளையில் அவரது ஆறு வயது மகன்வந்து அவரை அழைத்துக் கொண்டிருந்தான்.

'தம்பிகூப்பிடுகிறான் என்னவென்றுகேளுங்களேன்' என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில், " அவனுக்கு தூக்கம் வருவதற்கு மாத்திரைகேட்கிறான். இருங்கள் எடுத்துக்கொடுத்துவிட்டு வருகிறேன் " என்று சிரித்துக்கொண்டே போனார். என்னது ஆறு வயது பையன் தூங்குவதற்கு மாத்திரையா? என்று நீங்கள் பதறுவது போலத்தான்நானும் அதிர்ந்தேன்.

Saturday, September 19, 2015

துபாய் மன்னரின் மூத்த மகன் மாரடைப்பால் இன்று காலை மரணம்.:

 துபாய் மன்னரின் மூத்த மகன் மாரடைப்பால் இன்று காலை மரணம். துபாய் மன்னர் மாண்புமிகு His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்களின் மூத்த மகன் Sheikh Rashid bin Mohammed bin Rashid Al Maktoum இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் வயது 34.
இன்று (19/09/2015) முதல் 3 நாட்களுக்கு அமீரகத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கொடிகள் அரை கம்பத்தில் பறக்கபடுகிறது. அரசு அலுவலங்கள் மற்றும்
தனியார் துறைகள் வழக்கம் போல் இயங்கும்.
மக்ரிப் தொழுகைக்கு பிறகு ZABEEL பள்ளியில் இருந்து BUR DUBAI உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என துபாய் அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Thursday, September 17, 2015

புரட்சியின் பூபாளம்

வரதட்சணை பாரத்தால்
வாடிடும் பெண்களுக்கும்,
மாமியார் கொடுமையால்
மாண்டிடும் பெண்களுக்கும்,

பாலியல் பலாத்காரத்தால்
பரிதவிக்கும் பெண்களுக்கும்,
அடுக்களை வேலைகளில்
அல்லல்படும் பெண்களுக்கும்,

முஸ்லிம் மாணவன் தயாரித்த வாட்சை வெடிகுண்டு என தவறாகக் கருதி கைது: ஒபாமா, ஹிலாரி கண்டனம்

 சொந்தமாக கண்டுபிடித்த கெடிகாரத்தை வெடிகுண்டு என்று தவறாக பள்ளி ஆசிரியர் நினைக்க கைது செய்யப்பட்ட முஸ்லிம் சிறுவன் செய்தியாளர்கள் சந்திப்பில்...| ஏ.எஃப்.பி.


வீட்டில் செய்யப்பட்ட வாட்ச் ஒன்றை வெடிகுண்டு என்று தவறாக நினைத்து 14 வயது முஸ்லிம் மாணவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கைக்கு அங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Monday, September 14, 2015

மன்னர் என்ற பந்தா இல்லை - Abu Rayyan


மன்னர் என்ற பந்தா இல்லை
கூட அல்லக்கைகள் இல்லை
அடிமைகள் கூட்டம் இல்லை

மெக்கா விபத்தில் காயமடைந்தோரை
நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதிலும்

அவர்களுக்கு அளிக்கப்படும்
உயர் சிகிச்சையே பற்றி அவர்களிடமே
விசாரித்து தெரிந்து கொண்டதிலும்

அப்ப என்னதான் பண்றது...???

பாலியல் வன்முறைகள் நிகழக்கூடாது,
கடுமையான தண்டனைகளும் வழங்கலாகாது,
ஆடை ஒழுங்கை ஆதரிக்கவும் கூடாது

அப்ப என்னதான் பண்றது...???

எல்லா மனிதர்கள் மனதிலும் பக்குவத்தை விதைக்க வேண்டும்
என்பது சரிதான்,ஆனால் உடனடியாக நடக்குமா அது...??

