Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Wednesday, March 29, 2017
ஹவ்வா, அஹூ, ஹூரா மற்றும் இன்ன பிற பெண்கள்
ஹவ்வா -
வழமையாக வீட்டினைச் சுற்றி வர உள்ள வெளியெங்கும் விளையாடச் செல்லும் சிறுமி ஹவ்வாவுக்கு அன்றைய தினம் ஒன்பது வயது பூர்த்தியாகப் போகிறது. அதனால் அவளுக்கு வெளியே விளையாடச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அவளது தாயும், பாட்டியும் அவளுக்கு ஒன்பது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு, முழுமையாக உடலைப் போர்த்தும் ஃபர்தாவை அணிய அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவள் இனிமேல் வளர்ந்த பெண் எனவும், அவளை பிற ஆண்கள் பார்க்க நேர்ந்தால், அவள் நரகத்துக்கு இட்டுச் செல்லப்படுவாள் என்றும் பாட்டியால் போதிக்கப்படுகிறாள். சற்று நேரம் வெளியே சென்று விளையாடிவிட்டு வர அனுமதிகோரி சிறுமி ஹவ்வா கெஞ்சுகிறாள். ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதேநாளில் மத்தியானம்தான் அவள் பிறந்தாள் என பாட்டி கூறியதும், அப்படியானால் தனக்கு இன்னும் ஒன்பது வயது ஆகவில்லை அல்லவா? மத்தியானம் பன்னிரண்டு மணியாகும்போது விளையாடிவிட்டு வந்துவிடுவேன், ஃபர்தாவையும் அணிந்துகொள்கிறேன் எனக் கூறுகிறாள் சிறுமி. பன்னிரண்டு மணியானதை எப்படி அறிந்துகொள்வாய் எனக் கேட்ட பாட்டி ஒரு வழிமுறையை சொல்லிக் கொடுக்கிறாள். ஒரு குச்சியை செங்குத்தாக நட்டு, அதன் நிழல் இல்லாமல் போனால் அப்பொழுதுதான் சரியாக பன்னிரண்டு மணி. அதைத் தாண்டியும் நீ முக்காடு அணியாமல், பிற ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தால் நீ நரகத்துக்குச் செல்லும் பாவி ஆகிவிடுவாய் எனக் கூறும் பாட்டி அவளை விளையாடச் செல்ல அனுமதிக்கிறாள்.
Tuesday, March 31, 2015
குடை
மழை பெய்து கொண்டிருக்கிறது
துளை விழுந்த குடையொன்றுடன்
தெருவைக் கடக்கிறேன் நான்
சிவப்பு விளக்குக்குப் பின்னால்
எனது நெற்றி வரிகளின் மீது கவனத்தைச் செலுத்தும்
ஒரு பெண்ணின் பச்சை நிறப் பார்வை
மழை வடிவம் கொண்டு
இந்தத் தெருவில் கரையக்கூடியது
தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
என்னிடமில்லை அந்தக் குடை இப்பொழுது
அந்தப் பெண்ணின் கரங்களில்
அதோ எனது குடை
-ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதை
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

Thursday, February 12, 2015
பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியுடனான நேர்காணல் - எம்.ரிஷான் ஷெரீப் 'நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன்'
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை, கத்தாரிலுள்ள தோஹா திரைப்படக் கல்லூரியானது, பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியை கத்தாருக்கு வரவழைத்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது முதல் திரைப்பயணம் இதுவெனக் கூறலாம். தோஹா திரைப்படக் கல்லூரியானது இதனை ஒரு விழா போலவே கொண்டாடியது. 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை அவரது திரைப்படங்களையும், குறுந் திரைப்படங்களையும், ஆவணத் திரைப்படங்களையும் தொடர்ச்சியாகத் திரையிட்டது. அது மாத்திரமல்லாது, திரைப்படங்களைக் காண வந்திருந்தவர்களையும் இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியோடு நேரடியாக உரையாட ஏற்பாடு செய்திருந்தது.
Monday, March 10, 2014
புன்னகையை விற்பவளின் கதை
பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.
இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய 'வணக்கம்' சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

