Saturday, December 28, 2013

'திருமணம் உனக்காக அல்ல!'

இருபால் பயிலும் கல்லூரியில்
இணைந்து பயின்றதால் பெண்பால் நட்பு
இராண்டுக்கு மேல் ஒரு பெண்ணுடன் நெருங்கிய நட்பு
ஆண்டுகள் அதிகமாக நட்பு காதலாக மாறியது
காதலாக தொடர்ந்தது திருமணத்தில் முடிய நாடியது
திருமணம் முடிய பெற்றோர் அனுமதி பெற நாடினோம்

தந்தையிடம் காதலிப்பவளின் உயர்வைச் சொன்னேன்
தந்தையிடம் காதலிப்பவளை திருமணம் முடிக்க அனுமதி கேட்டேன்

தந்தை கேட்டார் 'யாருக்காக திருமணம்' யெனக் கேட்டார்
தந்தை கேள்வி பொருளற்றதாகப் பட்டது
தந்தையிடமே கேட்டேன் 'ஏன்! இப்படி ஒரு கேள்வி'யென்று!
தந்தை சொன்னார் 'உனக்காக இத்திருமணமென்றால் அத்திருமணம் வேண்டா'மென்று
தந்தையிடம் சொன்னேன் 'நான் எனக்குத் தானே திருமணம் செய்து கொள்ள முடியுமெ'ன்றேன்

தந்தை விளக்கினார்
' நீ விரும்பியவளை திருமணம் செய்துக் கொள்
நீ செய்துக் கொள்ளும் திருமணம் உனக்காக மட்டுமாக இருக்கக் கூடாது
நீ செய்துக் கொள்ளும் திருமணம் உனக்காகவும் ,
உன் மனைவிக்காகவும்
உன் குழந்தைகளுக்காகவும்
உன் மனைவியின் குடும்பத்துக்காகவும்
உன் பெற்றோர்கள் குடும்பத்துக்காகவும்
உன் திருமணம் இருக்க வேண்டும் என்ற முடிவோடு
உன் திருமணம் நிகழட்டும்.
உன் திருமணம் அந்த முடிவோடு முடிந்தால்
உன் வாழ்வோடு மற்றவர் வாழ்வையும் மகிழ்விக்க விரும்புவாய்' யென்றார்

திருமணமென்பது " வால்மார்ட் தத்துவம் " அல்ல
கடைகளில் விளம்பரம் செய்து விற்போர்
வாங்கிய பொருள் பிடிக்கவில்லையென்றால்
அப்பொருளை திரும்பவும் திருப்பிக் கொடுங்கள்
அப்பொருளுக்கு பதில் மாற்றுப் பொருள் தருவோம் என்பார்கள்
அந்நிலை வராமலிருக்க
அனைவரையும் மனதார நேசிக்கும் மனதோடு
அனைவர் உள்ளமும் எக்காலமும் மகிழ்வோடு இருக்க
சேவை மனதோடு உங்கள் வாழ்வு உயர்ந்து நிற்க
உங்கள் திருமணம் மற்றவர்களுக்காகவும் அமையட்டும்

No comments: