Sunday, December 29, 2013

ஆசையில் தலைமுறை இடைவெளி


புத்தாண்டு பிறந்தால்
பிறந்த ஆண்டுகள் இடைவெளி வந்ததால்
ஆசைகள் மாறுபடுகின்றது

குழந்தைகளுக்கு மிட்டாய்
வளர்ந்த பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள்
கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கு பணம்தான் வேண்டுமாம்.
பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு சென்று புத்தாண்டு கொண்டாட

பெண்களுக்கு ஆடைகள்
மனைவிக்கு இறைவனை தொழுது அவனிடம் வேண்டி நிற்பாள்
நமக்கு நடக்க வேண்டிய திட்டங்கள் பற்றி கற்பனை செய்வது

முயற்சி 
நடக்க முடியாத ஒவ்வொரு ஆண்டு முதல் நாள் போடும் கற்பனை
விட முடியாத கெட்ட பழக்கங்களை(புகை பிடித்தல்) விட முயலும் திட்டம்
இந்த ஆண்டாவது தினக் குறிப்பு டைரியில் எழுத வேண்டும்
மனைவியை செலவு கணக்கு எழுதும் படி கண்டிக்க வேண்டும்

புத்தாண்டு அன்று
புத்தாண்டு வாழ்த்துகள் தொலைபேசி வழியே வந்து கொண்டே இருக்கும் அல்லது போய் கொண்டே இருக்கும்
வாலிபர்கள் புத்தாண்டு அன்று வெளியாகும்  புதிய படங்கள் பார்க்க போய் விடுவார்கள்
வீட்டில் அடைந்து கிடப்பவர்களை தொலைகாட்சி நிகழ்சிகள் பார்க்கச் செய்யும்

No comments: