Monday, December 3, 2012

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு பற்ற வைக்கும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு இருந்தாலும் கேஸ்  இல்லை
திரி அடுப்பு இருந்தாலும் மன்னன்னை இல்லை
அடுப்பு இருந்தாலும் விறகு இல்லை .
ஆக இந்த தலைப்பே சரியில்லை!

பெண்களுக்கு படிப்பு தேவையா?  இது கேள்வியா?
பெண்கள் எதுவரை படிக்கலாம் ! இது சரியா ?
படிப்பென்றால் 'ஆணென்ன பெண்ணென்ன' இதுவும் சரியில்லை
'படிப்பென்றால் நீயென்ன நானென்ன'இப்படி பெண்கள் கேட்டால் !
படிக்கும் பெண்கள் கெடுவதற்கு வாய்ப்புண்டே !
படிக்காத பெண்கள் கெடுவதில்லையா?
பெண்கள் மட்டுமா கெட்டுப் போகிறார்கள் ?
ஆண்களால்தானே  பெண்கள் கெடுக்கப் படுகிறார்கள் !
சினிமாவில் அசிங்கமாக ஆடுகின்றார்களே !
ஆட வைப்பது யார் ? மற்றும் ஆட்டி வைப்பது யார் ?

மார்க்கம் போதிப்பவர்கள் மார்க்கப் படிப்பும் போதும் என்கிரார்களே ! அப்படி படித்தாலும் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட வேண்டும் என்று அழுத்தமாக சொல்கின்றார்களே அதுவும் ஆண்களோடு சேர்ந்து படிக்க கூடாது என்றும் கட்டாயப்படுத்துகிரார்களே!

" சீனா தேசம் சென்றாயினும்  கல்வியை கற்றுக்கொள்" நபிகள் நாயகம் ஆண்களுக்கு மட்டுமா சொன்னார்கள் ?

மார்க்கம் போதிப்பவர்கள் மற்றவருக்கு சொல்லிவிட்டு அவர்கள் வீட்டுப் பெண்களை கல்லூரிக்கு அனுப்பி படிக்க  வைக்கிரார்களே?
ஆண்கள் படித்துவிட்டு வெளிநாடு சென்று விடுகிறார்கள் . அப்பொழுது ஆண்மக்களோடு சமாளிப்பது எப்படி ?
கடைக்குப் போய் பொருள் வாங்க ஆட்கள் கிடைபதில்லை அப்படியே பெண்கள் துணையுடன் போனாலும் நாங்கள் ஆண்களோடு பேச வேண்டிய நிலைதானே உருவாகின்றது !
முஸ்லிம் பெண்களாக இருக்கும்போது படிக்கவும் கடைக்குப் போவதும் ஹிஜாப் அணிந்து தான் செல்கின்றோம் !
படிக்காமலேயே இப்படி பேசுகின்றாயே ! படித்தால் எப்படி பேசுவாயோ !
பெண்கள் படித்தால் இன்னும் திறமையாக வருவார்கள் .நிச்சயமாக ஆண்களைப் போல் படிப்பில் கவனம் செலுத்தாமல் அலைய மாட்டார்கள் !
காலம் கெட்டுப் போச்சு அதனால்தான் இப்படி சொல்லவேண்டிய நிலை !
காலத்தை ஆண்கள் கெடுக்காமல் இருந்தால் உலகம் நன்றாகிவிடும் . ஆண்கள் வீட்டில் அடைந்து கிடங்கள்! நாங்கள் அருமையாக காலத்தை உருவாகுகின்றோம் .
மறுமலர்ச்சி காலத்தில்  வாழும்போது  சில தவறு நடந்தால் பொதுப்படையாக பேசக் கூடாது . இது புரட்சி  வருவதற்கு வழி வகுத்துவிடும் . பேசுவதை முறையாக ,நேர்மையாக இறைவனுக்கு பயந்து பேசுங்கள். இஸ்லாத்தில் இல்லாததை  இருப்பதாக சொல்லி பெண்களை மடமையாக்கி விடாதீர்கள்
சரியான பராமரிப்புடன்   குழந்தைகளை வளர்ப்பது  பெற்றோர்களது  முதன்மையான  கடமையாக  உள்ளது. அதற்கு பெண்கள் அவசியம் படித்தாக  வேண்டும் . தாயே சிறந்த வழிகாட்டி

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்"


"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
மாதர றிவைக் கெடுத்தார்.
கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடுங் காணீர்".
பாரதியார் பாடிய மறக்க முடியா வரிகள்
      ” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:
முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?

2 comments:

Adirai Iqbal said...

assalamu alaikkum,

please visit: www.islamiyaarangam.blogspot.in

mohamedali jinnah said...

மிக்க மகிழ்வு உங்கள் இஸ்லாமிய அரங்கம் வருகைக்கும் உங்கள் ஆதரவுக்கும்