Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Monday, January 7, 2013

பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு வருவது நம்மிடமே!

 பெண் குழ்ந்தை வேண்டாம் என்ற காலம் மறைந்து வரும் காலம். அதற்கு முக்கிய காரணமாய் இருப்பது ஆண் மகனுக்கு திருமணம் செய்விக்க பெண் கிடைப்பது முன் மாதிரி இப்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை.முன்பெல்லாம் வரதட்சணை கொடுமை வாட்டி எடுத்தது. தம்பதிகளுக்குள் உறவு முறை சரியாக இல்லையென்றாலும் அடங்கிப் போகும் கட்டாயம். கணவன் இறந்தாலோ அல்லது மணமுறிவு நிகழ்ந்தாலோ பெண்ணின் நிலை சீரழிந்த நிலை. மறுமலர்ச்சி காலத்தில் அடியெடுத்து வைத்து விட்டோம் . அவசியமானால் மறுமணமும் வந்துவிட்டது மற்றும் வரதட்சணை கொடுமையும் ஒழிந்து வருகின்றது. எங்கு போய் பெண் கேட்டாலும் ஆண் மகன் என்ன படித்திருக்கிறார்? என்ன வருமானம் அவருக்கு வருகிறது? குடும்ப கௌரவமானதா இப்படி அலசுகிறார்கள்!
பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் அவள் படிப்பு முடிந்துதான் திருமணம் செய்ய விருப்பம், இன்னும் சிலர் படித்தபின் அவளுக்கென்று உள்ள வேலையை தொடர்வாள் அதற்கு ஒத்து வருவதாக இருந்தால் பார்ப்போம். சில இடங்களில் பெண்ணே தனக்கு தேவையான கணவன் தகுதியுடையவனா? என்பதில் கவனம் செலுத்தும் ஆற்றல்
இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் பெண்கல்வியின் அருமை அறிய வந்து அதன்படி செயல்படும் நிலை உருவாகியதுதான்.
பொதுவாக பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் மீது பாசம் அதிகம். அந்த பாச உணர்வு அவர்களை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க விரும்புகின்றது. ஆனால் பாச உணர்வு அவர்களை சமூகத்துடன் திறந்த மனதுடன் பழக தடை போடுகின்றது. சமூகத்தின் நிலையை அவர்களோடு மனம் திறந்து பெற்றோகள் பேசுவதில்லை இதன் காராமாகவே

பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது. பணிந்து பேசும் தன்மையுடையது.வெட்கத்தோடு நளினமாகப் பேசக் கூடியது. இதனை மற்றோர் மாறுவிதமாக கற்பனை செய்யத் தூண்ட வழி வகுத்துவிடுகின்றது .செல் போன் காலத்தில் வாழும் பெண்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்ற நிலையை பெற்றோர்கள் அவர்களுக்கு அறிய வைக்க வேண்டும். குழந்தையாய் இருக்கும்போது விளையாட்டுக்கு செல் போன் வாங்கிக் கொடுத்து விளையாட்டாக நாம் அறிந்தவர்களிடமெல்லாம் அவர்களை பேச வைத்து ஆசைப் பார்த்தது அவர்கள் பெரியவர்கள் ஆனா பின்பும் தொடர்கின்றது . வீட்டுக்கு வரும் அன்னிய ஆண்களோடும் அவர்களை கணிய பேச வைக்கத் தூண்டியது தொடர்கிறது. நாணமற்ற தன்மையை வளர்க்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்து ஆசைப் பார்த்தது தொடர்கிறது

Monday, December 17, 2012

நண்பன் ,வேதாந்தி ,வழிகாட்டி!


பையனைக் கூப்பிடு
தம்பி உன்னை அப்பா கூப்பிடுராங்கப்பா
ஏன்ப்பா!
எங்கப்பா போறே  சூப்பரா ட்ரஸ் பண்ணிட்டு ?
ஒரு வேலையா போறேன்பா.
அதான் கேட்கிறேன்! அப்படி என்ன வேலை சொல்லேன்?
உங்களுக்கு சொன்னாலும் புரியாதப்பா !
அப்படில்லாம் சொல்லக் கூடாது. அப்பா உனக்கு ஒரு நண்பன் ,வேதாந்தி, வழிகாட்டி மாதிரி
அதான் நீங்க சின்ன வயசிலேந்து சொல்லி எனக்கு நெட்டுரு ஆயிடுச்சே
அப்ப சொல்லேன் இப்ப..?
எதை நெட்டுரு பண்ணுனதையா!
இல்லப்பா நீ எங்கே போறேன்கிறதை சொல்லு.
அது உங்களுக்கு தேவை இல்லைப்பா.
சரிப்பா நீ போ உனக்கு நேரமாச்சு.

பையன் முனங்கிக் கொண்டே 'வழிகாட்டி தான் ரோட்டிலேயே இருக்கே. அதோட இவரையும் கொண்டு நிறுத்திட வேண்டியதுதான் . நண்பனாம் இவர் வயசுக்கு நான் நண்பனாம். நான் போற இடத்துக்கு இவர் வர முடியுமா. வேதாந்தியாம் அது சரி அவர் அப்படியே இருந்துட்டு போகட்டும் .என்னை  வேரே இவர் ஏன் வேதாந்தியாகச் சொல்றாரு'
இவ்வாறு சொல்லிக் கொண்டே மகன் தனது  நண்பனைப் பார்க்க துரிதமாக ஓடுகின்றான்.

