மோடி நல்லவர் - கலைஞர்
மோடி நல்லவர் - இன்றைய தமிழ்நாடு முதல்வருக்கும்
மோடி நல்லவர் - பி.ஜே. பி கட்சிக்கும்
இவர்களில் யார் நல்லவர்கள் இறைவனே அறிவான்!
நல்லவரோ அல்லது கெட்டவரோ மோடியை ஆதரிப்பவர்களுக்கு நாம் வாக்கு சீட்டு போடுபவதை விரும்ப மாட்டோம். நாம் ஆதரவு கொடுக்க மாட்டோம் மோடியை ஆதரிப்பவர்களுக்கு. நாம் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்பது அவர்களுக்கும் தெரியும்
நாம் பல கட்சிகளாக பிரிந்து இருந்தாலும்
நாம் இறைவனுக்கு நல்லவர்களாக இருப்போம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல் (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, பின்னர் (அதே நிலையில்) இறந்துபோகிறாரோ அவர் அறியாமைக்கால மரணத்தையே சந்திப்பார். (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகக் கொடிக்குக் கீழே நின்று ஒருவர் போரிட்டு இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார்; அல்லது இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார் எனில், அவர் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர்.
யார் என் சமுதாயத்திலிருந்து என் சமுதாயத்திற்கெதிராகப் புறப்பட்டு அவர்களில் இறை நம்பிக்கையாளர்கள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, அவர்களில் ஒப்பந்தம் செய்தவர்களிடம் அவர்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் 3767.
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” - குர்ஆன் 26:83.
No comments:
Post a Comment