Saturday, December 15, 2012

மனித நேயமும் மத நல்லிணக்கமும்

 அனைத்துலகங்களும் அவற்றிளுள்ள எல்லா வஸ்துகளும் அல்லாஹுத்தஆலாவின் படைப்புக்களாகும்.  இவற்றுள் மனித இனமே மிகவும் விசேஷம் வாய்ந்தது.  சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மறுமைப் பயனுக்குரிய சரியான வழியை வகுத்து செயல்படுவதால் மனிதர்களில் முஸ்லீம்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் சமூகமாக பிரிந்து வாழ்கின்றார்கள்.  அவ்வாறின்றி மொழி, நிறம், நாடு, இனம், குலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு  சமூகங்களாகப் பிரிக்கப்படும் முறை இஸ்லாத்தில் கிடையாது.

ஒவ்வொரு சமூகத்திற்கும் சில தனித்துவங்கள் உண்டு.  இத்தனித்துவத்தில் அடிப்படையில் தான் ஒவ்வொரு சமூகத்திற்கும் பெயரிடப்படுகின்றது.   இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமான இதர கொள்கைகளை கடைப்பிடிப்போர் அனைவரும் பிற சமூகத்தினர் என நாம் கணிக்கின்றோம்.  உலக மனிதர்கள் இவ்வாறு இரு சமூகங்களாக பிரிக்கப்பட்டாலும் எல்லோரும் அல்லாஹ்வின் சிருஷ்டிகளாகும்.

நாம் அனைவரும் பகுத்தறிவுடைய மனிதர் என்ற வகையில் பிறமனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் முஸ்லீம்கள் என்ற வகையில் பிற சமயத்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் வைக்க வேண்டிய தொடர்புகள் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.


பிற மதத்தவர்களுடன் சினேகமாக இருக்க வேண்டும்.  பரஸ்பரம் இரு சமூகத்தவரும் உதவி உபசாரங்கள் செய்து நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அல் குர்ஆனிலே அல்லாஹ் அனுமதித்துள்ளான்.

(விசுவாசிகளே)! மார்க்க வியத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாத, உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கு நீங்கள் கருனை காட்டி நன்மை செய்ய வேண்டாமென்றோ, அவர்களுடன் நீங்கள் நிதானமாக நடந்து கொள்ளக் கூடாதென்றோ அல்லாஹ் உங்களை தடுக்கவில்லை.  நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிப்பவனாகவே இருக்கிறான்.                (அல் குர் ஆன்)

மேலே கூறியவாறு அல்லாஹ்வும், நம்முடன் நேசக்கரம் நீட்டி நிற்கும் அல்லாஹ்வின் உயிரினங்களாகிய பிற சமூகத்தவர்களுடன் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டுமென்று மனிதத் தன்மைக்கு மதிப்பளித்துள்ளான்.  எந்த சமூகத்தவராயினும் மனிதனுக்கு மனிதன் பரஸ்பரம் செய்துகொள்ள வேண்டிய உதவிகள் நிறைய உள்ளன.

பிற மதத்தவர்கள் சில வேலைகளில் உணராத காரணத்தினால் உபத்திரவங்கள் செய்ய முற்பட்டாலும் நமது மனிதத்தன்மையைக் காட்ட நாம் பின்நிற்கக் கூடாது.  இப்படியான சந்தர்ப்பங்களில் நாம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதில் தான் இஸ்லாத்தின் சிறப்பியல்புகளைப் பிற மதத்தவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.  முஸ்லிமல்லாதவர்கள் எந்த மதத்தவராயினும் சரி அவர்கள் அனைவரும் பிற மதத்தவர்களே அவர்களிடம் கருணை காட்டி அன்பாக நாம் நடந்து கொள்வது அகில உலக ஒற்றுமைக்கு மிகமிக அவசியமாகும்.

கலீபா உமர் (ரழி) அவர்கள் ஜெருஸலத்தைக் கைப்பற்றிய போது அங்கிருந்த மாதா கோயிலின் பாதிரியார், தொழுகை நேரம்வந்த போது கலீபா அவர்களுக்கு உள்ளே சென்று தொழுமாறு வேண்டினார்கள் என்றாலும் கலீபா நான் இதனுள் இன்று தொழுதால் முஸ்லீம்கள் இம் மாதா கோயிலை மஸ்ஜிதாக்கி விடுவார்கள்” என்று எண்ணியவராக மாதா கோயிலின் வெளியே தொழுது மாதா கோயில் பள்ளிவாசல் ஆகக் கூடாது” என்றார்கள்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நஜ்ரான் பிரதேத்திலிருந்து வந்த 60 பாதிரியார்களைக் கொண்ட தூதுக்குழு சந்தித்த போது அந்த தூதுக்குழுவினரை பள்ளிவாசலினுள் பிரார்த்தனை செய்ய அனுமதித்தார்கள்.

சமூக நல்லிணக்கம் பற்றி அல்லாஹ்  அல்குர்ஆனில் கூறுவதை கவனியுங்கள் மானிடர்களே  ” நீங்கள் யாவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவீர்.  மேலும் நானே உங்கள் யாவருக்கும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவீர்.  மேலும் நானே உங்கள் யாவருக்கும் ஒரே இறைவன் எனவே என்னையே வணக்குங்கள். (குர்ஆன் )

மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். (குர்ஆன் 10:19)

சமூக நல்லிணக்கம் பற்றி இந்திய குடியரசின் ஜனாதிபதி பேராசிரியர் ஏ.பி.ஜே. அபுல்கலாம் கூறிய வார்த்தையை கவனியுங்கள்.

இந்த மாபெரும் நம் நாட்டில் நான் நன்றாகவே இருக்கிறேன் இதன் கோடிக் கணக்கான சிறுவர் சிறுமிகளை பார்க்கின்றேன்.  எனக்குள்ளிருந்து அவர்கள் வற்றாத புனிதத்தை முகர்ந்து இறைவனின் அருளை ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைக்கின்ற மாதிரி எங்கும் பரப்பவேண்டும்.

பகைவனை நேசியுங்கள் என்று சொல்லாமல் பகைவனை மன்னியுங்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.  மன்னிக்க கற்றுக் கொண்டால் குரோதம், பகைமை, வெறுப்பு, ஆகியவற்றிலிருந்து அவனுடைய உள்ளம் தூய்மையடைகின்றது.  இதன் காரணமாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் தம் சிறிய தகப்பனார் ஹம்ஸா (ரழி) அவர்களைக் கொன்று ஹிந்தா என்ற பெண்மணியை மன்னித்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதனை சுட்டிக்காட்டி இவர் சுவனவாதி எகை கூறினார்கள்.  அவரின் விசேமான நடவடிக்கைகளை கவனித்த நண்பர்கள் சிறப்பாக ஒன்றும் தெரியவில்லையே என்று அந்த தோழரிடம் கேட்டார்கள்.  நான் யாருக்கும் தீமை செய்வதில்லை எவர் மீதும் பொறாமைப் நேசியுங்கள் என்று சொல்லாமல் பகைவனை மன்னியுங்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.  மன்னிக்க கற்றுக் கொண்டால் குரோதம், பகைமை, வெறுப்பு, ஆகியவற்றிலிருந்து அவனுடைய உள்ளம் தூய்மையடைகின்றது.  இதன் காரணமாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் தம் சிறிய தகப்பனார் ஹம்ஸா (ரழி) அவர்களைக் கொன்று ஹிந்தா என்ற பெண்மணியை மன்னித்தார்கள்.

 மிருகத் தன்மையிலிருந்து மனிதத்தன்மை பெற்று புனிதத் தன்மையை நோக்கி பயனம் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.  “கோபத்தை அடக்குவோர் மனிதர்களுடைய பிழைகளை மன்னிப்போர், நலம் செய்வோர் ஆகியோருக்கு அல்லாஹ்வின் அருளன்ப உண்டு” என அல்குர் ஆன் (3:134) சுட்டிக் காட்டுகின்றது.

இஸ்லாத்தின் பாப்ரசர் என்று புகழப்பட்ட கலீபா உமர்(ரழி) அவர்களின் ஆட்ச்சியில் மதசுதந்திரம் இருந்தது.  முஸ்லிம் அல்லாதவர்ளிடமும் அன்புடன் பழகி ஆட்சி செய்தார்கள் அப்பாசியா ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை கவனிக்க தன்நிர்வாகத்துறை ஏற்படுத்தப்பட்டது.

700 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லீம்கள் இந்தியாவை ஆட்சி செய்த போதிலும் தலைநகர் உட்பட முழு இந்தியாவிலும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராகவே வாழ்திருக்கின்றார்கள்.  நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக கர்நாடகத்திலும், தமிழ் நாட்டிலும் சமய நல்லிணக்கம் செழிப்பாக இருந்தது.  பிரார்த்தனை செய்யும் இடங்களிற்கும், இறைநேசர்களின் சமாதிகளுக்கும் இந்துக்களும் முஸ்லீம்களும் சமய வேறுபாடு இன்றி உதவி செய்திருக்கும் நிகழ்ச்சிகள் சரித்திரத்தில் ஏராளம் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அவற்றில் ஒன்று தான் சோழ மன்னர் நாகூh அவ்லியாவுக்குநன்றி செலுத்துவதற்காக கட்டப்பட்ட நாகூர் மினாரா

சகோதரர்களாக ஒற்றுமையுடன் தமிழக முஸ்லீம்கள் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்கள்.  இந்திய விடுதலைப் போரில் முஸ்லீம்களின் பங்கு மகத்தானது.  தென்னாபிரிக்காவில் காந்தியடிகள் நடாத்திய அறப்போராட்டங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்கள் முஸ்லீம்கள்.

“பாலை கடைந்தால் வெண்ணெய் பிறக்கும், மூக்கைப் பிசைந்தால் இரத்தம் பிறக்கும், கோபத்தை வலியுறுத்தினால் சண்டைதான் பிறக்கும்” என்கிறது விவிலியம். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்றார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழறிஞர்  பூங்குன்றனார்.  “அவலம் அறுப்பது சமயம்” என்றார் திருஞான சம்பந்தர்.

“ஒரு மனிதனின் மனத்தை மகிழச் செய்வதும், பசித்தவனுக்கு உணவு அளிப்பதும், துன்பத்துக்கு ஆளாவோரின் உதவிக்கு விரைதலும், துயருருவோரின் துயரம் துடைத்தலும் மிகச்சிறந்த சேவைகள்” என்று சொன்னார்கள் நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

வாழ்க்கையே செய்தியாக இருக்க வேண்டும் வாழ்க்கையின் நோக்கம் அறிவு அல்ல சேவைதான் என்பதை ஷரீயத் அறிவுறுத்துகின்றது.

ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் சமயங்களின் கொள்கைகளை சரியாக புரிந்து கொள்ளாதா காரணத்தால் தான் சமய பூசல்கள் ஏற்படுகின்றது.  சமய நல்லினக்கம் தடுமாறுகின்றது.  உலக ஒற்றுமையும், சகோதரத்துவத்தையும். சமத்துவத்தையும் நாடுவதே அனைத்து சமயங்களின் குறிக்கோளாய் இருக்கின்றது.

கதர் என்பது அரபிமொழிச்சொல் மரியாதை என்பது அதன் பொருள் விடுதலைப் போராளி மௌலானா முஹம்மது அலி ஒரு முறை தம் தாயார் கையினால் நூற்று நெய்த ஒரு துணித்துண்டை காந்தியடிகளுக்குப் போர்த்தும் போது இதைக் கதர் (மரியாதை) ஆகப் போர்த்துக்கின்றேன் என்றார்கள்.  அதை ஏற்றுக் கொண்ட காந்தியடிகள் கையால் நெய்யும் கதர் என்று பெயர் சூட்டினார்.

“ஸாரே ஜஹான்ஸே அச்சா” என்று கவிஞர் இக்பால் அன்று பாடினார்.  அதன் கருத்து அனைத்து இடங்களும் நல்ல இடங்கள், இந்துஸ்தான் நம்முடைய நாடு” இந்த இஸ்லாமியப் பெருமகன் இயற்றிய இக்கீதம் ஆரம்பகாலத்தில் இந்திய தேசத்தின் தேசிய கீதமாக இருந்தது.

1943-10-21ம் தேதி நேதாஜி ,மலேசியாவில் சுதந்திர இந்திய அரசை அமைத்தார்.  அறிஞர் கரீம் கனி அமைச்சரவை ஆலோசகராக இருந்தார்.  30 இலட்சம் தமிழர்கள் நேதாஜிக்கு ஆதரவாக இருந்தார்கள்.

