நேற்று காலை லிப்ஸ் ஏற்பாட்டாளர் நாரயணுடன் நிகழ்ச்சிக்கு அரை மணிநேரம் முன்பே சென்றுவிட்டேன்.அடையார் சங்கீதாவில் லைட்டா இரண்டு இட்லி சாப்பிட்டு பனுவல் சென்றடைந்தோம்.(காலை யாரும் வீட்ல டிபன் செய்ய மாட்டங்களா..குடும்பம் குடும்பமாய்)
நிகழ்ச்சியின் கதாநாயகன் அயன்புரம் சத்தியநாரயணுடன் சிவராமனும் லக்கியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.மேல போய் பேசலாமே என்றேன். கடையே பத்து மணிக்குதான் தொரப்பாங்க்..வாங்க டீ சாப்பிடலாம் என்றார் சிவராமன்.
ஐவரும் டீ குடித்துக்கொண்டே பேச ஆரம்பித்தோம்..
அயன்புரத்தார் எந்த வித தயக்கமும் இல்லாமலும் முன் ஏறபாடும் இல்லாமலும் பேச ஆரம்பித்தார்.
கடை திறந்துவிட்டிருந்தார்கள்.பார்வையாளர்கள் ஒருவரும் வந்திருக்கவில்லை.மேலே சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.நிகழ்ச்சியின் பார்மெட் எப்படி இருக்கும் என்று நரேன் அயன்புரம் சத்தியநாரயணுக்கு விவரித்தார்.
அவர் குடும்பம்,35 வருட கடித அனுபவம் என்று பேச்சு ஓடியது.
மற்றவர்களை வரவேற்க லக்கி,சிவராமன் கீழே சென்றுவிட்டிருந்தார்கள்(தம் அடிக்க என்றும் பொருள் கொள்ளலாம்).
நேரம் ஆக ஆக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.பதினோரு மணியளவில் குங்குமம் முதன்மை ஆசிரியர் முருகன் அவர்கள் வந்து சேர 20 க்கும் மேற்ப்பட்டவர்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது..
யுவகிருஷ்ணா லிப்ஸ் குறித்து அறிமுகம் கொடுத்தார்..முகத்திற்கு போட்டிருந்த பவுடர் அதிகம்தான் இருந்தாலும் நல்லா பிரைட்டா இருந்தது.
சிவராமனின் வரவேற்புரைக்கு,அடுத்து குங்குமம் முருகன் பேசினார்..குங்குமம் பத்திரிக்கைக்கு வாரம் 150 வாசகர் கடிதம் மட்டுமே வருவதாய் தெரிவித்தார்.நல்ல கதைகளை லிப்ஸ் இனம்கண்டு தங்களுக்கு அனுப்பவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மூத்த பத்திரிக்கையாளர்,ஜவகர் அவர்களின் வாழ்த்துரைக்கு பிறகு அயன்புரம் சத்தியநாராயணன் அதகளம் ஆரம்பித்தது.
நான் ஒரு பிஸி மாணவர் என்ன மாதிரியான பத்திரிக்கைகளை மட்டும் படித்தால் என்னை அப்டேட்டாக வைத்துகொள்ளமுடியும் என்ற கேள்விக்கு”மாணவன் விவர மாணவன் ஆகவேண்றால் என்றால் எல்லாம் படி”
கடிதங்கள் புத்தகங்கள் வாங்குவதற்கு எப்படி உங்களால் தொடர்ந்து செலவு செய்ய முடிகிறது என்ற கேள்வி,அப்ப அப்ப 100,500 என்று பத்திரிக்கைகள் அனுப்பும் அதை அப்படியே கடிதம் வாங்க செலவு செய்துவிடுகிறேன்...இதில் சம்பாதிப்பதை இதில் தானே செலவு செய்ய வேண்டும் என்றார்.நானும் இந்த விஷயத்தில் நீங்க ஒரு கமல் சார் என்றேன்..சிரித்தபடியே பார்த்தார்...
வாசகர்களுக்கு அயன்புரன் சத்தியநாரயணன் அவர்கள் கொடுத்த டிப்ஸ்..
படித்த உடனுக்குடன் எழுதுங்கள் தோன்றியதை எழுதியுடன் மேற்கொண்டு எழுதுங்கள். பத்திரிக்கைகளிம் போக்கிற்கு தகுந்தபடி எழுதுங்கள்.
தெளிவாக எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.அதிமாக எழுதுங்கள். வாசகர் கடிதம் வழி வந்த புகழை வைத்து பத்திரிகை ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட கோரிக்கைளை வைக்காதீர்கள்.
கேள்விகளுக்கு துளியும் தயக்கமின்றி தேர்ந்த பேச்சாளர் போல் பேசியது சிறப்பு.
அயன்புரம் சத்தியநாராயணன் நடிகைகள் விஷயத்தில் அப்டுடேட் ஆக இருக்கிறார்.
அமைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்---
சூடான டீ வழங்கவும்.
ஆக்கம் Aravindan Krishnamoorthy
1 comment:
லிப்ஸ் என்றால் என்ன என்பதையும் எதற்காக இந்த சந்திப்பு என்பதையும் யாரால் நடத்தப்பட்டது என்பதையும் விளக்கியிருக்கலாம்.
Post a Comment