Wednesday, December 5, 2012

நேற்று ஒன்று சொன்னாயே!

இன்று ஓர் இடம்
நாளை ஓர் இடம்
இதுதான் அரசியலின் பாடம்

கடந்த காலதைப் பற்றி சிந்திப்பவன்
நிகழ்காலத்தை விட்டவன் வாழ்கையை விட்டான்
இதுதான் அரசியல் பாடம்

நேற்று ஒன்று சொன்னாயே!
அதை நேற்றுதானே சொன்னேன்
இன்று சொல்வதைக் கவணி
நாளை என்ன சொல்வேன் என்பது எனக்கே தெரியாது
---------------------------------------------------------------


ஏம்பா மக்கள் ஏகமாக வேகமாக  போகிறார்கள்!
அங்கே வெட்டியும் ஒட்டியும் நடக்குதாம்
யார் வெட்டுரா!  யார் ஒட்டுரா!
போனாத்தானே தெரியும் !
சரி இரு நானும் வந்து பார்கிறேன்!
அங்கே ஒன்னும் பாக்கிறதுக்கு ஒண்ணுமில்லே!
பின்னே?
கேட்கிறதுக்குதான் முடியும்
 -------------------------------------------------------

நான் நன்றாக பொய் பேசுவேன்
அப்பொழுது நீ அரசியலுக்கு வரலாம்

நான் பேச்சாளன்
கேட்பதற்கு மக்களை திரட்டி வர முடியுமா?
மக்கள் வருவார்கள் செலவு செய்தால்
ஏதற்கு செலவு செய்ய வேண்டும்
மக்கள் வலைத்தளங்களில் மாட்டிக்கொண்டார்கள்
மக்கள் வலைபூவிலும் விளையாடுகிறார்கள்
--------------------------------------------------------------------

படத்திற்கு கதை ,கவிதை ,வசனம் எழுத நட்சத்திர விடுதியில் அறை வேண்டும்
இன்னபிற வேண்டும் கற்பனையத் தூண்ட

நமக்கு அனைத்தும்(கதை ,கவிதை ,வசனம் கற்பனை) வரும் கணினியும் அத்துடன் மின்சாரமும் வந்தால்
----------------------------------------------------


தத்துவம் படிக்கத்தான் ஆசை
தந்துவம் தந்த கருத்துகள் வாழ்விற்கு ஒத்து வரவில்லை
தத்துவம் விஞ்ஞானத்திற்கு வழிகாட்டியாம்
தத்துவம் எனக்கு சரியான வழிகாட்டியாக அமையவில்லை
வழிகாட்டிகள் தத்துவம் சொன்னபடி வாழாததால்
---------------------------------------------------------------------------------------
இன்றைய அரசியல் நாளைய சரித்திரமாம் !
நாளைய சரித்திரம் படித்தால் மக்கள் நிலை என்னவாகும்?
---------------------------------------------------------------
மற்றவர் எழுதி வைத்த கருத்துகளை எடுத்து போடுவது எடுபடாது
நினைத்தை எழுது.உன் ஆற்றல் உனக்கே தெரியாது
தட்டி விடு கொட்டிவிடும் கோவையாக அதனை கொத்திச் செல்ல நாடுவர்
மனதின் மகிழ்வு உடலுக்கு உறுதி தரும்
தூண்டப் படாத செல்கள் சோர்வடைத்து குறைவடையும்
தூண்டிய செல்கள் பன்மடங்காக பெருகும்
தொடர் முயற்சி ஆக்கத் திறனின் திறவுகோல்
இறைவன் ஒரு காரனதிர்க்காகவே நம்மை படைத்தான்
அவனது விளையாட்டால் வந்ததல்ல
-----------------------------------------------------------

அறிவு ஆற்றல் மிக்கது அது எப்போது உதவும் என்பது நமக்கே தெரியாது
பணம் சக்தி உள்ளது அது கிடைத்த உடனே உதவும்
அதனால்தான் பணம் பத்தும் செய்யும் என்கிரார்கள்
அறிவு பெற்றவன் பணம் பெற்றவனால் வாங்கப் படுகின்றான்
-----------------------------------------------------------------
'நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை' அப்பா
நான் லாயக்கில்லாமல் ஆனது நான் செய்த குற்றமா!- மகன்
லாயக்குள்ள நீங்கள் என்னை லாயகுள்ளவனாக ஆக்குவதற்கு நீங்கள் லாயக்கில்லையே ' மகன்
நீ பிறந்ததே குற்றம் -அப்பா
அது நீங்கள் செய்த குற்றத்தினால் வந்த விளைவு ' மகன்
-------------------------------------------------------------------
'நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அதை ஏன்டா மற்றவர்களிடம் சொன்னாய். அது பெரிய செய்தியாகப் போய் ஊரெல்லாம் அதைப் பற்றி பேச அந்த குடுப்பம் சிதையும் அளவுக்கு ஆக்கிவிட்டாயே .பாவம்டா உண்மையிலேயே அவங்க நல்லவங்கடா'.. என்று மிகவும் வருந்துபவர்களைப் பற்றி அறிவோம் . தங்கள் நேரத்தினை ஓட்டுவதற்கு வாய் கூசாமல் பேசிவிட்டு வருத்தமடைவதாகச் சொல்லிவிட்டு சிலநாட்கள் கழித்து அதே வேலையில் ஈடுபடுவார்கள். இது சில மக்
கள் மத்தியில் இருந்து வரும் வழக்கம் . ஆனால் இப்பொழுது பத்திரிகைக்காரர்களும் அரசியல்வாதிகளும் மிகவும் சிறப்பாக ஈடுபட்டு நாட்டிற்கே அழிவை உண்டாக்குகின்றனர் .(அமேரிக்காவுக்கு இது ஒரு கை வந்த கலை என்பது உலகமே அறியும்) இதில் பெருமையாக 'கிசு கிசு' என்று தலைப்பே போட்டும் சிலர் எழுதுகின்றனர்.அதனால் விளையும் விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இதனால் மதக் கலவரம் ஜாதிச் சண்டைகள் வந்து விடுகிறன. சில நாடுகள் மற்ற நாடுகளில் இதனைக் கிளப்பி விட்டு சண்டையை உண்டாக்கி தாங்கள் குளிர் காய்கின்றனர்.
---------------------------------------------------------
"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
-----------------------------------------------------
யானை தன் மீது சேற்றை வாரி இறைத்துக் கொள்ளும்.அது அதற்கு தேவை. நாம் நம்மையே கேவலப் படுத்திக் கொள்வது அறியாமை.மறுமலர்ச்சி காலம் சில தவறுகள் நடக்கலாம்.தவறை தட்டிக் கேட்பதை விட தடவிக் கொடுத்து மேன்மை வழியாக மாற்றுதல் கற்றோர் கடமை. தவறை பார்ப்பதை விட உயர்வைப் பார்த்து உற்சாகப் படுத்துதல் உயர்வு.

-----------------------------------------------------------

Invite to the way of your Lord with wisdom and good instruction, and argue with them in a way that is best. Indeed, your Lord is most knowing of who has strayed from His way, and He is most knowing of who is [rightly] guided.-(Quran-16 :125)

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். - குர்ஆன் 16 :125
----------------------------------------------
கடுஞ் சொற்களை நாயகம் ஒரு போதும் சொல்வதில்லை
-----------------------------------------------------
எலிஸபெத் குப்ளர் ரோஸ் என்ற அறிஞர் சோதனைகள் வரும் போது ஒவ்வொரு மனிதனும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டி இருப்பதாகக் கூறுகிறார். முதல் நிலை அந்த சோதனையை ஒத்துக் கொள்ளவே முடியாத ஒரு வித ஜடநிலை. இரண்டாவது நாம் மறுப்பதால் சோதனை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கும் நிலை. மூன்றாவதாக சோதனைகள் நீங்காததைக் கண்டு சோகமடையும் நிலை. நான்காவதாக நடந்ததை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண முற்படும் நிலை. முதல் மூன்று நிலைகளை எந்த
அளவுக்கு சீக்கிரமாகக் கடந்து நான்காம் நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் புத்திசாலிகளாகிறோம்.
-----------------------------------------

மனைவி அமைவதெல்லாம் இறைவன் தந்த அருள் .
நகைக் கண்டால் நகைப்பாள்
பூ வைக் கண்டால் பொன்னெழிலாய் பூரிப்பாள்
கணவனைக் கண்டால் கலங்குவாள்
மகளைக் கண்டால் மகிழ்வாள்
தாயின் மடியில் தவழ்வாள்
நட்புக் கொண்டவளோடு நகர்வாள்
இறுதியாக நிற்பவன் இணைக்கப்பட்டவனே
இணைந்தவன் இவளோடு நடத்திய நாட்கள்
இவளை ஆட்டிப் படைத்த நாட்களாக போனதால்
இந்நிலை இவளோடு இக் குணம் ஒட்டிக் கொண்டது

மனதில் வந்ததை எழுத விரும்பியவர்
முகம்மது அலி ஜின்னா ,நீடூர். 

2 comments:

சேக்கனா M. நிஜாம் said...

ரசித்து படித்தேன் :)

காலச்சூழலுக்கேற்ற கவிதை தொகுப்பு !

தொடர வாழ்த்துகள்...

MARECAN said...

Aasalamu alaikum

Rasithen....ali annan yendrum ilamai