Thursday, December 12, 2013

இதயம் இருந்தும் இல்லாமல் போனதோ !


இதயம் கனக்கிறது பொறாமையால்
இதயம் வலிக்கிறது ஆற்றாமையால்
இதயம் அழுகிறது வேதனையால்
இதயம் தொடர்கிறது உயிரோடு இருப்பதால்
இதயம் துர்நாற்றம் வீசுகிறது பொய்மை கலந்ததால்
இதயம் இருந்தும் இதயம் இல்லாமல் போனது
இதயத்தில் இறக்கம் இல்லாமையால்

இதயம் படபடத்தது பாவைகள் கடந்து சென்றமையால்
இதயம் துடித்தது நேசிப்பவள் விலகிச் சென்றமையால்
இதயம் குளிர்ந்தது இயல்பாய் ஒன்றியதால்
இதயம் நேசிக்கச் செய்தது நேசக் கரம் நீட்டியதால்

இதயம் மணம் வீசுகிறது வாய்மை சேர்ந்ததால்
இதயம் மகிழ்கிறது மற்றோரை மகிழ்விப்பதால்
இதயம் மேன்மையானது இறைவனை தொழுததால்
இதயம் கனிவானது இறைவன் அருள் கிட்டியமையால்
இதயம் கனமில்லாதானது கடுமை மனம் அற்றதால்
இதயம் லேசானது மனம் விட்டு பேசியதால்
இதயம் ஜொலிக்கிறது புன்னைகை பூத்ததால்
 இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழும் நாதம், இறக்கையில்லாமலும் உயர, உயர பறக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது.. தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
அல்லாமா இக்பால் (ரஹ்).

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...