Friday, December 14, 2012

இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்

துன்பம் தாக்க துவள்வதும்
மகிழ்ச்சி வர துள்ளுவதும்
இறை நேசர்களின் இயல்பாகாது
இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்

இறைவன் மீது வைத்திருக்கு நேசம் நிபந்தனையற்றது
அர்ப்பணிப்பே நிபந்தனையற்ற விசுவாசமாகும்
ஏற்றத்தாழ்வு நிலை, சூழ்நிலை இவைகளை வைத்து நம்பிக்கை கொள்வதல்ல மார்க்கம்
ஆர்வம், உற்சாகம்,உறுதி மற்றும் நம்பிக்கை இதன் அடிப்படையில்  தொடர்வதுதான் மார்க்கம்
துன்பங்களினால் வரும் துயரங்கள் நம் மன உறுதியை மாற்ற முடியாத நிலையை தருவதே மார்க்கத்தை பின்பற்றியோர் வழி
துன்பம் வந்தால் விதியென்றும் வெற்றி தரும் செய்திகள் கிடைக்க தம் திறமையால் வந்தது என்றும் சொல்வார்கள்
துன்பம் வரும்போது இறைவனை நாடுவதும் மகிழ்வான நிகழ்வுகள் கிட்ட இறைவனை மறப்பதும் மார்க்கத்தின் மீது, இறைவன் மேல் நம்பிக்கை கொண்டோர் செயலாகாது

 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். - குர் ஆன் 2:156.


. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,குர் ஆன்110:1
 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், -குர் ஆன்110:1.
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.-குர் ஆன்110:3.

துன்பம் வருவதை ஒருவரும் விரும்புவதில்லை.
துன்பம் வருவது வாழ்வின் அடிப்படை உண்மையை நமக்கு   உணர்த்தும்.
மற்றவர் படும் துன்பத்தினை அறிய நம்  மனம் கசியும்.
அனைத்துக்கும்  மேலாக இறைவனோடு ஒன்றி அவனை தொழும் சிறப்பு வந்தடையும் .  
              

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
-குர் ஆன்-94:4.
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. -குர் ஆன் 94:5.
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
-குர் ஆன் 94:6
. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. -குர் ஆன் 94:7.
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
குர் ஆன் 94:8


No comments: