'தொடங்குவதெல்லாம் தோல்வியில் முடிகின்றது. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை!' இப்படி சிலர் அலுத்துக் கொண்டு அடுத்த வேலையை தொடராமல் தொய்வு அடைந்து விடுகின்றார்கள். இது தன்னை தாழ்வு படுத்திக் கொள்ளும் மனப்பான்மை , தான் செய்த வேலையில் முழுமை இருந்ததா அல்லது அதில் தன் வேலையில் ஏற்பட்ட கவனக் குறைவா அல்லது முறையாக முடிந்ததை செயல் படுத்த வில்லையா என்பதனை சிந்திக்க மறுக்கிறார்கள், பல ஆய்வுக்குப் பின்தான் நல்ல கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றது என்பதனை மறக்க வேண்டாம் . ஒரு தோல்வி மற்றொரு வெற்றிக்கு படியாக அமையும் . நாம் நினைத்தது நிகழாமல் போனதும் நன்மைக்கே என்ற மனப்பான்மை வரவேண்டும் . நம் கடமையை செய்துக் கொண்டிருக்க அதன் முடிவை இறைவன் நியதிப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் .
தோல்வியை கண்டவர்கள் அனைவரும் யாரும் தங்கள் தோல்வியை வெளியில் சொல்லிக் கொண்டு திரிய மாட்டார்கள். அவ்விதம் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களை யாரும் நம்பவும் மாட்டார்கள் மற்றும் அவர்களிடத்தில் எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டார்கள். நம்மிடம் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருவது நம் வசமே உள்ளது.
எல்லொருக்கும் தாங்கள் நினைத்தது எல்லாம் கிடைத்து விடாது. அப்படி கிடைத்து விட்டால் அடுத்தவருக்கு ஏது வாய்ப்பு ! நம்பிக்கையே வாழ்வின் அடித்தளம் . எல்லொருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால் முயற்சியே அற்றுப் போய்விடும். உலகம் சுழல்வது போல் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது நியதி.
எந்த காலத்திலும் நம்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை விடுதல் கூடாது. ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர். சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும் சக்தி.அறிவின் அடித்தளம். இத்தனையும் சேர முயற்சி என்ற உந்தும் சக்தி தேவை.நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது என்று நம்பி அதனை வெளிக்கொணர செயல்படுங்கள் .தொடர் முயற்சி திருவினையாக்கும் என்று நம்புங்கள். ஆளுமை சக்தியால் கிடைத்த அனுபவங்களும், ஆற்றல்களும் ஒருங்கிணைப்பும், உந்தும் சக்தியும் வீணாகிப் போய்விடக் கூடாது. நமது ஆளுமை சக்தியை வெளிக்கொணர்ந்து நல்ல நோக்குடன் அதனை பயன்படுத்தி சிறப்பாக வாழ முயலுங்கள்.பறவைகள் தங்களுக்கு வேண்டியதை தேடி தன் பசியைத் தீர்த்துக் கொள்வதுடன் அதன் குஞ்சுகளுக்கும் ஆகாரத்தை சேர்த்துக் கொண்டு வருகின்றது .அது தனது வேலையை தொடர்ந்து தினமும் செய்கின்றது . அதற்க்கு தேவையானதை மட்டும் சேர்க்க முயல்கின்றது. நாம் பேராசை மனதுடன் அடுத்து தலைமுறைக்கும் சேர்க்க ஆசைப் படுகின்றோம். நமது கடமை நமது வாரிசுகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாகவே நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு சேர்த்து வைப்பதை விட சேர்க்கும் விதத்தை, சேமிக்கும் முறையை சொல்லிக் கொடுத்தலே சிறப்பு.அவர்களுக்கு கல்வியையும் நம்பிக்கையையும் ஏற்றி வைப்பதே உயர்வு.
Surat Az-Zumar (The Troops) 39:49 Al Quran- سورة الزمر -
And when adversity touches man, he calls upon Us; then when We bestow on him a favor from Us, he says, "I have only been given it because of [my] knowledge." Rather, it is a trial, but most of them do not know.
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்; "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள். Al Quran- 39:49
1 comment:
நல்ல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...
Post a Comment