Wednesday, February 26, 2014
நீந்தும் மீன்களை வரைபவள்
அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாகவரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்
'முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகா'
மதகுருவின் உரை சுவரெங்கும் எதிரொலிக்கிறது
பித்தேறிய ஆண்கள் கூட்டம்
நளினமான கரங்களை அடக்கிவைத்திடும்
பாரம்பரிய எண்ணச் சங்கிலிகளோடு
புனித இல்லத்தின் வாயில் தாண்டுகிறது
Tuesday, February 4, 2014
அம்மா
(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது - செய்தி)
இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்
இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்
Thursday, January 16, 2014
'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்'
விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.
Sunday, January 12, 2014
சுய முன்னேற்றமும் சமூகமும்..!!
"அப்பா அம்மா சொத்து இல்லாம/ அவங்க தயவு இல்லாம
சுயமாகச் சம்பாதித்து முன்னேறினவங்களை மட்டுந்தான்
நான் மனுசனா ஒத்துக்குவேன்." என்று இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தபோது மிகச்சரியாக அப்பா வாழ்ந்த வீட்டைக் கடந்துகொண்டிருந்தேன்.
சுயமாகவா இந்த உலகத்தில் ஜனித்தோம்..??
சுயமாகப் பாலருந்தினோமா..??
சுயமாக வளர்ந்தோமா..??
சுயமாகக் கல்வி கற்றோமா..??
சுயமாக இந்த உலகத்தை தரிசித்தோமா..??
வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் ஒட்டுமொத்த சமூகம்தான் பாடம் கற்றுத்தந்து வழிநடத்துகிறது.
தளர்ந்து சரியும் ஒவ்வொரு தருணங்களிலும் யாரென்றே தெரியாத பற்பல கரங்கள் தாங்கிப் பிடித்து நிலைநிறுத்துகின்றன.
ஒரு மனிதனாகட்டும்,நிறுவனமாகட்டும்,பிராண்டாகட்டும், வீடாகட்டும், கட்டிடமாகட்டும் எதுவாகிலும் ஒரு ஒற்றை மனிதனின் சுயமுயற்சியில் சாத்தியமாகுமா..??
Wednesday, January 1, 2014
குடும்ப வாழ்க்கை ரகசியங்கள் - 3
மரியாதை கலந்த அங்கீகாரம்
மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.
Saturday, December 7, 2013
உத்தமமான காரியம்
சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
"சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார்.
"ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"

Monday, November 4, 2013
Thursday, October 10, 2013
காலத்தின் கொலைகாரன்
வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென
புதிதாக விழுந்திருக்கிறது
ஐங்கூர் பழுத்த இலை
சிவப்புக் கலந்த நிறமதற்கு
உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில்
சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும்
எப்படிப் பூத்ததுவோ
பசுமையெரிந்த செடிகளுக்கிடையில்
எதற்கும் வாடிடா மலரொன்று
அன்றியும்
எந்தக் கனிக்குள் இருக்கின்றது
அடுத்த மரத்துக்கான விதை
எல்லா வாசனைகளும் பூக்களாகி
நாசிக்குள் நுழையும் கணமொன்றில்
செழித்த ஏரியின்
கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள்
வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும்
சுவரோவியங்களில் தோப்புக்கள்
எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன
இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்
தலைகீழாக வளருகின்றன
அருகாமை சடப்பொருட்கள்
விம்பங்கள் மட்டுமே காட்டுகின்றன
வாழ்வின் நிறங்களை
கனவுக் கண்ணாடிகளில்
தேய்ந்திடும் காலமொன்றை நோக்கியே
நகரும் எண்ணங்களுக்குக் கூடமைத்து
வர்ணங்களைத் தீட்டலாமினி
ஆமாம்
காத்திருப்பு
காலத்தின் கொலைகாரன்தான்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா
# மகுடம் - கலை,இலக்கிய இதழ் 03
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# திண்ணை
by எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி : http://mrishanshareef.blogspot.in

Wednesday, October 9, 2013
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்
நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை
உனது கண் பூச்சி
செவி நத்தை
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன
திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது
Wednesday, September 18, 2013
அம்மாவின் நடிகைத் தோழி
அம்மா சொல்வாள்
அந் நடிகையின் நடிப்பைப்
பார்க்க நேரும் போதெல்லாம்
'பள்ளிக்கூடக் காலத்தில்
உயிர்த் தோழிகள் நாம்
அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்
ஒரே பலகை வாங்கில்
அந் நாட்களிலென்றால் அவள்
இந்தளவு அழகில்லை'
பிறகு அம்மா
பார்ப்பது தனது கைகளை
உடைந்த நகங்களை
காய்கறிகள் நறுக்குகையில்
வெட்டுப்பட்ட பெருவிரலை
அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்
எனது முகத்தை, தம்பியின் முகத்தை
கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்
அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி
மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
source : http://rishantranslations.blogspot.in/

Thursday, May 9, 2013
தெளிதல்
ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

Monday, March 11, 2013
உங்களைத்தான் கேட்கிறார்கள்! விளக்கம் கொடுங்களேன்! மக்கள் அறியட்டுமே!
1. ஊருக்காக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு...
2. விழாக்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு...
3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு...
4. தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு...
5. கூட்டம் போட்டு திட்டம் போடும் உங்களுக்கு...
6. இறைவனது இல்லத்தில் சிலர் தவறான வார்த்தைகள் பேச வழி விட்டு அதனை தடுக்க முடியாத உங்களுக்கு...
(குத்பா நடத்தும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை உலமாவின் பிரசங்கம் நடைபெற்ற பின்பு பள்ளிவாசலுக்கு சிலர் வருகிறார்கள்.
சிலர் உலமாவின் பிரசங்கம் பிடிக்காமல் முஅல்லாவின் பள்ளியை விடுத்து வேறு பள்ளிக்கு செல்கின்றார்கள்.
அரசியல் மேடையாக மற்றும் தனி மனிதரைப் பற்றிய விமர்சனமாகவும் ,சொல்லக் கூடாத வார்த்தைகளை உயர்வான இறைவனது இல்லத்தில் பிரசங்கம் செய்வது தற்போது சில ஊர்களில் மாறி வருவது வருந்தத் தக்கதாக உள்ளது .
தொழுகை நடத்துவதற்கு முன் செய்யப்படும் பிரசங்கம் மார்க்க அறிவைத் தருவதோடு தொழுகையில் ஒன்ற வைக்கக் கூடியதாக அமைய வேண்டும் . குர்ஆன், நபிமொழி மற்றும் அதற்கான விளக்கங்கள் தந்தாலே போதுமானது . இவைகளில் காணக் கிடைப்பதே ஏராளம்.)
7. வசூல் செய்து விழா நடத்தும் உங்களுக்கு...
8. தேவையற்றவைகளுக்கு செலவு செய்யும் உங்களுக்கு...
9. ஒதுங்கி நிற்கும் மக்களை உசுப்பி விடும் உங்களுக்கு...
10. பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் விரோதம் பாராட்டி உறவுகளை முறிக்கும் உங்களுக்கு...
உள்ளூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய...
1. சமூக நலன் முன்னிறுத்தி ஊரை ஒற்றுமைப் படுத்த முயற்சி
2. பல பள்ளிவாசளிருந்து அனைத்து பள்ளிவாசலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம்
3. வேலைவாய்ப்புகள் பற்றி ஒரு விழுப்புணர்ச்சி உண்டாக்குதல்
4. விளையாடுமிடம் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உற்சாகப் படுத்துவது
5. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு
6. சமூக குற்றங்கள் ஒழிப்பு
7. கல்வி மேம்பாடு
8. தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் நிறுவுவது
9. சுகாதார விழிப்புணர்வு
10. தேவையான பள்ளிவாசல்கள் உண்டு தொழ மக்கள் வராமலிருப்பது பற்றி சிந்திப்பது
11. நிறைந்த மாணவர்களிருந்தும் தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் உருவாக்குவது
12. முதியோர் நலன்
13. இலவச மருத்துவ முகாம்
14. கற்பவர்களுக்கு தேவையான பணத்தை உதவியாகவோ அல்லது வட்டி இல்லாத கடனாகவோ கொடுக்க முயற்சி செய்வது
15. நலத்திட்ட உதவி
16. உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஊருக்கு ஒற்றுமை முக்கியம்
என்பதை முன்னிறுத்தி முயற்சி செய்வது
17. அறிவு வளர்ந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டால் கண்டிக்காமல் அன்புக்கு முக்கியம் கொடுத்து நேசன் பாராட்டுவது
என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து செயல்பட்டு உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்ய முயற்சிக்க வேண்டாமா ?
இறைவனது அருள் அனைவருக்கும் கிடைக்க முயல்வோம் .
உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. வாழு வாழ விடு . நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க