'நட்புடன் நல்வழி காட்டினேன்
வேதத்தை படிப்பித்து வளர்த்தேன்
வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினேன்
கூ டாத நட்பு வழி மாற்றி விட்டது
பாசத்தோடு வளர்த்தவன் விலகி நிற்க
யாரிடம் சொல்லி மனதை ஆற்றுவேன்' - அப்பாவின் முனங்கள்

Tuesday, November 13, 2012

முழுமையான நெருக்கம் கிடைக்க முடியுமா!

 ஆத்ம நண்பன் , உயிருக்கு உயிரான தோழன், இவர்களிடம்  முழுமை உண்டா!

அறிவை சொல்லித் தந்த ஆசிரியர் எனப்படுவோர்  இந்த வட்டத்தில் வருவாரா!

இனிய வாழ்வை தருபவராக கருதப்படும் மனைவியினால் முழுமையான வாழ்வை பெற்றுவிட முடியுமா ! 

பாசத்தை தந்த பெற்றோர் நம் மனதில் முழுமை பெற்று விடுவார்களா!

யாரிடம்தான் முழுமையான நெருக்கம் கிடைக்கும்!

நண்பனிடம்  கருத்து ஒற்றுமை கிடைக்கும். உயிரைக்கொடுத்து உதவுவார்கள் பெற்றோர்கள். மனைவி நமக்கு நல்லது கெட்டதுகளில் பங்கு பெறுவாள் மற்றும் உடலோடு ஒன்ற உடலுறவு தருவாள் .  பின் யாரிடம்தான் முழுமை கிடைக்கும்.!
முழுமையான நெருக்கம் கிடைக்க ஆசைப்பட்டு நாம் நொறுங்கி விட வேண்டியதுதான்.
முதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது.
முழுமையான நெருக்கம் என்பதின் இலக்கணம்தான் என்ன ?
முழுமை என்பது ஆன்மிகம் ,உணர்வு அறிவு உடல் உறவு இத்தனையும் உள்ளடக்கியதுதான்

ஆன்மிகம் அடங்கிய ( spiritual)  உணர்ச்சி வயப்பட்ட (emotional  ) அறிவு சார்ந்த (intellectual ) உடல் உறவு (physical relation  ) இத்தனையும் உள்ளடக்கிய உறவோடு நமக்கு கிடைக்கும் மனிதரை பெற முடியுமா?  

Friday, June 15, 2012

வருத்தம் ஏன் ! மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .

நாம் நம்மைப் பற்றிய எண்ணுவது  ஒருபுறம் இருக்கட்டும்; மற்றவர்களைப் பற்றி சிறிது  யோசித்துப் பாப்போம் !

மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என
நிம்மதி கொள். வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க  பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர்    குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.

வருத்தம் வேதையினை தந்து உடல் நலனை பாதித்துவிடும். மகிழ்ச்சி உற்சாகத்தினை தந்து ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது தாழ்வு மனபான்மைக்கு வழி வகுத்துவிடும். வாழும் கடைசி நிமிடம் வரை மகிழ்வாக வாழ  வேண்டும். .

Monday, March 14, 2011

குழந்தைகளும் பள்ளிவாசல்களும்



உங்கள் சிந்தனைக்கு இரண்டு நிகழ்ச்சிகள்!

ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹசன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள். அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே - நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன். தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி வி;ட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள். நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை! (அன் நசயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)

Wednesday, December 8, 2010

சகோதர சண்டை!

சகோதர சண்டை! இது நடக்கும்   குடும்பமும் உண்டு !
இதற்கு என்ன காரணம்? - புரியாத புதிர் அல்ல.
வளர்ந்த விதம் ,வளர்க்கப்பட சூழ்நிலை , ஐந்துவரை அண்ணன் தம்பி, அதற்கு மேல் பங்காளி"என்ற பழமொழி உண்மையாகிவிட வந்த மனைவியின் தவறான வழி காட்டுதல், "அவசர மான உலகத்தில் அண்ணன் ஏதடா! தம்பி  ஏதடா!" எனறு எண்ணுவதும், என்று பல இருப்பினும் இது சமயங்களில் குழந்தை பருவத்தில் இருந்தும் ஆரம்பிக்கும்.  
இந்த சண்டைக்கு ஒரு  காரணம் , வளர்ந்த தன் மீது தன் பெற்றோரின் கவணம் திரும்பவேண்டும்; தன்னை மதிக்காமல் பெற்றோரின்  அன்பு, பாசம் சமமாய் கொடுக்கப்படவில்லை எனறு  எண்ணுவதும் . இது  குழந்தை பருவத்தில் இருந்தும் ஆரம்பிக்கும்.  பொதுவாக நாம் பார்க்கலாம் அடுத்து உள்ள சகோதரருக்குள்தான் இது இருக்கும் , தாய் தனது இளம்  குழந்தை மீது கவணம் காட்ட வேண்டிய  நிலை.அதனை கண்டு குழந்தையின் நேர் மூத்த குழந்தை தனது தாய் இவனால்தானே  தன் மீது தன் அம்மா பாசமாக இல்லை எனறு எண்ணத் துவங்கி அது தனது உடன் பிறந்த குழந்தை சகோதரன் மீது வெருப்பினை காட்ட துவங்கி அது அவன் மனத்தில் ஆழமாக பதிந்து இப்படி இளம்வயதில் நடக்கும் சண்டைகள்தான், பின்னால் இது பெரியவன் ஆன பின்பும் தொடர்கின்றது ,இது கால இடைவெளி அதிகமாக பிறக்கும்  குழந்தைகளுக்குள் ஏற்பட வாய்ப்பு குறைவு .அதில் பாசம் உயர்ந்து  நிற்கும். இதற்கு  இடம் வராமல்   பெற்றோர்  கவணமாக இருப்பது நல்லது . இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் மீதும்  சுமத்துவதும் சரி அல்ல .