கத்தியைக் கொண்டு காய்கறி வெட்டினாள் தாய்
கத்தியைக் கையாள புத்தி வேண்டும்
தாயின் செயலைக் கண்ட குழந்தை
தானும் அச் செயலைச் செய்ய
தனது விரலில் கத்தி கீற
தனது விரலில் குருதி கொட்ட
வலி தாளாமல் கதறியது
கதறல் ஒலி கேட்க
ஓடி வந்த தாய் பதறிப் போனாள்
புத்தியின்றி ஏன் எடுததாய் கத்தியை?
குழந்தைக்கு ஓங்கி ஒரு அடியும் கொடுத்தாள்
அடியின் வலி காயத்தின் வலியோடு சேர
குழந்தையின் கதறல் வேகமானது
கதறலை அடக்க மேலும் ஓர் அடி!
கத்தி யெடுத்து காய்கறி அறுக்க தெரிந்த புத்தி
புத்தியோடு பிள்ளையை வளர்க்கத் தெரியாமல் போனது
பாசம் புத்தியை கெடுத்தது.
கத்தியை யெடுக்க மட்டும் புத்தி தகுதியாகாது!
வாழ்கைக்கே தகுதியான புத்தி வேண்டும்.
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!
No comments:
Post a Comment