கணினி நம்மை அடிமையாக்க முயலுகின்றது
மின்சாரமின்மை நம்மை பாதுகாக்கின்றது
கணினி கற்பிக்கின்றது மற்றும் மறந்ததை நினைவு படுத்துகின்றது
கணினி காப்பி அடித்து பேஸ்ட் செய்யவும் அறிய வைக்கின்றது
கணனிக்கும் வைரஸ் வருகின்றது
மனிதனுக்கும் வைரஸ் ஜுரம் வருகின்றது
கணினி வழியே பெண்ணையும் பார்க்கலாம்
கணினி வழியே காதல் கொண்டு திருமணமும் முடிக்கலாம்
கணினி கைக்கு அடக்கமாக வந்து விட்டது
கட்டியவள் மட்டும் கைக்கு அடங்கவில்லை
கணினியை கோகில் கண்காணிப்பதைப் போல்
கன்னியும் கணினியை வைத்து நம்மை கண்காணிக்கிறாள்
கன்னி கொடுத்தது காதலும் காமமும்
கணினியால் விட்டது பணமும் பார்வையும்
கணினிக்கு வன்பொருள்(Computer hardware)வேண்டும்
கன்னிக்கு மென்சொல் வேண்டும்
கணினியோடு கணக்கின்றி அமர கண்ணும் காலும் நோவுகிறது
கன்னியோடு கணக்கின்றி பேசி கண்ணும் வாயும் நோகவில்லை
கணினியை கற்பதும் கடினம்
கன்னியை அடைவதும் கடினம்
Monday, December 31, 2012
உன் கேள்விக்கு என்ன பதில்!
இறை நூல் கற்றேன் இறையருள் பெற
இறை நூல் கற்றதால் ஈன்றோர் மகிழ்ந்தனர்
இறை நூல் நெஞ்சத்தில் பதிந்தது
நெஞ்சத்தில் பதிந்த இறை நூல் வாழ்வில் வழி காட்ட
நெஞ்சத்தில் பதிந்தது நாளாக இருள் நெஞ்சில் மறைந்தது
காட்டிய வழி வாழாமல் தோன்றிய வழியில் தொடர்ந்தேன்
பொருள் நாடி வெளிநாடு சென்றேன்
குடும்பம் நாடி வீடு திரும்பினேன்
என்ன பொருள் பெட்டிக்குள் யெனப் பார்த்தனர்
இல்லாள் நகையை பெட்டிக்குள் தேடுகிறாள்
இல்லாததை இருக்குமென தேடுகிறாள்
இருந்த புன்னகையும் மறைந்தது
இருக்கும் போது பலர் பல கேள்வி கேட்டனர்
வேலை தேடினால் என்ன படிப்பு ?என்ன அனுபவம்?
கேள்வி மேல் கேள்வி அத்தனைக்கும் பதில் தெரிந்தது
கேள்வியும் பதிலும் வாழ்வானது!
இறப்பு எனைத் தழுவ இருந்தோர் கேட்டது பல!
இறந்தவன் என்ன விட்டுச் சென்றான்?
சேர்த்தது எத்தனையோ!
சேர்க்க வேண்டியதை சேர்க்கவில்லை
உன்னருள் நாடி நிற்கின்றேன்
உன் வலிமையறிந்து நடுங்குகின்றேன்
மறை கற்றேன் மறை வாழ்வு வாழவில்லை
இறை கேட்கும் கேள்விக்கு விடையில்லை
அத்தனை கேள்விக்கும் பதில் அறிந்திருந்த நான்
இந்த கேள்வி எப்படி வரும் என அறிந்தேனில்லை!
இறைவன் கேட்டது ஒரே கேள்வி!
இருந்தவரை உனக்காக எத்தனை நன்மைகள் அனுப்பி வைத்தாய்?
இறைவன் கேட்ட கேள்விக்கு பதிலில்லை!
இனியொரு வாழ்வுமில்லை.
இழந்தது இழந்ததுதான்.

Sunday, December 30, 2012
சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் இது சரியான பாதுகாப்பு என்பதை அறியலாம்.
சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் இது சரியான பாதுகாப்பு என்பதை அறியலாம்.
முஸ்லீம் ஃபேஷன்: 'யார் இந்த உடைகளை அணிய முடியாது'
இஸ்லாமிய உடைகளான 'துப்பட்டி' 'புர்கா' , , ‘ஹிஜாப்’,'அபயாஸ்' , 'ஜிப்பாஸ்', அணிவதில் என்ன அனுகூலக் குறைவு?
ஏன் முஸ்லீம் பெண்கள் தலை தாவணி அணிந்து கொண்டிருக்கிறார்கள் ?
‘ஹிஜாப்’ என்றால் மறைத்தல், தடுத்தல் என்று பொருள்படும்.
இஸ்லாமிய சரியத் படி,‘ஹிஜாப்’ அவர்களின் கண்ணியத்தை மற்றும் தன்மானத்தினை பாதுகாக்கும் மற்றும் அவர்களுக்கு மரியாதையும் மற்றவர்கள் மத்தியில் தருகின்றது இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரு ஆடை குறியீடு உள்ளது. எவரும் பாலியல் கவனத்தை ஈர்ப்பது போன்ற உடலின் வடிவம் கொடுக்கும் துணிகள் அணிய கூடாது. எனவே ஆடை உடல் நெருக்கமாக ஒட்டி இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் சிகை அலங்காரம் ஒரு முக்கிய பகுதியாகும் ஆனால் அது கவர்ச்சியை சேர்க்கக் கூடும்.
உறவினர் ஆண்கள் முன்னிலையில் பொருந்தக்கூடியவை. குடும்ப வட்டத்தில் உள்ள அவரது இரத்தத் தொடர்புடைய உறவினர்கள் முன்னிலையில் ஒரு பெண் தன் தலையை மூடி இல்லாமல் தோன்றுவது தவறில்லை.
மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)
முஸ்லீம் பெண்கள் அவர்கள் ஒரு பெண் வடிவம் (பொதுவாக பருவமடைந்த துவங்கின போது) உருவாக்க ஆரம்பிக்கும் போது மேலே இஸ்லாமிய ஆடை குறியீடு கடைபிடிக்கின்றன தொடங்கும்.
நிகாப் பற்றி என்ன?
முஸ்லீம் பெண்கள் ஆடை இரண்டு நிலைகள் உள்ளன; முதல் முகம் மற்றும் கைகளை தவிர, அனைத்து உடலை மூடிக்கொள்ளும் முறையைக் குறிக்கிறது இது ஹிஜாப் ஆகும்.
‘ஹிஜாப்’ என்றால் மறைத்தல், தடுத்தல் என்று பொருள்படும்.
இரண்டாம் நிலை கைகள் இல்லாமல் முகம் மற்றும் அனைத்து உடலையும் மூடிக்கொள்ளும் முறையைக் குறிக்கிறது. முகத்தை மறைப்பது இஸ்லாமிய மார்க்க கடமையல்ல
தலை தாவணியை அணிவது முஸ்லிம் சமுதாயத்தில் மட்டும் நடைபடுத்தப் படும் ஒரு செயலாக சிலர் கருதுகின்றனர். மாற்றாக பல சமுதாய மக்களாலும் நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து தொடர்ந்து வரும் பழக்கமே ஆகும்
தலை தாவணி அணிந்த வெற்றிகரமான முஸ்லீம் பெண்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறந்த உதாரணங்கள் உள்ளன.
தலை தாவணியை அணிவது இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டின் தயாரிப்பு ஆகுமா ?
நிச்சயமாக இல்லை. மூன்று படங்களை பாருங்கள்
முதலில் கன்னி மேரி , இரண்டாவது திரேச அம்மையார் ,மூன்றாவது முஸ்லீம் பெண். அவர்கள் மூன்று பேருக்கும் இடையே பொதுவான விஷயம் உள்ளதனைப் பார்க்கலாம்.
இது சுய மரியாதை, கௌரவம் மற்றும் பெண்களுக்கு மரியாதை தந்து மற்றும் அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பாலியல் அற்ற முன்னேற்றங்கள் காண வழிவகுக்கும் , இஸ்லாமிய நிலை ஒரு தற்காப்பு நடவடிக்கை அடையாளமாக உள்ளது.சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் இது சரியான பாதுகாப்பு என்பதை அறியலாம்.

புத்தாண்டு 2013 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது வைத்த நம்பிக்கை
Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]
இன்றையே தினமே நம்மிடம் இருப்பது போல் வாழ்வோம் . நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம். இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம் தொழ வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுவோம் , மனமார்ந்து அல்லாஹ்வை நினைவு கொள்வோம் . இந்த நாளில் நமக்கு கிடைத்ததில் மகிழ்வடைவோம். வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால் அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம் நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும். தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல் பெருமை கொண்ட மனதை இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும்
இன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும் மனநிறைவுடன் இருப்போம்.
ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)
பறவைகள் போல், நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம் இவைகளை தூக்கிச் செல்வதை தவிர்ப்போம்
வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும் ...
Saturday, December 29, 2012
எல்லா வகையிலும் என் மனதில் ஏற்றம் பெற்றாய்!
அண்ணனும் நீயே ஆசிரியரும் நீயே
அண்ணனாக வழிகாட்டினாய்
ஆசிரியராக கற்பித்துக் கொடுத்தாய்
தவறு செய்தால் தண்டித்தாய்
பிழை இருந்தால் திருத்தினாய்
அன்பை வளர்த்தாய்
ஆர்வத்தை தூண்டினாய்
நண்பனாக நான்கு இடமும் காட்டினாய்
முதல்வனாக இருந்து குடும்ப பாரத்தை சுமந்தாய்
இளவலான என்னை ஏவி துணையாக இருக்கச் சொன்னாய்
ஏவியதை இயன்றவரை செய்துத் தந்தேன்
எனக்கொரு இல்லாளை இருவரும் தேடித் தந்தீர்
எனக்கென்று வந்தவள் என் நெஞ்சோடு கலந்தவளை
உனக்கென்று உடையவளுக்கு அது உகந்ததாகவில்லை
நீங்கள் பார்த்து எனக்கு முடித்து வைத்தவள்
நீ முடித்தவளுக்கு பிடிக்காமல் போனது
நான் முடித்தவள் செய்த குற்றத்திற்கு என் குற்றமாகாது
குற்றத்திற்கு ஒரு குற்றம் பெருக வேண்டாம்

Friday, December 28, 2012
முதன் முதலாய் ....!
முதன் முதலாய் பார்த்தது என் தாயை ,
முதன் முதலாய் வந்த வார்த்தை அ'ம்மா'
முதன் முதலாய் என்னைச் சுற்றி நின்றது என் உறவுகள்!
முதன் முதலாய் பார்த்தும் அறியாமல் விழித்தது அவர்களை நோக்கி
முதன் முதலாய் எனக்கு நடந்த அறுவை சிகிச்சை தொப்புள் கொடி நீக்கம்
முதன் முதலாய் நான் அருந்தியது தாய்பால்
முதன் முதலாய் கிடைத்த ஊட்டச் சத்து தாய்பால்
முதன் முதலாய் தாய்பால் தந்தது பாசம்
முதன் முதலாய் நான் இழந்தது கருவறையின் வளர்ச்சி
முதன் முதலாய் நான் எழுப்பிய ஒலி உலகின் காற்றின் ஊடல் விளைவு
முதன் முதலாய் தவழ முனையும் போது என்னை இடித்தது தரை
முதன் முதலாய் நான் பிரமித்தது என் நிழலைக் கண்டு
முதன் முதலாய் நிமிர்ந்து நின்றது கண்ணாடியில் என் உருவத்தைக் கண்டு
முதன் முதலாய் தலையின் நெற்றியை வைத்தேன் ஊர எத்தனிக்க
("ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்")
அனைத்தும் என்னை விட்டு அகன்றாலும்
இறுதிவரை நெற்றியை தரையில் வைப்பது அகலாது
இது எனக்காக அல்ல அது இறைவனைத் தொழுவதற்காக

ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர் ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர் !
ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர்
ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர்
மானம் போக ஆணவம் அடங்கும்
இருந்த இடம் அறியாமல் இருளில் மூழ்குவர்
வேண்டாம் இந்த வீணான விளம்பரம்
வேண்டியவர் இருந்த இடம் விட்டு அகல்வர்
உம்மையே நீர் அறிந்தால்
உமக்கோர் உண்மை விளங்கும்
ஓரிடம் உண்மையின் உறைவிடம்
ஓதி உம்மை அறிய ஓரிடம்
உமை ஒளி பெறச் செய்யும் ஓரிடம்
உமக்குள் உள்ளதனை நீர் அறிவீர்
யென் நேரமும் இறைவனை நேசித்து
இயன்றதனை செவ்வனே செய்வீர்
துன்பம் வர துவளா நிலை வேண்டும்
இன்பம் வர குதியா நிலை வேண்டும்
இரு நிலையிலும் பொறுமை காண
இதயமெனும் இருட் கோட்டையை
இறைவனிடம் இதயத்தை ஒப்படைப்பின்
இதயத்தின் இருள் மறைய
இதயத்தில் ஒளி வீசும்
முகம்மதுவை முன்னிலைத் தலைவராய்
முன்னிறுத்தி முயற்சியை கையாள்வீர்
யென்னிலையிலும் இடர்களை தவிர்பீர்
அறிவின் ஒளி நிறைவு பெற நிறைவடைவீர்
"ரப்பி ஜித்னி இல்மா"( رَّبِّ زِدْنِي عِلْمًا என்ற துதி பாடி
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
யெனச் சொல்லச் சொல்ல கற்றது மனதில் பதியும்
பெற்ற அறிவு பொறுமையைத் தரும்
ஆணவம் அடங்கி மங்கிப் போகும்
இறைவனைத் தொழு
இருலோகப் பயனைப் பெரு
----------------------------------------------------------------------------------------------
குர்ஆன் 2:32. “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்;
குர்ஆன் 20:114 فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
குர்ஆன் 20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
Source : http://www.tamililquran.com/
Thursday, December 27, 2012
இஸ்லாமிய நம்பிகையுடைய முஸ்லீம் பெண் சொல்லிய விலைமதிப்பற்ற வார்த்தைகள்
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற "தவகள் கார்மன்," ( Nobel Peace Prize winner "Tawakkul Karman," )நோக்கி பத்திரிகையாளர்கள் ஹிஜாப் பற்றி கேட்கப்பட்டபோது, அவர் விடையிறுத்தார்:
"ஆரம்ப காலத்தில் இருந்து மனித சமுதாயம் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார்கள் , அவர்களது அறிவு வளர்ச்சி அவர்களை ஆடைகளை அணியத் தொடங்கினர் . இன்று நான் எவ்வாறு உள்ளேன் மற்றும் நான் என்ன அணிந்து இருக்கிறேன் அதுதான் நாகரீகத்தின் உச்ச கட்டமாக உள்ளது ,இந்த சிந்தனை மனித சமூகம் அடைந்தது .இது நாகரிகத்தின் மிக உயர்ந்த அளவில் உள்ள பிரதிநிதித்துவம், மற்றும் பிற்போக்குத்தனம் அல்ல. மீண்டும் உடைகளை அகற்றுதல் நம்மை மீண்டும் பண்டைய பின்னடைவுக்கு சேர்த்துவிடும் ''

மரபுநோய் தவிர்
பாவ புண்ணியங்கள் மட்டுமல்ல. நோய்களும் நம்மை தலைமுறை தலைமுறையாக துரத்துகின்றன. வரும் முன் காப்பது எப்படி?
அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்துவைத்து விட்டுப் போவது என்ன?
பரம்பரைச் சொத்து.
அது மட்டுமா? அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது. நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ஸபோன் வாசிப்பதாக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இவை மட்டுமின்றி அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும். நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?
கவலைப்படாதீர்கள். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒரு வழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது.

வாழ்கைக்கே தகுதியான புத்தி வேண்டும்.
கத்தியைக் கொண்டு காய்கறி வெட்டினாள் தாய்
கத்தியைக் கையாள புத்தி வேண்டும்
தாயின் செயலைக் கண்ட குழந்தை
தானும் அச் செயலைச் செய்ய
தனது விரலில் கத்தி கீற
தனது விரலில் குருதி கொட்ட
வலி தாளாமல் கதறியது
கதறல் ஒலி கேட்க
ஓடி வந்த தாய் பதறிப் போனாள்
புத்தியின்றி ஏன் எடுததாய் கத்தியை?
குழந்தைக்கு ஓங்கி ஒரு அடியும் கொடுத்தாள்
அடியின் வலி காயத்தின் வலியோடு சேர
குழந்தையின் கதறல் வேகமானது
கதறலை அடக்க மேலும் ஓர் அடி!
கத்தி யெடுத்து காய்கறி அறுக்க தெரிந்த புத்தி
புத்தியோடு பிள்ளையை வளர்க்கத் தெரியாமல் போனது
பாசம் புத்தியை கெடுத்தது.
கத்தியை யெடுக்க மட்டும் புத்தி தகுதியாகாது!

கர்வம் பிறந்தநாள்..!
முதன் முதலாய் கர்வம் என்மீது,
கண்ணாடிமுன் நிற்கின்றேன் கம்பீரமாய்!
இமயமாய் இன்னல்கள் என்னைச் சுற்றி
இருந்தும் அதன்மேல் சிகரமாய் நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இழப்புகளின் காயங்கள் என்னிடம் தோற்றுபோய்,
வலி நோக்கி நகைத்து நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
குற்றம் புரியா கொடுமை கண்டும்
மண்ணித்து மா மனிதனாய் நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இளையவர் கொள்ளும் கேளிக்கை வெறுத்து
இரும்பு மனம் கொண்டு நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இறைவன் இவன்தா னென்று அவனை
அவனருளால் குனிந்து தொழுது நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இன்று புதிதாய் பிறந்த வுணர்வு!
இதற்கு முன் இல்லை இதுபோல்
என்மீது கர்வம் எனக்கு..!
http://rafeeqspoem.blogspot.in/

Wednesday, December 26, 2012

Rafeeq ul Islam

மரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்
மரணத்துக்கு
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசி அவனுக்கு
ருசியில்லாப் பண்டம்
அவனை மரணம் மறுதலிக்கிறது
தெருத் தெருவாய் அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம் ஆனான்
உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாப் பறவை
ஆனான்
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசி அவனுக்கு
ருசியில்லாப் பண்டம்
அவனை மரணம் மறுதலிக்கிறது
தெருத் தெருவாய் அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம் ஆனான்
உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாப் பறவை
ஆனான்
அதிகமாக விரும்பினேன் குறைவான தேவைக்கு !
அதிகமாக விரும்பினேன் குறைவான தேவைக்கு
தேவையானது கிடைத்த பின் விரும்பியதை விரும்பவில்லை
அளவுக்கு மேல் நேசித்தேன் அடைவதற்கு
அடைத்தபின் நேசிப்பதை விரும்பவில்லை
நேசம் வந்தது விளையாட்டாக
நேசம் போனதும் விளையாட்டினால்
உள்ளே வரும் வழி தெரிந்தது
வெளியே போகும் வழி தெரியவில்லை
திருமணம் செய்ய திருமணமாகாதவர் ஆசைப்பட்டார்
திருமணமானவர் திருமணம் முறிக்க ஆசைப்பட்டார்
சந்தைக்கு சரக்கு நிறைய வந்தது விலை குறைந்தது
சந்தைக்கு சரக்கு வரவு குறைந்தது விலை ஏற்றமானது
மின்சாரம் அதிகமானது தொழிற்சாலைகள் வரவானது
மின்சாரம் குறைவானது தொழிற்சாலைகள் மூடப்பட்டன
மின்சாரம் அதிகமானது இனாம் மின்சாரம் வழக்கப்பட்டது
மின்சாரம் குறைவானது இனாம் மின்சாரம் நிறுத்தப்பட்டது

விமான பயணமும் விபரீதமும் :: குறுந்தொடர்- 1
சிறுவயதில் ஊருக்கு மேலே எப்போதாவது வானத்தில் பறக்கும் விமானத்தை ஆசை ஆசையாய் அண்ணார்ந்து பார்த்து ஆச்சர்யப்படும் சின்ன புள்ளையளுவளா இருந்த நாம் இன்றைக்கு பல விமானங்களில் பயணம் செய்து அதில் பல பயண கட்டுரையையும் அதிரை நிருபரில் எழுதி நம் பயண அனுபவங்களை பகிர்ந்து வருகின்றோம். ஆனால், அந்த விமான பயணங்களின் பரவச சுதியில் பல விபரிதங்கள் இருப்பதை நாம் அறிந்ததில்லை. இங்கே அதைப்பற்றி கொஞ்சம் விலா வாரியா பார்ப்போம்.
காற்றின் செயல்பாடு விமானம் பறக்க எப்படி உதவும் என்பதை முதலில் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் ஓடுதளத்தில் ஓடும்போதுகாற்று விமானத்தின் இறக்கையின் மீது மோத வேண்டும், அப்படி மோதும் போதுஇறக்கையின் மேல், கீழ் என இரண்டாக காற்று கிழித்துக் கொண்டு பிரியும், (நம்ம MSM-நெய்னா சொன்ன காற்றுபிரிவு அல்ல) இறக்கை வடிவமைப்பின் காரணமாக மேல் செல்லும் காற்று வேகமாக செல்லும். எனவே, அழுத்தம் குறையும் கீழ் செல்லும் காற்று மெதுவாக செல்லும் அதன் அழுத்தம் அதிகம் இருக்கும். இதுவே மேல் நோக்கி விமானத்தை கிளப்புகிறது.

விரோதிகளை நான் வீழ்த்துவதில்லை !
விரோதிகளை நான் வீழ்த்துவதில்லை!
விரோதிகளை நான் என் வலையில் விழவைக்கிறேன்.
போர் தொடுத்தேன் அவனை வீழ்த்த
இதயப் போர் இருந்து கொண்டே இருக்க
போர் தொடரும் போரானது
போரின் வெற்றி இருவருக்குமானது
போரில் அவனை வீழ்த்தினால்
வெற்றி என்னை தனிமைப் படுத்தி வீழ்த்தி இருக்கும்
தனிமையை விரும்ப நான் வேதாந்தியல்ல
தனிமையில் உலவும் மிருகமுமல்ல
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமூகமாட்டான்
தனிமையில் இருப்பவன் மனச் சிறையில் விடப்பட்டான்
தனித்து பசித்து விழித்து இருந்தாலும் வீழ்வது உறுதி
வீழ்ந்த உடலை அகற்ற சமூகம் வருவதும் உறுதி
நானே சமூகத்தை உருவாக்குகின்றேன் எனக்காக
வாழ்க்கைத் துணை தேடி வாரிசு வளரட்டும்
வாழ்க்கையில் தனிமை வாழ்க்கை வேண்டாம்

ஆணும் பெண்ணும் கலந்த கலவை குழந்தை!
பெண்ணின்றி ஆண் ஏது ?
ஆணும் பெண்ணும் கலந்த கலவை குழ்ந்தை!
நாணயமின்றி நம்பிக்கை ஏது ?
நாணயமும் நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கம்
நன்னம்பிக்கை நாணயத்தினரோடு
நம்பிக்கையற்ற தன்மை நாணயமற்றோடு
உண்மை ஒன்றிருக்க பொய் ஒன்றிருக்கத்தானே செய்யும்
கவிதை ஒன்றிருக்க பொய்யும் மெய்யும் கலக்கத்தானே செய்யும்
தவறு ஒன்றிருக்க தண்டனை கிடைக்கத்தானே செய்யும்
தண்டனை குறைவாக இருக்க குற்றம் பெருகத்தானே செய்யும்
Tuesday, December 25, 2012
இஸ்லாம் என்ன போதிக்கின்றது?(காணொளியில் ஆங்கிலத்தில் காண்க)
இறைவனை புகழும் நேரத்தில்
இதயத்தில் ஒளி பிரகாசிக்கின்றது
மனம் மகிழ்வால் பொங்குகின்றது
விழிகளில் கண்ணீர் வடிகின்றது
இறைவனது அருளை நாடி நிற்கின்றது
இறைவன் அருள் அளவில் அடங்காது நிற்கின்றது
இறைவனை நினைத்து வேண்டிய கை நிறைகின்றது
இறைவனை நினைத்து வேண்டி மனதோடு உடல் தொழுகின்றது
இறைவனை இறைஞ்சுவனின் நெஞ்சம் நிறைகின்றது
இறைஞ்ச வேண்டிய இறைவன் நீயன்றி வேறு இறைவனில்லையே
இறைவனின் இறுதி இறைத் தூதர் முகம்மது நபியே(ஸ .அ)
இஸ்லாத்தின் அடிபடைக் கொள்கை இதுதானே! Quran 13:11 says: Verily, God does not change men's condition unless they change their inner selves...
....எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.- Quran 13:11

Saturday, December 22, 2012
படத்தில் பதிந்த வரிகள் மனதில்!
ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)- குர்ஆன்
மக்கீ, வசனங்கள்: 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً

Friday, December 21, 2012
நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
-திருக்குர்ஆன் 3:104
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
-திருக்குர்ஆன் 13:11
"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்."
திருக்குர்ஆன் 17:36
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்
"உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்,) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் நிராகரிப்போர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை".
-திருக்குர்ஆன் 13:14
ரெடிமேட் பதில்
காலம் அவசரமானது . முன்போல் தையல்காரரிடம் துணி கொடுத்து தைப்பதில்லை. எல்லாம் ரெடிமேட் கடைக்கு போகின்றோம். அவசர உணவு 'பாஸ்ட் புட்' பிளாஸ்டிக் பாட்டலில் அடைக்கப்பட்ட காசு கொடுத்து குடிக்க தண்ணீர். இன்னும் எவ்வளவோ!
இன்னும் சில கேள்விக்கு பதில் தேவைப்படலாம் . அதற்கு இது உதவும்.
அப்பா கேட்டால்
ஏன்டா தேர்வுலே மார்க் குறைஞ்சிடுச்சி
வாத்தியார் சரியா பாடம் கொடுக்குலே
பள்ளிக்கூடம் சீருடை போடாமல் போனால்
ஆசிரியை கேட்டால்
நேத்து போன கரண்ட் இன்னும் வரலே சீருடையை அம்மா துவைக்கிலே
காலையிலேயும் கரண்ட் வரலே வேன் வந்திடுச்சி அதனாலே டாய்லேட்
கூட பள்ளிக்கூடத்திலே போகிக்கிலாமென்று வந்துட்டேன் மேடம்

பயண அனுபவங்கள் – ( சீனா பகுதி 11)
தொழுகைக்கான நேரம் வருவதை அறிந்து கொண்ட நான் எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தேன். இஸ்லாமியர்களுக்கென தனியாக அவர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கூடம்மொன்று அங்கே காணப்படும். வணிகச்சந்தையில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலான இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் இங்கு நடைபெறுகிற தொழுகையில் பங்குபெற்று தங்களின் கடமையை சிறப்புடன் நிறைவேற்றிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்தன.
அங்கே எனது கடமையும் நிறைவேற்றிக்கொண்டு அங்கிருந்து பகல் உணவருந்துவதற்காக எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக உணவகம் நோக்கி நகர்ந்தோம்.
வணிகச்சந்தையில் துரித உணவகம் மற்றும் சுயமாக தேர்ந்தெடுத்து சாப்பிடும் பல வகை உணவுகள் [ Buffet ] அடங்கிய இஸ்லாமிய உணவு விடுதி என இருந்தாலும் அதிகமானோர் துரித உணவகத்திற்கு விரும்பி செல்கின்றனர்.
பலவகை உணவுகள் [ Buffet ] அடங்கிய உணவு விடுதியைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் உணவுகளைப் பிரித்து இருவேறு விலைகளை என நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இங்கும் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

Thursday, December 20, 2012
உயிராகிறேன்
உன் கண்ணீரை
என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன்
உன் கனவுகள்
நிறைவேறும் வழி சொல்கிறேன்
உன் துயரங்கள்
கரைந்துபோகும் உறவுதருகிறேன்
உன் இதயத்தில்
இருந்துகொண்டு நீயாகிறேன்
உன் தோல்விகளைச்
சுமக்கின்ற தோளாகிறேன்
உன் வெற்றிகளைக்
கொண்டாடும் பூக்களாகிறேன்
உன் குழந்தை மனச்
செயல்களை ரசித்துக்கொள்கிறேன்
உன் திறமை தேடிப்
பாராட்டி உன் வானமாகிறேன்
உன் உணர்வோடு
உணர்வாகும் நிலையாகிறேன்
உன் உயிரோடு
உயிர் கோக்கும் உயிராகிறேன்
Source : http://anbudanbuhari.blogspot.in/

மோடி குஜராத் வெற்றி
மோடி குஜராத் வெற்றி மோடி குஜராதிகளின் வெற்றி இன ஒற்றுமைக்கு விழுந்த அடி
அங்கு வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மற்றும் அங்கு வந்து குடி வந்தவர்களுக்கும் பயம் .
ஏன் இந்த வம்பு பேசாமல் சண்டைக்காரனுடன் சமாதானம் ஆகி விடுவோம் என்ற தாழ்வு மனப்பான்மை.
உலகில் வாழும் குஜராதிகள் மறைமுக ஆதரவு.
காங்கிரஸ் வந்தால் திரும்பவும் ஓர் ஆபத்து வரலாம் என்ற தவறான கொள்கை .
அப்படியே காங்கிரஸ் வந்தாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை ,
காங்கிரஸ் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் தலைமை இல்லா குஜராத்தாகி விடும்.
ஆனால் ஒரு காலமும் மோடி பிரதமராக முடியாது. பேசாமல் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட விடுங்கள் .பெரிய விளம்பரம் கொடுத்து மற்றவர்களும் அவர் காலில் விழும் நிலையை உருவாக்காதீர்கள்
-முகம்மது அலி
---------------------------------------
"சிலரை என்னால் மன்னிக்கவும் மறக்கவும் முடியாது...ஆஸிட் ஊற்றியதை காதலென்று சொல்பவனை, பேருந்தில் பலாத்காரம் செய்பவனை..திட்டமிட்டு ஒரு சமூகத்தை அழிக்க நினைப்பவனை.
மோடி எனக்கு ஒவ்வாதவன். ...இன்று நான் கண்டிப்பவன். நீ கண்டிச்சு என்ன ம-ராகும் என்றால் ஒன்ரும் இல்லைதான், என் கண்டனம் நாளைய தலைமுறையில் ஒருவருக்காவது உரைக்கும் என்றே எழுதுகிறேன். இது விஷ விதை. வளர்ந்த பின் பார்க்கலாம் என்றால் வயலே இருக்காது"
-Dr.Rk Rudhran

Rk Rudhran

Wednesday, December 19, 2012
கண்ணாடிப் பேழையில் கடுஞ் சிறை
உலவி வர சிறிய இடம்
உலவும் போது இடிப்பதில்லை
உன்னைக் கண்டு நான் மகிழ
உணவைத் தேடி நீ அலைய
உயிர் வாழ உணவு கொடுப்பேன்
உயிர் வாழ நீர் மாற்றம் செய்வேன்
நிறம் நிறமாய் வாரிசு கொடுத்தாய்
வாரிசு உன்னை வளம் வரும்
வேதனை அறியா உள்ளம் பெற்றாய்
பெற்றது அறியா உள்ளம் கொண்டது
நான் என் மகிழ்வை அடைய
நான் கண்ணாடிப் பேழையில் விட்டு வைத்தேன்
நான் அறியேன் அதுவே உனக்கு கடுஞ்சிறையென
உன் உயிரில் நான் விளையாட
என் உயிரில் விளையாட யார் வருவாரோ!
உலவும் போது இடிப்பதில்லை
உன்னைக் கண்டு நான் மகிழ
உணவைத் தேடி நீ அலைய
உயிர் வாழ உணவு கொடுப்பேன்
உயிர் வாழ நீர் மாற்றம் செய்வேன்
நிறம் நிறமாய் வாரிசு கொடுத்தாய்
வாரிசு உன்னை வளம் வரும்
வேதனை அறியா உள்ளம் பெற்றாய்
பெற்றது அறியா உள்ளம் கொண்டது
நான் என் மகிழ்வை அடைய
நான் கண்ணாடிப் பேழையில் விட்டு வைத்தேன்
நான் அறியேன் அதுவே உனக்கு கடுஞ்சிறையென
உன் உயிரில் நான் விளையாட
என் உயிரில் விளையாட யார் வருவாரோ!
Tuesday, December 18, 2012
IOF : பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !
Internet-of-Things“இன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !
இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.
பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.

Monday, December 17, 2012
நண்பன் ,வேதாந்தி ,வழிகாட்டி!
பையனைக் கூப்பிடு
தம்பி உன்னை அப்பா கூப்பிடுராங்கப்பா
ஏன்ப்பா!
எங்கப்பா போறே சூப்பரா ட்ரஸ் பண்ணிட்டு ?
ஒரு வேலையா போறேன்பா.
அதான் கேட்கிறேன்! அப்படி என்ன வேலை சொல்லேன்?
உங்களுக்கு சொன்னாலும் புரியாதப்பா !
அப்படில்லாம் சொல்லக் கூடாது. அப்பா உனக்கு ஒரு நண்பன் ,வேதாந்தி, வழிகாட்டி மாதிரி
அதான் நீங்க சின்ன வயசிலேந்து சொல்லி எனக்கு நெட்டுரு ஆயிடுச்சே
அப்ப சொல்லேன் இப்ப..?
எதை நெட்டுரு பண்ணுனதையா!
இல்லப்பா நீ எங்கே போறேன்கிறதை சொல்லு.
அது உங்களுக்கு தேவை இல்லைப்பா.
சரிப்பா நீ போ உனக்கு நேரமாச்சு.
பையன் முனங்கிக் கொண்டே 'வழிகாட்டி தான் ரோட்டிலேயே இருக்கே. அதோட இவரையும் கொண்டு நிறுத்திட வேண்டியதுதான் . நண்பனாம் இவர் வயசுக்கு நான் நண்பனாம். நான் போற இடத்துக்கு இவர் வர முடியுமா. வேதாந்தியாம் அது சரி அவர் அப்படியே இருந்துட்டு போகட்டும் .என்னை வேரே இவர் ஏன் வேதாந்தியாகச் சொல்றாரு'
இவ்வாறு சொல்லிக் கொண்டே மகன் தனது நண்பனைப் பார்க்க துரிதமாக ஓடுகின்றான்.
'நட்புடன் நல்வழி காட்டினேன்
வேதத்தை படிப்பித்து வளர்த்தேன்
வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினேன்
கூ டாத நட்பு வழி மாற்றி விட்டது
பாசத்தோடு வளர்த்தவன் விலகி நிற்க
யாரிடம் சொல்லி மனதை ஆற்றுவேன்' - அப்பாவின் முனங்கள்
Sunday, December 16, 2012
நானும் ஆஃப்ரிக்காவும்...!
குறுந்தொடர் : 1
ஆஃப்ரிக்கா என்றதும் பலரின் நினைவிற்கு வருவது, வறுமை, ஏழ்மை, யானை, எய்ட்ஸ், கருப்பு கலர், கரடு முரடான தோற்றமுள்ள மக்கள், இயற்கை வளங்கள் மேலாக, முஸ்லிம்களுக்கு பிலால்(ரலி) அவர்கள், ஆம் ஆஃப்ரிக்காவின் அவல நிலையைச் சொல்லி மாளாது.
அந்த கண்டத்தின் வளங்களைக் கொள்ளையடித்து தம் மக்களையும், நாடுகளையும் ஜொலிக்க வைக்கும் அருவருப்பு குணம் படைத்த மேலைநாடுகள், அவர்கள் பயன்படுத்தியது போக மிச்சமிருக்கும் எச்சங்களையும், தொழிற்நுட்ப, அணுக்கழிவுகளையும் இன்னபிற இழிவுகளையும் கண்டெய்னர் கண்டெய்னராக ஏற்றி அவர்களுக்கு விலையின்றித் தருவதாகக் கூறி அவர்களை மெதுவாகக் கொல்கின்றன.
காலனி ஆதிக்கங்கள் முடிவுக்கு வந்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளை விதித்து இன்னும் நவீன அடிமைத்தனம் ஒழியவில்லை என்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான்.

வேலை செய்தால் என்ன கிடைக்கும் ?
"உலகம் மண்தான். ஆனால், அது உழைப்பவருக்கு வயல். உழைக்க மறுப்பவருக்குக் சுடுகாடு. பாடுபடுபவருக்குக் கருவறை. படுக்க நினைப்பவருக்குக் கல்லறை!"
வயல் வாங்கி விவசாயம் செய்தேன் ஆற்றில் நீர் வராமல் வயலுக்கு நீர் கிடைக்காமல் செடிகள் வாடின. செடிகள் வாட நான் வாடினேன்.'உழைப்பால் உயரலாம்' என்ற வாக்கு என்னை வயலில் உழைக்க வைத்தது. போட்ட பணம், உழைத்த உழைப்பு அத்தனையும் வீணானது . வாங்கிய கடன் அரசுக்கும் பாக்கி பத்து வட்டிக்கு கொடுத்த மற்றவருக்கும் பாக்கி . கடன் கொடுத்தவர் தொல்லை தாங்க முடியவில்லை 'சோடா விற்றவனுக்கு மூடி மிச்சம்' விவசாயம் செய்தவனுக்கு வரப்பு மிச்சம்.
கல்லணை நிற்கிறது கரிகாலனும் நிற்கிறான் என்னால் நிற்க முடியவில்லை. படுத்தால் படுத்த இடத்திலேயே கல்லறை கட்டி சமாதியாக்கி 'பூ' போடுவார்கள். கொடுத்த கடனை தள்ளுபடி செய்ய யாரும் வரமாட்டார்கள். உலகம் மண்தான் என் தலையில் இருப்பதும் மண்தானோ! அரசு கொடுக்கும் இனாமை வாங்கி ஒரு வேலையும் செய்யாமல் உண்டு படுத்து தூங்கி இருக்கலாம்.

உள்ளத்தில் உருக்கொள்ளும் ஒப்பாரி தந்ததெது?
எப்போதாவது ஒரு சித்தன் வருவான் எனக்குள். பித்தாக்கித்தான் போடுவான் அவன் என்னை நட்ட நடு வீதியில். மத்தளப் பிறப்பெடுப்பெதற்கு? மகராசன் அடித்து நொறுக்கத்தானே? ம்ம்ம்.... நடக்கட்டும்!
எல்லாமும் ஆனதுபோல்
இம்மண்ணில் பூத்த பின்னர்
முள்ளில் கால் நோகுதென்றே
முனகித்தான் பயனேது
சொல்லில் தினம் புண்ணாகிச்
சுரக்கும் விழி ஏனெதற்கு
உள்ளத்தில் உருக்கொள்ளும்
ஒப்பாரி தந்ததெது
ஒன்றுபோல வயிறுமனசு
உடலென்ற பெருந்தொடரோ
என்றென்றும் இயம்புகின்ற
ஒற்றைச்சொல் பசியன்றோ
வன்மையாக வாட்டுமிந்த
வளர்பசிக்கு நசிந்துபோக
மண்ணில் நீ மலர்ந்ததென்ன
எவரிடத்தோ யாசித்தா
கல்தாண்டி கடல்தாண்டி
காற்றெனவே பறந்தாலும்
எல்லைக்கு அப்பாலும்
இருளன்றி வேறேது
இல்லையொளி எங்குமென
எண்ணிமட்டும் ஓயாதே
உள்ளத்தில் தேடிப்பார்
உள்ளேதான் ஒளியுண்டு
பெண்ணுக்குள் உதயமாகும்
பிறப்புக்கள் விபத்துக்கள்
மண்ணுக்குள் அமைதிதரும்
மரணங்கள் பாக்கியங்கள்
எல்லாமும் ஆனதுபோல்
இம்மண்ணில் பூத்த பின்னர்
முள்ளில் கால் நோகுதென்றே
முனகித்தான் பயனேது
சொல்லில் தினம் புண்ணாகிச்
சுரக்கும் விழி ஏனெதற்கு
உள்ளத்தில் உருக்கொள்ளும்
ஒப்பாரி தந்ததெது
ஒன்றுபோல வயிறுமனசு
உடலென்ற பெருந்தொடரோ
என்றென்றும் இயம்புகின்ற
ஒற்றைச்சொல் பசியன்றோ
வன்மையாக வாட்டுமிந்த
வளர்பசிக்கு நசிந்துபோக
மண்ணில் நீ மலர்ந்ததென்ன
எவரிடத்தோ யாசித்தா
கல்தாண்டி கடல்தாண்டி
காற்றெனவே பறந்தாலும்
எல்லைக்கு அப்பாலும்
இருளன்றி வேறேது
இல்லையொளி எங்குமென
எண்ணிமட்டும் ஓயாதே
உள்ளத்தில் தேடிப்பார்
உள்ளேதான் ஒளியுண்டு
பெண்ணுக்குள் உதயமாகும்
பிறப்புக்கள் விபத்துக்கள்
மண்ணுக்குள் அமைதிதரும்
மரணங்கள் பாக்கியங்கள்
கற்பனையில் காலம் போய் விடும்
சமூகச் சீர்திருத்தத்தை செய்
கடமை காத்திருக்க நழுவுவதேன்
பணி செய்வதே நம் கடமை
செயலின் எல்லையை விரிவாக்கிக் கொள்
சேவையின் சொல்லை நயமாக்கிக் கொள்
நோக்கம் நன்மையாகி சேவை விரியட்டும்
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமூகமாக முடியாது
நாம் நிம்மதியடைய சமூகம் வேண்டும்
சமூகத்தின் நிம்மதியில் நமக்கும் பங்குண்டு
சமூகம் நமக்கு என்ன செய்தது என நினையாமல்
சமூகத்திர்க்கு நாம் அளித்த பங்கென்ன நினைத்தல் உயர்வு
சமூகத்தில் நம் சேவையும் தேவை
சிறு துளி பெரு வெள்ளமாகும்
நாமும் அதில் ஒரு துளி
தடுக்கி விடும் கல்லை ஓரத்தில் நகர்த்துவதும்
தடுக்கி விடும் கல்லை போடவருபவரை நிறுத்துவதும்
தர்மச் சேவையில் அடங்கும்
ஆரம்பம் நம்மிடத்தில் தொடரட்டும்
மேன்மை பெரிதாக பரவட்டும்
சொலவதை சொல்
செய்வதை சொல்
சொல்வதும் செய்வதும் நன்மை பயக்கட்டும்
ஆலோசனை அறிவாக இருக்கட்டும்
அறிவு உயர்வாக இருக்கட்டும்
மனதே சொல்லும் மேன்மையை
மனது மேன்மையடைய மார்க்கத்தை நாடு
பானையில் உள்ளதே அகப்பையில் வரும்
அறிவில் உள்ளதே வெளியில் வரும்
அறிவைப் பெருக்க அறிஞர்களை நாடு
நாடியவர்களிடம் நன்மையைப் பெறுவாய்
சிந்தி ஆழமாக சிந்தி
சிந்தித்ததை சிதறவிடாதே
சிந்தித்ததை கோர்வையாக்கி மாலையாக்கு
மாலையைப் பெற்றவர் மகிழ்வடைவர்
கற்பனையில் காலம் போய் விடும்
செயலில் காலம் சிறந்துவிடும்
மேம்படுத்தும் செயல் மேன்மை பெற்று விடும்
பொல்லாங்குப் பிரச்னை தூளாகி விடும்
உனக்குள் ஒரு ஒளி ஒலிந்திருக்கிறது
ஒலிந்ததை வெளிக் கொணர்ந்து ஒளிமயமாக்கி விடு
ஒளி உனக்கும் மற்றவருக்கும் வழி காட்டும்
Saturday, December 15, 2012
மனித நேயமும் மத நல்லிணக்கமும்
ஒவ்வொரு சமூகத்திற்கும் சில தனித்துவங்கள் உண்டு. இத்தனித்துவத்தில் அடிப்படையில் தான் ஒவ்வொரு சமூகத்திற்கும் பெயரிடப்படுகின்றது. இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமான இதர கொள்கைகளை கடைப்பிடிப்போர் அனைவரும் பிற சமூகத்தினர் என நாம் கணிக்கின்றோம். உலக மனிதர்கள் இவ்வாறு இரு சமூகங்களாக பிரிக்கப்பட்டாலும் எல்லோரும் அல்லாஹ்வின் சிருஷ்டிகளாகும்.
நாம் அனைவரும் பகுத்தறிவுடைய மனிதர் என்ற வகையில் பிறமனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் முஸ்லீம்கள் என்ற வகையில் பிற சமயத்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் வைக்க வேண்டிய தொடர்புகள் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
பெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அனுமதிப்போமா?
“… … அண்மையில் கோப்பன்ஹேகில் உலகப் பெண்கள் பிரச்சினை குறித்த ஒரு கருத்தரங்கம் நடந்தது. பெண்ணினத்திற்கு சமத்துவம் வேண்டும்; பெண்கள் முன்னேற வேண்டும் என்றெல்லாம் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தாய்குலத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்கப்பட்டுவிட்டன. ஆகவே, இஸ்லாமிய சமுதாயத்தில் பிரச்சனைக்கே இடமில்லை. காலப்போக்கில் நாம் மாற்றான் கலாசாரத்திற்கு அடிமையாகி, அலைக்கழிந்துவிட்டோம். நம்மை நாமே சீரழிவைத் தேடிக்கொண்டோம். அரபு நாடுகளிலே பெண்களுக்கு மஹர் கட்டியே திருமணம் நடைபெறுகிறது. அங்கு ஆண் ஏழையாகிவிடுகிறான் - பெண் பணக்காரியாகிறாள்! இந்த விழாவில் கலந்து கொள்ள பயந்து கொண்டு கோழைகள் பலர் வரவில்லை. மஹர் தான் நம் சட்டம். ஹிந்துக்களிடையேதான் இந்த வரதட்சனைப்பழக்கம்! பெண்களுக்கு அங்கே சொத்துரிமை இல்லாததால், பெண்ணுக்கு சீராக ஹிந்துத் தந்தை மகளுக்குக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருக்கிறது. ஆகவே வரதட்சணைத் தேவையில்லை.

Friday, December 14, 2012
இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்
துன்பம் தாக்க துவள்வதும்
மகிழ்ச்சி வர துள்ளுவதும்
இறை நேசர்களின் இயல்பாகாது
இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்
இறைவன் மீது வைத்திருக்கு நேசம் நிபந்தனையற்றது
அர்ப்பணிப்பே நிபந்தனையற்ற விசுவாசமாகும்
ஏற்றத்தாழ்வு நிலை, சூழ்நிலை இவைகளை வைத்து நம்பிக்கை கொள்வதல்ல மார்க்கம்
ஆர்வம், உற்சாகம்,உறுதி மற்றும் நம்பிக்கை இதன் அடிப்படையில் தொடர்வதுதான் மார்க்கம்
துன்பங்களினால் வரும் துயரங்கள் நம் மன உறுதியை மாற்ற முடியாத நிலையை தருவதே மார்க்கத்தை பின்பற்றியோர் வழி
துன்பம் வந்தால் விதியென்றும் வெற்றி தரும் செய்திகள் கிடைக்க தம் திறமையால் வந்தது என்றும் சொல்வார்கள்
துன்பம் வரும்போது இறைவனை நாடுவதும் மகிழ்வான நிகழ்வுகள் கிட்ட இறைவனை மறப்பதும் மார்க்கத்தின் மீது, இறைவன் மேல் நம்பிக்கை கொண்டோர் செயலாகாது
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். - குர் ஆன் 2:156.

