Monday, December 9, 2013

உனை தொழுது நான் வேண்டுகிறேன்

உன் ஆணைக்கு நான் அசைகிறேன்
என் ஆட்டத்தை நீ கண்கானிக்கிறாய்

உனை தொழுது நான் வேண்டுகிறேன்
உனை யல்லால் யாரை நான் வேண்டுவேன்!

உயரிதை சேர்க்க உன் உதவி வேண்டும்
உயரிதை சேர்க்க என் கடமையை நான் செய்ய வேண்டும்


ஒட்டகதை பாதுகாக்க ஒட்டகத்தை கட்ட வேண்டும்
ஒட்டகத்தின் பாதுகாப்புக்கு உனை வேண்ட வேண்டும்

வாழ்வின் வழிகாட்டியாக திரு மறையை தந்துதவினாய்
வழிகாட்டியை விளங்கச் செய்ய நாயக வாழ்கையை, வார்த்தையை தந்துவிட்டாய்

நீ காட்டிய வழிகள் ஆசிகளாகி நெஞ்சத்தில் ஊடுருவி நிற்கின்றன
நெஞ்சத்தில் ஊடுருவியவை நெறி பிறழாது நிகழும் வாழ்வை நிறை வேற்ற வேண்டும்

வழி கெட்டவனாய் வாழாத வாழ்க்கை வேண்டும்
வழி அறிந்து நன்மைகளை சேர்த்து குவிக்க வேண்டும்

யாரும் தான் சேர்த்த நன்மைகளை நான் கேட்டாலும் தந்துதவ மாட்டார்
நான் சேர்த்த நன்மைகளையும் யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்

என்னோடு உன்னிடத்தில் வருவது நான் சேர்த்த நன்மைகளே
உன்னோடு உயர்வான இடத்தில் என்னை சேர்த்து விடு

பிரயாண வாழ்கையாக அமைந்த இவ்வாழ்க்கை
பிரயோஜன வாழ்கையாக புண்ணியம் சேர்க்கும் வாழ்கையாக அமைத்து விடு

முகம்மது அலி ஜின்னா

No comments: