Saturday, December 1, 2012

தேடினேன் அங்கும் இங்கும் தேடினேன்!


தேடினேன் அங்கும் இங்கும் தேடினேன்
பாலைவனத்தில் கானல் நீரை நீரென்று தேடி அலைவதுபோல்
தாகம் தீர தேடினேன் அங்கும் இங்கும் தேடினேன்
ஓயாது தொல்லை உருட்டிப் புரட்ட
ஒவ்வாமை உடலை ஒட்டிக் கொள்ள
தீராத தொல்லை நீங்க உதவி நாடி தேடினேன்

இறந்தவர்   சமாதிக்குள் புகுத்தப்பட்டவர்
இறந்தவர் இருப்பவராக என ‘சிந்தனை அடிமைகள்’  செப்பினர்
உதவி  கேட்டால் உதவிடுவார் என ஓம்பினர்
நம்பினேன் சமாதி பக்கம் ஓடினேன் உதவி நாடி
ஓதுவோர் வழிமறித்து 'கொடுப்பதை கொடுத்து வீட்டுப் போ' என்றனர்
 கொடுத்தேன் ஓதினார் உள் செல்ல அனுமதித்தார்
உட்சென்று உதவி  நாடி வேண்டினேன் பதிலில்லை
தொல்லை நீங்காமல் திரும்பினேன்

எங்கும் நிறைந்தவன் அருளாளன் கருணையாளன்
நாடுவோர்க்கும் நாடாதோர்க்கும்  இவ்வுலகில் உதவுவான்
என்னுள்ளே இருப்பதை அறியாது அங்கும் இங்கும் தேடினேன்
மடமை நீங்க மனதில் ஒளி பிறக்க தெளிவடைந்தேன்
மனதில் அவனை நிறுத்தி செயல் பட்டேன்

கிடைக்க வேண்டியது கிடைத்தது
கிடைக்காமல் நின்றதும்  நன்மைக்கே என நிம்மதியானேன்
"வேண்டுதல் வேண்டாமை இலானடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. "



ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)- குர்ஆன்
மக்கீ, வசனங்கள்: 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

No comments: