Tuesday, December 31, 2013

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

நேற்று... 30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு 75 ம் வயதில் மரணித்த (இன்னாலில்லாஹி...) சகோ. கோ.‪#‎நம்மாழ்வார்‬ க்கு செய்யப்படும் வெறும் இரங்கல் மட்டுமே நமக்கு பயனளிக்காது..! தொலைநோக்குடன் கூடிய அவரது நல்ல சிந்தனைகளை நாம் செயலில் கொண்டு வர வேண்டும்.

எங்கள் வீட்டில் இயற்கை உரமிட்டே தோட்டம் வளர்க்கிறோம். பூச்சிக்கொல்லிகளை எல்லாம் பயன்படுத்துவது இல்லை. இதுபோல... நம்மால் முடிந்த மட்டும் நம்மாழ்வாரின் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்து சொல்லி வளர்ப்பதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்..!

===///

தஞ்சை மாவட்டத்தில் 1938 ல் பிறந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது.

கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.

1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி Masanabu Fukuoka வால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம் நம்மாழ்வார்.

தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆனார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர்.

-பூச்சி கொல்லிகள் எதிர்ப்பு
-மீத்தேன் வாயு திட்டம் எதிர்ப்பு
-மரபணு சோதனைகள் எதிர்ப்பு
-பி.டி. கத்தரிக்காய் அனுமதிக்கு எதிர்ப்பு
-வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதிக்கு எதிர்ப்பு
-விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதலுக்கு எதிர்ப்பு

---என இப்படி பல போராட்டங்களை மக்களுக்காக நம் எதிர்கால சந்ததிக்காக நடத்தியவர்.

தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். 250 மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு ‪#‎சுற்றுச்சூழல்_சுடரொளி‬ விருதினை வழங்கியது.
===///

நன்றி : விக்கிப்பீடியா






தகவல் தந்தவர்  Mohamed Ashik

No comments: