ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்று கிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.
ஆனால் ஒரு நிபந்தனை.
"நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
Showing posts with label திருமணம். Show all posts

Sunday, June 14, 2015
Thursday, April 9, 2015
சகோ Abdul Basithகல்யாணத்தின் போது
சகோ Abdul Basithகல்யாணத்தின் போது இன்னொரு முக்கியமான அம்சம்... பெரியவர் Mohamed Ali ( http://nidurseasons.blogspot.in/ தளத்தின் பதிவர்) அவர்களுடனான சந்திப்பு. இதற்கு முன்னர் சாட்டில் பலமுறை டைப்பிருக்கோம். முதல் நாளே அவரிடம் சொல்லி இருந்தேன்... கல்யாணத்துக்கு வருவது பற்றி. நேரில் சந்திப்பது இதுவே முதல்.
ஆஷிக் பாசித் இருவருக்கும் உறவில் தாத்தா. எங்கோ அமர்ந்திருந்தவரை கூட்டிவந்து ஆஷிக் என்னிடம் அறிமுகம் செய்துவைத்ததும்... மிகவும் மகிழ்ச்சியாய் அளாவலாவினார். நான் நம்ம செட்டை அவருக்கு அறிமுகப்படுத்தவும்... அதன் பின்னர் எங்கள் அருகிலேயே அமர்ந்து இருந்தார். எங்கள் ஒவ்வொருவரிடமும் பக்கத்தில் அமர்ந்து பேசினார். விசாரித்தார்.
Monday, July 7, 2014
குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 5
எதிர்பாரா இனிமைகள் இருக்கட்டும் !
வசந்திக்கும், ஆனந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இருவரும் கடந்த சில நாட்களாக ஒழுங்காகப் பேசிக்கொள்வதில்லை. ஆனந்த் அலுவலக வேலை என காலையிலேயே கிளம்பி, இராத்திரி தான் வருகிறார். இடைப்பட்ட நேரங்களிலும் அதிகம் போன் செய்வதில்லை.
வேலை வேலைன்னு வேலையையே கட்டிகிட்டு அழுங்க ! என வசந்தி எரிச்சல் பட, என் வேலையோட கஷ்டம் உனக்கெங்கே புரியப்போகிறது என ஆனந்த் திருப்பி எரிச்சல் பட, உறவில் சின்ன விரிசல். வசந்தி தன் தோழியரிடம் இதைப்பற்றிப் புலம்ப அவர்கள் ஆளாளுக்கு தூபம் போட்டார்கள். அவருக்கு வேற ஏதாச்சும் லவ் இருக்குமோ, அலுவலகத்துல கனெக்ஷன் இருக்குமோ, உன்னைப் பிடிக்காம போயிருக்குமோ என ஏராளம் “மோ, மோ, மோ” என பேசி அவளுடைய நிம்மதியையே கெடுத்து விட்டார்கள். இறுக்கம் இருவருக்கும் இடையே இருந்த விரிசலை பெரிதாக்கிக் கொண்டே இருந்தது.

Thursday, July 3, 2014
குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 4
வெயில் சுட்டெரிக்கும் மத்தியான நேரம் பீச் பக்கம் போனால் பார்க்க முடியும் வெயிலுக்கே சவால் விடும் காதலர்களை. சூரியபகவானே டென்ஷன் ஆகிற அளவுக்கு அவரை அலட்சியப் படுத்தி காதலில் கலந்திருப்பார்கள் காதலர்கள். திருமணம் முடியும் வரை, அல்லது காதல் முறியும் வரை இந்த நெருக்கமும், பிணைப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் நேரம் கிடைச்சா கூட அந்த சைக்கிள் கேப்பில் சந்திக்கவும், பேசவும், தனிமையாய் நேரம் செலவிடவும் காதலர்களின் மனம் தவியாய்த் தவிக்கும். இந்தத் தவிப்பு தான் காதல் எனும் செடிக்கு உரமும், தண்ணீரும், காற்றும் சர்வ சங்கதிகளும்.
Saturday, December 28, 2013
'திருமணம் உனக்காக அல்ல!'
இருபால் பயிலும் கல்லூரியில்
இணைந்து பயின்றதால் பெண்பால் நட்பு
இராண்டுக்கு மேல் ஒரு பெண்ணுடன் நெருங்கிய நட்பு
ஆண்டுகள் அதிகமாக நட்பு காதலாக மாறியது
காதலாக தொடர்ந்தது திருமணத்தில் முடிய நாடியது
திருமணம் முடிய பெற்றோர் அனுமதி பெற நாடினோம்
தந்தையிடம் காதலிப்பவளின் உயர்வைச் சொன்னேன்
தந்தையிடம் காதலிப்பவளை திருமணம் முடிக்க அனுமதி கேட்டேன்
தந்தை கேட்டார் 'யாருக்காக திருமணம்' யெனக் கேட்டார்
தந்தை கேள்வி பொருளற்றதாகப் பட்டது
தந்தையிடமே கேட்டேன் 'ஏன்! இப்படி ஒரு கேள்வி'யென்று!
தந்தை சொன்னார் 'உனக்காக இத்திருமணமென்றால் அத்திருமணம் வேண்டா'மென்று
தந்தையிடம் சொன்னேன் 'நான் எனக்குத் தானே திருமணம் செய்து கொள்ள முடியுமெ'ன்றேன்

Saturday, December 14, 2013
இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை....
இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை பல அரசியல் தலைவர்களும் அமைப்புத் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.
இது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம் )
ஆனால் பெரும்பாலான மக்கள் இதை ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளவில்லை.
காரணம் இருக்கிறது.
இந்திய கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு பெரிய அங்கீகாரமே இருக்கிறது.
பல மன்னர்கள் அதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள்.
மக்களிலும் பலர் திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.

Friday, November 8, 2013
புவனகிரி பூச்சரமே…..
ஆண்:
ஆத்துமீனு அயிரமீனே!
அத்தபெத்த ரத்தினமே!
அணைக்கர ஓரத்துல,
அஞ்சுகமே வாயேண்டி!
அருச்சலா சேத்தணைக்க….
பெண்:
மேலூரு மச்சானே!
மேலாக்கு போட்டுபுட்டேன்;
வெண்ணாத்தங் கரையோரம்
விரசாத்தான் வருவேனோ?
மாராப்புச் சேத்தணைக்க….
ஆத்துமீனு அயிரமீனே!
அத்தபெத்த ரத்தினமே!
அணைக்கர ஓரத்துல,
அஞ்சுகமே வாயேண்டி!
அருச்சலா சேத்தணைக்க….
பெண்:
மேலூரு மச்சானே!
மேலாக்கு போட்டுபுட்டேன்;
வெண்ணாத்தங் கரையோரம்
விரசாத்தான் வருவேனோ?
மாராப்புச் சேத்தணைக்க….
Wednesday, December 26, 2012
அதிகமாக விரும்பினேன் குறைவான தேவைக்கு !
அதிகமாக விரும்பினேன் குறைவான தேவைக்கு
தேவையானது கிடைத்த பின் விரும்பியதை விரும்பவில்லை
அளவுக்கு மேல் நேசித்தேன் அடைவதற்கு
அடைத்தபின் நேசிப்பதை விரும்பவில்லை
நேசம் வந்தது விளையாட்டாக
நேசம் போனதும் விளையாட்டினால்
உள்ளே வரும் வழி தெரிந்தது
வெளியே போகும் வழி தெரியவில்லை
திருமணம் செய்ய திருமணமாகாதவர் ஆசைப்பட்டார்
திருமணமானவர் திருமணம் முறிக்க ஆசைப்பட்டார்
சந்தைக்கு சரக்கு நிறைய வந்தது விலை குறைந்தது
சந்தைக்கு சரக்கு வரவு குறைந்தது விலை ஏற்றமானது
மின்சாரம் அதிகமானது தொழிற்சாலைகள் வரவானது
மின்சாரம் குறைவானது தொழிற்சாலைகள் மூடப்பட்டன
மின்சாரம் அதிகமானது இனாம் மின்சாரம் வழக்கப்பட்டது
மின்சாரம் குறைவானது இனாம் மின்சாரம் நிறுத்தப்பட்டது