Thursday, December 13, 2012
ஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை
வந்தார் வேண்டாத வேலை செய்வார்
வேண்டியதையும் விரும்பித் தருவார்
வேண்டாததையும் வெதும்பத் தருவார்
அள்ளித் தருவது அளவோடு இருக்கும்
அள்ளிப் போவது அதிகமாக இருக்கும்
எம்மிடத்தில் எப்போதும் இரு
இருக்கும்வரை தொல்லை தராமல் இரு
இத்தனை நாட்கள் என்னோடு இருந்தாயே
இன்னுமா என் இதயத்தில் இடம் பிடிக்காமல் இருந்தாய்
நீ விரும்பியதை நான் அறிந்திருக்க
நான் விரும்பியதை நீ அறியாமல் போனதேன்
உனக்கொரு கொள்கை எனக்கொரு கொள்கை
ஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை
கொள்கையின் அடிப்படையில் நாம் சேரவில்லை
தேவையின் அடிப்படையில் நாம் சேர்ந்தோம்
உன் கொள்கை உன்னோடு
என் கொள்கை என்னோடு
இக் கொள்கை நம்மை இணைத்தது
ஒற்றுமையாய் இருக்க அவரவர் கொள்கையை மதித்தல் வேண்டும்
வேற்றுமை விரும்பின் விட்டுக் கொடுக்கும் மாண்பு மறைந்து விடும்
நெருப்போடு நீர் சேர்ந்தால் நெருப்புதான் அனையும்
என்னோடு நீ மோதினால் நீ அழிவாய்
நான் நீர், நீ நெருப்பு
நெருப்பின்றி வாழலாம் நீரின்றி வாழ முடியுமோ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”- குர் ஆன்: 109:6.
பூக்காரி பூ சுமந்த கூடையில் மணமிருக்கும்
யாப்பிலக்கணம் அறியேன்
எழுத்துப்பிழை அறியேன்
நினைத்ததை எழுதுவேன்
எழுதியதை கிழிக்க முயல்வேன்
கிழிக்காமல் கொட்ட இடம் தேடுவேன்
பூக்காரி பூ சுமந்த கூடையில் மணமிருக்கும்
பூக்கட்டிய நாரிலும் மணமிருக்கும்
புகாரியோடு நட்பைக் கொண்டால் கவிதை வரும்
வந்த கவிதை பிழையோடு வரலாம்
ஆசிரியர் உடனில்லை அதை திருத்த
அதற்காக நினைத்ததை நிறுத்த மனமில்லை
நினைத்ததை நிருத்தாமல் முடித்து விட்டேன்
எழுதியது கவிதையுமல்ல கதையுமல்ல
இருப்பினும் மனதில் மகிழ்வோ ஏராளம்!
தவறு அறிய முடிந்தாலும்
தவறிய இடம் தெரியவில்லை
எழுதியதை கிழிக்க முயல்வேன்
கிழிக்காமல் கொட்ட இடம் தேடுவேன்
தேடிய இடம் கிடைத்தது
பலர் குப்பையை கொட்டுமிடம்
பலரும் அறிந்த இடமாம்
பெயரும் உண்டாம் அதற்கு
பொருள் அறியாமல் தமிழில் சொல்ல முடியும்
ஃபேஸ்புக்காம் அந்த குப்பைத் தொட்டிப் பெயர்
உணர்ச்சி கொப்பளிக்கின்றது
உண்மை நாணய மற்றோரால் மறைக்கப் படுகின்றது
நீரினுள் ஒளியாது காற்று
உண்மை அறிவிக்க துடிக்கும் உள்ளம்
உயர்ந்தோர் உள்ளவரை உண்மை உலகில் அறியப்படும்
மனமே உன் கடமை செய்
நாடியோர் மனதில் நிறுத்தி வை
செய்வதை செய்த பின் விளைவுகளை சிந்திக்காதே
இறைவன் இருக்க முடிவை அவனிடத்தில் விட்டு விடு
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உவகை அடைய
உண்மை பேசுவோர் மனம் உடைந்து போக
சேவையாற்றும் மனதோடு திறவுகோல் உன்னிடம்
ஆற்றல் கொடுக்கும் அருள் இறைவனிடம்
தொடர் தொய்வில்லாமல் தொடர் உன் சேவையை
வேடத்தை கையில் எடுத்தோர் வீழ்வர்
வேதத்தை மனதில் பதித்தோர் மாட்சி பெறுவர்

Wednesday, December 12, 2012
தேடிச்சென்று எடுத்தேன் உங்களுக்காக.
என் பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது, தேடிச்சென்று எடுத்தேன்
உங்களுக்காக. சந்த வசந்தத்தில் ஆளுக்கு ஒரு நம்பர் கொடுத்து எழுதச்
சொன்னார்கள். எனக்கு வந்தது அஞ்சு
அன்புடன் புகாரி
அஞ்சோன் அஞ்சு (மார்ச் 2002)
அஞ்சாத சிங்கம்போல்
அஞ்சுபத்திப் பாடவந்தேன்
அய்யாவும் அம்மாவும்
அக்கறையாக் கேப்பியலா
கொஞ்சம் அக்கறையாக் கேப்பியலா
நஞ்சோடு நாகந்தான்
அஞ்சுதலை விரிச்சாக்கா
நடுநடுங்கிப் போவியலா
குலைநடுங்கி சாவியலா
சும்மா குலைநடுங்கி சாவியலா
பஞ்சநதிப் பாஞ்சோடும்
பஞ்சாப்ப பாத்தியலா
பஞ்சாப்பு வரப்புக்கும்
பக்கத்துல நிப்பியலா
அய்யா பக்கத்துல நிப்பியலா
அஞ்சுவிரல் இல்லாம
கையுமொரு கைதானா
அஞ்சுபுலன் இல்லாம
உசுருமொரு உசுர்தானா
அய்யா உசுருமொரு உசுர்தானா
சொகமுன்னா என்னான்னு
அளந்துத்தான் பாத்தியலா
சொர்க்கத்தை அளப்பதுக்கும்
அஞ்சேதான் வேணுமுங்க
அய்யா அஞ்சேதான் வேணுமுங்க
மகராசந் தங்கிவர
மாளிகையா விடுதிங்க
மாளிகையின் சொகத்துக்கு
நச்சத்திரம் அஞ்சுங்க
அய்யா நச்சத்திரம் அஞ்சுங்க
அஞ்சுமணிக் காலையிலும்
அஞ்சுமணி மாலையிலும்
ஆகாயத் திரையெல்லாம்
அழகுன்னா அழகுங்க
அய்யா அழகுன்னா அழகுங்க
அஞ்சருவி பாத்தியலா
அம்புட்டுந் தேனுங்க
அழுக்கோடு நெஞ்சத்தை
அலசித்தான் போகுங்க
சும்மா அலசித்தான் போகுங்க
அஞ்சுக்கே எந்திரிச்சா
ஆயுளுக்கே தெம்புங்க
அஞ்சுமணிக் காத்துக்கு
அம்புட்டும் பூக்குங்க
அய்யா அம்புட்டும் பூக்குங்க
அஞ்சுமணி ஆனாக்கா
அலுவலகம் விட்டாச்சு
அஞ்சுநாளு போனாக்கா
அந்தவாரம் முடிச்சாச்சு
சோரா அந்தவாரம் முடிச்சாச்சு
அஞ்சேதான் பருவமுங்க
அவனியிலே பெண்ணுக்கு
ஆரம்பம் கொழந்தைபின்
சிறுமியாயாகி சிறகடிப்பாள்
சின்னச் சிறுமியாய்ச் சிறகடிப்பாள்
நெஞ்சத்தைப் பஞ்சாக்கும்
கன்னியவள் மனைவியாகி
நெறமாசங் கொண்டாடி
தாயாகி நெறஞ்சிடுவாள்
அருமைத் தாயாகி நெறஞ்சிடுவாள்
அஞ்சு அறைப் பெட்டித்தான்
அடுக்களைக்கு பொக்கிசங்க
அஞ்சில்லாச் சாப்பாட்டில்
அடுப்புக்கும் வெறுப்புங்க
அய்யா அடுப்புக்கும் வெறுப்புங்க
அஞ்சுப்பொன் சிறப்புங்க
அஞ்சுப்பால் அறிவீங்க
அஞ்சுபெரும் காவியங்கள்
அழகுதமிழ் சொல்லுங்க
அய்யா அழகுதமிழ் சொல்லுங்க
அஞ்சுக்கே வளையாட்டி
அம்பதுக்கும் வளையாது
அஞ்சோடு சேராட்டி
பாடந்தான் ஏறாது
பள்ளிப் பாடந்தான் ஏறாது
அய்யெட்டு ஆனாத்தான்
அமைதிக்கே வருவீங்க
அதுவரைக்கும் ஆடாத
ஆளுந்தான் ஏதுங்க
அய்யா ஆளுந்தான் ஏதுங்க
அஞ்சேதான் பூதங்கள்
அந்நாளில் சொன்னாங்க
அஞ்சுக்குள் அடங்கித்தான்
அத்தனையும் சுத்துதுங்க
அய்யா அத்தனையும் சுத்துதுங்க
அஞ்சாம மேடையில
ஆனவரைச் சொல்லிப்புட்டேன்
அய்யாவே அம்மாவே
அசரடிங்க கையத்தட்டி
சும்மா அசரடிங்க கையத்தட்டி
அண்ணா, உங்கள் 5 5 5 வாசித்ததும். என் பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது, தேடிச்சென்று எடுத்தேன் உங்களுக்காக. சந்த வசந்தத்தில் ஆளுக்கு ஒரு நம்பர் கொடுத்து எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது அஞ்சு
அன்புடன் புகாரி
தேவையா இந்த ஆர்பாட்டங்கள்!

