முதன் முதலாய் கர்வம் என்மீது,
கண்ணாடிமுன் நிற்கின்றேன் கம்பீரமாய்!
இமயமாய் இன்னல்கள் என்னைச் சுற்றி
இருந்தும் அதன்மேல் சிகரமாய் நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இழப்புகளின் காயங்கள் என்னிடம் தோற்றுபோய்,
வலி நோக்கி நகைத்து நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
குற்றம் புரியா கொடுமை கண்டும்
மண்ணித்து மா மனிதனாய் நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இளையவர் கொள்ளும் கேளிக்கை வெறுத்து
இரும்பு மனம் கொண்டு நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இறைவன் இவன்தா னென்று அவனை
அவனருளால் குனிந்து தொழுது நிற்கின்றேன்!
என்மீது கர்வம் எனக்கு,
இன்று புதிதாய் பிறந்த வுணர்வு!
இதற்கு முன் இல்லை இதுபோல்
என்மீது கர்வம் எனக்கு..!
http://rafeeqspoem.blogspot.in/
No comments:
Post a Comment