Thursday, July 31, 2014

காசா மக்களே! நாங்கள் உங்கள் அருகில் நிற்கவில்லை நாங்கள் நீங்களாகவே நிற்கின்றோம்

முதன் முதலாக

மகன் அம்மாவை இழந்து
அப்பா மகளை இழந்த நிலையில்
அம்மா தன் பிள்ளைகளை இழந்த நிலையில்
தியாகத் திருநாளில் தொழ எழுப்ப முடியவில்லை
பிள்ளைகள் காசா போரில் தியாகமானதால்
கொடிய இஸ்ரேலிய அரக்கனால் அழிக்கப்பட்ட
உறவுகளை தேடி அலையும் கண்கள்
பச்சிளம் சிறார்கள் ஏவுகனையால் சிதறப் பட்டார்கள்

மகிழ்வுகள் மறைந்து
சோகங்கள் சூழ தியாகத் திருநாள்
விழிகள் அருவியாய் கண்ணீரைக் கொட்டுகின்றன

Wednesday, July 30, 2014

கடற்கரையில் காற்று வாங்க போனோம்! -இன்னபிற சங்கதிகளுடனுமாக பார்த்த கடல்.

 கடற்கரையில் காற்று வாங்க போனோம்!
பெருநாள் தினத்தின்
மாலை நேரம்
குமரி முஸ்லிம்களுக்கு
கடற்கரையில்
காற்று வாங்கும் நேரம் !

ஒவ்வொரு பெருநாள்
மாலை நேரங்களும்
கன்னியாகுமரி கடற்கரை
ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவுக்கு
முஸ்லிம்களின் சங்கமத்தால்
நிரம்பி விடுகிறது !

நேற்றும் அப்படித்தான்...
நாங்களும் சங்கமம் ! 

பெரியாரின் தாக்கம் பெரியவாளிடம்!

தந்தை பெரியாரின் கொள்கையும், பிரச்சாரமும் பாமர மக்கள் மத்தியில் மட்டுமல்ல; படித்தவர்கள் மத்தியிலும் அம்பாகத் தாக்கியிருக்கிறது. ஏன்? முற்றும் துறந்த முனிபுங்கவர்களையும், காவி தரித்த கனவான்களையும்கூடக் கச்சிதமாகவே தாக்கி களைப்பாறி இருக்கிறது.

மடத்துக்குள்ளிருந்த என்னை மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிறுத்தியவர் தந்தை பெரியார் என்று மனம் நிரம்பக் கூறியவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரையே தாக்கி இருக்கிறது என்று சொன்னால், சுலபத்தில் யாரும் ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
உண்மை என்னவென்றால் மேனாவில் (பல்லக்கில்) முன்னால் நான்கு பேர்களும், பின்னால் நான்கு பேர்களும் தோளில் சுமந்து அதில் பவனி வந்த அந்தச் சங்கராச்சாரியார், அதனை விலக்கி விட்டு, காலால் நடந்து செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.

Sunday, July 27, 2014

.#10 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
.
விளக்கம் :
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேருவார்; நீந்தாததவர் இறைவனடியை சேரமாட்டார்.
.
குர்ஆன் - 13:24.
(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (இறைவனிடமுள்ள) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.)..
.
விளக்கம் :
இப்பிறவியில் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் பொறுமையுடன் இறைவனுக்காக பொறுத்துக்கொண்டு கடந்து சென்றவர் ஈடேற்றம் அதாவது இறைவனிடம் உள்ள அழகிய தங்குமிடம் செல்கிறார். மற்றவர் சேர்வதில்லை.
..

#9 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:09.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
.
விளக்கம் :
குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும்.
.
குர்ஆன் - 2:171 & 22:77.
- (அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.
- நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள்.
.
விளக்கம் :
இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல், இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள்.
..

#8 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:08.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
.
விளக்கம் :
அறமாகிய கடலையுடைய அந்தணனது (இறைவனுக்கு அடிபணிந்தவனது) இடம் சேர்ந்தவனல்லாது, மற்றவர்க்கு பிறவி கடலை நீந்துவது கடினமாகும்.

குறிப்பு :
அந்தணன் என்பது சாதி அல்ல, பண்புப்பெயர் ஆகும், மேலும் குறள் 30 இவ்வாறு விளக்குகிறது "எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்". மற்றும் இக்குறள் அந்தணணோடு சேர்ந்து இருப்பதை மட்டும் பொருளாக எடுத்து கொள்ளமுடியாது, மேலும் அவனது குணங்களை தன்னுள்ளே எடுத்து கொள்ளுவதையும் குறிக்கும் எனவே அந்தணணுடன் சேர்ந்து அந்தணனாக மாறுவதே முதல் பத்தியின் பொருள்.
.
குர்ஆன் : 4:139., 3:102. & 3:185.
- "இவர்கள் நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) விடுத்து நிராகரிப்பவர்களையே நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை விரும்புகின்றார்களா? .."
-"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்."
- "... இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை."
.

#7 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:07.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
.
விளக்கம் :
தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது.
.
குர்ஆன் : 10:25 & 26
. (மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே இணையற்ற இறைவனான அல்லாஹ் அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.. நன்மை செய்தவர்களுக்கு நன்மைதான். அதிகமாகவும் கிடைக்கும். அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்..

விளக்கம் :
இணையற்ற இறைவனான அல்லாஹ்வை வழிபடுபவர்களை கலவை சூழ்ந்துகொள்ளாது.
.

#6 திருக்குறளும் திருக்குர்ஆனும்

#6 திருக்குறளும் திருக்குர்ஆனும்
குறள் - 01:06.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
.
விளக்கம் :
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார் எக்காலத்தும் வாழ்வார்
.
குர்ஆன் : 91:7-10 :
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
.
விளக்கம் :
நன்மை தீமை பிரித்து அறிவிக்க பட்ட உள்ளதை நன்மை மட்டுமே செய்து தூய்மை படுத்துகிறவர் வெற்றிபெற்றவர் முடிவில்லா சுவர்க வாழ்க்கை வாழ்வார்.

உன்னுடைய மகனாக இருந்தால் தாமதமாகி வருவீரா?


சவூதி அரேபியாவைச்சேர்ந்த வைத்தியர்
சயீத் முஹம்மத் அல்கஹ்தானி என்பவர்
ஒரு சத்திரசிகிச்சைக்காக அழைக்கப்பட்டார் அவர் சற்று தாமதமாகி வந்தார் உடனே சத்திரசிகிச்சைக்காக வந்திருந்த சிறுவனின் தந்தை வைத்தியரிடம் உன்னுடைய மகனாக இருந்தால் தாமதமாகி வருவீரா?
என காரசாரமாக திட்டினார் அதற்கு வைத்தியர் ஒன்றும் பேசவில்லை
சத்திரசிகிச்சை அறைக்குள் நுழைந்துவிட்டார் பின் சத்திரசிகிச்சை நல்ல படிமுடிந்தது அந்த சிறுவனும்
குணமடைந்தான் அப்பொழுதுதான்.

அன்றைய தினம் வைத்தியரின் மகன் வபாத்தாகி(இறந்து விட்டதால்) அந்த ஜனாசவை விட்டு விட்டு
வந்ததில்தான் அவர் தாமதமானர் என்று
சுகமடைந்த சிறுவனின் தந்தையும்
மக்களும் கேள்விப்பட்டனர்!

தகவல் தந்தவர் Riyaz Ahamed

Saturday, July 26, 2014

இலவச ஆன்லைன் இணைய தளங்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.

இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.

ஆன்லைன் மூலம்
பல தரப்பட்ட விசயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விசயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சில விசயங்களை நீங்கள்
ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

தூர்த்திட வேண்டும் துணிந்து...

நேர்மையே அற்றவோர் நீணில வாழ்விலே
சோர்வதும், சோகமும், தோல்வியும் ஏணியே!
ஆரெமைக் காத்திடும் ஆண்டவன் என்றுளக்
கூரது மங்கிய கொள்கையில் மாய்வதோ?

பறந்திடும் எல்லாம் பறவையா என்றும்,
துறந்திடும் மாந்தர் துறவியா என்றும்,
உறவுகள் யாவுமே உண்மையா என்றும்,
அறுதியாய் எங்ஙனம் ஆய்ந்தே அறிவதோ?

மூர்க்கரும் நெஞ்சினில் மோகமே விஞ்சிட
ஆர்த்திடும் பிஞ்சதன் ஆயினைத் தீய்ப்பதோ?
ஊரதைச் சுற்றிய ஊத்தையை சாய்த்திட
யாரெவர் வேண்டும்? எழுந்திடு மானிடா!

பாரதம் பற்றியப் பாம்பாம் புரையிதைத்
தூர்த்திட வேண்டும் துணிந்து.
==============================
ஆய் = எழில்
ஊத்தை = பெருங்கேடு
புரை = வளர்தீமை
தூர்த்தல் = அழித்தல்

நன்றி :கவிதை யாத்த கவிஞர் இராஜ. தியாகராஜன் அவர்களுக்கு 

அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள் !

கவிமாமணி பேராசிரியர் தி.மு அப்துல் காதர்
********************************
தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹியாத் விரல்கள் !

செடார் மரக் கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !

காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

Friday, July 25, 2014

#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்

#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்
குறள் - 01:01 :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம் :
அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

தமிழ் : அ, (அ - அகரம் )
ஆங்கிலம் : A, (அ - அகரம்)
ஹிந்தி : अ, (அ - அகரம் )
தெலுகு : అ, (அ - அகரம்)
அரபிக் : ا, (அலீஃப் - அகரம்)
சீனமொழி : 诶, (அ - அகரம்)
எபிரேயமொழி : א, (அலீஃப் - அகரம்)
சம்ஸ்கிருதம் : अ, (அ - அகரம்)
கிரேக்கம் : α (ஆல்ஃபா - அகரம்)

- மேலும் எத்தனை மொழிகளை ஆராய்ந்தாலும் அதன் முதல் எழுத்து அகரமாகவே இருக்கிறது. எனவே அடுத்த வரியும் நிதர்சனமான உண்மையாகத்தான் இருக்க முடியும்,எனவே முழு உலகமும் ஒரே இறைவனிடம் இருந்து தோன்றியதே.

