Showing posts with label வினோதங்கள். Show all posts
Showing posts with label வினோதங்கள். Show all posts

Wednesday, December 12, 2012

தேவையா இந்த ஆர்பாட்டங்கள்!

வருகிறதாம் பல நிகழ்வுகள்!

உலகமே அழியப்போகிறதாம்!

இதனை கிளிக் செய்து படியுங்கள்
 அழியப் போகிறதா உலகம்?


நிகழுமாம் பல வினோதங்கள் !
தேதி, மாதம் மற்றும் வருடத்தில் பாதி எண்கள் இணைந்ததால் 12/12/12 ..

இதற்கு இத்தனை ஆர்பாட்டங்கள்!
ஒன்று மறந்து விட்டோம் 12/12/2222 ..அல்ல, அல்லது 2.2.2222 ம் அல்ல

மறதி உள்ளவர்களுக்கு வேண்டுமென்றல் தேதி,மாதம்  ஒன்றாக வருவது நினைவுக்கு உதவும்
எனக்கு மறதி அதிகம் அதனால் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிகின்றது
எனது தந்தை இறந்த நாள் 5.5.55
எனது பேரன் பிறந்த நாள் 5.5.வருடம் நினைவில் இல்லை
எனது மகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்த நாள் 5.5.வருடம் நினைவில் இல்லை
கார் நம்பர் TN. 51-S. 0051
கார் நம்பர்  இது நினைவில் உள்ளது
அதிலும் . - S இவைகள் நினைவில் இல்லை பார்த்து வந்தேன்.

 இதனை கிளிக் செய்து படியுங்கள் தேடிச்சென்று எடுத்தேன் உங்களுக்காக.


 உலகம் அழியப்போகுதாமே?


 12/12/12 இதற்கு ஏன் இத்தனை ஆர்பாட்டங்கள்!

 தகுதியுடையவரை பாராட்டுங்கள்! புகழுங்கள்!

  இதனை கிளிக் செய்து படியுங்கள்
இத்துனை ஆர்ப்பாட்டங்கள் எதற்கு ?


‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’ அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.

  இஸ்லாத்துக்கு வேண்டாம் அற்புதங்கள்

Monday, July 2, 2012

மனிதன் மாற்றத்திற்கு உட்பட்டவன்.

  சிலர் நம்மை நாடி வருவது மகிழ்வு .சிலர் நம்மை விட்டு பிரியும் பொது துயரம் .மற்ற சிலர் நம்மைவிட்டு விலகும்போது ஆனந்தம். ஒருவரது செயல்பாடுகள் இத்தனை மாற்றங்களை  ஏற்படுத்துகின்றன.
சிலதை பார்க்கிறோம். சிலவற்றை கவனிக்கிறோம் மற்ற சிலவற்றை காணாமல் தவிர்க்கின்றோம்.

 சிலவற்றை படிக்கிறோம் சிலவற்றை படிப்பதை வெறுக்கிறோம் மற்ற சிலவற்றை படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம்.
சில உணவு ஒருவருக்கு உடலுக்கு ஊட்டம் தருகின்றது மற்ற சில உணவுகள் அவருக்கு ஒவ்வாமையை தந்து அவதிக்குள்ளாகின்றது. சில உணவுப் பண்டங்கள் மீது ஒருவருக்கு   மிகவும் நாட்டம் அவருக்கே மற்ற உணவைக் கண்டால் பிடிப்பதில்லை  . ஒருவருக்கு ஒருவர் சுவைப்பதிலும் ரசிப்பதிலும்  மாற்றம். ஒரே மாதிரியாக சுவைப்பதிலும் ரசிப்பதிலும் அனைவருக்கும் இருந்தால் அது திண்டாட்டதில் வந்து முடியும். பற்றாக்குறை வராமல் இருக்க இந்த மாற்று நிலை உதவுகின்றது. அனைவரும் சிகப்பு பெண்தான் வேண்டுமென்றால் இது இயந்திரத்தால் செய்யக் கூடிய காரியமல்ல. அப்படி அனைத்தும் சிகப்பாக இருந்தாலும் அது வெறுத்து விடும்.மனிதன் மாற்றதினையே விரும்புபவன். மனிதன் மாற்றத்திற்கு (குழந்தையாய் இருந்து முதியோர் வரை) உட்பட்டவன்.