எழுபது வயதை கடந்த மனிதர் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டு அதன் நிமித்தமாக நோயால் பாதிக்கப்பட்டார். அவரை ஒரு திறமையான மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் மருத்துவர்கள் அவரை பல வகையில் சோதித்து அவருக்கு அவசரமாக ஒரு அறுவை சிகிச்சை தேவை என்று அந்த மருத்துவர் ஆலோசனை கூறினார். அவர் பல நாட்கள் கடுமையான வலியால் அவதிப்பட்டதால் அவர் உடனேயே அறுவை சிகிச்சை செய்ய ஒப்பு கொண்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்த பிறகு அவரிடம் மருத்துவர் வைத்தியத்திற்கு ஆன செலவையும் தனக்கு கொடுக்க வேண்டிய தொகையையும் குறிப்பிட்டு அதனை உடன் செலுத்திவிடும்படி தகவல் அனுப்பினார். அந்த தொகைக்கான ரசீதை கண்டவுடன் வைத்தியம் செய்துக் கொண்ட மனிதர் அழத் தொடங்கினார். அவர் அழத் தொடங்கியதை கண்ட மருத்துவர் "நீங்கள் இந்த தொகையை செலுத்த முடியாது என்றால் நாம் ஏதாவது தொகையை குறைக்க ஏற்பாடு செய்ய முயற்சி செய்ய முடியும்." என்று தெரிவித்தார்.
வைத்தியம் செய்துக் கொண்டவர் கூறினார் 'நான் இப்போது நீங்கள் செய்த சிறப்பான வைத்தியத்திற்கு மற்றும் நல்ல முறையில் செய்த அறுவை சிகிச்சைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.அதற்க்கு மிக்க நன்றி. நான் உங்களுக்கு சிகிச்சைக்காக கொடுக்க வேண்டிய பணத்திற்காக அழவில்லை ", என்றார்.
'பின்பு ஏன் அழுகின்றீர் வலி இன்னும் இருக்கிறதா' என்று ஆறுதலோடு மருத்துவர் கேட்டார்.
இறைவன் (அல்லாஹ்) எனக்கு பல ஆண்டுகளாக எந்த சிரமும் இல்லாமல் சிறுநீர் கழிக்க உதவினான் ஆனால் அவன் அதற்காக எந்த வகையிலும் எனக்கு ஒரு மசோதா அனுப்பி வைக்கவில்லை ஆனால் அதற்காக அவனுக்கு இவ்வளவு காலமாக அவனுக்கு நன்றி சொல்லும் முகமாகக் கூட அவனை தொழுது வராமல் இருந்தேனே என்பதனை நினைத்து மனம் வருந்தி நான் அழுகின்றேன்! " என்றார்
நாம் எப்போதாவதும் இறைவனை நம்புகின்றோம் ஆனால் அவனுக்கு நன்றி பாராட்டும் விதமாக நம் கடமையான அவனை நினைத்து தொழுவதை மட்டும் செயல் படுத்தாமல் விட்டு விடுவது மிகவும் வருந்தத் தக்கது .சிரமங்கள் வரும்போது போது மட்டும் அவன் உதவியை நாடுகின்றோம் இறைவனது அருட்கொடைகளை அங்கீகரிப்பதோடு அவனுக்கு நன்றி பாராட்டுவதும் நம் வாழ்வின் கடமை
(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.(குர்ஆன் 14:34.)
“If you (try to) count the blessings of Allah, never will you be able to count them.” [Quran 14:34]
No comments:
Post a Comment