Sunday, December 15, 2013

பிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு

குடியை தடுக்க விளம்பரம் செய்
குடிக்கும் வியாபாரம் செய்

புகை பிடித்தால் புற்று நோய் வருமென அறிவுறுத்து
புகைப் பிடிக்கும் சிகெரெட் விற்க அனுமதி கொடு
புகைப் பிடிக்கும் சிகெரெட்டுக்கு வரி கூட்டி கஜானாவை பெருக்கு

எட்ஸ் தடுக்க வழி செய்
ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க சட்டம் வர முயற்சி செய்

இனாமாக மின்சார வழி பயன்படுத்தும் பொருட்கள் கொடு
பணம் கொடுப்பவர்களுக்கும் மின்சாரத்தில் பற்றாக் குறையாக்கு


உள்நாட்டு பொருளை வாங்கச் சொல்லு
வெளி நாட்டு சந்தையை திறந்து விடு

புதிய சாலையைப் போடு
குழி விழுந்த சாலையை சரி செய்வதை தாமதப் படுத்து

கட்சியில் தொன்டனைச் சேர்க்கச் சொல்
கட்சியில் கடைசிவரை அவனை தொண்டனாகவே இருக்கச் சொல்

புதிய கட்சியை தேர்தல் வரும்போது ஆரம்பித்து விடு
தேர்தலில் பேரம் பேச பழகிக் கொடு

தானே தலைவன் தான் இருக்கும் வரை
தனக்குப் பின் தான் விரும்பியவன்தான் தலைவனாக வேண்டும்

மக்களாட்சி நாட்டுக்கு
மக்களாட்சி கட்சிக்கல்ல
மக்களாட்சிபோல் காட்டப்படும்
ஆமாம் போட்டு பழகிப் போனதால்

வாக்கு கொடு
கொடுத்த வாக்கை நிறைவேற்றாதே

அறிந்து கொள்
அறிந்தது அனைத்தும் கிடைக்குமென நம்பாதே

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள் முடிவிலும்... உண்மைகள்... ம்...

தங்களின் கருத்துரையைக் கண்டு, எனது தளத்தில் போட்டிக்கான (LOGO Script) கொடுத்துள்ளேன்... மிக்க நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள் முடிவிலும்... உண்மைகள்... ம்...

தங்களின் கருத்துரையைக் கண்டு, எனது தளத்தில் போட்டிக்கான (LOGO Script) கொடுத்துள்ளேன்... மிக்க நன்றி...