Saturday, December 15, 2012
பெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அனுமதிப்போமா?
“… … அண்மையில் கோப்பன்ஹேகில் உலகப் பெண்கள் பிரச்சினை குறித்த ஒரு கருத்தரங்கம் நடந்தது. பெண்ணினத்திற்கு சமத்துவம் வேண்டும்; பெண்கள் முன்னேற வேண்டும் என்றெல்லாம் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தாய்குலத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்கப்பட்டுவிட்டன. ஆகவே, இஸ்லாமிய சமுதாயத்தில் பிரச்சனைக்கே இடமில்லை. காலப்போக்கில் நாம் மாற்றான் கலாசாரத்திற்கு அடிமையாகி, அலைக்கழிந்துவிட்டோம். நம்மை நாமே சீரழிவைத் தேடிக்கொண்டோம். அரபு நாடுகளிலே பெண்களுக்கு மஹர் கட்டியே திருமணம் நடைபெறுகிறது. அங்கு ஆண் ஏழையாகிவிடுகிறான் - பெண் பணக்காரியாகிறாள்! இந்த விழாவில் கலந்து கொள்ள பயந்து கொண்டு கோழைகள் பலர் வரவில்லை. மஹர் தான் நம் சட்டம். ஹிந்துக்களிடையேதான் இந்த வரதட்சனைப்பழக்கம்! பெண்களுக்கு அங்கே சொத்துரிமை இல்லாததால், பெண்ணுக்கு சீராக ஹிந்துத் தந்தை மகளுக்குக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருக்கிறது. ஆகவே வரதட்சணைத் தேவையில்லை.

Wednesday, October 31, 2012
'வெற்றிகரமான திருமணம் வாழ்க்கையின் ரகசியம்!'
வெற்றிகரமான திருமணம் சொர்கத்தில்.நடைபெறுகின்றதா?
வெற்றிகரமான திருமணம் சொர்கத்தில் நடைபெறுகிறது என்ற காரணம் சொல்லி திருமணத்தில் மனநிறைவு அடையாதவர்கள் மற்றும் மனநிறைவு அடைந்தவர்களும் சொல்வது இயல்பு .
வெற்றிகரமான திருமணம் நமது சரியான முயற்சியில் உள்ளதை நாம் மறந்து விடக் கூடாது. திருமணம் திடீரென்று நடக்கும் நிகழ்வாக நினைத்து பொறுப்பற்ற நிலையில் இருத்தல் தவறு . முறையான முயற்சி மேற்கொண்டு தகுதியானவர்களை பொருத்தமாக தேர்ந்தெடுக்க வேண்டும் .பணத்துக்காக அல்லது அழகுக்காக மட்டும் முதலிடம் தராமல் முதலிடம் குணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .திறமை,கருணை ,ஒத்துழைப்பு இவைகள் இதற்கு அவசியமாகின்றது .
இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் :
முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி(எண் 5090மேற்கொண்டு அதன் முக்கியத்தை அறிய இந்த காணொளி காணுங்கள்

Sunday, September 16, 2012
திருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை!
திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும்போது நல்லதை நாடுவோம்,
விதவைகளுக்கு மறுவாழ்வு
புரட்சி“மறுமணம்”
கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலாமிகக் கொடியதென்று பட்டதண்ணே குளிர்கின்ற வட்டநிலா”
புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது.பண்டைய காலத்தில் விதவைத் திருமணம் என்பது கிடையாது.கணவன் இறந்தால் பெண்கள் உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கம் இருந்தது. இறந்த கணவனை ஈமக்காட்டில் படுக்க வைத்து கட்டைகளை அடுக்கி, உயிரோடு இருக்கும் மனைவியையும் அவனோடு படுக்க வைத்து, கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தி வந்தனர். இதனால் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம் (சதி சட்டம்) 1829ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.
‘தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.
வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ!’
இது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகவே இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்.
விதவைகள் திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு என்பது மட்டுமல்ல; விதவைகளுக்கு மறுவாழ்வும் உண்டு.
ஒரு பெண் கணவனை இழந்த விதவையானாலும், அல்லது கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவளானாலும் மறுமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. இது வெறுமனே ஏட்டளவில் இல்லாமல், சமூகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.

Saturday, July 14, 2012
யாருக்கும் வராத குழப்பம்! இமாமுக்கும் வராதா!
ஒரு பெண் என்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினாள். எனது சம்மதத்தைக்
கேட்டாள்.உடனேயே ஒப்புதல் கொடுத்தேன் .ஆனால் திருமண செலவுக்கு வசதி
கிடையாது என்றும் தெரிவித்தேன், நீங்கள் ஒரு செலவும் செய்ய வேண்டாம்
நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று அன்போடு அப்பெண் கூறினாள். அவள்
படித்த நல்ல ஒழுக்கமுள்ள அழகான பெண்தான். அவள் விருப்பப்பட்டபடி திருமணம்
அவர்கள் செலவிலேயே பலரை அழைத்து விருந்துக் கொடுக்கப்பட்டது,
திருமண மேடையில் திருமணம் செய்து வைக்கும் இமாம் மணப்பெண்ணுக்கு மகர் தொகை ( மணமகளுக்கு மணமகன் கொடுக்கும் மகர் தொகை அப்பெண்ணுக்கு வாழ்நாள் காப்புத்தொகையாக திருமணத்தின் போதே அளிக்க வேண்டும் ) 'எவ்வளவு கொடுக்கிறீர்கள்' என்று கேட்டார். நான் உடனே 'அது எனக்குத் தெரியாது. பெண்ணிடமே கேளுங்கள் என்றேன்'. உடனே அந்த இமாம் 'இஸ்லாமிய சட்டப்படி மாப்பிள்ளைதான் மகர் தொகை கொடுக்க வேண்டுமென்றார்'. நான் சொன்னேன் 'நான் வாக்கு மாற மாட்டேன். பெண்ணே சொல்லிவிட்டாள் 'நீங்கள் ஒரு செலவும் செய்ய வேண்டாம்' என்று அந்த வாக்குறிதியை நான் மாறினால் அது நான் அந்த பெண்ணை இப்பொழுதே அவமதிப்பதாகிவிடும்' என்றேன். இமாமுக்கே குழப்பம் உண்டாகிவிட்டது .
திருமண் வாக்குறுதியை , ஒப்பந்தத்தை எனக்கு சொல்லிக் கொடுக்க ஆறம்பிதார் 'அப்துல் கரீமுடைய மகள் நிசாவை ஹலீல் அண்ணன் சாட்சியாக மற்றும் ரஹீம் அண்ணன் சாட்சியாக நான் திருமணம் செய்துக் கொள்கின்றேன்' என்றார். 'நிறுத்துங்கள் . நான் திருமண செய்ய இருக்கின்றேன் நான் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள். என்னையா அல்லது உங்களையா? ஹலீல் மற்றும் ரஹீம் அவர்கள் தானே சாட்சிகள் அவர்கள் அண்ணனை சாட்சியாக அழைக்கிறீர்களே ஏன்' என்றேன் . உடனே அந்த இமாமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நானே மைக்கை பிடித்து திருமண ஒப்பந்தத்தை ' பெண் கொடுத்த தொகையை பெண்ணுக்கே மகராக கொடுப்பதாகவும் ஹலீல் மற்றும் ரஹீம் ஆகியவர்கள் சாட்சியாக திறுமணம் செய்துக் கொள்கின்றேன்' என்று சொல்லிவிட்டேன்.அதற்கு கையழுத்தும் திருமண ஒப்பந்த ஓலையில் போட்டுவிட்டேன் . பெண்ணிடம் முன்பே கையெழுத்து வாங்கி விட்டார்கள். அப்புறம்மென்ன விருந்து சாப்பிட வேண்டியதுதான்.
( பின்புதான் தெரிய வந்தது மரியாதைக்கு சாட்சிகளின் பெயரோடு அண்ணன் என்று இமாம் சேர்த்துக் கொண்டாராம் .இருப்பினும் அப்படி சொல்வது சரியல்லதான்)

Wednesday, May 9, 2012
நான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டேனா?
நான் இந்த உலகத்திற்கு வந்தது இறைவன் அருளால் உங்கள் மூலமாக, நான் உங்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாக்கப்பட்டேனா அல்லது விருப்பத்தின் காரணமாக உருவானேனா என்பது நான் அறியேன், ஆனால் நீங்கள் நான் உலகில் வந்து விழுந்ததிலிருந்து என்னை அழிக்க முயலாமல் பாசம் காட்டி வளர்த்தது மட்டும் உண்மை என்பதனை நான் அறிவேன். நீங்கள் இருவரும் எனக்காக செய்த தியாகங்களை மறக்க முடியுமா!
அம்மா, நான் பிறந்த போது உன்னைத்தான் முதலில் பார்த்தேன் அந்த 'அம்மா' என்ற தமிழ் வார்த்தையை நீ சொல்லிக் கொடுக்காமல் உன்னை 'ம்மா' 'அம்மா' என்று அழைக்க இறைவன் சொல்லித் தந்துவிட்டான். நான் பிறந்தபோது உங்கள் கண்களில் விழுந்தோடிய ஆனந்தக் கண்ணீர் மகிழ்வானது . அது காலமும் நிலைத்து எனது வாழ்வை செம்மை படுத்த நீங்கள் மேற் கொண்ட முயற்சி உயர்வானது.
அந்த உங்களது ஆனந்த கண்ணீரும், மகிழ்வும் இப்பொழுது குறைந்து வந்தாலும் அதனை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதனை நான் அறிகின்றேன். இது யார் செய்த குற்றம்! நிச்சயமாக நான் இல்லை. நான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டேனா? நீங்கள்தான் எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினீர்கள். உங்கள் விருப்பப் படியே நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து வைத்தீர்கள். இப்பொழுது உங்களுக்கும் என் மனைவியுமான உங்கள் மருமகளுக்கும் கருத்து வேறுபாடு வந்து உங்கள் மகிழ்வில் குறைவு வந்து விட்டதனை நான் அறிகின்றேன். பெற்றோர்களே சிறுது பொறுமையை கடைப்பிடியுங்கள், உங்கள் மகிழ்வுக்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். உங்களுக்காகவே நாங்கள் உங்களுக்கு பேரக் குழந்தையை பெற்று தருகின்றோம். அது போதும் உங்கள் மகிழ்வின் தொடர்ச்சிக்கு. நீங்களும் குழந்தையோடு குழந்தையாக மாறிவிடுவீர்கள். குழந்தை மனது குறை காணாத மனது,அதனால் இழந்த மகிழ்வு தங்களை வந்தடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். .

Tuesday, December 13, 2011
திருமணம் செய்ய மணப்பெண் தேடும் படலம் !
பணம் ,சீர் கொடுத்தால்தான் பெண் எடுப்பேன் என்ற ஒரு காலம் இருந்தது
இப்பொழுது நிலைமை மாறி பெண் கிடைத்தால் போதும் என்று அலைகின்றார்கள். ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. விரைவில் திருமணம் செய்தாக வேண்டும்
என்றும், எவ்வளவு காலம்தான் எப்படித்தான் பொறுமையாக இருப்பது என்று ஆண்கள்
சொல்லும் காலம் வந்து விட்டது. பெண் தேடும் கல்யாண புரோக்கர்களுக்கு மதிப்பு வந்து
விட்டது. திருமணத்துக்குப் பெண் பார்ப்பது இன்டர்நெட் வரை
இதன் தொடர்பு வந்து விட்டது, பெண் கேட்க சென்றாலே 'பெண் படித்துக்
கொண்டிருக்கிறாள் அதனால் இப்பொழுது திருமணம் செய்ய நாட்டமில்லை' என்ற
பதில்தான்.
திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)
முன்பெல்லாம் பெண் பருவத்திற்கு வந்த உடனேயே திருமணம் செய்ய முயல்வர். பதினெட்டு வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். இப்பொழுது வயதை பற்றி கவலை கிடையாது. பெண் படித்தாக வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெண்ணின் பெற்றோர் திருமண மாப்பிளை முடிவு செய்வதற்கு பெண்ணின் ஒப்புதலை முதலிலேயே கேட்டு தெரிந்துக் கொள்கின்றனர்.
நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள். -
நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்

Saturday, October 29, 2011
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!
கல்யாணமென்றால் பயப்படும் ஆண்களே, இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!
ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம்
கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி
வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன
இருக்கிறது என்று பார்ப்போம்.
கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில்
முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல்
தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள்
விரக்தி அடைவார்கள்.
சுதந்திரம்:
திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும்
போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று
நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு
ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா
என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.
Subscribe to:
Posts (Atom)