எங்கும் ரத்தம், எங்கும் மரணம் - தி இந்து

எங்கும் ரத்தம், எங்கும் மரணம் - தி இந்து

உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்!
உயிருக்கு உயிரான நண்பர்களே, நேற்று இரவு ரொம்பவும் கொடுமை.
எத்தனையெத்தனை மக்கள்! குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை; எல்லோரும்
அப்பாவிப் பொதுமக்கள்; படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய
நடுங்கிக்கொண்டு, செத்துக்கொண்டு வண்டிகளில் மந்தைமந்தையாக ஏறிச்சென்று…
அப்பப்பா! இப்படியொரு நிலைக்குத்தான் இறுதியில் கொண்டுவந்து
விட்டிருக்கிறது இஸ்ரேலியப் படையெடுப்பு.
இங்கே அவசரச் சிகிச்சை ஊர்திகளில் பணியாற்றுபவர்கள்தான் நிஜமான வீரர்கள்.
காஸாவிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் நேரங்காலம் பார்க்காமல் 12-24 மணி
நேரம் கூடப் பணியாற்றுகின்றனர். கொடூரங்கள் நிரம்பிய பணியின் சுமையினாலும்
களைப்பினாலும் அவர்களுடைய முகங்கள் சாம்பல் பூத்துப்போயிருக்கின்றன.
இத்தனைக்கும் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்குக் கடந்த நான்கு
மாதங்களாகச் சம்பளமே வரவில்லை. இருந்தும், படுகாயமுற்றவர்களிடம் அக்கறை
காட்டுவதிலும், இன்னாருக்கு இன்ன சிகிச்சை என்று தீர்மானிப்பதிலும்,
எப்படிப்பட்ட வீரர்கள் அவர்கள்! அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றையும்
நிதானிக்க முயல்கிறார்கள் அவர்கள்: அதாவது, எண்ணற்ற மனித உடல்கள், வெவ்வேறு

Thursday, July 24, 2014

'பாகிஸ்தானின் மருமகள்': பாஜக விமர்சனத்துக்கு சானியா பதில்

தெலங்கானா மாநில தூதராக நியமிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானின் மருமகள் என தெலங்கானா பாஜக தலைவர் தெரிவித்த கருத்துக்கு சானியா மிர்சா பதிலளித்துள்ளார்.

தெலங்கானா மாநில தூதராக சானியா மிர்சாவை நியமித்து அதற்கான நியமன ஆணையையும், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.

Wednesday, July 23, 2014

திருக்குறளும் திருக்குர்ஆனும்

#2 திருக்குறளும் திருக்குர்ஆனும்
.

குறள் - 01:02 :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
.
விளக்கம் :
நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவின் பயன் யாது? மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
.
குர்ஆன் : 30:56-57.
எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், "ஆனால், அந்நாளில் (இறைவனை தொழாது) அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது"
.
விளக்கம் :
கல்வியறிவு பெற்றவர்கள் தூய இறைவனை தொழாது இருந்ததனால் மறுமையில் தீர்ப்பளிக்கப்படுவர்
.
Reference :
1) http://www.thirukkural.com/2009/01/1.html#2
2) http://www.tamililquran.com/qurandisp.php?q=கல்வி&start=30#30:56


நான் இஸ்லாமியனாக மாறிய பிறகு....

நான் இஸ்லாமியனாக மாறிய பிறகு தாய் தந்தயர்கும் முன்னோர்களுக்கும் பிறந்த சாதி சமயத்திற்கும் துரோகம் செய்து விட்டதாக ஏகப்பட்ட குற்றசாட்டுகளும் நாசமாய் போய் விடுவேன் பிச்சை தான் எடுப்பேன் என்ற சாபங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது அதுவும் எனக்கு பிரியமான உறவுகளின் நண்பர்களின் நாவுகளில் இருந்து..

தாய் தந்தயர்க்கு செய்ய வேண்டிய கடமைகளில் பல சமயம் நான் தவறி இருக்கலாம், அவை எல்லாம் தற்காலிகமே.. அவர்களின் மீதான மரியாதையும் அவர்களின் கண்ணியமாக பேசும் முறையும் நான் இஸ்லாமியனாக ஆனா பிறகுதான் எனக்கு தோன்றியது.. அவர்களுக்கு எந்த துரோகமும் செய்பவனாக எனக்கு தெரியவில்லை.

அல்லாஹ்வை நம்பும் முஸ்லிம்கள் அல்லாஹ்வைமறுக்கும் யூதர்களால் கொல்லப் படுவது ஏன்?


அண்ணா பெறியாரின் கொள்கை உடையை ஒருவர் என்னிடம் சில
கேள்விகள் கேட்டார் எனக்கு பதில் சொல்லதெரியவில்லை.அவருக்கு நான் சில பதில்களை சொன்னேன் ஆனால் அந்த பதிலில் எனக்கே திருப்தியில்லை .அவர் கேட்ட கேள்விகள் .

1.உங்கள் அல்லா சக்தி உள்ளவர் என்கிறாயே அப்புரம் ஏன் அந்த அல்லாவை ஏற்றுக்கொண்ட சோமாலியா மக்கள் உன்ன உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்
2.உங்கள் அல்லாவையே முழுமையாக நம்பியிருக்கும் பாலஸ்தீன மக்கள் ஏன் உங்கள் அல்லாவை ஏற்கமறுக்கும் யூதனால் சாகடிக்க படுகிறார்கள் பாவம் பச்சகுழந்தைகள் ஏன் அவர்களும் கொல்லப்படுகிறார்கள் .
3.இதுகெல்லாம் காரணம் யார் இறைவனா ?மனிதனா ?
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்றே எனக்கு தெரியவில்லை அண்ணா .
நானும் 5, 6,பேரிடம் கேட்டேன் அவர்கள் சொன்ன எந்தபதிலும் எனக்கு திருப்தியில்லை அண்ணா .

الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ ﴿2:155﴾
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

நிஜங்களைப் பாதுகாத்துக் கொள்

வீண் புகழ்ச்சிகள்.
அவை
வீழ்ச்சிக்கான வலைகள் !

நீயல்லாத ஒருவன் தான்
நீ என்று
யாரேனும் உன்னைப் பார்த்து
சொல்லக் கூடும்.

“உன்னைத் தவிர யார் “?
என்று
உன்னை அறியாதவர்களே
உன்னை உன்னதத்துக்கு
உயர்த்தக் கூடும்.

அவர்கள்
உன் தலையில் விதைக்கும்
வண்ண விதைகளை
அங்கேயே தங்க வைக்காதே
நாளை அவை
ஆழமாய் வேர்விடக் கூடும்.

வசப்படுத்திய வாவுபிள்ளை ராஜா அவர்களின் வரிகள்


மீன்கொத்தி பறவையா………..?
ஒற்றைக்காலில் நிற்கும் நாரையா……….?

‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை’
ஒத்தை காலில் நிற்கும்
நாரையை விட……….

ஓடும் ஆற்றில் லாவகமாக பறந்து
நீந்தும் மீனை கொத்திச்செல்லும்
மீன்கொத்தி பறவை………….

தற்கால வாழ்க்கைக்கு சரியான உதாரணம்!
---------------------------------------

போய்வா; என் செல்லமே…

போய்வா;
என் செல்லமே…

முட்டிக்கொண்டு
நிற்கும் கண்ணீரோடு
வழியனுப்புகிறேன்
என் செல்லமே!

வளரும் முன்னே
சுவனத்தை சுகிக்க
பயணப்பட்டாயோ
என் செல்லமே!

போர் வெறுப்போம்

காட்டுமிராண்டித் தனம்
அநாகரிகத்தின் உச்சம்
மனிதன்
பரிணாம வளர்ச்சியே
பெறவில்லை
என்ற அறிவிப்பு
போர்

*

கண்காணாத தேசத்தில் விளைந்த
ஆப்பிள்
என் ரத்தமாகிறது

என் காலடி மண்ணில் விளைந்த
நெல்
எங்கோ ஒரு தூர தேசத்தவனுக்கு
ரத்தமாகிறது

இதில் என் மண் என்பது எது

பசுமை உலகில் படர்


பாருடல் பெண்ணாள் பசும்பட் டுடுத்தி...
பனியுண்டு பாலொளியில் பாங்காய் வாய்துடைத்து....
காருடல் வேர்வை மழையில் உடல்கிடத்தி...
காணி உடைநுழைந்து மேனி செழித்திடுவாள்...!

நீருடலாம் நான்கு நிலம்திரியா நல்லியல்பை...
பேருடல் பூண்ட புடவி மிளிர்ந்திடவே...
பூச்சூட்டி மெல்ல புதுவழகு பார்த்திடுவாள்...!

Tuesday, July 22, 2014

உங்களுக்கு இதயம் இருக்கிறதா?


உங்களுக்கு இதயம் இருக்கிறதா? ஒபாமாவிற்கு காசாவில் பணிபுரியும் நோர்வே மருத்துவர் கடிதம்!

காஸா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கருப்பு கண்டத்தின் கலங்கரை விளக்கம்!

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அவரது கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை கழிந்தது. வெளியில் வந்ததுமே அவர் முதலில் பார்க்க விரும்பிய நாடு இந்தியா. சிறைவாழ்க்கை முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கு வந்தார். ஏனெனில் இது காந்தி பிறந்த தேசம்.
ரோலிஹ்லஹ்லா மண்டேலா ஜூலை 18, 1918ல் பிறந்தார். தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பிராந்தியத்தில் ம்பாஸே நதி வளப்பத்திய பகுதியில் ம்வெஸோ என்கிற குக்கிராமம். பழங்குடியின பரம்பரை. ‘ரோலிஹ்லஹ்லா’ என்கிற சொல்லுக்கு க்ஸோஸா மொழியில் ‘கிளையை பிடித்து இழுப்பது’ என்று பொருளாம். ஆனால் பொதுவாக இச்சொல்லுக்கு அர்த்தமாகச் சொல்லுவது ‘பிரச்சினையை உருவாக்குபவன்’.
மண்டேலாவின் தந்தை ஒரு பழங்குடியினத் தலைவர். அங்கிருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்தார். வெள்ளையரின் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மண்டேலாவின் தந்தை தன்னுடைய அந்தஸ்தினை இழந்தார். உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்தான் எல்லாருக்கும் தலைவர் ஆனார். இதனால் குழந்தையாக இருந்த மண்டேலாவை தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் இடம்பெயர வேண்டியதானது.

Monday, July 21, 2014

விஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுருக்கம்20.07.14 அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம் இதுதான்: 
இரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:
 
ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா? நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து. புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். மண் புழு எங்கே வசிக்கும்? மண் புழுவின் உணவு யாது? என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார். அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா?

Saturday, July 19, 2014

நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

Friday, July 18, 2014

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி

 இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:
எழுத்தால் போட முடியாத எடை .........

கவிஞர் வாலி

பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்த

பிராயந்தொட்டு தொழுகை புரிய பள்ளிவாசல்

புகுவாரோடு பழகி நின்றவன்!

அவர்களது அன்பை ஆரா

அமுதமாய் தின்றவன் !

என் ஒவ்வொரு பருவத்திலும்

எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்

இஸ்லாமிய இனத்தவர்

அவரெலாம் - தண்ணீர் கலவா தாய்ப்பால் மனத்தவர் !

Wednesday, July 16, 2014

ஐநான்னா!

ஐநா அல்ல
ஐயாயிரம் நா சுழன்றாலும்
வல்லரசின்
செவிகளுக்குள்
அழுகுரல்கள்
செல்லவே செல்லாது

ஐநான்னா
அமெரிக்காவுக்கு
அரையணாதான்

அமெரிக்காதான்
ஐநாவுக்கும்
நைனா
 
------------------------------------------------------------------

ஒரு வழிப்பயணம் !

 
கருவறை தொடங்கி
கல்லறை முடிய
மறுவழியில்லா
ஒரு வழிப்பயணம்

அகிலத்தின் பயணம்
மகிழத்தரும் பயணம்
அகமுணர்ந்து நடந்தால்
பயம்தரும் பயணம்

மனம்போன போக்கில்
தினமொரு பயணம்
மாறாக பயணிக்கும்
மறுமையின் பயணம்

கோமாளிகளின் கோணங்கித்தனம்..!

“டேய் வேட்டி கட்டிய பயலயெல்லாம் கீழே உக்கார வைடா. பேண்ட்,கோட் போட்டவனை எல்லாம் சேர்ல உக்கார வைடா!”

இந்த வரிகள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ரத்தக் கண்ணீர் படத்தில் சொல்லப்பட்ட வசனம். எம்.ஆர்.ராதா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் இன்றையச் சட்டவிதி நடைமுறையை நையாண்டி செய்து இருக்கிறார்.

வேட்டி என்பது கலாச்சாரச் சின்னம். பண்பாட்டு வெளிப்பாடு, தனிமனித சுதந்திரம், இதைத் தடுப்பது தவறு என்றெல்லாம் இன்றையச் சட்டமன்றத்தில்கூட விளக்கமும் எதிர்ப்பும் தரப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் கிளப்பில், அவர்களுக்குள்ள உரிமையில், வேட்டி கட்டிய மனிதர்களுக்குக் கிளப்புக்குள் இடமில்லை என்று விதிவகுத்துக் கொண்டார்கள். இந்த விதியால் இன்றைக்குப் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்.

அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்

அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!

யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான  நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

கொதிக்கும் தண்ணீர் அணு உலை (Boiling water reactor, BWR)

பாலஸ்தீனத்தைக் கைவிடலாமா?

 உலகமே வேடிக்கை பார்க்க, பாலஸ்தீனத்தின் காஸா பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பின் ரகசிய நிலைகள்மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, இஸ்ரேல் ராணுவம் நடத்திய கணக்கற்ற வான் தாக்குதல்களில் அப்பாவிகள் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையிலான பலிகளின் எண்ணிக்கை இருநூறை நெருங்குகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தான். வழக்கம்போல, ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களைத் தாக்கியபோது, பொது மக்களும் சேர்ந்து உயிரிழக்க நேர்ந்துவிட்டதாக இஸ்ரேல் விளக்கம் தருகிறது.

Tuesday, July 15, 2014

'I can not sleep, when are you going to attack my home' - Anas('நான் தூங்க முடியவில்லை,நீ என் வீட்டை தாக்க முற்படும்போது') - அனஸ்

'நான் தூங்க முடியவில்லை,நீ என் வீட்டை தாக்க முற்படும்போது' - அனஸ் 
'I can not sleep, when are you going to attack my home' - Anas, 
you said this in #‎Facebook from #‎Gaza‬.. Now you are no more. Rest in peace my dear brother. Prayers with you!
 
M.Rishan Shareef shared his photo.

Monday, July 14, 2014

வேஷ்டியாக ஹஜ்/உம்ராவில் இஹ்ராமில் அணிந்து தொழுகிறோம். - தென்னிந்திய கலாச்சாரத்தில் கைலி/வேஷ்டி உடுத்துதல் உயர்வானது

சுத்தமான மொத்தமான கைலியை அழகுற இஸ்லாமிய மார்க்க நெறிப்படி அணிந்து தொழுவதுக்காக மஸ்ஜிதுக்கு வந்தால்.. வளைகுடா நாடுகளில் உள்ள பள்ளிவாசல்களில் "ஹாதா மம்னு... மாஃபி குவைஸ்...." என்று அரபிகள் தடுக்கிறார்கள்.

அவர்களிடம் சொல்லுங்கள்...

கைலி கேவலமானது அல்ல.
கைலி மரியாதை குறைவானது அல்ல.
கைலி மார்க்க விரோதமானது அல்ல.
கைலி நைட்டுக்கு மட்டுமான ஆடை அல்ல.
ஒருகாலத்தில் நபி ஸல் மற்றும் சஹாபாக்கள் அணிந்த ஆடைதான்.
அதையே தைக்காமல் வேஷ்டியாக ஹஜ்/உம்ராவில் இஹ்ராமில் அணிந்து தொழுகிறோம்.
கைலி விலை... சில தள்ளுபடி ஜீன்ஸ் பேண்டுகளை விட அதிகம்.
தென்னிந்திய கலாச்சாரத்தில் கைலி/வேஷ்டி அவ்ளோ ஒஸ்த்தி.

யாரோ தூக்குகிறார்கள்

                      யாரோ தூக்குகிறார்கள்

புல்லட் துளைத்த முதுகுடன் செத்த ஒரு குழந்தையை
கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றிலிருந்து
தாயைத் துளைத்த புல்லட்
உள்ளே இருந்த குழந்தையையும்…

ரத்தக் களறியாய் குழந்தைகள், பெண்கள்…
இவை காஸாவின் நிகழ்காலக் காட்சிகள்

மனிதம் மிச்சமுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத காட்சிகள்
அவை இஸ்ரேலில் இருந்து யூதர்கள் அனுப்பும் வான்வழி மரணம்
தரைவழி மரணத்தையும் தரப்போவதாக தகவலும் உண்டு

Don't Be Sad Beautiful Nasheed- Heart Touching- சோகம் ஏன்! மனதில் மகிழ்வை நாடுங்கள்

அன்பு நெஞ்சங்களே சோகம் ஏன்!

மனதில் மகிழ்வை நாடுங்கள்

கனிவோடு காணுங்கள்

நெஞ்சை வருடும் காணொளி

மனதை தொடும் குரலில் பாடல்

திரும்பவும் கேட்க வைக்கும் சூபி இசை

கருத்துகள் மனதில் நிலைத்து விடும்

பகிருங்கள் மற்றவரும் நன்மை பெற்று ஞானம் பெறசெல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது.

பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை.

ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன.

அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை." நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"

(குர்ஆன் 7:144)Dear Brothers and Sisters,

This is a video for those who are going through a tough time or feel some sorrow and sadness. Insha Allah this video will cure your pain and relieve your sorrows; what we all go through are just tests and trials in life, from Allah to see if we are patient and have perseverance. And remember what Allah said: " Verily after hardship comes ease."

So watch and smile! DON'T BE SAD!

நேர்மையும் நெறியும் பிறழாத மருத்துவர்கள் இன்றும் உண்டு

இதே நாள், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலாய், ஒரு டாக்டராய் என் க்ளினிக்கில் உட்கார்ந்தேன். அன்று என்னுடன் என் நண்பனும் அவன் மனைவியும் துணைக்கு வந்தார்கள். உள்ளே உட்கார்ந்து என்ன செய்வது என்றே தெரியாமல், செய்ய எதுவும் இல்லாமல் உட்கார்ந்து வெட்டியாய் ஏதேதோ பெசிக்கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் போனபின், இன்னும் பத்து நிமிஷம் பார்க்கலாம் யாரும் வராவிட்டால் போய்விடலாம் என்று முடிவெடுத்தபோது ஒருவர் உள்ளே வந்தார்.
“நீங்க தான் டாக்டரா?”
“ஆமாங்க”

தந்தை சொற்படி நாகரீகமாக எழுத கற்றுக்கொண்டேன்.

1999-2000 ஆண்டுகளில், நான் பத்திரிகைகளில் வாசகர் கடிதம், துணுக்குகள் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், ராஜு சுந்தரம் - சிமரன் காதல் உச்சத்தில் இருந்த நேரம். ஒரு முறை ஐரோப்பாவிற்கு சூட்டிங்கிற்காக போய் திரும்பிய ராஜு சுந்தரத்தின் பேட்டியை ஆனந்த விகடன் போட்டிருந்தது.
"அதெல்லாம் கிடக்கட்டும், ஐரோப்பாவிலிருந்து சிம்ரனுக்கு என்ன வாங்கி வந்தீங்க ராஜூ சுந்தரம் சார்?"- என்று ஒரு வாசகர் கடிதத்தை சும்மா வேடிக்கையாய் விகடனுக்கு அனுப்பி அது அடுத்த வாரம் பிரசுரமாகியிருந்தது.

Sunday, July 13, 2014

என் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு....

என் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என் பொன்னினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாளில் எனக்கு அவர் வாழ்த்துரை வழங்க வந்த சென்னை மேடையில் நான் அவர் பற்றி கூறியதை இடுவதில் மகிழ்கிறேன்:

இந்த மனதாலும் இவர் பேரரசர்தான்

சிப்பிகளுக்குச் சிக்காத முத்து
கரிகளுக்குள் விளையாத வைரம்
பொன்னாலும் மணியாலும்
சூழப்பெற்ற கறுப்பு நிலா
என் கன்னி மீசைக் காலந்தொட்டே
இதய மூச்சோடு விளையாடும்
கவிதை நெருப்பு உலா

யூதர்கள் என்றால் யார்?யூதர்கள் என்றால் யார்? யூதர்களை அறிந்து கொள்ளூங்கள்!!

யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத்தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான். இதை எதைக் காட்டுகிறது. எனின் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

யூதர்களின் தன்மைகள், அவர்களின் சிந்தனைகள், அவர்களின் இலக்குகள், அவர்கள் தெரிவு செய்யும் பாதைகள், அவர்கள் குறி வைத்துத் தாக்கும் இலக்குகள் போன்றவைகளை முஸ்லிம்கள் தேடித்தேடிக் கற்றுக் கொள்வதோடு அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகள் பற்றிய அறிவையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

"விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம் வேண்டும்”

”இதுவரை நான்” என்னும் அவரின் நூலைப் படித்துவிட்டு அதுவரை நான சிலகாலம் மரபை விட்டு புது நதியில் நீந்தினேன். இந்த அறிவு ஜீவி இன்னும் நாத்திகரா என்பதில் எனக்குள் அடிக்கடி எழும் வினா?
ஆயினும் மரணத்தைப் பற்றிய ஒரு வினாவுக்கு (இதே ஆனந்த விகடன் கேள்வி-பதில் மேடையில்) ஓர் அருமையான விளக்கம் கொடுத்திருந்தார். 

 “மரணம் என்பது மரத்திலிருந்து விழும் பூ போல் தானாக - அமைதியாக மண்ணில் விழுந்து மடிய வேண்டும்; விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம் வேண்டும்”

வேடிக்கை பார்க்கும் உலகம்


குழந்தைகள் குதிகாலால் தரையில் உதைத்து விளையாடி மகிழும்
குழந்தைகள் தொட்டிலில் படுக்க வைத்திருந்தபோது பல காரணங்களுக்காக உதைத்துக் கொள்ளும் .தாய் அதன் காரணத்தை அறிந்துக் கொள்வாள்
குழந்தைகள் தாயின் வயிற்றில் கருப்பையில் வளர்ந்த நிலையில் உதைப்பதை அறிந்து தாய் மகிழ்வாள்

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி .!நேற்றைய இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சர்வதேச செய்திகள் வாசிக்கும் போது ,பாலஸ்தீனம் தொடர்பான பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டது .
பாலஸ்தீன காஸா பகுதியை இஸ்ரேல் தனது சிறைக்கூடமாக தான் வைத்துள்ளது என்பதை அழகிய
முறையில் தெளிவுபடுத்தினார்கள் .

* உணவுப்பொருள் சாதரணமாக உள்ளே வர முடியாது , இஸ்ரேல் வாகன சோதனை சாவடியை கடந்து தான் வரமுடியும் . அதையும் பல நேரங்களில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் .

* சுகாதாரம் இல்லை

* நல்ல குடிநீர் இல்லை , அசுத்தமான குடிநீரை குடித்து தான் இம்மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா. சபையே ஒப்புக்கொண்டுள்ளது.

* மருத்துவமனைகள் கிடையாது . உயிர் காக்கும் மருந்துகள் உள்ள நவீன மருந்தகம் இல்லை .
உயிர் காக்கும் மருந்துகள் வாங்குவதற்கு இஸ்ரேல் தான் வரவேண்டும் . அங்கு நீண்ட வரிசையில் காத்து நின்றதால் பல உயிர்கள் பலியாகி உள்ளன .
போர் நடைபெறும் போது உயிருக்காக போராடுபவர்களை காக்கும் மருந்து பொருட்கள் பாலஸ்தீன பகுதியில் இல்லை .

Wednesday, July 9, 2014

அன்புடன் புகாரி 100 கவிதைகள் மற்றும் கட்டுரைகள்

அன்புடன் புகாரி  100 கவிதைகள் மற்றும் கட்டுரைகள்


வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View


வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View


வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View


வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View


வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View


வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View


வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View


08 இதயம் மீறும் எண்ணங்கள்
View


08 இதயம் மீறும் எண்ணங்கள்
ViewView


10 மரணம் உன்னைக் காதலிக்கிறது
View


10 மரணம் உன்னைக் காதலிக்கிறது
View

மறப்பதற்காக என்று
View

22 தமிழை மறப்பதோ தமிழா * 02 அன்புடன் இதயம்
View

32 வேணுமுங்க ஒங்கதொணை * 03 சரணமென்றேன்
View

தீம்பாவழி தீபவொளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
View

இன்றுக்குள் சிறகுகள் விரிக்க 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

ஹஜ் பெருநாள் 09 இஸ்லாம்
View

இந்த வாழ்க்கையில் 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

தொலைந்தே போகட்டும் 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

ஐம்புலன்களின் ஒற்றை மகுடம் 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

கொல்லாப்பாவம் 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

நீ அழுக்கா புனிதமா? 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

85 ஆண்களுக்குப் 15 பெண்கள் 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி... 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

யார் யார் எத்தனை சதவிகிதம்? 09 இஸ்லாம்
View

பொற்கனவே பூந்தளிரே 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

;-) 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

நம் கண் குட்டைகளின் 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

ஏனோ இந்த Internet கசப்பதே இல்லை 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

நம்பு 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

அவள் அவளை அவளாகவே திறக்கும்வரை... 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

பர்தா அணி என்று முஸ்லிம் பெண்களைக் கட்டாயப்படுத்துவதை குர்-ஆன் கண்டிக்கிறது 09 இஸ்லாம்
View

முஸ்லிம் பெண்களின் தலைத்துணியும் குர்-ஆன் வசனம் 24:31 ம் 09 இஸ்லாம்
View

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா தலைத்துணிகளின் மருத்துவப் பிரச்சினை 09 இஸ்லாம்
View

குறிஞ்சியும் பூதான் 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

கனவுகளும் 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

முஸ்லிம்களில் சிலர் தொப்பியும் தலைத்துணியும் ஏன் அணிகிறார்கள்? 09 இஸ்லாம்
View

நதியலை 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

பெண்களின் உடை 09 இஸ்லாம்
View

ஞான வெளிச் சொர்க்கம் எது? 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

முஸ்லிம் தீவிரவாதிகள் 09 இஸ்லாம்
View

அவன்தான் மனிதன் 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

இஸ்லாத்தின் பிறப்பிடம் சவுதி அரேபியாவா? 09 இஸ்லாம்
View

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல் 09 இஸ்லாம்
View

பூரண பூரிப்பில் வாழவே 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள்
View

முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்? 09 இஸ்லாம்
View

உன் உள்ளம் தொட்ட என் 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

கணினிக்குள் 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்? 09 இஸ்லாம்
View

1 அதோ பெரிதினும் பெரிய ஒளிக்கீற்றின் படிகளில் முறிந்த பாதத்தின் முத்தங்கள்
View

இதுதான் இஸ்லாம் 09 இஸ்லாம்
View

பாவ அழிப்பு என்னோடு நான்
View

வாலி வாழி என்னோடு நான்
View

01-10 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

புகாரியில்லை என்னோடு நான்
View

கோபம் கொள்பவன் அறிவு ஜீவி என்னோடு நான்
View

உன் மூடக் அன்புடன் இதயமே
View

வேறு எதுவும் தர அல்ல என்னோடு நான்
View

நிறைந்த விழி என்னோடு நான்
View

வாசிப்பில் லயிப்பவர்கள்... என்னோடு நான்
View

என் மாமழைக்கும் என்னோடு நான்
View

நல்ல உள்ளங்களின் என்னோடு நான்
View

ஓடி முடிகிறது என்னோடு நான்
View

பெண் ஏன் புரியாத புதிர்? வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View

உலகப் புகழ் வசீகரப் வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View

ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே வாழ்வனத்தில் வழியும் துளிகள்
View

நேர்கொண்ட பார்வை கவிதைகள்
View

உறவுதான் கவிதைகள்
View

11-20 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

பவள ஒளி தெறிக்கும் புன்னகையோடு கவிதைகள்
View

பிரியாவிடை கவிதைகள்
View

மழை மழை மழை கவிதைகள்
View

கிழமை சோதிடம் என்னோடு நான்
View

மாம்பழக் கவிதை என்னோடு நான்
View

காதலாகிறது என்னோடு நான்
View

ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன் என்னோடு நான்
View

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ என்னோடு நான்
View

அன்பும் அமைதியும் நிறைக என்னோடு நான்
View

தீவிர இறைப்பற்று என்னோடு நான்
View

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 2) - இளையராஜா டொராண்டோ என்னோடு நான்
View

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ என்னோடு நான்
View

எந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை என்னோடு நான்
View

கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல என்னோடு நான்
View

சொல்லிவிடவா * 01 வெளிச்ச அழைப்புகள்
View

அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்? 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
View

எங்கேயோ.... என்னோடு நான்
View

இலக்கியம் யாதெனிலோ.... என்னோடு நான்
View

யாப்புக்குத் தோப்புக்கரணம் என்னோடு நான்
View

11 பனி தூவும் பொழுதுகள் * 01 வெளிச்ச அழைப்புகள்
View

அந்தரங்கமாய்ப் பேசும் குரல்களைக் கேள் அந்தரங்கமாய்ப் பேசும் குரல்களைக் கேள், ஒளிக்கீற்றின் படிகளில் முறிந்த பாதத்தின் முத்தங்கள்
View

அடிப்படைவாதிகள் என்னோடு நான்
View

29 ஊசிகளாய் உறையும் கனடியக் குளிர் * 01 வெளிச்ச அழைப்புகள்
View

தோற்றுத்தான் போகிறோம் கிலியில் கிளியைக் கிழித்து
View

தடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி இசைச் சிறகுகளில்
View

காதலித்ததுண்டா கிறுக்கனாய்ப் பினாத்தி என்னோடு நான்
View

பொங்கல் வாழ்த்துக்கள் என்னோடு நான்
View

முடிந்ததென்று நினைப்பதெல்லாம் என்னோடு நான்
View

பெட்னா இதழில் என்னோடு நான்
View

இப்ப விளங்கிடுச்சு!

ஃப்ளைட்ல சாப்பாடு எப்படி இருந்தது?, மகளிடம் கேட்டேன்..
”நல்லா இருக்கும் என்று சொன்னீர்கள்? கொஞ்சம் கூட ‘டேஸ்ட்’ இல்லை…. , வாய்க்கு வெளங்கலை..”

படபடவென பாய்ந்து வந்தது பதில்!

உண்மைதான்!. நாமும் கூட விமானப் பயணங்களின் போது இதை உணர்ந்திருப்போம். இத்தனைக்கும் சில வெளிநாட்டு விமானங்களில்
பரிமாறும் உணவுவகைகள் நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து வந்திருக்கும். ஏன் நம் உள்நாட்டு விமானங்களில் பரிமாறப்படும் உணவுவகைளும் கூட பெரும்பாலும் அதே மாதிரிதான். ஆனால் ருசி? உண்மையிலே வாய்க்கு விளங்காத ஒன்றுதான். ஏன் தெரியுமா?

இந்திரா கிளப்பிய விவாத சுனாமி


மனசுக்குள் பெருமையும் சந்தோஷமும் வண்ணத்து பூச்சிகளாக சிறகடித்து பறந்தன.

இப்படி பரவசப்பட்டு நீண்டநாள் ஆயிற்று. வீட்டுக்குள் திரும்பி காரை நிறுத்தும்போது வாட்சை பார்த்தாள். மணி 10. நள்ளிரவுக்கு முன் வீடு திரும்பியது கடைசியாக எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. ’அம்மா ஆச்சரியப்படுவாள்’ என்று நினைத்தவாறு இறங்கியவள் பார்வை முன்கதவை நோக்கி வளைந்து செல்லும் படிக்கட்டில் ஏறியது.
அம்மா நின்றிருந்தாள். குபுக்கென்று பொங்கி வழிந்தது உற்சாகம்.

Monday, July 7, 2014

நோன்பின் மாண்பு...களைப்பில் நா கவிழ்ந்தாலும்
குவளை நீருக்கு மனம்
விரும்பவில்லை;

உண்டுக்களிக்க; மென்று ரசிக்க
உணவுகள் இருந்தாலும் மனமது
உந்தவில்லை;

LinkWithin

Related Posts with Thumbnails