Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலா ஒரு சகாப்தம்


 தென்னாப்ரிக்காவின் தந்தை என்றழைக்கப்படும் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னெஸ்பர்க்கில் அவரது இல்லத்தில்  உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா. மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. அவருக்கு வயது (95). கருப்பு இன மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய தென்னாப்பிரிக்காவின் காந்தி என்று அழைக்கப்படுபவர்  நெல்சன் மண்டேலா.தென்னாப்ரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராக விளங்கியவர் நெல்சன் மண்டேலா.


 தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.  தென்னாப்ரிக்காவின் முதல் கருப்பு இனத்தலைவராக தான் பதவி ஏற்றபோது தான் அனைத்து ஆத்திக்கத்திற்கு எதிராகவும் போராடுவேன் அது கருப்பு இன ஆதிக்கமாக  இருந்தாலும் போராடுவேன் என்றார்.
தொலைக்காட்சியில் பேசிய ஜூமா: "தென் ஆப்பிரிக்க மக்களே, நமது அன்பிற்குரிய...ஜனநாயக தென் ஆப்ரிக்காவிற்கு வித்திட்ட அதிபர், நம்மை விட்டு பிரிந்தார். நமது தேசம் தனது மிகப் பெரிய பிள்ளையை இழந்து விட்டது. மக்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர்". என்றார். மண்டேலாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும் என அவர் தெரிவித்தார்.

உலக தலைவர்கள் அனைவரும் அவருக்காக இரங்கல் செய்தியை அனுப்பி வருகின்றனர். நெல்சன் மண்டேலா மறைந்த செய்தி கேட்டதுமே உலகத் தலைவர்களும் மற்றத் துறைகளை சேர்ந்த பிரபலங்களும் தங்கள் சோகத்தையும், தங்கள் மீதான அவரது தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ளத் துவங்கினர். அந்த மாமனிதரின் வாழ்க்கையையும், அது ஏற்படுத்திய தாக்கத்தையும் ட்விட்டரில் நொடிக்கு நூறாக பதிவாகிவரும் இரங்கல் குறும்பதிவுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.


நெல்சன் மண்டேலா ஒரு சகாப்தம்

No comments: