குடியை தடுக்க விளம்பரம் செய்
குடிக்கும் வியாபாரம் செய்
புகை பிடித்தால் புற்று நோய் வருமென அறிவுறுத்து
புகைப் பிடிக்கும் சிகெரெட் விற்க அனுமதி கொடு
புகைப் பிடிக்கும் சிகெரெட்டுக்கு வரி கூட்டி கஜானாவை பெருக்கு
எட்ஸ் தடுக்க வழி செய்
ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க சட்டம் வர முயற்சி செய்
இனாமாக மின்சார வழி பயன்படுத்தும் பொருட்கள் கொடு
பணம் கொடுப்பவர்களுக்கும் மின்சாரத்தில் பற்றாக் குறையாக்கு
Showing posts with label குடி. Show all posts
Showing posts with label குடி. Show all posts
Sunday, December 15, 2013
Saturday, February 4, 2012
"குடி“மக்கள் சிந்தனைக்கு..
by முனைவர். இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்.
- உலக நாடுகளோடு இந்தியா எதில் போட்டி போடுகிறதோ இல்லையோ, மது விற்பனையில் போட்டி போட்டு முன்னேறிவருகிறது.
- குடிப்பவர்கள் தம் உயிரோடு தம்குடும்பத்தின் உயிரையும் வாங்குகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் தனக்குத் தொடர்பே இல்லாதவர்களின் உயிர்களையும் பறித்துவருகிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.
- 2010 – 11-ஆம் ஆண்டுகளில் அரசுமதுபானக்கடைகள் வழியாக தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.
- இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் பள்ளிமாணவர்கள் இன்றைய சூழலில் அதிகமாக மதுவுக்கு அடிமையாகிவருகிறார்கள் என்பதுதான்.
- சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேல்தான் மது வாங்கமுடியும் என்றெல்லாம் சட்டங்கள் இருக்கின்றன.
Sunday, November 13, 2011
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் - கவிஞர் இரா .இரவி
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்
குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்
பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே
குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்
போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்
குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு
மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்
பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்
குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்
மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்
Source : http://eraeravi.wordpress.com/
Subscribe to:
Posts (Atom)