Tuesday, February 19, 2013
'தலைப்பற்ற தாய்நிலம்' தொகுப்பு வெளியீடு
கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் 'தலைப்பற்ற தாய்நிலம்' எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது.
ஏப்ரல், 2013 - லண்டன், நோர்வே
மே, 2013 - கனடா, ஸ்விட்ஸர்லாந்து
இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் கீழுள்ள முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம், இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai – 600078
Tamil Nadu, India.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Labels:
அனுபவம்,
ஈழம்,
கவிதை,
சமூகம்,
சிறப்பு,
நிகழ்வுகள்,
மொழிபெயர்ப்பு,
விழா
Wednesday, December 26, 2012
விரோதிகளை நான் வீழ்த்துவதில்லை !
விரோதிகளை நான் வீழ்த்துவதில்லை!
விரோதிகளை நான் என் வலையில் விழவைக்கிறேன்.
போர் தொடுத்தேன் அவனை வீழ்த்த
இதயப் போர் இருந்து கொண்டே இருக்க
போர் தொடரும் போரானது
போரின் வெற்றி இருவருக்குமானது
போரில் அவனை வீழ்த்தினால்
வெற்றி என்னை தனிமைப் படுத்தி வீழ்த்தி இருக்கும்
தனிமையை விரும்ப நான் வேதாந்தியல்ல
தனிமையில் உலவும் மிருகமுமல்ல
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமூகமாட்டான்
தனிமையில் இருப்பவன் மனச் சிறையில் விடப்பட்டான்
தனித்து பசித்து விழித்து இருந்தாலும் வீழ்வது உறுதி
வீழ்ந்த உடலை அகற்ற சமூகம் வருவதும் உறுதி
நானே சமூகத்தை உருவாக்குகின்றேன் எனக்காக
வாழ்க்கைத் துணை தேடி வாரிசு வளரட்டும்
வாழ்க்கையில் தனிமை வாழ்க்கை வேண்டாம்

Tuesday, December 18, 2012
IOF : பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !
Internet-of-Things“இன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !
இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.
பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.

Sunday, December 16, 2012
கற்பனையில் காலம் போய் விடும்
சமூகச் சீர்திருத்தத்தை செய்
கடமை காத்திருக்க நழுவுவதேன்
பணி செய்வதே நம் கடமை
செயலின் எல்லையை விரிவாக்கிக் கொள்
சேவையின் சொல்லை நயமாக்கிக் கொள்
நோக்கம் நன்மையாகி சேவை விரியட்டும்
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமூகமாக முடியாது
நாம் நிம்மதியடைய சமூகம் வேண்டும்
சமூகத்தின் நிம்மதியில் நமக்கும் பங்குண்டு
சமூகம் நமக்கு என்ன செய்தது என நினையாமல்
சமூகத்திர்க்கு நாம் அளித்த பங்கென்ன நினைத்தல் உயர்வு
சமூகத்தில் நம் சேவையும் தேவை
சிறு துளி பெரு வெள்ளமாகும்
நாமும் அதில் ஒரு துளி
தடுக்கி விடும் கல்லை ஓரத்தில் நகர்த்துவதும்
தடுக்கி விடும் கல்லை போடவருபவரை நிறுத்துவதும்
தர்மச் சேவையில் அடங்கும்
ஆரம்பம் நம்மிடத்தில் தொடரட்டும்
மேன்மை பெரிதாக பரவட்டும்
சொலவதை சொல்
செய்வதை சொல்
சொல்வதும் செய்வதும் நன்மை பயக்கட்டும்
ஆலோசனை அறிவாக இருக்கட்டும்
அறிவு உயர்வாக இருக்கட்டும்
மனதே சொல்லும் மேன்மையை
மனது மேன்மையடைய மார்க்கத்தை நாடு
பானையில் உள்ளதே அகப்பையில் வரும்
அறிவில் உள்ளதே வெளியில் வரும்
அறிவைப் பெருக்க அறிஞர்களை நாடு
நாடியவர்களிடம் நன்மையைப் பெறுவாய்
சிந்தி ஆழமாக சிந்தி
சிந்தித்ததை சிதறவிடாதே
சிந்தித்ததை கோர்வையாக்கி மாலையாக்கு
மாலையைப் பெற்றவர் மகிழ்வடைவர்
கற்பனையில் காலம் போய் விடும்
செயலில் காலம் சிறந்துவிடும்
மேம்படுத்தும் செயல் மேன்மை பெற்று விடும்
பொல்லாங்குப் பிரச்னை தூளாகி விடும்
உனக்குள் ஒரு ஒளி ஒலிந்திருக்கிறது
ஒலிந்ததை வெளிக் கொணர்ந்து ஒளிமயமாக்கி விடு
ஒளி உனக்கும் மற்றவருக்கும் வழி காட்டும்
Subscribe to:
Posts (Atom)

.jpg)

%2Bat%2Bthe%2Btime%2Bf%2BConquering%2BMakkah...%2BHe%2Bis%2BSo%2Bhumble......jpg)