Thursday, December 26, 2013

முகநூலின் முகவரி

அறிந்ததை தர
அறியாததை பெற
கவிதை வடிக்க
கருத்துரை சொல்ல
இறப்பை அறிவிக்க
கண்டதையும் கொட்ட
காணாததைக் காண
காணாமல் போனவர்களை சொல்ல

பொழுதைப் போக்க
சோம்பலை முறிக்க
விளம்பரம் செய்ய
விளம்பரமாக்கிக் கொள்ள
விவரம் தேட
விடுபட்டவர்களைப் பிடிக்க
முகமே அறியாதவர்களை நண்பராக்க
படம் போட
படத்தின் தலை மாற
காதல் வர
காதலி கிடைக்க
காதல் முறிய
முகத்தை காட்டி மகிழ
ஆண் பெண்ணாக மாற
பெண்ணாக நினைத்து நட்பு சேர்க்க
நாணம் போக
மானமும் போக
முகநூல் நடத்துபவன் பொருள் ஈட்ட

நல்லதும் கெட்டதும் நடக்குமிடம்

No comments: