Tuesday, December 3, 2013

நன்றி மறப்பதும் நல்லதை நினைக்க மறப்பதும் மனிதனோடு உடன்பிறந்த செயலானதேன்!

ஊடுருவும் பார்வை
சுவை பார்க்கும் நாக்கு
சிந்திக்கும் மூளை
செயல்படும் கை
தொடர்ந்து ஓடும் குருதி
துடிக்கும் இதயம்
இடம் விட்டு நகர உதவும் கால்கள்
கேட்டு அறியும் செவிகள்
இன்னபிற அங்கங்கள் பெற்றாய்
இவைகளைக் கொண்டு வாரிசுகளையும் உருவாக்கினாய்
இவைகளை உமக்களித்த இறைவனுக்கு நன்றி செய்து அவனைத் தொழுதாயா !


அங்கங்கள் செயல்பட உலகில் உலாவருகின்றாய்
அங்கங்கள் செயல்படும் திறனை இழக்க இருந்த இடத்தில் மூலையில் முடங்குகின்றாய்
முடங்கிய பின் முதிர்ச்சி பெற்று இறைவனின் ஆற்றலை சிந்திக்கின்றாய்
மாண்புடைய இறையோனின் அருள் நாடி அழுகின்றாய்
இறையோனின் அருள் பெற்று நலம் பெற்று திரும்பிய நிலையில்
இறையோனின் நினைவில் சில நாட்கள் இருக்கின்றாய்
இறையோனின் நினைவு சில நாட்கள் இருந்து உன்னை விட்டு அகல்கின்றதேன்!
நன்றி மறப்பதும் நல்லதை நினைக்க மறப்பதும் மனிதனோடு உடன்பிறந்த செயலானதேன்!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. குறள் 110:

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

No comments: