Tuesday, December 31, 2013

எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு வாழற வாழ்க்கைத் துணைக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?

நிச்சயமா இந்த நிலைத்தகவல் நான் உட்பட பெரும்பாலானவர்களுக்கு பொருந்தக் கூடியதுதான்.

பொதுவாகவே முகநூலில் நான் பார்க்கிற விஷயம் இது. தெரிஞ்சோ தெரியாமலோ ‘வெர்சுவல் உலக’த்துக்கு அடிமையாகிட்டோம். ஒரு நாளின் பெரும் பொழுதை முகம் தெரியாத நண்பர்களோடதான் கழிக்கிறோம். கொஞ்சறோம், சண்டை போடறோம், கை குலுக்கறோம். ஆண்டு கடைசில அந்த நண்பர்களை நினைவுகூர்ந்து நன்றியை தெரிவிக்கறோம்.

ஆனா, நம்மோட எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு சொல்லப்போனா சகிச்சுகிட்டு வாழற வாழ்க்கைத் துணை பத்தி ஏன் குறிப்பிட மறக்கறோம்? அவங்களுக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?

எனக்கு அமைந்த தோழிகள் / தோழர்கள் இப்படி... அப்படினு நெகிழற நாம ஏன் நம்மோடயே மனதாலும், உடலாலும் இணைந்தும், முரண்பட்டும் இருக்கிற வாழ்க்கைத் துணை பத்தி எதுவும் சொல்ல முடியலை?


தோழியோட / தோழனோட ஒருநாள் பயணமும், மாலைல சில நிமிடங்களும் செலவிட்டது புத்துணர்ச்சியை தர்றதா சொல்ற நம்மால ஏன் ஆண்டு முழுக்க நம்மோட செலவிடுகிற துணைகளை பத்தி பேச முடியலை? ஒரு கணம், ஒரேயொரு கணம் கூடவா ஆண்டு முழுக்க துணையோட வாழ்ந்ததுல நினைவுப்படுத்தறா மாதிரி இல்லை?

அன்பால் மட்டுமே வாழ்க்கை நிறையறது இல்லை. வெறுப்பும், குரோதமும், வன்மமும், புறக்கணிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. எல்லாரையும் எல்லா நேரத்துலயும் கொண்டாடவும் முடியாது, நேசிக்கவும் முடியாது.

நம்மோட சண்டை போடவும், நம்மை வெறுக்கவும் கூட சக மனிதனுக்கும் /துணைக்கும் / குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்பேஸ் கொடுக்கலைனா எப்படி?

இந்த வெர்சுவல் உலகத்துல எல்லாருமே முகமுடியோடத்தான் இருக்கோம். நட்பா சாட்ல பேசும்போதும் சரி, இல்லை சந்திக்கும்போதும் சரி. ’நான் ரொம்ப நல்லவன்(ள்) / மத்தவங்க எல்லாருமே ரொம்ப கெட்டவங்க’னு திரும்பத் திரும்ப வலியுறுத்திகிட்டு இருக்கோம்.

இந்த முகமூடிக்குதான் நாம நெகிழறோம்னா பிரச்னை நம்மகிட்டதான் இருக்குனு அர்த்தம்.

2014லில் ஆவது இதை களைய முற்படுவோம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
 
கே. என். சிவராமன்
 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...