மேளலான முஹம்மது அலி அவர்கள் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போது “நான் இறந்தால் சுதந்திர நாடான இங்கேயே அடக்கம் செய்யுங்கள் அடிமை நாடான இந்தியாவுக்கு அனுப்பாதீர்கள்” என்று தம் சுதந்திர வேட்க்கையை வெளிப்படுத்தினார்.

மனித நேயம் கொள்ள வேண்டியவன் மனித நலம் விரும்ப வேண்டியவனாக இருக்க வேண்டும்.  மனிதனை நரகிலிருந்து காப்பாற்ற முயற்சிப்பதனால் தான் மனிதநலம் நாடமுடியும்.

படைப்புக் கலைஞன் சமுதாயத்துக்கு மிகவும் கடமைப்பட்டவன், மனித நேயமே அவனது முதற்கடமை.  நமக்கு என்று ஒரு கோட்பாடு, இலக்கியம், கொள்கை, மரபு இருக்கிறது.  அது தீமையை தீமை என்று காட்டும் தீங்குகளைச் சொல்ல நேர்ந்தால் அது தீங்குதான் என்று நாண உணர்வு ஏற்படும்படி கூறும்” வேறு குழுவை எல்லாம் - மானுடம் வென்றதம்பா” என்று கம்பன் பாடினான்.  மானுடம் வெல்ல-மனித நேயம் வரை இலக்கியம் அந்த இலக்கில் படைப்பதில்தான் திறமை இருக்கிறது.  பச்சையாக எழுதித்தள்ள, படம்பிடித்துக்காட்ட பேசித்தீர்க்க யாராளும் முடியும்.  ஆதற்குத் திறமை தேவையில்லை.

“வேற்றுமை எண்ணங்கள் வேருடன் சாயாதோ, ஒற்றுமை வெற்றிகள் ஊரெங்கும் காணாதோ” ஒருவரை யொருவர் வெறுப்பதற்காக போதுமான அளவு நாம் மதங்களைப் பெற்றிருக்கின்றோம்.  ஆனால் ஒருவரை ஒருவர் நேசிக்க மதம் நமக்கு போதுமானதாக இல்லை” என்று  என்பவர் கூறுகின்றார்.

பண்டம் மலிய வேண்டும்
எங்கும் பயிர் செழிக்க வேண்டும்
சண்டைகள் ஓய வேண்டும்
எவரும் சகோதரர் ஆக வேண்டும்
என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடியுள்ளார்.

“ஒரு குலம் உயர்ந்ததென்றும்” – ஒரு குலம் தாழ்ந்ததென்றும்
பிரிவுள்ள உலகத்தோர்கள் - பகருவார் பெருமையாக
நெறி மனுவெல்லாம் ஒன்றே – நிறைந்தோனைத் தினம் தொழுது
திருவருள் வடிவைக் கண்டோர் - ”
என்று சமூக நல்லிணக்கத்தைப் பற்றி சாஹூல் ஹமீத் அப்பா
நாயகம் அவர்கள் பாடியுள்ளார்கள்.

நாடெல்லாம் கல்வி நலம் பெருகி நாகரீகம்
வீடு தொறுந்தாங்கி விளையாடல் எக்காலம்
இந்துக்கள் முஸ்லீம்கள் எல்லோரும் ஒற்றுமையால்
பந்துக்கள் போல பரிந்திரப்பது எக்காலம்
காந்தியடிகள் கருணைத்திறம் பரவிச்
சாந்தியுலகெல்லாம தழைத்திடுவது எக்காலம்?
என்று கப்பம் பீர் முஹம்மது பாவலர்
இனங்கள் இனைந்து வாழ்வதன் அவசியத்தை கவிமூலம் உணர்த்தியுள்ளார்.

    சமூகம் என்பது ஒரு சமுத்திரம் தனிப்பட்டவர்கள் அறிஞராயினும், அறிவியல் குறைந்தவர்களாயினும் அந்தச் சமூத்திரத்தில் உள்ள துளிகள், அனைவரும் சகோதரர்கள்.  ஒரு சகோதரனுக்குப் பணத்தை அல்லாஹூதஆலா கொடுத்தால் அது அவன் மட்டும் அனுபவிப்பதற்காவன்று அங்கனமே ஒரு சகோதரனுக்கு அறிவிக்கப்படும் ஞானப் பொக்கிஷங்களும் சமூகத்தில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் சொந்த மானவையாம்” என்று அறிஞர் அல்லாமா கரீம் கனி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


நீடூர்.ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails