Saturday, December 21, 2013

கேட்டதையும் கொடுப்பான் , கேட்காததையும் கொடுப்பான்.


இறைவனிடம் (அல்லாஹ்விடம்) ஈமானைக் (நம்பிக்கை )
இறையருள் கேட்டேன் ! கொடுத்தான் .


கேட்பேன் ! கேட்டுக் கொண்டே இருப்பேன்
கேட்டதையும் கொடுப்பான் ,
கேட்காததையும் கொடுப்பான்.
கொடுத்ததும் நன்மைக்கே
கொடுக்காததும் நன்மைக்கே .
கேடகவேண்டியவன் அவனைத் தவிர மற்றவன் உண்டோ !
கேட்கவேண்டியது நம் செயல் .
கொடுப்பது அவன் அருள் .
கேட்பதிலும் நம்பிக்கை வேண்டும் .
கேட்பதிலும் பணிவுடன் கேட்க வேண்டும்
கேட்பதையும்  அழகாக கேட்க வேண்டும்
கேட்பதையும் முறையாக கேட்க வேண்டும்
கேட்பதை நல்லதை  கேட்க வேண்டும்
கேட்பதையும் மற்றவர் நலம் நாடியும் கேட்க வேண்டும்
கேட்டது கிடைக்காமல் போனால் வருந்தாமல் இருக்கும் மனம் வேண்டும்


எதையும் தாங்கும் இதயம் கேட்டேன்
தெளிவான இதயம் கொண்ட மனம் கேட்டேன்
நற்செயல்கள் புரிய நல்லுதவியையும் கேட்டேன்
நிலைத்து நிற்கும் பொறுமையையும் கேட்டேன்
தியானம் செய்யும் நாவையும் கேட்டேன்
சகித்திக் கொள்ளும் உடலையும் கேட்டேன்
நிரந்தரமான ஆகாரத்தையும் கேட்டேன்
அமல்கள் ஒப்புக் கொள்ள  வேண்டுமென கேட்டேன்
அருட்கொடையான (ஜன்னத்துல் பிர்தவுஸ்) சுவனம் கேட்டேன் 
பரி பூரண அறிவைக் கேட்டேன் (ரப்பி ஜித்னி இல்மா = "ர‌ட்ச‌கா ர‌ப்பே என‌க்கு க‌ல்வி அறிவை அதிக‌ப்ப‌டுத்துவாயாக‌")

உயர் கிருபையானவனே !
உமது அனைத்து நபிகள் மீதும்
உமது இறுதி நபி (ஸ ல்) மீதும்
அவர்கள் உற்றார் மீதும்
அவர்கள் உறவினர்கள் மீதும்
அவர்கள் தோழர்கள் மீதும்
உன் அருள் பொழிந்துடுவாயாக யெனக் கேட்டேன்

அவன் சர்வ உலகங்களையும் படைத்தவன்
அவன் சர்வ உலகங்களையும் பரிபாலித்து வருபவன்
அவனுக்குகே அனைத்துப் புகழும் உரித்தாகட்டும்
அவன் மனமிரங்கி அருள் செய்திடுவான் .
அவனிடம்  கேட்பதிலும் ஒரு சிறப்பு
அந்த திறமையும் அவன் கொடுத்த அருள் .
அந்த பாக்கியம் பெற்றவர் நாம்