விளையாட்டு குழந்தைகள்
விளையாட்டு குழந்தைகள்: விளையாட்டு இன்று இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறார்கள்.
அந்த விளையாட்டு கணிணியில் விளையாடும் விளையாட்டோ அல்லது தொலைகாட்சியில் விளையாடும் விளையாட்டோ அல்ல.
களத்தில் இறங்கி விளையாடும் குழந்தைகள் வியர்வை வெளியேறி சோர்வடைந்து பின்பு ப்ரஷாக ஆவது. அவர்களது உடலையும் மனதையும் கட்டுப்பாக வைத்திருக்கும்
2ஆம் உலக போரின் போது சாப்லின் ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அந்த போராட்டத்தின் வாக்கியமே குழந்தைகள் வீதியில் இறங்கி விளையாட முடியவில்லை. போரை நிறுத்துங்கள் என்பது தான்.
குழந்தைகளை விளையாட அனுப்புவோம். கூடவே நாமும் விளையாடுவோம். விளையாட்டு மனிதனை மேம்படுத்துகிறது.
( கண்டிப்பாக வீடிகோகேம் அல்ல )
Source http://kalaingerpress.blogspot.in
தகுதியுடையவரை பாராட்டுங்கள்! புகழுங்கள்!
நியாயம் வழங்கப்பட்டவர் நியாயம் வழங்கியவரை பாராட்டுகின்றார்
உடல் நலம் பாதிக்கப் பட்டவர் உடல் நலம் பெற்றதற்கு மருத்துவரைப் பாராட்டுகின்றார்
கல்வி கற்றவர் கற்பித்த ஆசிரியரை பாராட்டுகின்றார்
ஆதாயம் பெற்றவர் அதற்கு உதவியரை பாராட்டுகின்றார்
காரியம் ஆவதற்காக ஒருவர் ஒருவரை பாராட்டுகின்றார்
ஒன்று மட்டும் மறந்து விடுகிறார்!
அனைத்துக்கும் மற்றும் அந்த பாராட்டுதளுக்கும் அந்த தகுதியை தந்தவர் யார் ? என்பதனை!
அனைத்து பாராட்டுதளுக்கும் அந்த தகுதியை தந்தவன் இறைவன் ஒருவன் உள்ளான் என்பது நம் மனதில் வராமல் போவது தன்னை மறந்த செயலாகும்.
அல்ஹம்து : புகழ் யாவும்
லில்லாஹி : அல்லாஹ்வுக்கே (ஏக இறைவனுக்கே )
ரப்பில் ஆலமீன் : அகிலத்தாரை வளர்ப்பவன்
[All] praise is [due] to Allah , Lord of the worlds
அவன் நினைவின்றி நாம் வாழ்தல் நன்றி கெட்ட செயல். இறைவன் இன்றி பாராட்டுபவனும் பாராட்டப்படுபவனும் இருக்க முடியாது . ஆதலால் நாம் இறைவனுக்கு கொடுக்கும் பாராட்டல் அவனை வைத்து தொடங்குவதும் அவனை தொழுது நிற்பதுமாகும்
தேவையா இந்த ஆர்பாட்டங்கள்!
வருகிறதாம் பல நிகழ்வுகள்!
உலகமே அழியப்போகிறதாம்!
இதனை கிளிக் செய்து படியுங்கள்
நிகழுமாம் பல வினோதங்கள் !
தேதி, மாதம் மற்றும் வருடத்தில் பாதி எண்கள் இணைந்ததால் 12/12/12 ..
இதற்கு இத்தனை ஆர்பாட்டங்கள்!
ஒன்று மறந்து விட்டோம் 12/12/2222 ..அல்ல, அல்லது 2.2.2222 ம் அல்ல
மறதி உள்ளவர்களுக்கு வேண்டுமென்றல் தேதி,மாதம் ஒன்றாக வருவது நினைவுக்கு உதவும்
எனக்கு மறதி அதிகம் அதனால் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிகின்றது
எனது தந்தை இறந்த நாள் 5.5.55
எனது பேரன் பிறந்த நாள் 5.5.வருடம் நினைவில் இல்லை
எனது மகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்த நாள் 5.5.வருடம் நினைவில் இல்லை
கார் நம்பர் TN. 51-S. 0051
கார் நம்பர் இது நினைவில் உள்ளது
அதிலும் . - S இவைகள் நினைவில் இல்லை பார்த்து வந்தேன்.
உலகம் அழியப்போகுதாமே?
12/12/12 இதற்கு ஏன் இத்தனை ஆர்பாட்டங்கள்!
தகுதியுடையவரை பாராட்டுங்கள்! புகழுங்கள்!
இதனை கிளிக் செய்து படியுங்கள்
இத்துனை ஆர்ப்பாட்டங்கள் எதற்கு ?
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’ அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.
இஸ்லாத்துக்கு வேண்டாம் அற்புதங்கள்
உலகமே அழியப்போகிறதாம்!
இதனை கிளிக் செய்து படியுங்கள்
அழியப் போகிறதா உலகம்?

இதனை கிளிக் செய்து படியுங்கள் தேடிச்சென்று எடுத்தேன் உங்களுக்காக.
உலகம் அழியப்போகுதாமே?
12/12/12 இதற்கு ஏன் இத்தனை ஆர்பாட்டங்கள்!
தகுதியுடையவரை பாராட்டுங்கள்! புகழுங்கள்!
இதனை கிளிக் செய்து படியுங்கள்
இத்துனை ஆர்ப்பாட்டங்கள் எதற்கு ?
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’ அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.
இஸ்லாத்துக்கு வேண்டாம் அற்புதங்கள்
Tuesday, December 11, 2012
பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வருபவர்களை யாராலும் தடைசெய்ய முடியாது
பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வருபவர்களை யாராலும் தடைசெய்ய முடியாது.
ஷியா கொள்கையை பின்பற்றும் முஸ்லிம்கள் முதல் மூன்று கலிபாக்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல மற்றும் அந்த மூன்று கலிபாக்களையும் குறைவாகவும் சொல்வார்கள் . அவர்கள் (ஷியா) பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வர நம்மால் தடை செய்ய முடியாது .காரணம் அவர்கள் குர்ஆனையும் நபியாக முகம்மது நபி (ஸ. அ ) அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் . இதனை ஹஜ் செய்பவர்கள் பார்க்கலாம் .( தடுப்பவர்களை நீதி மன்றமே தண்டிக்கும் நினைவில் கொள்ளட்டும் ) இந்நிலை இருக்கும் போது நாம் நம்மில் சிலரை தடை செய்கிறோம்?
ஒருவரது உள்ளத்தில் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். தொழுகைக்கு வருபவர் அவர் முஸ்லிமாக இருந்தால் அவரை அனுமதித்தே ஆக வேண்டும். ( தொழுகைக்கு வரும்போது (மதுவை குடித்து வரக் கூடாது. அவ்விதம் இருப்பின் அவரை வெளியேற்றலாம் மற்றும் தொழுகைக்கு இடையூராக இருப்பவரையும் வெளியேற்றலாம்)
தொழுகைக்கு வருபவர் ஒலு செய்திருக்க வேண்டும் . அது அவரது கடமை .ஒழு இல்லையேல் தொழுகையே கூடாது. ஆனால் நாம் யாரிடமும் 'நீ ஒலு செய்தாயா?' என்று கேட்பதில்லை. ஆனால் மார்க்கத்தில் கடமையாக்கப்படாத ஒன்றை 'தொப்பி போட்டு தொழு இல்லையென்றால் பள்ளிவாசலுக்கு வராதே' என்பது மிகவும் தவறாகும்
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வர தடை செய்தல் பெரிய குற்றமாகும். இந்நிலை நீடிக்குமானால் பிரிவுகளை உருவாக்குவதற்கு நாமே வழி வகுக்கின்றோம். இதனால் தேவையில்லாமல் பிரிவுக்கு ஒரு பள்ளிவாசல் உருவாகின்றது.
இறையில்லங்களில் சுதந்திரமாக தொழுகையில் ஈடுபட ,நடத்தப்பட இடமளித்தல் வேண்டும் . அவற்றை தடுப்பதற்கு
எவருக்கும் அதிகாரமில்லை .அதுபோன்றே வணக்கத்தலங்களில் பணிவுடன் அச்சத்துடன் நுழைதல் வேண்டும்.இறையில்லங்களை அவமதித்தல் கூ டாது.
And seek help through patience and prayer, and indeed, it is difficult except for the humbly submissive [to Allah ]
Qur'an- 2:45
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்
. குர்ஆன் - 2:45
10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
2:114 وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment.Qur'an- 2:114
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
-குர்ஆன் - 2:114
Subscribe to:
Posts (Atom)