என்னுடைய தந்தையார் “ஓவிய மேதை” கே.ஆர். வேணு கோபால் சர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை....ஒர் நூலாக - வரலாற்று பதிவாக வெளிக்கொணரும் முயற்சியில் “ தமிழுணர்வோடு” என்னுடைய நண்பர்கள் ஈடுபட்டுள்ளார்கள் !!
நன்றியொடு அவர்களுக்கு உதவும் வரலாற்றுக் கடமையில் நானும் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன் !
அதன் காரணமாக எத்தனை, எத்தனை அற்புதமான தருணங்களாய் அனுபவிக்கிறேன் !?
இறைவனுக்கு நன்றி..!!
சற்று முன்...
மயிலாடுதுறை மணிகூண்டை அமைத்து , மேலும் மேலும் மயிலாடுதுறை மக்களுக்கு பெருந்தொண்டு செய்து “மார்க்க ஒழுக்கத்தின் வடிவாகவே வாழ்ந்து மறைந்தவர் ” போற்றுதலுக்குறிய அப்துல்காதர் ஐயா அவர்கள் என்பது சொல்லக் கேள்வி !
அன்னாருடைய திருமகனார், பெருமதிப்பிற்குரிய அப்துல் ஹக்கீம் ஐயா அவர்கள் தந்தையார் “ஓவியமேதை “ கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களோடு நெருங்கிப் பழகியவர் என்னும் செய்தி அறிந்தோம் !
போற்றுதலுக்குறிய அப்துல்காதர் ஐயா அவர்களின் பொன்னோவியத்தினை விழைந்து வரைந்து தந்தவர் “ஓவியமேதை” அவர்கள் என்பது வரலாற்று சிறப்பு மிக்க செய்தியாகும் !!
அந்த பொன்னோவியம் இன்றும் தங்கள் பெருமைக்குரிய வீட்டில் நடு நாயகமாக இருப்பதாக நெக்குருக அவர் சொல்லும் சேதியில் நாம் காண்பது.....மார்க்கம் இணைந்த மானுடம் !!
அரும் பாடுபட்டு, அவர்களின் அன்புச் சகோதரர் “தீன்வழி ஒழுகும்” ஐயா அ. முகமது அலி ஜின்னா பி.ஏ.,பி.எல்., அவர்களின் தொடர்பில், பற்பல வரலாற்று செய்திகள் கிடைத்த வண்ணம் உள்ளன !
அதனை தொடர்ந்து பதிவிவிடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !!
No comments:
Post a Comment