Sunday, November 30, 2014

ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன, செல்ல வேண்டிய தூரம் உள்ளது,


பிறந்தநாளும் கொண்டாட்டங்களும் பின்னே நானும்..!!

-நிஷா மன்சூர்

பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.
என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும்
எண்கள் மட்டுமே.

வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.

பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு

இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில்
எல்லாம் மறைந்துபோயின
குடும்பம் குழந்தைகள் என்றானபின்
சில புன்னகைகளுடனும் மெல்லிய
வாழ்த்துக்களும் வருடிப்போயின

உலகம் உன் கையிலடா....!(தொடர் - 2)-ராஜா வாவுபிள்ளை


உயிரும் உணர்வும் உண்மையடா!
*** பிறப்பும் இறப்பும் இயற்கையடா!
வாழ்வின் நெறியை வகுத்துக்கொண்டால்
*** நிறைவுகள் நிறைந்த உலகமடா!!

நல்லோரும் தீய்யோரும் உண்டுமடா!
*** நன்மையும் தீமையும் நிறைந்ததடா!
நல்வழிப் பாதையை அறிந்துகொண்டால்
*** நட்புகள் நாடிவரும் உலகமடா!!

வளர்ச்சியும் வளங்களும் வளருமடா!
*** வானளாவ புகழும் சேருமடா!
நேர்மையாய் தொழிலை நடத்திவந்தால்
*** நலமாய் வாழவைக்கும் உலகமடா!!

இயற்கையும் செயற்கையும் இணைந்ததடா!
*** வல்லமையும் இயலாமையும் இருக்குதடா!
பகுத்தறிந்து வாழப் பழகிக்கொண்டால்
*** கல்லாமல் பாகம்படும் உலகமடா!!

உயர்வும் தாழ்வும் நிலைக்காதடா!
*** சீரான வாழ்க்கை வேண்டுமடா!
நேரானபதை வழிநடந்து சென்றால்
*** இறைவனடி சேர்க்கும் உலகமடா!!

Saturday, November 29, 2014

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?
யுவன் சங்கர் ராஜாவின் முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர் எழுதிய ஒரு பின்னூட்டம்.

// Dear yuvan sir,
I'm ur diehard fan... We have initiated a plan for all ur fans to message about their opinion about ur name change...pleasemy dear yuvan..ur name is really very very very cute....i say yuvan yuvan yuvan everyday...and I cannot say Abdul anymore...i don't want these name change as ur every diehard fan...please for us don't change ur name thalaiva...neenga illana nanga illa...yuvan is youth icon of Tamil music...it should stay as it is...please don't let it to change thalaiva....i know U r not going to change ur name...but some fake news are spreading about this...so please confirm soon about ur name change...thank you in advance thalaiva...as ur sister said U r gonna get married, I wish U from my heart to have a successful life thalaiva...go ahead...u r hearts winner...millions of ur fans are here to support U for any cause...once again a request from ur follower please don't change ur name...//
- Sãñdîàr Múthù Kúmãr

'ஆமா.... காலங் கெடக்கிற கெடப்புல உலகத்துக்கு இது ரொம்ப முக்கியம்' என்று நீங்க அலுத்துக்கிறது தெரிகிறது. இருந்தாலும் இதிலும் சில விளக்கங்கள் படிப்பினைகள் நம்மால் பெற முடியும். முதலில் சண்டியர் முத்துக் குமாருடைய பின்னூட்டத்தைப் படிக்கவும். யுவனுடைய முகநூல் பக்கத்தில் அவருக்கு எழுதியது இந்த பின்னூட்டம். ஒரு அளவுக்கு மீறி போனால் இசை ஒரு மனிதனை எந்த அளவு பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்த பின்னூட்டம் ஒரு சிறந்த உதாரணம். 'நீங்க இல்லேன்னா நாங்க இல்ல' என்று சொல்கிறார். யுவன் ஒரு மியூசிக் டைரக்டர். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவர் தங்கள் இசையால் மக்களை மகிழ்விப்பர். முன்பு எம்எஸ்வி, நேற்று இளைய ராஜா, இன்று ஏ ஆர் ரஹ்மான் நாளை அனிருத்தோ, யுவனோ யாராவது இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்கள் தொழில். அதை விடுத்து அவருக்கு ஆயிரம் பேர் என்றும் இவருக்கு ஆயிரம் பேர் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டத்தில் வசை மாறி பொழிந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும்.

Friday, November 28, 2014

OPEN DAY – Rafeeq / திறந்த நாள் - ரபீக்

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவை, உலகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் அவதானிக்கிறார்களோ இல்லையோ, ஆடை வடிவமைப்பாளர்கள் நேரிலோ அல்லது தொலைக்காட்சியின் வழியாகவோ பார்ப்பதற்கு குவிந்திருப்பார்கள். பார்வையைக் குவித்திருப்பார்கள்.

முதல் பெண்மணியான அதிபரின் மனைவியின் உடையின் வடிவமைப்பு மற்றும் அதனை வடிவமைத்த நிபுணர்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே அதன் காரணம்.

2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில், முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமா அணிந்துவரும் உடைபற்றி, அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் தயாரிப்பில் உருவான பல ஆடைகள் அவரின் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றிரவு விழாவின் மேடையில் தோன்றும் வரையிலும் தேர்ந்தெடுத்த உடைபற்றிய தகவலை மிச்செல் ஒபாமா வெளியிடவில்லை.

பிறகு, அவர் அணிந்துவந்த ஆடையின் வடிவமைப்பிற்குச் சொந்தக்காரர் 27 வயதே ஆன ஜாஸன் வூ எனும் கலைஞர் என்று தெரிந்த பிறகு அனைவரும் வியந்தனர்.

Thursday, November 27, 2014

வாழ்க்கையில் சுமைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன.

1994 ஆம் ஆண்டு, பிழைப்புக்காக சொந்த நாட்டை விட்டு அயல் நாடான அரபு தேசத்துக்கு வந்த காலம்.

அந்த காலக்கட்டத்தில் தொலைத் தொடர்புகள் அவ்வளவாக இந்த நாட்டிலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

கடிதங்கள் மூலமே குடும்பத்தார்களோடு தொடர்பில் இருந்த காலமது.
தொலைப்பேசியில் பேசவேண்டுமென்றால் தொலைப்பேசிக் கூடங்களுக்கு சென்றுதான் பேசமுடியும். ஒரு நிமிடத்துக்கு 600 பில்ஸ்.
அது என் போன்றோருக்கு பெருந்தொகை. தேவையான தொகைக்கு கார்டுகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.

Wednesday, November 26, 2014

மரணம்./ - சேவியர்


எல்லோருக்கும் பின்னால்
மூன்றடி தொலைவில்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
மரணம்.

எப்போது வேண்டுமானாலும்
எட்டிப்பிடித்து விடும்
தூரத்தில் தினமும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சாலை கடக்கையில்,
வாதிடுகையில்,
புகை பிடிக்கையில்
அதன்
முக பாவங்கள்
மாறி மாறி ஜொலிக்கின்றன.

ஒரு சிலர்
மரணத்தின் பின்னால்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களை
மரணம் கடந்திருக்கக் கூடும்.

அழைத்து
நண்பனாக்கிக் கொள்ள
யாருக்கும் தைரியமில்லை.
கூட இருந்தே
குழி பறிக்கும் உத்தரவாதம்
அது.

அதனுடன்
யாரும் உரையாடுவதுமில்லை.
அது
தனியே நடந்து கொண்டிருக்கிறது,
ஒரு நிழல்போல.

அல்லது
நிழலின் நிஜம் போல.

- சேவியர்

ஆற்றுப ்படுத்து..

காலைக் கதிரொளியில்
மஞ்சள் நீராடி
கண்ணாடி மேனி மறைக்க
முகிலாடை தனையுடுத்தி

நாணல் நுழைந்து
நற்கூந்தல் சிகை முடிந்து
ஆதவப் பூதனையே
அழகழகாய் தலைச்சூடி

தானே தனக்கு - நிஷா மன்சூர் / ஓர் விமர்சனப் பார்வை: -தாஜ்தீன்

உறவென்று ஒதுங்கி நிற்க ஓரிடமில்லை,
நட்பென்று தலைசாய்க்க நாதியில்லை,
மனம்விட்டுப் பாராட்ட எவருக்கும் மனதுமில்லை,
தானே விழுந்து, தானே துடைத்துக்கொண்டு
தானே வேர்பிடித்து, தானே கிளைபரப்பி
தானே தன்னைத் தாங்கி அரவணைத்து
தானே தன்னைப் பாராட்டி மகிழ்வித்து
தானே வளரும் காட்டுச்செடியாக
தானே தன்னையறிந்து
தன்னுள் சுகித்து
தானே தானே தந்தானே
தன்னைத்தானே தந்தானே...!!

உலகம் உன் கையிலடா....! - ராஜா வாவுபிள்ளை

 முரண்கள் முற்றிய உலகமடா!
=== முரண்டுகள் பிடிக்கும் உலகமடா!
முயற்சியை இகழ்ச்சியின்றி செய்துவிட்டால்
=== உன்முன்னே மண்டியிடும் உலகமடா!!

ஏழைபாழைகள் வாழும் உலகமடா!
=== ஏமாற்றிப் பிழைக்கும் உலகமடா!
தர்மம் தலைகாக்கும் புரிந்துகொண்டால்
=== இடுக்கண் களைந்துவிடும் உலகமடா!!

ஏற்றத்தாழ்வு நிறைந்த உலகமடா!
=== வேற்றுமைகள் பாராட்டும் உலகமடா1
ஒற்றுமையை பற்றிப்பிடித்துக் கொண்டால்
=== வறுமையையே ஒழித்துவிடும் உலகமடா!!

Monday, November 24, 2014

நிகழ்வுகளில் பரவும் விஷம் -நிஷா/ நிஷா மன்சூரின் கவிதையும் தாஜின் விமர்சனமும்::

மிகுந்த தீர்மானத்துடன்
பாரபட்சமற்றிருக்கும் சாவு
தன் தடயங்களை
இச் சகதியுள் பதிந்திருக்கும்
கூர்முட்களின் வடிவில் வெளிப்படுத்துகிறது

என் விரலிடுக்குக் காயங்களின்
சீழ்வடிந்து
அலுவலக வெண்லெட்ஜர்கள்
அசுத்தமாகிக் கொண்டிருக்கின்றன

என் தயக்கமான பேச்சின்போது
தொடர்ச்சியான கட்டுப்படுத்தல்கள்
எவற்றிற்கும் சிக்காமல்
ரத்தத்துளிகள் பீறிட்டுத் தெறிக்கின்றன….
(அப்போது பரவும் கெட்டுப்போன மாமிசவாடை
உங்களை மிகவும் சிரமப்படுத்துகிறது)

இச்சிவந்த கண்கள்
எந்த நேரத்திலும் வெடித்துப்பிதுங்கி
வெளிவரக்கூடும்
(தூக்கமிழந்த நாட்களின் எண்ணிக்கை
ஒரு முழு டைரியை விழுங்கிவிட்டது)

நீண்ட நீண்ட பயணங்களின் விளைவாய்
நைந்துபோயிருக்கும் பிருஷ்டங்களை
பட்டுத்துணி போர்த்தி
அமர வைத்திருக்கிறேன்

எந்தப் படிகாரங்களாலும் களையமுடியாத
தீவிரமான அழுக்கு படிந்து
என் இதயம்
மேலும் மேலும் துருவேறிக் கொண்டிருக்கிறது.

எனினும்
கடந்த மூன்று நாட்களாய்
இப்பாறையைப் புரட்டிப்போட
முயன்று கொண்டிருக்கிறேன்….
சூரியக் கதிர்கள் உட்புகா அடிப்புறத்திலிருந்து
ஈர வாசனையுடனும்
தனிமை குலைக்கப்பட்ட சீற்றத்துடனும்
ஒரு தேளோ,பூராணோ வெளிப்பட்டால்
மிகுந்த மகிழ்ச்சியடைவேன்…!!
நிஷா மன்சூர்

-கணையாழி-1995
*

தெற்கு சூடான் பயணக் குறிப்பு 5.

60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த தருவாயில் இருக்கும் நாட்டின் ஒரு சிறிய ஊர் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக பார்க்க முடிந்தது.

போரில் ஊனமுற்றவர்கள், கண்ணி வெடிகளால் பாதிக்கப் பட்ட அப்பாவி பொதுமக்கள் அப்பப்பா அவ்வளவும் கொடுரங்கள்.
போர் என்பதே அழிவின் அரங்கேற்றங்கள் தானே?

போரில்லா பெருவாழ்வை எல்லாம் வல்ல இறையோன் உலக நாடுகளுக்கு அருளவேண்டும்.

எங்களது அடுத்த கட்டப் பயணம் மெரிடி எனும் ஊரை அடைவது.
புறப்படும் முன்னர் நாங்கள் இரவு தங்கிய நார்வேஜியன் நாட்டு தொண்டு நிறுவனத்தாரிடம் வழி விபரங்களை விசாரித்து தெரிந்து கொண்டோம்.
அதாவது போரின்போது வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் ஐ நா சபையின் உதவி கொண்டு முழுவதுமாக நீக்கப் பட்டுவிட்டது. செம்மண் சாலையும் தரம் செய்யப்பட்டு பயணத்திற்கு உகந்ததாக இருக்கிறது.

இலையுதிர் காலம் வந்தபோது உதிர்வதற்கு இலைகள் இல்லை


வசந்த காலம் வந்தபோது உறவுகள் பூத்துக் குலுங்கினார்
இல்லாத காலம் வந்தபோது உறவுகள் உதிர்ந்துப் போயினர்
எதிர்கலாத்தில் உறவுகள் இல்லாத நிலையில் போகுமோ
காலங்கள் மாறும் நன்மைகள் நிகழுமென நினைத்திருந்தேன்
வசந்த காலமும் வருமென காத்திருந்தேன்
வசந்த காலமும் வறண்ட காற்றை வீசியது
காலத்தின் மாற்ற நிலை நிகழ்ந்ததால்
இலையுதிர் காலம் வந்தபோது உதிர்வதற்கு
இலைகள் இல்லாத நிலையில் என்னிலையானது
-முகம்மது அலி 
Mohamed Ali


"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு."- ஔவையார்

Saturday, November 22, 2014

நான் - தாஜ்

உதயத்திற்கு விரைய
பேரொளி மறைகிறது!

இரவென்று தூங்க
உச்சத்தில் அது
பிரகாச வீச்சாகிறது!

தாவி குன்றேறியும்
பாதாளமே பார்க்கிறேன்!

'எந்தவொரு சூழலிலும் ஒரு பெண்ணுடைய சுயம் தொலையாமல் இருப்பதுதான் முக்கியம்.''

 கதையல்ல, வாழ்க்கை!
ஒரு காதல் கதை

பிரதீப் அழகாக ராகம் போட்டு பாடுவார். ஏதோ பழைய படத்தில் சரத்பாபு பாடும் பாட்டுதான் அவருக்கு ஃபேவரைட். “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சி… நம்மை யாரு பிரிச்சா.. ஒரு கோடு கிழிச்சா…” அச்சு அசலாக எஸ்.பி.பி. குரல். கேட்கும் யாருமே மயங்கிவிடுவார்கள். சுசிலா மட்டும் விதிவிலக்கா என்ன?

“வணக்கம் தோழர், நான் பிரதீப்” என்று முதன்முதலாக அவர் அறிமுகமானபோது சுசிலா, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸம்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள காரணம். எனவே காரல்மார்க்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். சுசிலாவின் அப்பா கம்யூனிஸ்ட்டு கட்சி, தொழிற்சங்கம் என்று தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவர். முற்போக்கான குடும்பச் சூழலில்தான் சுசிலா சிறுவயதிலிருந்தே வளர்ந்தார். எனவே அவர்களது வீட்டில் எப்போதுமே ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷம்தான். நிறைய தோழர்கள் வருவார்கள். காரசாரமாக அரசியல் பேசுவார்கள். போராட்டங்களை திட்டமிடுவார்கள். புரட்சிக்கு நாள் குறிப்பார்கள்.

’’வாழ்க்கை சிக்கலானது இல்லை, ரொம்ப எளிமையானது தான்,..."/ பிரியா தம்பி

’’வாழ்க்கை சிக்கலானது இல்லை, ரொம்ப எளிமையானது தான், நமக்கு கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையை எப்படி மத்தவங்களுக்கு பயன்படுற மாதிரி உபயோகமா, சந்தோஷமா வாழறதுன்னு யோசிக்கிறோம்’’ என சக்கர நாற்காலியில் உட்கார்ந்து சிரித்தபடி சொல்கிறார்கள் இந்த இரு சகோதரிகளும்.

மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்னும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்கிற இரு சகோதரிகளைப் பற்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவர்களைப் பற்றி குறும்படம் தயாரித்திருக்கிறார் கீதா. ‘’முள்ளுக்காட்டுல தாங்க ஒவ்வொரு தடவையும் போயிட்டு வரணும்’’ என மாற்றுத் திறனாளி பெண் ஒருத்தி கீதா இயக்கிய ‘மாதவிடாய்’ ஆவணப் படத்தில் சொன்னபோது அதிர்ந்து போயிருக்கிறேன். அதுவரை அப்படியான பெண்கள் என்ன செய்வார்கள் என யோசித்திருக்கவே இல்லை.

சுளீரென சிலிர்க்க வைத்த சொல் என்ன சொல்

அவன் கண்ணீர் என்னை கலங்க வைக்கிறது
அவன் சிரிப்பை நான் ரசிக்கிறேன்
அவன் குழந்தை என்னை நோக்கி கைநீட்டும்போது
வாரி அணைக்கத்தான் ஆசைப்படுகிறேன்.
பின் எது ஜாதியையும் மதத்தையும்
நினைவுபடுத்தி என்னை தூர இழுத்து வந்தது
என் பின்னங்கழுத்து முடியை இழுத்து
சுளீரென சிலிர்க்க வைத்த சொல் என்ன சொல்

Murali Appas
***********************************************
 முரளி அப்பாஸ் (Murali Appas)அவர்களுக்கு  முகம்மது அலியின் வாழ்த்துகள்
கலைத் துறையில்(சினிமா) திரைப்பட இயக்குனர் முரளி அப்பாஸ் (Murali Appas)
இதற்கு முன் திரு. மணிரத்த்னம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்
About :  Murali Appas
    Worked at Film Industry
   film director in tamil and tamil film industry
    Studied at chennai film industrial school
 thiyagaraja madurai and covt high school
    Lives in Chennai, Tamil Nadu
    From Pudukkottai

அன்புடன்,
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

"Allah will reward you [with] goodness."

Friday, November 21, 2014

முத்தம் / ரபீக்

ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றதென்னவோ சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்தான். கற்பிக்க்பபடுவதும் சிறந்த கல்வி தான் அதில் சந்தேகமில்லை. ஆனால், அது எதில் சிறந்த கல்வி? அந்தக் கல்வியினால் இந்த நாட்டிற்கு என்ன பயன்? நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் தோன்றியது இந்தச் சிந்தனை.

தேவையான இலவசங்கள்

ஒரு குறிப்பிட்ட வகை வேலையை, கம்ப்யூட்டரில் மேற்கொள்ள, நாம் ஒரே புரோகிராமினையே பயன்படுத்துகிறோம்.
அதற்குப் பழகிப் போனதால், மற்ற புரோகிராம்களை, அவை கூடுதல் வசதி,எளிமை மற்றும் வேகம் ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில்லை. சில வேளைகளில், பல புரோகிராம்களை, விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதே புரோகிராம் செய்து முடிக்கும் வேலையை, இலவசமாய்க் கிடைக்கும் சில புரோகிராம்கள் செய்கின்றன என்று அறியாமல் இருக்கிறோம். இந்த கட்டுரையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கு இணையான, இலவச புரோகிராம்களும், அவற்றின் தன்மைகளும் பட்டியலிடப்படுகின்றன. இந்த புரோகிராம்களை அவற்றின் மூலம் மேற்கொள்ளும் வேலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு தரப்படுகின்றன.

Thursday, November 20, 2014

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்

இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”

எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேயே அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என பதறியவாறு கூறிய வேளையில் திப்பு உதிர்த்த உன்னத வார்த்தைகள் தாம் மேலே கண்டவை.

இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.

Tuesday, November 18, 2014

நல்ல நண்பர்களிடமும், நல்ல சுத்த நெய்யினால் செய்யப்பட்ட; மேன்மை ருசியுள்ள அல்வா; நிறைய ஸ்டாக் இருந்து கொண்டுதானிருக்கிறது !!

நெய் மணக்கும் அல்வாவும், அதை பொய் கலந்து தரும் பில்லாக்களும் வாழ்கவே !
(ஒரு ஹாஸ்ய உணர்வில் எழுதப்பட்டதுதான், நிச்சயம் மன இறுக்கத்தின் உணர்வல்ல)

என் மகளின் திருமணம் இது, கட்டாயம் நீங்கள் கொஞ்சம் முன்னமையே வந்து நின்று காரியங்களை சிறப்பித்து தர வேண்டும் என்று அருமை நண்பர் (மலையாளத்தில் ஆத்மார்த்தமான ஒரு சுஹர்த்து-ன்னு பறயாம்) அப்படி மாய்ந்து மாய்ந்து சொல்கிறாரே என்று, 12.30-க்கு நிக்காஹ் நடக்க இருப்பதை தெரிந்திருந்தும், இருக்கும் முக்கிய வேலைகளை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு, காலை 6-மணிக்கே கிளம்பி மண்டபம் போனால், வாசலில் ஏறும் போதே, அழைத்த நண்பரின் தலை, உள்பக்க ஹாலில் ஒரு பெரிய தூணுக்கு பக்கத்தில் தெரிந்ததைப் பார்த்து, மகிழ்ந்து உற்சாகத்துடன் கையசைத்து காட்டினால், வினாடிகளில் என் வருகையை தெரிந்து கொண்டவர், அப்படி கவனிக்கவில்லை என்கிற தோரணை காட்ட, அங்கே பக்கத்தில் நிற்பவரோடு பெரிய சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரைப் போல் என் கண்ணுக்கு காட்சி தந்து விட்டு, தூணுக்கு பின்னால் ஒரே பாய்ச்சலாகப் போய் நின்று கொண்டு, சண்டைப் பிடித்த அதே நபரிடமே, வாசலில் வந்த ஆள், நிற்கிறானா, போய் விட்டானா, என்ன செய்கிறான், உள்ளேயா வருகிறான் என்று வாயை சிவாஜி கணேசன், பழைய படங்களில், பாட்டுக்கு வாய் அசைக்கும் ரேஞ்சுக்கு, கீழ் தாடையை நல்ல விரித்து; ஆனால் சிறிய சப்தத்தில் கேட்பதை, கல்யாண மண்டபத்தில், அந்த தூணுக்கு பக்கத்திலேயே மாட்டி வைத்திருக்கும் நிலைக் கண்ணாடியில் நான் தெளிவாக பார்த்துக் கொள்ள முடிந்தது !

மனம் - இப்புவியை வெல்லும்....! மனம் - மாண்பு பெறும்....!


ஊருக்குப் புறப்படும் முன்னரே
ஊர் போய் சேர்ந்தது # மனம்

மனப் பயணங்கள்.

இருந்த இடத்திலிருந்தே
பல்லாயிரம் மைல்கள் பயணித்து
மனச் சுமை இறக்க எத்தனிக்கும்
அமைதி காண கனாப் பயணம்.

மனம் - மாண்பு பெறும்....!
காயப் படுத்தும் வார்த்தைகளால்
மனம் - ரணகளப் படும்
அடங்காமல் துள்ளித் திரியும்
மனம் - பட்டுத் தெளியும்

ஆணவம் கொண்டு அலையும்
மனம் - ஆபத்தை அரவணைக்கும்
உண்மை அன்புக்காக ஏங்கும்
மனம் - அதற்கே அடிமையாகும்

துக்கத்தை உணர்ந்து அழும்
மனம் - ஆறுதல் தேடும்
செய்ததவறுக்கு மன்னிப்பு கேட்கும்
மனம் - மாண்பு பெறும்.
******************

Sunday, November 16, 2014

கரை சேர்த்தத் தோணிகள் ..

யாதுமே அறியாத
யாம் பெற்றவோருயிர்கு
யாதுமாய் யாமிருந்து
யாவற்றையும்
கற்பித்தோம்

ஐம்புலன்களும்
கொண்டிருந்தான்
அஃதெதிலும் பயனில்லை
கைப்பிடித்து நடைப்பழக்கி
காட்சிகளைக் கற்பித்தோம்

இறப்பு வரை உறக்கமில்லாமல் உழைக்கும் வர்க்கம்.


ஆட்காட்டி விரலின் அளவில் ஆறில் ஒரு பங்கு அளவே இருக்கும் பூச்சி, அளவில் சிறியது ஆனால் அதற்கு இறைவன் அளித்திருக்கும் ஆற்றல் அளப்பரியது.

நாம் உண்ணுவதற்காக உலகில் உற்பத்தியாகும் விளைப்போருட்களில் தேனீக்கள் மகரந்த சேர்க்கை செய்வதன் மூலம் அதன் பங்களிப்பு 25 சதவீதமாகும்.

அமெரிக்காவில் மட்டும் விவசாயத்தில் தேனீக்களின் பங்களிப்பால் கிடைக்கும் பலன் ஆண்டுக்கு பதினைந்து பில்லியன் டாலர்களாம்.

தேனீக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை உறக்கமில்லாமல் உழைக்கும்
வர்க்கம்.

உலக வாழ்க்கை....!

வாழ்க்கைப் பெருங்கடலை
நீந்திக் கடக்க முயற்சிக்கும்
மீன் குஞ்சுகளே மனிதர்கள்

வருத்தமே வாழ்க்கையென
வருந்துவோரே அதிகமிருந்தும்
வாழ்க்கையை வாழ்வோரும் அதிகம் அதிகம்

நாடியது நடக்க
வேண்டுமென ஓடோடி உழைத்து ஓடாய் தேய்ந்தொரும் இங்குண்டு

பணமே பிரதானமென
பண்பை தொலைத்து
பராபரனை மறந்து வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியோரும் இங்குண்டு

அசுரவேக முன்னேற்றங்களும்
பிரம்மிக்கவைக்கும் வளர்ச்சியும் சர்வ சாதரணமாகவே நடைமுறையில் இருக்கும்.

காலங்கள் மாறும்
கவலைகள் தீரும்
வசந்த காலமும் வரும் இருந்தும் நிலையில்லாதது வாழ்க்கை.
***************************************************

குழந்தை வளர்ப்பின் 10 கட்டளைகள்.1 பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும்.

தினமும் தன் தந்தையிடம் பர்சைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பர்சை தூர எறிவது போல பாவ்லா காட்டுவது வழக்கம். இதை கவனித்து வளர்ந்தது குழந்தை. ஒருநாள் ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தபோது குழந்தை தந்தையிடமிருந்த பர்சை எடுத்து சன்னல் வழியேவெளியே எறிந்து விட்டது. குழந்தைகள் பெற்றோரின் செயல்களை உள்வாங்கி செயல்படும் என்பதற்கு இந்தச் சிறு நிகழ்வை ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

குழந்தைகளுடன் அமைதியாகவும், தெளிவாகவும் அன்பாகவும் பேசுங்கள். குழந்தைகளும் அதையே பின்பற்றும். குழந்தைகளிடம் நீங்கள் கோபமாகவும், எரிச்சலுடனும் பேசினால் குழந்தைகளும் அதையே கற்று வளரும்.

Saturday, November 15, 2014

பறவையின் தடங்கள்(nagorerumi.com/ நாகூர் ரூமியின்) 100 கட்டுரைகள்


இந்திரன் தோட்டத்து முந்திரி – 6.1(கதை கதையாம் காரணமாம்: மஹாபாரத வாழ்வியல்)

View

‘Men’struation

View

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6

View

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5

View

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)

View

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)

View

இந்திரன் தோட்டத்து முந்திரி – 6 — மஹாபாரத வாழ்வியல்

View

இசைக்குயில் பறந்தது

View

அடாப்டிவ் அன்கான்ஷியஸ் — சிலையும் நீ, சிற்பியும் நீ — 5

View

யயாதி வியாதி -– 05

View

கதவுகள் வழியாக ஆறு நூல்கள்

View

முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை

View

மஹாபாரத வாழ்வியல் 3 & 4

View

கடவுளோடு பேசுவது எப்படி?

View

02 — மஹாபாரத வாழ்வியல் — கங்கை மைந்தன்

View

கதை கதையாம் காரணமாம்: மஹாபாரத வாழ்வியல்

View

சிலையும் நீ சிற்பியும் நீ

View

முதல் (போட) உதவி

View

பி.ஜெ. குர்’ஆனை முன்வைத்து சில கேள்விகள்

View

பாட்பூரி — 07

View

இஸ்லாமும் தமிழும்: நிறைவான கொடுக்கல் வாங்கல்

View

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

View

காரைக்குடி அரண்மனைகள்

View

தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும்

View

பொறுப்பின்மையின் உச்சகட்டம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

View

அழிவிலிருந்து அழியாமைக்கு

View

லேனா ஓர் ஆச்சரியம்

View

வரலாறு அறியாத பொறுப்பின்மை: இஸ்லாமிய தமிழிலக்கிய எட்டாம் மாநாடு-2014

View

அம்மியில் கொத்தப்பட்ட சிற்பங்கள்: யுகபாரதி திரைப்படக் காதல் பாடல்கள்

View

பரிபூரண அழகிய முன்மாதிரி

View

சிங்கை மீடியா கார்ப் வசந்தம் டிவியில் சகோதரர் காதர்

View

காதல் பரிசு

View

வாடா திங்கலாம் வாங்க நாகூருக்கு!

View

கப்பலை நிறுத்த வைக்கோல் நங்கூரம்

View

வரலாற்றுப் பாட் பூரி

View

ஜல விமோசனம்

View

அரிய தருணங்கள்

View

அப்படி என்னதான் செய்துவிட்டார் மகாத்மா?

View

நாகூர் சலீம் நினைவலைகள்

View

தாயுமானவள்

View

நோன்பு – ஒரு சிந்தனை

View

கலைஞரோடு சில மணித்துளிகள்

View

WHITHER HIGHER EDUCATION?

View

ஹஸ்ரத் மியான் தான்சேன் (1496-1586/1589)

View

என் பெயர் மாதாபி

View

பாட்பூரி – 06

View

என் சமீபத்திய நூல்கள்

View

பூனைக்கும் அடி சறுக்கும்

View

க்ராண்ட் ஃபினாலே

View

வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும்

View

அசிங்கமும் எதிர்வினையும்

View

இந்த விநாடி பற்றி யுகபாரதி

View

இல்முதீனுக்கு லீக்வான்யூ விருது

View

நீயா நானா?

View

என் ஊர்

View

மஹா பிரிவு

View

மந்திரச்சாவி 15 — 18

View

மந்திரச் சாவி – 14

View

மந்திரச் சாவி – 13

View

மந்திரச் சாவி – 12

View

மந்திரச் சாவி – 11

View

மந்திரச் சாவி – 10

View

மந்திரச் சாவி – 09

View

மந்திரச் சாவி – 08

View

மந்திரச்சாவி — 07

View

மந்திரச் சாவி – 06

View

மந்திரச் சாவி -05

View

மந்திரச்சாவி — 04

View

மந்திரச்சாவி — 03

View

மந்திரச் சாவி — 02

View

மந்திரச்சாவி

View

கங்கா ஸ்நானம்

View

அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

View

பில்லி சூனியம்

View

புதிய தலைமுறையில் நான்

View

வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப்

View

பாட்பூரி – 05 — என்னை ஆட்கொண்ட முதல் குரல்

View

சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும்

View

பாட்பூரி — 04

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 10

View

பிருந்தாவனில் வந்த கடவுள்

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 09

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 8

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை – 7

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 6

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 5

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 04

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 3

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை–2

View

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை

View

சின்ன உயிர்களைக் கொல்லும் பெரிய மிருகங்கள்

View

குரலுக்கு வயதில்லை

View

Death: A Grave Situation

View

அரிதாரமற்ற அரிதான கலைஞன்

View

மீண்ட பொக்கிஷம்

View

நாகூர் கொத்துபுராட்டா

View

தமிழர் பண்பாடு: முஸ்லிம்களின் பண்பாட்டு மாற்றங்கள்!

View

மனித தர்மங்கள் — தூயவன் கதை –08

View

A Requiem for Quake-hit Japan 2011

View

சினிமா ஹராமா

View

நாகூர் மண்வாசனை (The Aroma of Nagore soil) 100 கட்டுரைகள்
ரவீந்தர் - 6, எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும், சித்தி ஜுனைதா பேகம், நாகூர் மண் வாசனை
View


ரவீந்தர் - 5, எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும்
View


ரவீந்தர் - 4, எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும், கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர்
View


வஹிதா ரஹ்மான், நாகூர் மண்வாசனை, வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்
View


சீர்காழி கோவிந்தராஜன், நாகூர் - சீர்காழி, நாகூர் மண் வாசனை
View


தூயவன், நாகூர் தூயவன்
View


ரவீந்தர் - 3, கலைமாமணி ரவீந்தர், நாகூர் மண்வாசனை, நாகூர் ரவீந்தர்
View


ரவீந்தர் - 2, கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர், Nagore Raveendar
View


ரவீந்தர் - 1, நாகூர் மண்வாசனை, நாகூர் ரவீந்தர்
View


கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர்
View


நாகூர் ஹனீபா
View


நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, E.M.Haniffa, Isaimurasu E.M.Haniffa, Nagore E.M.Haniffa
View


சாரு நிவேதிதா, நாகூர் நினைவுகள், நாகூர், Charu Nivedita
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், Uncategorized, நாகூர், நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?, நாகூர் பெயர்க் காரணம்
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், ஜஸ்டிஸ் இஸ்மாயில்
View


நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, M.K.Stalin, Nagore E.M.Haniffa
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், புலவர் சண்முகவடிவேல்
View


நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன்
View


அகடம் பகடம் (Misc.), தமிழில் சிறுபான்மை இலக்கியம்
View


இசைக் கலைஞர்கள், இயற்றமிழ் வளர்த்த நாகூர், சாரு நிவேதிதா
View


அகடம் பகடம் (Misc.), நாகூர் முஸ்லிம் சங்கம்
View


நாகூர் ஹனீபா
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், குலாம் காதிறு நாவலர், நாகூர் புலவர்கள்
View


சிங்கையில் தமிழ், சிங்கையில் தமிழ் மொழியின் வளர்ச்சி, Tamil Language in Singapore
View


குலாம் காதிறு நாவலர், நான்காவது நக்கீரர் குலாம் காதிர்
View


நாகூர் ஹனீபா, Nagore Hanifa, Nagore Haniffa
View


நாகூர் ஹனீபா, E.M.Hanifa, Nagore Haniffa
View


கவி.கா.மு.ஷெரீப், கலைமாமணி கா.மு.செரிப், வீரபாண்டியன்
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள், அரிய புகைப்படங்கள், Justice M.M.Ismail Rare photos, Unpublished photos of Justice M.M.Ismail
View


நாகூர் ஹனீபா, Nagore Haniffa
View


நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, Nagore Hanifa, Nagore Haniffa Photos
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், ஜஸ்டிஸ் இஸ்மாயில், நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், நாகூர் பிரபலங்கள், நீதிபதி மு.மு.இஸ்மாயீல்
View


விஸ்வரூபம் தந்த பாடம், விச்வரூபம்
View


அகடம் பகடம் (Misc.), கான் பகதூர் ஸர் அஹ்மது தம்பி மரைக்காயர், நாகூர் பிரபலங்கள்
View


அகடம் பகடம் (Misc.)
View


நாகூர் ஹனீபா, கலைஞருக்கு நாகூர் ஹனிபா கொடுத்த அல்வா, நாகூர் மண் வாசனை, நாகூர் ஹனிபா, பத்திரிக்கைத் துறையில் முஸ்லீம்கள், by Abdul Qaiyum, Nagore Mann Vasanai
View


நாகூர் ஹனீபா, நாகூர் அனிபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum
View


நாகூர் ஹனீபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum, Nagore Haniffa, Nagore Mann Vasanai
View


நாகூர் ஹனீபா, நாகூர் மண் வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum, Nagore Haniffa Photos
View


நாகூர் ஹனீபா
View


நாகூர் ஹனீபா, நாகூர் மண் வாசனை, ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம் 2), by Abdul Qaiyum, Isaimurasu E.M.Haniffa, Nagore, Nagore Haniffa, Nagore Mann Vasanai
View


நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா, Nagore Haniffa
View


அகடம் பகடம் (Misc.), அறம் பாடிய புலவர்கள், நாகூர் மண்வாசனை, by Abdul Qaiyum
View


கவிஞர் ஜபருல்லா, நாகூர் மண்வாசனை, by Abdul Qaiyum, Nagore Mann Vasanai
View


அகடம் பகடம் (Misc.), வைகோவின் மனித நேயம், by Abdul Qaiyum
View


என் கவிதைகள், கவிஞர் கையூம் கவிதைகள், by Abdul Qaiyum
View


சாரு நிவேதிதா, ஊர்ப்பாசம், நாகூர் மண் வசனை, by Abdul Qaiyum, Charu Nivedita
View


நாகூர் ஹனீபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, மதுரை ஆதீனம், by Abdul Qaiyum
View


நாகூர் ரூமி, எச்.ஜி.ரசூல், ஞாநி, நாகூர் மண்வாசனை, புதிய தலைமுறை, by Abdul Qaiyum
View


7-ஆம் பாகம், கம்பன் அவன் காதலன், Justice M.M.Ismail
View


நாகூர் ஹனீபா, இறைவனிடம் கையேந்துங்கள், காலத்தால் அழியாத பாடல், சிறந்த இஸ்லாமியப் பாடல், by Abdul Qaiyum
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், கவிஞர் காதர் ஒலி, நூல் ஆய்வு, Nagore, நாகூர் கவிஞர்கள், வைரத்தூறல், by Abdul Qaiyum
View


கவிஞர் காதர் ஒலி, நாகூர் ஹனீபா, நாகூர் அனிபா, நாகூர் மண்வாசனை, பாரதிதாசன், பாவேந்தர், by Abdul Qaiyum
View


கவிஞர் காதர் ஒலி, நாகூர் ஹனிபா
View


வாடா, நாகூர், நாகூர் உணவுமுறை, நாகூர் கலாச்சாரம், நாகூர் வாடா, by Abdul Qaiyum
View


எழுத்தாளர் ஆபிதீன், தமிழ் எழுத்தாளர்கள், நாகூர் எழுத்தாளர்கள், அஸ்ரப் ஷிஹாப்புத்தீன், ஜமாலன், நாகூர் ஆபிதீன், நாகூர் ரூமி, by Abdul Qaiyum, Nagore, Nagore celebrities, Nagore Rumi on Abedeen, Nagore Writers
View


நாகூர் ரூமி, அப்துல் கையூம், நீயா நானா, by Abdul Qaiyum
View


நாகூர் ரூமி, இஸ்லாமும் கவிதையும், நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், நாகூர் மண் வாசனை, by Abdul Qaiyum
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், கவிஞர் நாகூர் சாதிக், இமாஜான், நாகூர் சாதிக், நாகூர் ஹனிபா, நாகூர்க் கவிஞர்கள், பாடகர் ஜெய்னுலாபுத்தீன், by Abdul Qaiyum
View


நாகூர் எழுத்தாளர்கள், புலவர் ஆபிதீன், அப்துல் கையூம், ஆபிதீன், கவிஞர் ஜபருல்லா, நாகூர் கவிஞர்கள், நாகூர் சலீம், by Abdul Qaiyum, Nagore celebrities, Nagore Writers
View


நாகூர் ஹனீபா, பாடகர் நெளசாத் அலி, நாகூர் பாடகர்கள், நாகூர் ஹனிபா, நாகூர் ஹனிபாவைப் பற்றிய ஒர் அலசல், நெளசாத் அலி
View


பறாட்டா உருண்டை, by Abdul Qaiyum, Nagore Food Items, Nagore Food Specialities, Parotta Urundai
View


நாகூர் ஹனீபா, பாடகர் நெளசாத் அலி, இசைமுரசு ஈ.எம்.ஹனிபா, நாகூர் பாடகர்கள், நெளசாத் அலி, E.M.Haniffa, Nagore celebrities, Nagore E.M.Haniffa
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், சித்தி ஜுனைதா, சித்தி ஜுனைதா பேகம், நாவலாசிரியை, முதல் இஸ்லாமியப் பெண்மணி, by Abdul Qaiyum, Literary Essays
View


நாகூர் வட்டார மொழியாய்வு, வேடிக்கை உலகம், லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா, by Abdul Qaiyum
View


பப்படம்
View


திண்ணையில் நான், நகைச்சுவை கட்டுரை, திண்ணை கட்டுரை, by Abdul Qaiyum
View


கவிஞர் ஜபருல்லா, கவிஞர் இஜட் ஜபருல்லா, நாகூர் கவிஞர், Z.Zafarullah
View


நாகூர் ஹனீபா, இசைமுரசு ஈ.எம்.ஹனிபா, நாகூர் ஹனிபா
View


என் கவிதைகள், பர்மாவில் முஸ்லீம்கள் படுகொலை, புத்தன் அழுகின்றான், Muslims massacred in Burma
View


6-ஆம் பாகம், கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயில், நீதிபதி இஸ்மாயீல் வாழ்க்கைக் குறிப்பு, நீதிபதி மு.மு.இஸ்மாயில், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore Writers
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், நாகூர் ரூமி, என் ஊர், நாகூர், Nagore Writers
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், கம்ப ராமாயணமும் கன்னித்தமிழ் முஸ்லீம்களும்
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல்
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், சிலம்பொலி செல்லப்பன், நாகூர் பிரபலங்கள், Nagore celebrities
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், காஞ்சி பெரியவர், நீதிபதி இஸ்மாயில்
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், டாக்டர் சுதா சேஷய்யன், நீதிபதி மு.மு.இஸ்மாயில்
View


கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல்
View


நீதிபதி இஸ்மாயீல், கம்பன் என் காதலன், கவிஞர் வாலி, நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் பற்றி
View


இசைக் கலைஞர்கள், இசைமணி யூசுப், நீதிபதி இஸ்மாயீல், இசையரசியும் இலக்கியச் செல்வரும், கம்பன் அவன் காதலன், நாகூர் இசை விற்பன்னர்கள், நீதி பதி இஸ்மாயீலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்
View


நீதிபதி இஸ்மாயீல், அப்துல் கையூம், கண்ணதாசனும் நீதிபதி இஸ்மாயீலும், கவியரசு கண்ணதாசன், நாகூர் எழுத்தாளர்கள், நீதிபதி இஸ்மாயில், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, kannadasan & M.M.Ismail, Nagore Writers, Tamil Literature, Tamil Muslims, Tamil writers
View


நீதிபதி இஸ்மாயீல், Justice M.M.Ismail On E.V.R.Periyar, Nagore Writers, Tamil writers
View


நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore celebrities, Nagore Writers
View


நீதிபதி இஸ்மாயீல், Justice M.M.Ismail
View


நீதிபதி இஸ்மாயீல், by Abdul Qaiyum, Justice M.M.Ismail
View


நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன், நாகூர் மண் வாசணை, நீதிபதி இஸ்மாயில், நீதிபதி இஸ்மாயீல் வாழ்க்கைக் குறிப்பு, by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore celebrities, Nagore Man Vasanai, Nagore Writers
View


நீதிபதி இஸ்மாயீல்
View


நீதிபதி இஸ்மாயீல்
View


நீதிபதி இஸ்மாயீல்
View


இயற்றமிழ் வளர்த்த நாகூர், ஹ.மு.நத்தர்சா
View


அபுல் அமீன், இயற்றமிழ் வளர்த்த நாகூர்
View


டோனட் ஆன்ட்டி (சிறுகதை), by Abdul Qaiyum
View


சாரணபாஸ்கரன்
View


நாகூர் ஹனீபா
View


நாகூர் ஹனீபா
View


நாகூர் பாஷையில் திருக்குறள்
View


ஹந்திரி
View


அகடம் பகடம் (Misc.), சுள்ளானும் உல்லானும்
View


அகடம் பகடம் (Misc.)
View


எழுத்தாளர் ஆபிதீன், ஆபிதீன்
View

LinkWithin

Related Posts with Thumbnails