பையனைக் கூப்பிடு
தம்பி உன்னை அப்பா கூப்பிடுராங்கப்பா
ஏன்ப்பா!
எங்கப்பா போறே சூப்பரா ட்ரஸ் பண்ணிட்டு ?
ஒரு வேலையா போறேன்பா.
அதான் கேட்கிறேன்! அப்படி என்ன வேலை சொல்லேன்?
உங்களுக்கு சொன்னாலும் புரியாதப்பா !
அப்படில்லாம் சொல்லக் கூடாது. அப்பா உனக்கு ஒரு நண்பன் ,வேதாந்தி, வழிகாட்டி மாதிரி
அதான் நீங்க சின்ன வயசிலேந்து சொல்லி எனக்கு நெட்டுரு ஆயிடுச்சே
அப்ப சொல்லேன் இப்ப..?
எதை நெட்டுரு பண்ணுனதையா!
இல்லப்பா நீ எங்கே போறேன்கிறதை சொல்லு.
அது உங்களுக்கு தேவை இல்லைப்பா.
சரிப்பா நீ போ உனக்கு நேரமாச்சு.
பையன் முனங்கிக் கொண்டே 'வழிகாட்டி தான் ரோட்டிலேயே இருக்கே. அதோட இவரையும் கொண்டு நிறுத்திட வேண்டியதுதான் . நண்பனாம் இவர் வயசுக்கு நான் நண்பனாம். நான் போற இடத்துக்கு இவர் வர முடியுமா. வேதாந்தியாம் அது சரி அவர் அப்படியே இருந்துட்டு போகட்டும் .என்னை வேரே இவர் ஏன் வேதாந்தியாகச் சொல்றாரு'
இவ்வாறு சொல்லிக் கொண்டே மகன் தனது நண்பனைப் பார்க்க துரிதமாக ஓடுகின்றான்.
'நட்புடன் நல்வழி காட்டினேன்
வேதத்தை படிப்பித்து வளர்த்தேன்
வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினேன்
கூ டாத நட்பு வழி மாற்றி விட்டது
பாசத்தோடு வளர்த்தவன் விலகி நிற்க
யாரிடம் சொல்லி மனதை ஆற்றுவேன்' - அப்பாவின் முனங்கள்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) ஆதாரம்: புகாரி
"ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம் : புகாரி
No comments:
Post a Comment