பத்திரிகைகளும்,தொலைக்காட்சிகளும், நாடகம்,திரைப்படம்,விளம்பரம் மற்றும் சினிமாக்கள் மூலம் உருவாக்கி வைத்திருக்கும் பெண்ணுடல் சார்ந்த கேவலமான புரிதல்களை மாற்றுவதற்கு என்ன உழைத்திருக்கிறோம்...???

#எதுவுமே செய்ய மாட்டோம்,ஆனால் எல்லாம் மாற வேண்டுமா...???
-------------------------

Sunday, September 13, 2015

இயன்றதைச் செய்! முயன்றுகொண்டிரு! - Yembal Thajammul Mohammad

சகோதரா,

உன் தலையில் கொம்பு இல்லையா?
உன் மண்டைக்குப் பின்னால் ஒளிவட்டம் வீசவில்லையா?

”திருமண வீடுகளில் மணமகனாகவும் இழவு வீடுகளில் பிணமாகவும்”
இருந்து முக்கியத்துவம் தேடுவதிலேயே முனைப்பாக இருப்பவர்கள் போல இல்லாத, பிழைக்கத் தெரியாதவன் நீ என்று பேசுகிறார்களா?

உன் யதார்த்தத்தை எளிதாக எண்ணி ஏளனம் பேசுகிறார்களா?
உன் முயற்சிகள் வெற்றி பெறாதவை போலச் சில நேரங்களில் தோன்றுகின்றனவா?

இந்தச் சமூகமும் நாடும் உலகமும் யாரோ சிலருக்கு எழுதிவைக்கப்பட்டு அவர்கள் விருப்பங்கள் மட்டுமே அரங்கேறுவன போல் தோன்றுகிறதா?

அன்னை ..! - கலைமகள் ஹிதாயா றிழ்வி


பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை...!

கண்ணே என்று இமையைப் போலவே
காத்திருபால் இவள் நிதமே
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதமே...!

கருவறை பயணம்

தனிமை..ஆனாலும்

அந்த இருட்டு சுகமாயிருந்தது..

வெளிச்சம் பார்த்ததும் அழுகை வந்தது..

தாய் எடுத்து முத்தம் தந்தார்.

தந்தை அணைத்து ஆறுதல் சொன்னார்..

சொந்தங்கள் சிரித்துக் கொண்டார்கள்...

வளர்ந்ததும் அன்பு புரிந்தது..
பாசம் தெரிந்தது..

நண்பர்கள் வந்தார்கள்..நட்பு புரிந்தது..நலமும் வந்தது..

முகநூலில் வாழ்த்துகள்


சர்வதேச மட்டத்தில் ஓர் தரமான இணையத்தளம் (NIDUR SEASONS) நீடூர் சீசன்ஸ்

அவ்வப்போது என் பல படைப்பு விதைகளுக்கு நீர் ஊற்றி வளர் த்தெடுக்கும் களம்
அந்த வகையில் அன்பான என் நானா முகம்மட் அலி ஜின்னாஹ் அவர்களுக்கு
என்னிதயத்தின் ஆழத்திலிருந்து பதியும் நன்றிகள்


-Kalaimahel Hidaya Risvi
http://nidurseasons.blogspot.in/2015/08/blog-post_28.html
---------------------------------------------------------------------------

நான் காணும் உகாண்டா ....!


by- ராஜா வாவுபிள்ளை

ஆங்கிலேயர் சந்தித்த முதல் கபாகா.

நாடு பிடிக்கும் உக்தியோடு உகாண்டாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் கண்ட முதல் கபாகா முட்டேசா-1 என்ற புகாண்டா ராஜ வம்சத்து 30 வது கபாகா ஆவார்.

கபாகாவாக இருந்த இவரது தந்தை வைசூரி நோய்கண்டு இறந்ததும் 1856 ம் ஆண்டு முடிசூடிக் கொண்டார்.

பல வகையான முன்னேற்றங்களும் இப்போது இருக்கும் நாகரீக பகாண்டா பண்பாடு கலாசார வளர்சிகள் இவரது காலத்திலேதான் முடுக்கி விடப்பட்டது எனலாம்.

இதற்கு முந்தய கபாக்காக்கள் விலங்கினங்களிடம் இருந்தும் எதிரி நாட்டு படையெடுப்புகள் போன்றவற்றை கவனித்து வந்தார்கள் ஆனால் இவருக்கோ மண்ணாசை பிடித்த ஆங்கிலேயர்களிடம் இருந்தும் தன் நாட்டையும் வளங்களையும் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டது.

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி-5/ -நிஷா மன்சூர்


“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

Thursday, September 10, 2015

தோல்வி நிலையென நினைத்தால்...- Raheemullah Mohamed Vavar


தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா ?

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?

உலகில் எது நிலையானது, அப்படி எதுவுமே இல்லை என்பதே அறிவியல் உண்மை. என்றோ ஒருநாள் போகும் அந்த உயிரை, அதற்கு சாவே இல்லாமல் எந்நாளும் இப்புவியில் நிலைத்து நிறுத்தி விட, இறுதிவரை வாழ, உரிமைகளை மீட்கும் போராட்டத்திலோ இல்லை அப்படியான ஒரு முயற்ச்சியிலோ அதை இழப்பதில் கிடைத்து விடுகிறதே. அதன் பலனாய் எதிர்கால சந்ததிகளுக்கு கிடைத்து விடும் நன்மைகளினால் இந்த பூமி முடியுமட்டும் நீ விட்டுப்போன அந்த உன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியுமே !

Raheemullah Mohamed Vavartoஎண்ணமும் எழுத்தும்......

Tuesday, September 8, 2015

உகண்டாவில் எனது வீட்டு வாத்தியார் ....!

உகண்டாவில் எனது வீட்டு வாத்தியார் ....!

கற்றுத்தருபவர் அனைவரும் ஆசிரியரே.

எனக்கு சொகிலி மற்றும் லுவோ எனும் கிழக்கு ஆப்ரிக்க மொழிககளை கற்றுத்தவர் கொமகேச் என்பவர்.

அவர் நாங்கள் எண்பதுகளில் கம்பாலாவில் வசித்துவந்த வீட்டின் காவல்காரராக வேலைசெய்து வந்தார்.

அப்போது உகாண்டாவில் உள்நாட்டு போர் நடந்து வந்ததால் மாலை 5 மணியிலிருந்து காலைவரை ஊரடங்கு சட்டமும் கண்டதும் சுடவும் உத்தரவு அமலில் இருந்தது.

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் !!!


ஆள் வளந்த அளவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்று இந்த சொல்லை நாம் நமது ஊர்களில் வசிப்பிடங்களில் பெரியோர்கள் பிறருக்கு புத்திமதி சொல்லும்போது காதில் கேட்டிருப்போம். அதாவது சாதாரணமாக சிலகாரியங்களை செய்யும்போது யோசிக்காமல் தவறுதலாக செய்து விடுவது அல்லது ஒரு செயலின் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் செய்துவிட்டு பிறகு வருத்தப்படுவது இதுபோன்ற அறிவைப் பயன்படுத்தாமல் செய்யும் தவறுகளை செய்பவர்களிடத்தில் தான் பெரும்பாலும் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள்.


இவ்வுலக வாழ்க்கைக்கு பலவிதத்திலும் அறிவை வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியமாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அல்லது ஒரு திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டுமென்றாலும் அறிவு அவசியப்படுகிறது அறிவோடு யோசித்து செய்யும் காரியங்கள் யாவும் திறம்பட உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கும்.

புத்தரும் மொழியின் போதாமையும்...!! -நிஷா மன்சூர்புத்தர் உரையாற்றிக் கொண்டிருந்தார்......
மிகுந்த அதிருப்தி கொண்ட ஒருவன் முனகிக்கொண்டே உட்கார்ந்திருந்தான்..
புத்தரின் போதனைகள் அவனை மிகுந்த பதட்டம் கொள்ள வைத்தன,
இறுதியாக,அதிருப்தியுடன் புத்தரை நோக்கி முன்னேறிய அவன் கடுமையாக வைதுகொண்டே காரி உமிழ்ந்தான்...

தலைமை சீடன் ஆனந்தன் உள்ளிட்ட சீடர்கள் கோபம்கொண்டு
அவனைத் தாக்கப் பாய்ந்தார்கள்,
அவர்களைத் தடுத்து நிறுத்திய புத்தர்,தன் மீது காரிஉமிழ்ந்த அந்த அதிருப்தியாளனைப் பார்த்துக் கேட்டார்...
"நீ இன்னும் எதாவது சொல்லணுமா...??"

Sunday, September 6, 2015

சொல்லத் தோணுது 49: மக்கள் - குரல் - மன்றங்கள் - தங்கர் பச்சான்


மக்களின் குரல் எழுப்புவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட மன் றங்கள்தான் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும். ஆனால், அந்த மன்றங்கள் எல்லாம் இப்போது மக்களின் குரலை எழுப்புவதற்கு பதிலாக நாடக மன்றங்களாக மாறிவிட்டன.
கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக சடங்குகளைக் கடைபிடிப்பதில் மிக வல்லவர்கள் நம் ஆட்சியாளர்கள். மக் களைக் காப்பாற்றுவதற்கு உருவாக்கப் பட்ட அரசியல் சட்டங்களை தங்களுக் குத் தகுந்ததுபோல் எவ்வாறு வளைப் பது என்னும் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, அந்த அரசியல் சட்டத்தையே தங்களுக்கு அரணாக மாற்றிக் கொண் டவர்களில் உலகத்திலேயே முதலிடம் நம் அரசியல்வாதிகளுக்குத்தான்.
சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத் துக்கும் செல்லாமலே அவர்களால் ஐந்து ஆண்டுகள் அந்தத் தொகுதி மக்களின் உறுப்பினராக பதவியை அனுபவிக்க முடியும். பலர் எப்போதாவது ஒருமுறை கையெழுத்தை போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நம் நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வாக்களித்த பலருக்கு தங்கள் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் தெரியாது; முகமும் தெரியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் முன் முகத்தைக் காட்டுவதோடு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பதவியில் இருக்கும் இந்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல; வாழ் நாள் முழுக்க மக்களின் வரிப் பணத் தில் அதற்கான ஊதியத்தையும், சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Friday, September 4, 2015

புனிதம் மணக்கும் ஹஜ் ..! / சிறப்புக் கவிதை - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பலர் ஹஜ்ஜுக் கடமையினை நிறை வேறற புனித மக்கா நகர் சென்று இருக்கம் இந்த இனிமையான மாதத்தின் சிறப்புக் கவிதை

புனிதம் மணக்கும் ஹஜ் ..!
மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் ,
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!

பாவத்தை யகற்றி நெஞ்சை
பாலென மாற்றும் ஹஜ்ஜை !
தாபமாய் தரிசித் தோர்கள்
தரனியில் ஹாஜி யாவர் !

இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்பார் ஹஜ்ஜில் தானே !

பேசும் கரங்கள் - Rafeeq Friend


இந்தப் படங்களிலொன்று மட்டும் நட்பில் இருக்கும் பேராசிரியை ஒருவரால் 'காலை வணக்கம்' பதிவில் பகிரப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்கள் அறிவதற்காக இணையத்தில் தேடியபோது மெய்சிலிர்த்தது.

அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?
அப்படி ஏன் அந்தக் கரங்களைப் பார்க்கிறார்கள்?
அந்தக் கரங்கள் அவர்களிடம் ஏதும் பேசுகிறதா?

கேளுங்கள்....

2012ல் ஆஃப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்தார் தளபதி அப்துல் ரஹீம். அப்போது, குண்டு வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்துவிட்டார். உடனடியாக அமெரிக்க மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி மற்றும் சிச்கிசை அளித்தது. இருப்பினும் தனக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட வேண்டும் என்று பல நாட்டு மருத்துவமனைகளை அணுகியும் பயனில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails